மாவலி பதில்கள்

mm

மணி, வெள்ளக்கோவில்

கொரோனா கவலையை மறக்க முடியாத இந்நேரத்தில் அரசு பெட்ரோல், டீசல் விலைகளை நாள்தோறும் ஏற்றி மக்களை மலைக்க வைக்கிறதே?

தலைக்கு மேலே வெள்ளம் போகிறது. அதில் ஒரு சாண் அதிகமாகப் போவதை யாரும் கவனிக்க மாட்டார்கள் என்கிற ஆட்சியாளர்களின் அசாத்திய நம்பிக்கைதான்.

சி. கார்த்திகேயன், சாத்தூர்

அரசின் கொள்கை முடிவுகளில் நீதிமன்றம் தலையிட முடியாது என்று நீதிபதிகள் அவ்வப்போது கூறுகிறார்களே?

நீதிமன்றங்களுக்கான சட்டங்களும், நாடாளுமன்றம்- சட்டமன்றம் வகுக்கின்ற சட்டங்களும் முரண்படாமல் காப்பதே ஜனநாயகமாகும். மக்களாட்சியில் நாடாளு மன்றம்- சட்டமன்றம் ஆகியவையே மக்களின் மனசாட்சியாகும். அதன் குரல் தடுமாறும் போது சரிப்படுத்த வேண்டியவை நீதிமன் றங்கள். கொள்கை முடிவுகள் என்பவை மக்களின் நலன் சார்ந்ததாக இருக்க வேண்டும். இடஒதுக்கீடு என்கிற சமூக நீதி, அடிப்படை உரிமையில் வராது என்கிறது நீதிமன்றம். டாஸ்மாக் மதுபானக் கடைகளை அரசு திறப்பது அதன் கொள்கை முடிவு எனத் தலையிட மறுக்கிறது. சட்டத்தின் அடிப் படையில

மணி, வெள்ளக்கோவில்

கொரோனா கவலையை மறக்க முடியாத இந்நேரத்தில் அரசு பெட்ரோல், டீசல் விலைகளை நாள்தோறும் ஏற்றி மக்களை மலைக்க வைக்கிறதே?

தலைக்கு மேலே வெள்ளம் போகிறது. அதில் ஒரு சாண் அதிகமாகப் போவதை யாரும் கவனிக்க மாட்டார்கள் என்கிற ஆட்சியாளர்களின் அசாத்திய நம்பிக்கைதான்.

சி. கார்த்திகேயன், சாத்தூர்

அரசின் கொள்கை முடிவுகளில் நீதிமன்றம் தலையிட முடியாது என்று நீதிபதிகள் அவ்வப்போது கூறுகிறார்களே?

நீதிமன்றங்களுக்கான சட்டங்களும், நாடாளுமன்றம்- சட்டமன்றம் வகுக்கின்ற சட்டங்களும் முரண்படாமல் காப்பதே ஜனநாயகமாகும். மக்களாட்சியில் நாடாளு மன்றம்- சட்டமன்றம் ஆகியவையே மக்களின் மனசாட்சியாகும். அதன் குரல் தடுமாறும் போது சரிப்படுத்த வேண்டியவை நீதிமன் றங்கள். கொள்கை முடிவுகள் என்பவை மக்களின் நலன் சார்ந்ததாக இருக்க வேண்டும். இடஒதுக்கீடு என்கிற சமூக நீதி, அடிப்படை உரிமையில் வராது என்கிறது நீதிமன்றம். டாஸ்மாக் மதுபானக் கடைகளை அரசு திறப்பது அதன் கொள்கை முடிவு எனத் தலையிட மறுக்கிறது. சட்டத்தின் அடிப் படையிலான நீதியின் பார்வை சரியானதா என்ற விவாதம் எழுகிறது. ஜனநாயகத்தை காக்கும் அமைப்பாக மக்களின் கடைசி நம் பிக்கையைப் பெற்றிருப்பவை நீதிமன்றங் கள். அந்த நம்பிக்கை வலுப்படவேண்டிய காலம் இது.

nn

கே.ஆர்.உபேந்திரன், தஞ்சாவூர்

பா.ஜ.க. தன்னுடைய குதிரைப் பேர அரசியலை ராஜஸ்தானிலும் ஆரம்பித்து விட்டார்களே?

இந்தியத் தொல்லியல் ஆய்வுகளில் குதிரை என்பது இதுவரை காணக் கிடைக்கவில்லை. எருதுகளே இங்கே இருந்துள்ளன. ஆரியர் நுழைவுக்குப் பிறகே குதிரைகள் வந்தன என்கிறார்கள் வரலாற்று ஆய்வாளர்கள். குதிரைகளை அறிந்தவர்கள் குதிரை பேரங்களையும் அறிந்திருக்கிறார்கள். ராஜஸ்தான், குஜராத் என காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை இழுத்து, மாநிலங்களவை தேர்தலில் வெற்றி பெறுவவதில் பா.ஜ.க. குதிரை வேகத்தில் செயல்படுகிறது.

ஆர்.சுந்தரராஜன், சிதம்பரம்

கொரோனா மரணத்தை டெல்லி அரசு குறைத்து காட்டுவதாக செய்திகள் வருகிறதே?

