கே.ஆர்.ஜி.ஸ்ரீராமன், பெங்களூரு 77
பேருந்துகளில் பணமில்லா பரிவர்த்தனை சாத்தியமா?
மக்களைப் பற்றிக் கவலைப்படாமல் இரவோடு இரவாக ரூபாய் நோட்டுகளை மதிப்பிழக்கச் செய்தவர்கள் ஆளும் நாட்டில் எதுவும் சாத்திய மாகலாம். ஆனால், பேருந்துகளில் தற்போதைய தேவை, பேருந்துகளில் பணமில்லா பரிவர்த்தனை இல்லை. கொரோனா பரவாதபடி, தனி மனித இடை வெளியுடனான பயணம்.
கே.ஆர்.உபேந்திரன், தஞ்சாவூர்
சி-வோட்டர் நடத்திய கருத்துக் கணிப்பில் இந்த கொரோனா காலத்திலும் நரேந்திர மோடிக்கு 65% ஆதரவும், ராகுல்காந்திக்கு 1%க்கு குறைவான ஆதரவும் இருப்பதாக வெளியிடப்பட்டிருப்பதுடன், ஒடிசா முதல்வருக்கு அதிக செல்வாக்கும், தமிழக முதல்வர் பின்தங்கியவர்களில் முன்னணி பெற்றிருப்பதும் எதைக் காட்டுகிறது?
மூடீஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் இந்தியாவில் பொருளாதார நிலைமை மோடி ஆட்சியில் படுபாதாளத்தில் இருப்பதை அம்பலப் படுத்தும் நிலையில், சி- வோட்டர் கருத்துக்கணிப்பு மோடியைக் காப்பாற்ற பயன்படலாம். எடப்பாடி பழனிச்சாமி மீதான அதிரு
கே.ஆர்.ஜி.ஸ்ரீராமன், பெங்களூரு 77
பேருந்துகளில் பணமில்லா பரிவர்த்தனை சாத்தியமா?
மக்களைப் பற்றிக் கவலைப்படாமல் இரவோடு இரவாக ரூபாய் நோட்டுகளை மதிப்பிழக்கச் செய்தவர்கள் ஆளும் நாட்டில் எதுவும் சாத்திய மாகலாம். ஆனால், பேருந்துகளில் தற்போதைய தேவை, பேருந்துகளில் பணமில்லா பரிவர்த்தனை இல்லை. கொரோனா பரவாதபடி, தனி மனித இடை வெளியுடனான பயணம்.
கே.ஆர்.உபேந்திரன், தஞ்சாவூர்
சி-வோட்டர் நடத்திய கருத்துக் கணிப்பில் இந்த கொரோனா காலத்திலும் நரேந்திர மோடிக்கு 65% ஆதரவும், ராகுல்காந்திக்கு 1%க்கு குறைவான ஆதரவும் இருப்பதாக வெளியிடப்பட்டிருப்பதுடன், ஒடிசா முதல்வருக்கு அதிக செல்வாக்கும், தமிழக முதல்வர் பின்தங்கியவர்களில் முன்னணி பெற்றிருப்பதும் எதைக் காட்டுகிறது?
மூடீஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் இந்தியாவில் பொருளாதார நிலைமை மோடி ஆட்சியில் படுபாதாளத்தில் இருப்பதை அம்பலப் படுத்தும் நிலையில், சி- வோட்டர் கருத்துக்கணிப்பு மோடியைக் காப்பாற்ற பயன்படலாம். எடப்பாடி பழனிச்சாமி மீதான அதிருப்தி மக்களிடமே தெரிகிறது. ஆனால், கொரோனா காலம் என்பது மக்களின் உயிர் சம்பந்தப்பட்டது. அது ஒன்றும் ஒலிம்பிக் போட்டி யல்ல, பிரதமருக்கு தங்கப்பதக்கம், ஒடிசா முதல்வருக்கு வெள்ளிப் பதக்கம், தமிழக முதல்வர் கடைசியில் இருக்கிறார் என்று மதிப்பிடு வதற்கு. மக்களைக் காப்பாற்ற வேண் டியது மத்திய- மாநில அரசுகளின் கடமை. அதை எந்த அரசும் சரியாக செய்யவில்லை.
ஆர்.சுந்தர்ராஜன், சிதம்பரம்-1
அமெரிக்காவில் கறுப்பினத்தைச் சேர்ந்தவரைக் கொன்ற வெள்ளைநிற போலீஸ் அதிகாரியின் மனைவி அவருக்கு டைவர்ஸ் நோட்டீஸ் அனுப்பி விட்டாராமே?
தன் கணவரின் செயலுக்காக அதிகபட்ச தண்டனையை வழங்கவேண்டும் என்று அவர் கூறியிருப்பது மிக முக்கியமானது. அமெரிக் காவில் நிறவெறி இன்னமும் நீடித்து வரும் நிலையில், கறுப்பினத் தவரான ஜார்ஜ் ப்ளாய்டு கொல்லப்பட்டதற்கு எதிரான நீதி கேட்கும் போராட்டத்தில் வெள்ளை நிறத்தவர்கள் பலரும் கலந்துகொண்டது அங்கே மெல்ல ஏற்பட்டு வரும் மாற்றத்தைக் காட்டியது. அமெரிக்காவில் அருகில் உள்ள கனடா நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மண்டியிட்டு தன் ஆதரவைக் காட்டியிருப்பதும் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.
