கே.ஆர்.உபேந்திரன், தஞ்சாவூர்
கொரோனாவுடன் பழகி, அதே சமயம் எப்படி உயிரோடும் இருப்பது?
மக்களின் ஓட்டுகளை வாங்கி, அதன் மூலம் ஆட்சிக்கு வந்து, அதிகாரத்தை தாறுமாறாகப் பயன்படுத்தி தங்கள் செல்வாக்கை வளர்த்துக்கொண்டு, கொரோனா பரவலுக்கு காரணம் பொதுமக்களின் அலட்சியம்தான் என்று ஓட்டுப் போட்டு ஆட்சியை வழங்கிய மக்கள் மீதே பழி போடுபவர்களையே சகித்துக் கொண்டு வாழவில்லையா? அதைவிடவா கொரோனா கொடூரமானது!
பி.மணி, குப்பம், ஆந்திரா
ஒடிசா மாநிலத்தில் வங்கி அதிகாரி தன்னுடைய வயது முதிர்ந்த தாயின் பணத்தை வழங்க மறுத்ததோடு நேரில் வரச்சொன்னதால். தாயை கட்டிலோடு மகள் வங்கிக்கு இழுத்துச் சென்றது மனதை கலங்கச் செய்கிறதே?
சொல்லுக்கும் செயலுக்குமான இடைவெளி எத்தனை துயரமானது என்பதற்கு அந்தப் படமே சாட்சி. ரிசர்வ் வங்கி கவர்னர் அறிவித்தவற்றைக் கேட்டபோது, அத்தனை சிக்கல்களும் தீர்ந்ததுபோல இருந்தது. உள்ளூர் வங்கி அதிகாரிகள் செயல்பாடும் நடைமுறைச் சிக்கல்களும், எளிய மனிதர்களை நடைப் பிணங்களாக்கி விடுகின்றன.
கே. இந்து குமரப்பன், விழுப்புரம்.
மீண்டும் ஊரடங்கு கடுமையாக்கப்படும் என வெளியான செய்தி தவறானது' முதல்வர் பழனிசாமி கூறியுள்ளாரே?
தவறானது என்று மட்டுமல்ல, இத்தகைய வதந்தி பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக் கப்படும் என்று கூட முதல்வர் கூறி னார். ஆனால், அவர்தான் அடுத்த இரண்டு நாட்களில், சென்னை உள்ளிட்ட 4 மாவட் டங்களில் 12 நாட்கள் கடுமையான ஊரடங்கு என அறிவித்தார். வதந்தி பரப்பியது யார் எனப் புரியாமல் இருக்கிறார்கள் எடப்பாடி பழனிச்சாமியால் ஆளப்படும் மக்கள்.
தூயா, நெய்வேலி
அரசாங்கமே எல்லாவற்றையும் செய்ய வேண்டும் என்று மக்கள் எதிர்பார்ப்பது சரிதானா?
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/mavali_47.jpg)
அரசாங்கம் செய்ய வேண்டியதை சரியாகச் செய்ய வேண்டும் என்று எதிர்பார்ப்பதில் தவறில்லை. சென்னையில் அரசு ஸ்டான்லி மருத்துவமனை கொரேனா வார்டில் சிகிச்சை பெற்றுவருபவருக்கு பக்கத்தில், இறந்தவரின் உடல் கறுப்புக் கவரில் சுற்றப்பட்டிருந்த படம் அதிர வைத்தது. அதே நேரத்தில், கொரோனாவால் இறந்த இன்னொருவரின் உடலை யாரும் கேட்டு வராததால் அந்த உடலை எஸ்.டி.பி.ஐ. அமைப்பினர் சுமந்து சென்று, முறைப்படி அடக்கம் செய்தது நெகிழ வைத்துள்ளது.
கே.ஆர்.ஜி. ஸ்ரீராமன், பெங்களூர்77
தமிழக சுகாதாரத் துறையில், செயலாளர்கள் இப்படிப்பட்ட கொரோனா. பாதிப்பு காலத்தில் அடிக்கடி மாற்றப்படுவது ஏன்?
எப்படியாவது கொரோனாவைக் குழப்பி, ஓடச் செய்துவிடலாம் என்கிற எடப்பாடி அரசின் ராஜதந்திர அணுகு முறையாக இருக்கலாம்.
