வண்ணை கணேசன், பொன்னி யம்மன்மேடு, சென்னை 110
நெருக்கடி நிலையைக் கொண்டு வந்து ஒரே இரவில் நாட்டையே சிறைச்சாலையாக்கிய குடும்பம் என காங்கிரஸ் தலைமையை அமித்ஷா விமர் சித்திருக்கிறாரே?
உண்மைதான். இரவு நேரத் தில் அறிவிக்கப்பட்ட நெருக்கடி நிலையைத் தொடர்ந்து, நாட்டின் தலைவர்களை பூட்டிய சிறைக்குள் தள்ளியது காங்கிரசின் தலைமைக் குடும்பம். பா.ஜ.க. ஆட்சித் தலைமையோ அறிவிக்கப்படாத நெருக்கடி நிலையைக் கொண்டு வந்து பகலும் இரவும் நாட்டில் உள்ள குடும்பங்களையெல்லாம் திறந்தவெளி சிறைச்சாலையில் தள்ளியுள்ளது.
பி.ஓம்பிரகாஷ், கொடுங்கையூர், சென்னை 118
ஆட்சியாளர்கள் லஞ்சம் வாங்காமலும், அரசியல்வாதிகள் பொய் வாக்குறுதி தராமலும், பொதுமக்கள் நுகர்வு கலாச்சாரத்திற்கு ஆட்படாமலும், உழைப்பின் மூலம் கிடைக்கும் வருமானத்தில் மகிழ்வான வாழ்க்கை வாழ்வதாக இருந்தால் நான் நாளைக்கே போய்விடுகிறேன் என்று கொரோனா சொன்னால் எப்படி இருக்கும்?
கொரோனாவுக்கு ஏதாவது கொடுத்து நைசாக அனுப்பி வைத்துவிட முடியுமா என
வண்ணை கணேசன், பொன்னி யம்மன்மேடு, சென்னை 110
நெருக்கடி நிலையைக் கொண்டு வந்து ஒரே இரவில் நாட்டையே சிறைச்சாலையாக்கிய குடும்பம் என காங்கிரஸ் தலைமையை அமித்ஷா விமர் சித்திருக்கிறாரே?
உண்மைதான். இரவு நேரத் தில் அறிவிக்கப்பட்ட நெருக்கடி நிலையைத் தொடர்ந்து, நாட்டின் தலைவர்களை பூட்டிய சிறைக்குள் தள்ளியது காங்கிரசின் தலைமைக் குடும்பம். பா.ஜ.க. ஆட்சித் தலைமையோ அறிவிக்கப்படாத நெருக்கடி நிலையைக் கொண்டு வந்து பகலும் இரவும் நாட்டில் உள்ள குடும்பங்களையெல்லாம் திறந்தவெளி சிறைச்சாலையில் தள்ளியுள்ளது.
பி.ஓம்பிரகாஷ், கொடுங்கையூர், சென்னை 118
ஆட்சியாளர்கள் லஞ்சம் வாங்காமலும், அரசியல்வாதிகள் பொய் வாக்குறுதி தராமலும், பொதுமக்கள் நுகர்வு கலாச்சாரத்திற்கு ஆட்படாமலும், உழைப்பின் மூலம் கிடைக்கும் வருமானத்தில் மகிழ்வான வாழ்க்கை வாழ்வதாக இருந்தால் நான் நாளைக்கே போய்விடுகிறேன் என்று கொரோனா சொன்னால் எப்படி இருக்கும்?
கொரோனாவுக்கு ஏதாவது கொடுத்து நைசாக அனுப்பி வைத்துவிட முடியுமா என ஆலோசிப்பார்கள்.
லட்சுமி செங்குட்டுவன், வேலூர்(நாமக்கல்)
தமிழகத்தில் சட்டமன்றப் பொதுத்தேர்தல் உரிய நேரத்தில் வருவதற்கு வாய்ப்பிருக்கிறதா?
நமக்கு முன்பாக பீகார் காத்திருக்கிறது. அங்கே என்ன நடக்கிறது என்பதைப் பொறுத்து, தமிழகம்-கேரளம்- மேற்குவங்கம் உள்ளிட்ட பா.ஜ.க. ஆட்சி செய்யாத மாநிலங்களில் பொதுத்தேர்தலா, கவர்னர் ஆட்சி என்ற பெயரில் பா.ஜ.க.வின் மறைமுக ஆட்சியா என்பது தெரியும்.
ஏழாயிரம் பண்ணை எம்.செல்லையா, சாத்தூர்
சீனாவுக்கு அதிக முறை சென்று வந்தும் எல்லை தாண்டிய பயங்கரவாதத்தைத் தடுக்க முடியாதது ஏன் என்று பிரதமருக்கு கமலஹாசன் கேள்வி எழுப்பியிருக்கிறாரே?
