சி. கார்த்திகேயன், சாத்தூர்
கருத்துக் கணிப்பு அமெரிக்க அதிபர் ட்ரம்பிற்கு சாதகமாக இல்லையாமே?
எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சியின் வேட்பாளராக களமிறங்கவிருக்கும் ஜோபிடன், முதல் கட்ட கருத்துக்கணிப்பில் ட்ரம்ப்பை முந்தியிருக்கிறார். இது ஜோபிடனுக்கான ஆதரவு என்பதைவிட, ட்ரம்ப் நிர்வாகத்தின் மீதான அமெரிக்க மக்களின் அதிருப்தி என்பதே பொருத்தம்.
வாசுதேவன், பெங்களூரு
மறைந்த பின்னணி பாடகர் ஏ.எல்.ராகவன்...!
தமிழ் திரையுலகில் பின்னணி பாடல் என்பது ஹீரோக்களின் இமேஜ் சம்பந்தப்பட்டதாக இருந்த காலத்தில், அதிலிருந்து விலகி, சுவையாகவும்-தனித்துவமாகவும் ஒரு சில குரல்கள் ஒலித்தன. அதில் ஏ.எல்.ராகவன் குரலுக்கும் முக்கிய பங்கு உண்டு. அத்தகைய குரல்கள், பெரும்பாலும் இரண்டாம் நிலை கதாநாயகர்கள், நகைச்சுவை நடிகர்களுக்கான பின்னணி பாடலாக அமைந்துவிடும். ஏ.எல்.ராகவனுக்கும் அதுதான் நடந்தது.
பி.மணி, வெள்ளக்கோவில், திருப்பூர் மாவட்டம்
இந்தியா, சீனா எல்லை பிரச்சனைக்கி
சி. கார்த்திகேயன், சாத்தூர்
கருத்துக் கணிப்பு அமெரிக்க அதிபர் ட்ரம்பிற்கு சாதகமாக இல்லையாமே?
எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சியின் வேட்பாளராக களமிறங்கவிருக்கும் ஜோபிடன், முதல் கட்ட கருத்துக்கணிப்பில் ட்ரம்ப்பை முந்தியிருக்கிறார். இது ஜோபிடனுக்கான ஆதரவு என்பதைவிட, ட்ரம்ப் நிர்வாகத்தின் மீதான அமெரிக்க மக்களின் அதிருப்தி என்பதே பொருத்தம்.
வாசுதேவன், பெங்களூரு
மறைந்த பின்னணி பாடகர் ஏ.எல்.ராகவன்...!
தமிழ் திரையுலகில் பின்னணி பாடல் என்பது ஹீரோக்களின் இமேஜ் சம்பந்தப்பட்டதாக இருந்த காலத்தில், அதிலிருந்து விலகி, சுவையாகவும்-தனித்துவமாகவும் ஒரு சில குரல்கள் ஒலித்தன. அதில் ஏ.எல்.ராகவன் குரலுக்கும் முக்கிய பங்கு உண்டு. அத்தகைய குரல்கள், பெரும்பாலும் இரண்டாம் நிலை கதாநாயகர்கள், நகைச்சுவை நடிகர்களுக்கான பின்னணி பாடலாக அமைந்துவிடும். ஏ.எல்.ராகவனுக்கும் அதுதான் நடந்தது.
பி.மணி, வெள்ளக்கோவில், திருப்பூர் மாவட்டம்
இந்தியா, சீனா எல்லை பிரச்சனைக்கிடையே நேபாளமும் இந்தியாவுடன் மோதுகிறதே?
சீனாவின் நிழலில் நிற்பதால், கைகளை உயர்த்தி இந்திய மரத்தின் இலைகளைத் தொட்டுப் பார்க்கிறது நேபாளம்.
ஆர்.சுந்தரராஜன், சிதம்பரம்
வெளிப்படைத்தன்மையின்றி செயல்பட்டதால் ஊரடங்கிற்குள் ஊரடங்கு என காலம் நீள்கிறது என்கிறாரே கமல்ஹாசன்?
வெளிப்படைத்தன்மை என்பதைவிட எடப்பாடி அரசின் அலட்சியமும்-அறியாமையும்தான் ஊரடங்கிற்குள் ஊரடங்கு என மக்களை வாட்டி வதைக்கிறது.
அ. யாழினி பர்வதம், சென்னை 78.
ஹாலிவுட் பாணியில் நடிகை வனிதா விஜயகுமார் மூன்றாம் திருமணம் செய்து கொண்டது பற்றி...
இதற்கு எதற்கு ஹாலிவுட் வரைக்கும் போக வேண்டும். நமது புராணங்களில் உள்ள கதைகளைப் படித்துப் பாருங்கள். அரசியல் தலைவர்- தலைவிகளின் வாழ்க்கைப் பக்கங்களைப் புரட்டிப் பாருங்கள். அதன்பிறகு, ஹாலிவுட்டை எட்டிப் பார்த்து, வனிதா விஜயகுமாரை அதனுடன் பொருத்திப் பார்க்கலாம்.
இந்து குமரப்பன், விழுப்புரம்.
