ஆர்.சுந்தரராஜன், சிதம்பரம்
கூட்டுறவு வங்கிகளை ரிசர்வ் வங்கியுடன் இணைப்பதால் பாதுகாப்பு என்கிறாரே மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவ்டேகர்?
ரிசர்வ் வங்கியில் இருந்த பணத்திற்கே பாதுகாப்பு இல்லை என்கிற அளவுக்கு கிட்டத்தட்ட ஒண்ணே முக்கால் லட்சம் கோடி இருப்புத் தொகையை செலவு செய்தது மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசு. பீரோவிலிருந்த பணத்திற்கே பாதுகாப்பு இல்லாதபோது, சிறுவாட்டுக் காசுக்கு பாதுகாப்பாகத்தான் அதை எடுத்து பீரோவில் வைக்கிறோம் என்கிறார் பிரகாஷ் ஜவ்டேகர்.
கே.ஆர்.உபேந்திரன், தஞ்சாவூர்
ஆறுமுகசாமி விசாரணைக் கமிஷன் சென்ற முறை கால அவகாசம் நீட்டிப்பு செய்ததிலிருந்து இன்று வரை ஒரு முறை கூட விசாரிக்காத நிலையில், மீண்டும் 8-வது முறையாக தற்போது 4 மாதம் நீட்டிப்பு செய்திருப்பது மக்கள் வரிப்பணம் தொடர்ந்து வீணடிக்கப்படும் செயல் தானே?
ஒரு கோடி ரூபாய்க்கு இட்லி கணக்கு எழுதப்பட்ட ஜெ.வின் மருத்துவ செலவை மிஞ்சிவிடும்
ஆர்.சுந்தரராஜன், சிதம்பரம்
கூட்டுறவு வங்கிகளை ரிசர்வ் வங்கியுடன் இணைப்பதால் பாதுகாப்பு என்கிறாரே மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவ்டேகர்?
ரிசர்வ் வங்கியில் இருந்த பணத்திற்கே பாதுகாப்பு இல்லை என்கிற அளவுக்கு கிட்டத்தட்ட ஒண்ணே முக்கால் லட்சம் கோடி இருப்புத் தொகையை செலவு செய்தது மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசு. பீரோவிலிருந்த பணத்திற்கே பாதுகாப்பு இல்லாதபோது, சிறுவாட்டுக் காசுக்கு பாதுகாப்பாகத்தான் அதை எடுத்து பீரோவில் வைக்கிறோம் என்கிறார் பிரகாஷ் ஜவ்டேகர்.
கே.ஆர்.உபேந்திரன், தஞ்சாவூர்
ஆறுமுகசாமி விசாரணைக் கமிஷன் சென்ற முறை கால அவகாசம் நீட்டிப்பு செய்ததிலிருந்து இன்று வரை ஒரு முறை கூட விசாரிக்காத நிலையில், மீண்டும் 8-வது முறையாக தற்போது 4 மாதம் நீட்டிப்பு செய்திருப்பது மக்கள் வரிப்பணம் தொடர்ந்து வீணடிக்கப்படும் செயல் தானே?
ஒரு கோடி ரூபாய்க்கு இட்லி கணக்கு எழுதப்பட்ட ஜெ.வின் மருத்துவ செலவை மிஞ்சிவிடும் அளவுக்கு, அவரது மரணம் தொடர்பாக அமைக்கப்பட்ட விசாரணை கமிஷனுக்காக செலவும் அதற்காக கால நீட்டிப்பும். ஓர் ஆளை சமாளிக்க வேண்டு மென்றால் அவன் தலையில் கல்லைப்போடு. ஒரு பிரச்சினையை சமாளிக்க வேண்டுமென்றால் அதன்பேரில் ஒரு கமிஷனைப் போடு என நெடுங்காலமாக சொல்லப்படுவதை ஆறுமுகசாமி கமிஷனும் உறுதிப்படுத்தி வருகிறது.
பி.மணி, குப்பம், ஆந்திரா மாநிலம்
சீன நாட்டோடு எல்லை பிரச்சனையில் இனியாவது இந்தியா எச்சரிக்கையோடு நடந்து கொள்ளுமா?
செயற்கைக்கோள் படங்கள் உண்மையைப் பேசுகின்றன. ஆட்சியாளர்கள் அதை மக்களிடம் தெரிவிப்பதில் பாதுகாப்பு கருதி ரகசியம் காத்தாலும், நாட்டு நலனை மனதில் கொண்டு எச்சரிக்கையுடன் செயல்படுவதே எதிர்காலத்திற்கு நல்லது.
கே.ஆர்.ஜி. ஸ்ரீராமன் பெங்களூர்77.
தமிழக காவல் துறையை பற்றி?