ஆனந்தி ராஜாராம், கண்டமங்கலம்
ஊரடங்கு தளர்த்தப்பட்ட நிலையில் கொலை, கொள்ளை போன்ற சம்பவங்கள் அதி கரிக்குமா?
ஊரடங்குக்கு முன் பிருந்த வாழ்க்கை நிலை திரும்பா விட்டால் அதிகரிக்கும் என்பதே இயற்கை விதி.
வாசுதேவன், பெங்களூரு
மனிதர்களுக்கு தூக்கம் என்ற செயல் இல்லாமிலிருந்தால்?
துக்கம்தான் மிஞ்சும்.
__________
தமிழி
ஃபெமினா, மண்ணடி, சென்னை-1
கீழடி புதிய அகழாய்வில் பெரிய விலங்கு எலும்பு கிடைத்திருக்கிறதே, ஊரடங்கு காலத்திலும் அகழாய்வுப் பணிகளை நடத்த முடியுமா?
வொர்க் ஃப்ரம் ஹோம் என்பது ஐ.டி. உள்ளிட்ட பணியாளர்களுக்கு மட்டுமல்ல, அகழ்வாராய்ச்சிக்காரர்களுக்கும் சேர்த்துதான். மண்ணைத் தோண்டாமல், வான்வழியாக ஒளி ஊடுகதிர் மூலம் லேசர் ஆராய்ச்சிகள் ஏற்கனவே நடத்தப்பட்டுள்ளன. அத்தகைய ஆராய்ச்சிகள் மூலமாகப் பெறப்பட்ட புகைப்படங்களைக் கொண்டு இங்கிலாந்தில் உள்ள தொல்லியல் ஆய்வாளர்கள் தங்கள் வீட்டிலிருந்தபடியே பல ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர். முனைவர் கிறிஸ் ஸ்மார்ட் என்பவர் தலைமையில் நடைபெற்று வரும் இந்த ஆராய்ச்சியில் தமர் பள்ளத்தாக்குப் பகுதியில் வரலாற்றுக்கு முந்தைய காலத்துக் கட்டமைப்புகளைக் கண்டறிந்து வருகின்றனர். ரோமானியர்கள் அமைத்த இரண்டு சாலைகளைக் கண்டறிந்துள்ளனர். அதுபோலவே 30க்கும் மேலான கட்டடங்கள், 20 புதைகுழிகள் உள்ளிட்டவையும் இந்த ஆய்வில் கண்டறியப்பட்டள்ளன. கால்ஸ்டாக் என்கிற ரோமானிய கோட்டையைக் கண்டறியும் வகையில் தங்கள் தொல்லியல் ஆய்வுகள் இந்த நேரத்திலும் தொடர்வதாக முனைவர் ஸ்மார்ட் கூறுகிறார். இந்தியாவின் பரோடா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் ரித்விக் பல்வாலியும் இந்த தொழில்நுட்பம், தொல்லியல் துறையில் மிகுந்த பயன் தரும் என்கிறார். இந்தியாவைப் பொறுத்தவரை இந்தத் தொழில்நுட்பம் இன்னமும் தொல்லியல் துறையில் முழுமையாகப் பயன்படுத்தப்படவில்லை. அதற்கான செலவு உள்ளிட்டவை இதற்கானத் தடையாக உள்ளன. இந்திய அரசின் தொல்லியல்துறையும் கீழடி ஆய்வுகளுக்குப் போதிய நிதி வழங்காமல் காலம் தாழ்த்துகிறது. தமிழ்நாடு அரசின் தொல்லியல்துறை இந்தப் பணியைத் தொடர்ந்து மேற்கொண்டு ஆறாம் கட்ட அகழாய்வை நடத்தி வருகிறது. இதில்தான், முதுமக்கள் தாழிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அத்துடன், பெரிய விலங்கு ஒன்றின் எலும்புக்கூடும் கண்டறியப்பட்டுள்ளது. தமிழ் இலக்கியத்தில் குறிப்பிடப்படும் யாளியின் எலும்புக்கூடாக இருக்குமா என தொல்லியல் ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர். திமில் கொண்ட காளையின் எலும்புக்கூடாக இருக்கலாம் என்கிறார் அமைச்சர் பாண்டியராசன். சிந்துசமவெளி நாகரிகத்திற்கான அகழாய்வுகள் தொடங்கி வைகை ஆற்றங்கரை நாகரிகமான கீழடி வரை காளைகளின் எலும்புக்கூடுகள் கிடைப்பது தொல் தமிழர் நாகரிகம் எவ்வளவு தூரம் பரவியிருந்தது என்பதைக் காட்டுகின்றன. ஆரியர் நுழைவுக்குப்பின் இந்தியாவுக்குள் வந்த குதிரையின் எலும்புக்கூட்டைத்தான் அமைச்சரின் டெல்லி எஜமானர்கள் எதிர்பார்க்கிறார்கள். அது மட்டும் கிடைப்பதே இல்லை. அதனால்தான் கீழடிக்கு மத்திய அரசின் ஒத்துழைப்பு கிடைப்பதில்லை.