மாமியார்-மருமகள் சண்டை, ஆளுங்கட்சி-எதிர்க்கட்சி சண்டை -என்ன வேறுபாடு?
இருக்கின்ற அதிகாரத்தை விட்டுவிடக்கூடாது என்று ஒரு தரப்பும், அதிகாரத்தை அடையாமல் விடக்கூடாது என இன்னொரு தரப்பும் மோதுவதுதான் இரண்டிலும் நடக்கிறது. ஒன்றில் ஜனநாயகத்தன்மை உண்டு. அது எது என்பது அவரவர் அனுபவம் சார்ந்தது.
கே.ஆர்.ஜி. ஸ்ரீராமன், பெங்களூர் 77
சென்னையின் இப்போதைய நிலைக்கு காரணம் மக்களா?... அரசா?... மாநகராட்சியா?
கடவுளுக்குத்தான் தெரியும்.
__________
தமிழி
சங்கர சுப்பிரமணியன், நெல்லை
தமிழகத்தில் நடக்கும் அகழாய்வு களில் முதுமக்கள் தாழி கிடைக்கிறதே? இறந்த உடலை தமிழர்கள் புதைக்க மட்டுமே செய்தார்களா? எரிக்கவில்லையா?
கீழடி அகழாய்வுத் திட்டத்தின் ஆறாம் கட்ட அகழாய்வு கொந்தகை, மணலூர், அகரம், கீழடி ஆகிய இடங்களில் நடந்து வருகிறது. கீழடியிலும் கொந்தகையிலும் முதுமக்கள் தாழிகள் கண்டறியப்பட்டுள்ளன. கொந்தகையில் சுரேஷ் என்பவர் நிலத்தில் தோண்டப்பட்ட நான்கு குழிகளில், 10 முதுமக்கள் தாழிகள் கண்டறியப்பட்டன. இதில் மூன்று தாழிகளில் உள்ள எலும்புகள் வெளியே எடுக்கப்பட்டு மரபணு சோதனைக்காக அனுப்பப் பட்டுள்ளன. தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட அகழாய்வுகளில் மேலும் இரண்டு முதுமக்கள் தாழிகள் கண்டறியப்பட்டன. ஈரோடு மாவட்டம் கொடுமணலில் நடந்த அகழாய்வில் புதைகுழிகள் கண்டறியப்பட்டதுடன் அதில் வழக்கமான முதுமக்கள் தாழிகளுடன் கூடுதலான பானைகளும், மண் கிண்ணங்களும் கிடைத்துள்ளன. அது உணவு- தண்ணீர் வைப்பதற்கான மண்கலங்கள் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இறப்பிற்குப் பிறகான வாழ்க்கை குறித்த தமிழர்களின் நம்பிக்கையை இது வெளிப்படுத்துகிறதா எனவும் ஆராய்கின்றனர். நிறைவாழ்வு வாழ்ந்து, வயது மூப்பினால், உடல் சுருங்கி, முதுகு கூனி மரணத்தை தழுவுபவர்களை தாழிக்குள் வைத்து அடக்கம் செய்யும்போது, உணவு-தண்ணீர் ஆகியவற்றை அருகிலே வைப்பது தமிழர் மரபு. இப்போதும், வீடுகளில் முன்னோருக்கான படையலில் அவர்கள் விரும்பிய உணவு இருக்கும். கொடுமணல் அகழாய்வுகளில் கிடைத்திருப்பவையும் அந்த வகையிலானதா, இறப்பிற்குப் பிறகான தமிழர்களின் சடங்கு முறைகளின் நீட்சியா என ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன. இவற்றின் அடிப்படையில் பார்த்தால், இறந்தவர்களை புதைப்பதே தமிழர்களின் பண்பாட்டு அடையாளமாக இருந்துள்ளது. நிலத்தைப் பகுத்து குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் எனப் பெயரிட்டு வாழ்ந்தவர்கள் தமிழர்கள். வழிபாட்டுக்குரியதாக நிலத்தைக் கருதியவர்கள். அதுபோல, தன்னை வளர்த்த நிலத்திற்கு நன்றிக் கடன் செலுத்துவதும் தமிழர் மரபு. அதுபற்றி, தேவி சோமசுந்தரம் என்பவர் சமூக வலைத்தளத்தில் பின்வருமாறு பதிவு செய்துள்ளார். “மண்ணில் பிறந்த உடலை மண்ணுக்கே திருப்பி தந்தவர்களாய் வாழ்ந்துள்ளோம். எரிப்பது எல்லாம் ஆரிய பண்பாட்டு படை எடுப்பால் நிகழ்ந்த மாற்றம். அவர்கள் நெருப்பை வணங்குபவர்கள். ஹோமம் வளர்ப்பதே அவர்கள் சடங்கு. நெருப்புக்கு உடலை தருவது அந்த பண்பாட்டு தொடர்ச்சி. நாம் நம் பண்பாட்டை எப்படி கொஞ்ச கொஞ்சமாக இழந்தோம் என்பதை கீழடி உள்ளிட்ட அகழாய்வுகள் உணர்த்துகின்றன.’’