___________
தமிழி
சு.வெங்கடேஷ், கோட்டயம்
தமிழர்களின் மரபுவழி வழிபாட்டு முறையை மனதில் வைத்துதானே திருப்பதி கோவிலின் பாகுபாடான தரிசன முறையை நடிகர் சிவகுமார் எடுத்துரைத்தார். அதற்கு ஏன் இத்தனை வன்மமும் வழக்கும்?
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/mavali1_15.jpg)
தமிழ் மரபில் வழிபாடு என்பது, அவரவர் குடும்பத்தின் மூதாதையரைப் போற்றுவது, இயற்கையை வழிபடுவது, நாடு காத்த வீரர்களுக்குப் பெருமை சேர்ப்பது எனப் பல வகையிலும் வழிபடுவோருக்கும் வழிபடப்படுவோருக்குமான நெருங்கிய உறவைக் காட்டுவதாகும். பக்தி இலக்கியங்களால் தமிழ் வளர்த்த நாயன்மார்களும் ஆழ்வார்களும் இறைவனைத் தமது இச்சைக்கேற்ற வகையில் கற்பனை செய்து பாடியிருக்கிறார்கள். தேவாரம் பாடிய மூவருள் ஒருவரான சுந்தரமூர்த்தி நாயனார், ஏழிசையாய்- இசைப்பயனாய்- இன்னமுதாய்- என்னுடைய தோழனுமாய்- யான் செய்யும் துரிசுகளுக்கு உடனாகி- மாழையொண்கண் பரவையைத் தந்து ஆண்டானை’என்று பாடுகிறார். இறைவனைத்தான் தன் இதயத்தை வருடும் இசையாகக் கருதுகிறார். அந்த இசை தரும் பயன் அனைத்தும் இறைவனே என்கிறார். அதுமட்டுமல்ல, தன்னுடைய நண்பனாக இருந்து, தான் செய்யும் பிழைகளுக்கும் துணை நின்றவர் என்று இறைவனைக் குறிப்பிடும் சுந்தரர், தன் காதலி பரவை நாச்சியாரைத் தனக்குத் திருமணம் செய்து வைக்கும் வேலையையும் செய்தவர் என்று இறைவனைக் குறிப்பிடுகிறார். கடவுளுக்கும் அவர்தம் அடியவருக்குமான உறவு என்பது தமிழ் மரபில் இப்படித்தான் தொடர்ந்தது. இந்த மரபு தகர்ந்ததையும் அதன்பின் தற்போது என்ன நடக்கிறது என்பதையுமே நடிகர் சிவகுமார் தன்னுடைய உரையில் ஒரு பக்தனுக்குரிய ஆதங்கத்துடன் மிகத் தெளிவாக எடுத்துக் கூறியிருந்தார். தஞ்சை பெரியகோவிலில் கருங்கல்லை பெருவுடையார் எனும் சிவலிங்கமாக வடித்துத் தந்த தலைமைச் சிற்பியான குஞ்சரமல்லனின் வாரிசுகள் இப்போதும் கருவறைக்குள் அனுமதிக்கப்படுவதில்லை. திருப்பதி கோவிலில் குடும்பத்துடன் நடையாய் நடந்து மலையேறி வந்து ஏழுமலையானை வழிபட நினைப்போரை நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்க வைத்து, தரிசனத்திற்காகக் கிடைக்கும் சில நொடிகளிலும்கூட "ஜருகண்டி, ஜருகண்டி' என விரட்டும் தேவஸ்தான நிர்வாகம், பெரியபெரிய செல்வாக்குள்ளவர்கள் தங்கள் விருப்பத்துக்குரியோருடன் வசதியான காரில் வரும்போது சிறப்பு தரிசனம் என உடனடியாக அனுமதித்து, அவர்களுக்கு மரியாதையும் செய்கிறது. இது ஏன் என்பது ஒவ்வொரு பக்தருக்குள்ளும் எழும் கேள்வி. அதைத்தான் சிவகுமார் கேட்டிருந்தார். நியாயமான கேள்விக்கு சரியான பதிலைத் தரமுடியாதவர்கள் வழக்கு எனும் ஆயுதத்தால் தாக்க நினைக்கிறார்கள். உண்மை பக்தர்கள் சிவகுமாருக்கு கவசமாக இருப்பார்கள்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2020-06/mavali-t_3.jpg)