கமலஹாசன் மட்டுமா கேட்கிறார்? ராகுல்காந்தி தொடங்கி எதிர்க்கட்சியினர் பலரும் கேட்கிறார்கள். இந்திய பிரதமர் சீனாவுக்குப் போனது மட்டுமல்ல, சீனப் பிரதமர் இந்தியாவுக்கு வந்தார், அதிலும் தமிழகத்தின் மாமல்லபுரத்துக்கு வந்தார். அந்த சந்திப்பு குறித்து எத்தனை எத்தனை கதையளப்புகள் என்பதை பொதுமக்களும் அறிவார்கள். அதனால் அவர்களும்தான் பிரதமர் மோடியை நோக்கி கேள்வி எழுப்புகிறார்கள். பிரதமரோ லடாக் பகுதி வரை செல்கிறார். நமது ராணுவ வீரர்களுக்கு ஊக்கம் வழங்கும் வகையில் திருக்குறளை மேற்கோள்காட்டி பேசுகிறார். விரிவாக்கம் செய்வோரின் காலம் முடிந்துவிட்டது என்கிறார். எல்லையைக் காப்போம் என்கிறார். விரிவாக்கம் செய்தது யார்? எல்லையை யாரிடமிருந்து காக்கிறார்? அந்த எல்லையில் நடந்த சண்டையில் இந்திய வீரர்கள் பலியானது யாரால்? சீனாவால்தான் என்பது சாதாரண மக்களுக்கும் தெரியும். பிரதமர் தயங்குவதன் மர்மம்தான் ஆச்சரியமாக உள்ளது.
ஆர்.துரைசாமி, கணபதிபுதூர், கோவை
சீன தயாரிப்புகளை புறக்கணிப் போம் என்பது எளிதானதா? சாத்திய மானதா?
அது இந்தியாவின் உறுதியையும்- வளர்ச்சியையும் பொறுத்தது.
_____________
தமிழி
அயன்புரம் த.சத்தியநாராயணன், சென்னை
பண்டைய தமிழர்கள் பேசிய தமிழுக்கும் தற்போதைய தமிழர்களாகிய நாம் பேசும் தமிழுக்கும் என்ன வித்தியாசம்?
சொல்லும் அதன் உச்சரிப்புத் தன்மையும் காலந் தோறும் மாறிக்கொண்டிருப்பது தமிழில் மட்டுமல்ல, எல்லா மொழிகளுக்கும் உண்டு. மனிதர்களின் அறிவு வளர்ச்சிக்கும் அவர்களின் மொழி வளர்ச்சிக்கும் தொடர்பு உண்டு என்கிறார்கள் ஆய்வாளர்கள். அறிவாற்றலில் மக்கள் வளரும்போது மொழியும் வளர்கிறது. தமிழர்களின் மொழி வளர்ச்சி என்பது அவர்களின் அறிவு வளர்ச்சியையும் சேர்த்தே கணக்கிடப்படுகிறது. புதிய கலைச்சொற்கள் அதன் அடிப்படையிலேயே உருவாகின்றன. தமிழில் பேச்சுக்கும் எழுத்துக்கு மான இடைவெளி காலவளர்ச்சியில் அதிகமாகத் தெரிந்தாலும், புதிய சொற்களை உருவாக்கிய தமிழர்களின் அறிவுத்திறத்திற்கும் இதில் பங்கு உண்டு. அதனால்தான், பழந்தமிழர் பேசிய மொழிக்கும் தற்போதைய தமிழர்களின் மொழிக்கும் வேறுபாடு தெரிகிறது. கடந்த நூற்றாண்டின் இறுதிவரை எழுத்தில் ‘நாட்டாண்மை’ என்றும், பேச்சு வழக்கில் ‘நாட்டாமை’ என்றும் வழங்குவது வழக்கமாக இருந்தது. 1990களில் "நாட்டாமை' என்ற திரைப்படம் வெளியாகி வெற்றிகரமாக ஓடியபிறகு, அதனால் ஈர்க்கப்பட்ட தலைமுறையினர் தங்கள் எழுத்திலும் "நாட்டாமை'’என்றே எழுதத் தொடங்கி விட்டனர். இப்போது, "நாட்டாண்மை' என்று எழுதுவது பிழை போலவும், நாட்டாமை என்பதே சரி எனவும் கருதப்படுகிறது. இதுபோலத்தான் பல சொற்களும், சொற்றொடர்களும் திரிபு அடைந்துள்ளன. அதே 1990களில் அக்னி என்ற அமைப்பு நடத்திய இலக்கியக் கூட்டத்தில் சங்கத்தமிழ் பற்றிப் பேசிய முத்தமிழறிஞர் கலைஞர், முத்தமிழை இயல்-இசை-நாடகம் என்கிறோம். மனிதர்கள் முதலில் சைகை மொழியில் ஒருவருக்கொருவர் பேசிக் கொண்டார்கள். அதாவது நாடக பாணியில் அசைவுகள் இருந்தன. அதன்பின், தொலைவில் இருப்பவர்களை அழைப்பதற்கு "ஏ... ஓ...' நீண்ட குரல் கொடுத்தனர். அதாவது இசை போல அது ஒலித்தது. அதன்பிறகுதான் சொற்களும் அதற்கான எழுத்துகளும் தோன்றின. எனவே, மூத்த மொழியைக் கொண்ட தமிழர்களின் வாழ்வில் நாடகம்-இசை-இயல் என்ற வரிசையில் முத்தமிழ் உருவானது எனத் தனது பார்வையினைப் பதிவு செய்தார். காலந்தோறும் மாற்றங்கள் உருவாகிற நிலையில், இப்போது நாம் பேசும் தமிழ்கூட, அரை நூற்றாண்டு கழித்து அந்நியமாகிவிடக்கூடும்.