போலீஸ் அல்ல பொறுக்கி என்று சினிமாவில் வசனம் பேசியபோது தியேட்டரே அதிரும் அளவுக்கு கைத்தட்டியவர்கள் தமிழக மக்கள். மக்களின் அந்த அங்கீகாரத்தை நிரூபித்துக் காட்டும் செயல்களில் லேட்டஸ்ட்தான் சாத்தான்குளம் கொடூரம்.
இந்து குமரப்பன், விழுப்புரம்.
கொரோனோ தொற்றை தவிர்க்கும் வகையில், விழுப்புரம் அரசு போக்குவரத்துக் கழகத்தில். நடத்துனர்களுக்கு, விசிலுக்கு மாற்றாக, "காலிங் பெல்' வழங்கப்பட்டதை பற்றி?
சென்னையில் பழைய பல்லவன் போக்குவரத்துக் கழகத்தில், நடத்துநரின் சீட்டுக்கு மேல் ஒரு காலிங் பெல் இருக்கும். அப்புறம், எஃ.ப்.சி.க்காக பேருந்தை சரிசெய்யும்போது அதன் மீது பெயின்ட் அடித்து, பொத்தானை அமுக்க முடியாமல் செய்துவிடுவார்கள். கோவையில் சேரன் போக்குவரத்துக் கழகம் இயங்கியபோது பேருந்தின் இடதுபுறம் நீண்ட கயிறு இருக்கும். அது, மணியுடன் இணைக்கப்பட்டிருக்கும். நடத்துநர் டிக்கெட் கொடுத்துக் கொண்டே கூட்டத்தில் புகுந்து செல்லும்போது, ஸ்டாப்பிங் அறிந்து அந்தக் கயிற்றை அசைத்தால் மணி ஒலிக்கும். சில நேரங்களில், தன் டிக்கெட் பணி காரணமாக, பயணிகளைக் கூட கயிறை அசைக்கச் சொல்லும் நடத்துநர்களும் உண்டு. கேரளாவில் நீண்டகாலமாக இந்த அழைப்பு மணி முறைதான் நடைமுறையில் இருக்கிறது. கொரோனா காலம் அதனை விழுப்புரம் அரசு போக்குவரத்துக்கழகம் வரை பரவச் செய்திருக்கிறது.
மல்லிகா அன்பழகன் சென்னை 78
ஹெச்1பி விசா வழங்குவதை அமெரிக்கா நிறுத்தி வைத்துள்ளதால் நஷ்டம் இந்தியாவுக்கா? அல்லது அமெரிக்காவுக்கா?
நஷ்டம் யாருக்கு என்பது போகப் போகத் தெரியும். இதன்மூலம் உடனடித் தேர்தல் லாபம் பார்க்க நினைக்கிறார் அதிபர் டொனால்ட் டிரம்ப்.
_____________
தமிழி
தூயா, நெய்வேலி
பழந்தமிழ் மன்னர்கள் காலத்தில் தண்டனைகள் எப்படி இருந்தன?
கடிதோச்சி மெல்ல எறிக என்கிறார் திருவள்ளுவர். வேகமாக கையை ஓங்கினாலும் அடி மெலிதாக இருக்கவேண்டும். ஓங்குகிற வேகத்திலேயே குற்றவாளி மனது திடுக்கிட்டு, தவறை உணர்ந்து திருந்த வேண்டும் என்பதுதான் அரசர்கள் கடைப்பிடிக்க வேண்டிய தண்டனை முறை என்பதைப் பலரும் அவர்களுக்கு வலியுறுத்தியிருக் கிறார்கள். பசுவின் கன்றைத் தேர் சக்கரத்தில் கொன்ற தன் மகனுக்குத் தண்டனையாகவும், பசுவுக்கு நீதியாகவும், அவனை அதுபோல தேர்க்காலில் இட்டு ஏற்றிக் கொன்றான் மனுநீதிச் சோழன் என்கிறது புராணம். பூழி நாட்டை ஆண்ட நன்னன் என்ற மன்னன் தனது தோட்டத்து மரத்திலிருந்து விழுந்த மாங்காயை எடுத்து சாப்பிட்ட சிறுமிக்கு மரண தண்டனை விதித்ததை புறநானூறு காட்டுகிறது.
போரில் தோற்றுப்போன மன்னரின் மனைவியரின் தலை முடியை அகற்றி அவற்றில் கயிறு திரித்தல், எதிரி நாட்டு நிலத்தில் கழுதையைப் பூட்டி உழவு செய்தல், பகை அரசர்களின் ஊருக்கே தீவைத்தல் எனப் பலவித தண்ட னைகள் ஒட்டுமொத்தமாக நிறை வேற்றப்பட்டுள்ளன.
கழுவேற்றுதல் எனும் கொடிய மரண தண்டனையும் உண்டு. கண்ணுக்கு கண், பல்லுக்குப் பல் என்று செயல்பட்ட சில அரசர்களின் கொடூரத்தை தட்டிக்கேட்கும் மனித உரிமைப் போராளிகளாக அன் றைக்கு இருந்தவர்கள் புலவர்கள்.