தமிழ்நாடு அரசு என்ன தக்காளி தொக்கா? இது, டெல்லிக்கு அக்கா. சென்னையில் மட்டும் 400 மரணங்கள் மறைக்கப்பட்டிருக்கின்றன என்ற சர்ச்சையின் காரணமாக 11 பேர் கொண்ட குழு நிய மிக்கப்பட வேண்டிய நிலை உருவாகியுள்ளதே!

கே இந்து குமரப்பன், விழுப்புரம்

சீனாவுடனான எல்லைப் பிரச்சனையில் பிரதமர் மோடி மவுனமாக இருந்து ஒளிந்து கொள்கிறார் என்று ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளாரே?

பாகிஸ்தான் என்றால் சர்ஜிகல் ஸ்டிரைக், சீனா என்றால் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு. மோடியின் அசாத்திய ராஜதந்திரத்தை பாராட்டும் மனது ராகுலுக்கு இல்லையே!

_________

தமிழி

ராகுல், கோயம்புத்தூர்

பாண்டிய நாட்டுக்குட்பட்ட வைகையின் கீழடி, தாமிரபரணியின் ஆதிச்சநல்லூர், அதுபோல சேர நாட்டிற்குரிய கொற்கை. இங்கெல்லாம் அகழாய்வுகள் நடத்தப்பட்டு தமிழர் பண்பாட்டு அடையாளங்கள் கண்டு பிடிக்கப்பட்டது போல, பண்டைய சோழ நாட்டுக்குட்பட்ட பகுதிகளில் அகழாய்வுகள் நடந்துள்ளனவா?

மூவேந்தர்கள் காலத்திற்கு முற்பட்ட தமிழர்களின் வரலாற்றுத் தொன்மையைக் காட்டும் வகையில் அகழாய்வுகளில் பல ஆதாரங்கள் கிடைத்துள்ளன. ஆதிச்சநல்லூர், கொடுமணல், சிவகளை போன்ற இடங்களில் கிடைத்திருக்கும் முதுமக்கள் தாழி உள்ளிட்ட ஆதாரங்கள், மூவாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழர் நாகரிகத்தைக் காட்டக்கூடியவை என்கிறார்கள் ஆய்வாளர்கள். அப்போது எந்த மன்னர்கள் ஆட்சி செய்தார்கள் என்பது குறித்த ஆய்வுகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. பாண்டிய மன்னர்கள் சங்கம் வைத்து தமிழ் வளர்த்த காரணத்தால், வைகை ஆற்று நாகரிகமான கீழடியில் சங்கப்பாடல்களை ஒட்டிய சான்றுகளைக் கண்டறிய முடிந்திருக்கிறது. மூன்றாம் தமிழ்ச் சங்கம்தான் தற்போதைய மதுரையில் இயங்கியது என்றும், முதல் தமிழ்ச் சங்கம் இயங்கிய தென்மதுரையும், இரண்டாம் தமிழ்ச் சங்கம் இயங்கிய கபாடபுரமும் கடலில் மூழ்கிவிட்டதாகவும் ஆராய்ச்சி யாளர்கள் குறிப்பிடுகிறார்கள். வைகை ஆற்று நாகரிகம் போலவே பொருநை எனப்படும் தாமிரபரணி ஆற்று நாகரிமும் சிறப்பு வாய்ந்ததாகும். பொதிகை மலைத் தென்றலிலிருந்து தவழ்ந்து வரும் தமிழ்க் காற்று, பொருநையில் நீராடுவதால் அங்கும் தமிழர் பண்பாட்டு அடையாளங்கள் கண்டெடுக்கப் பட்டுள்ளன. அவற்றை முழுமையாக ஆய்வு செய்தால், தமிழர் நாகரிகத்தின் தொன்மையை உலகம் அறிந்து கொள்ள முடியும்.

சோழர்களைப் பொறுத்தவரை அவர்களின் கடற்கரை நகரமான காவிரிப்பூம்பட்டினம் எனும் பூம்புகார் கடல் கொண்ட வரலாற்றை அறிய முடிகிறது. எனவே, கடல் ஆய்வுகள் வாயி லாக பூம்புகாரின் தொன்மையை அறிய முடியும். இன்றைய பூம்பு கார் முதல் உறையூர் வரையிலான பகுதிகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய ஆய்வுகள் நிறைய உள்ளன. அகழாய்வு நடத்தப்படாத நிலையிலேயே, ஏறத்தாழ ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக சோழ மன்னன் கரிகாலன் கட்டிய கல்லணை என்பது தொழில் நுட்ப அதிசயமாகத் திகழ்கிறது. காவிரி பாசனப்பகுதி முழுவதும், கைரேகை போல விரிந்து செல்லும் வாய்க்கால்கள் பலவற்றை சோழ மன்னர்கள் அமைத்திருப்பது நீர் மேலாண்மைக்கான பொறியியல் ஆகும். பிற்காலச் சோழ மன்னர்கள் கட்டிய தஞ்சை பெரிய கோவில், கங்கை கொண்ட சோழபுரம் கோவில் ஆகிய வையும் தொழில்நுட்ப சாதனைகளாகும். மண்ணுக்கு மேலே இத்தகைய ஆச்சரியங்களை உருவாக்கிய சோழர்கள் ஆட்சிக் காலத்தில் மண்ணுக்கு கீழே புதைந்தவை என்ன என்பது குறித்து அவர்களின் நிலப்பரப்பில் மேற்கொள்ளப்படும் ஆய்வுகள் மூலம்தான் தெரியவரும்.

nkn170620
இதையும் படியுங்கள்
Subscribe