ஆர்.சுந்தர்ராஜன், சிதம்பரம்
ஏழைகளுக்கு பணமாகக் கொடுங்கள். பிரதமர் அலுவலகத்தால் மட்டும் பொருளாதாரத்தை மீட்க முடியாது என்கிறாரே ரிசர்வ் வங்கி முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன்?
பிரதமர் அலுவலகம் மட்டும் தனித்தா செயல்படுகிறது? நிதியமைச்சரின் அலுவலகமும் சேர்ந்து செயல்படுகிறதே.. ஏழைகளுக்கு பணம் கொடுக்கவே மாட்டோம் என்ற முடிவுடன்.
இந்து குமரப்பன், விழுப்புரம்
எம்.பி. பதவிக்காக வயது வித்தியாசம் பார்க்காமல் உதய நிதியிடம் கெஞ்சினேன் என்கிறாரே வி.பி. துரைசாமி?
ஒரு சீனியர், வயதிலும் அரசியலிலும் படு ஜூனியரான ஒருவரிடம் கெஞ்ச வேண்டிய சூழல் ஏற்படுவது கட்சி நிர்வாகத்தின் சீர்கேடு. பதவிக்காக யாரை வேண்டுமானாலும் கெஞ்சுவது என்கிற மனநிலையில் இருப்பது அரசியல் பொதுவாழ்வுக்கே பெருங்கேடு.
சு.வெங்கடேஷ், கோட்டயம்
இந்திய ஹாக்கி அணியின் பொற்காலம் மீண்டும் திரும்புமா?
இருபதாம் நூற்றாண்டின் முதல் பாதிவரை ஒலிம்பிக் போட்டிகளில் இந்திய ஹாக்கி அணியின் ஆட்டம் மேற்கத்திய நாடுகளை ஆச்சரியப்படவைத்தது. இரண்
ஆர்.சுந்தர்ராஜன், சிதம்பரம்
ஏழைகளுக்கு பணமாகக் கொடுங்கள். பிரதமர் அலுவலகத்தால் மட்டும் பொருளாதாரத்தை மீட்க முடியாது என்கிறாரே ரிசர்வ் வங்கி முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன்?
பிரதமர் அலுவலகம் மட்டும் தனித்தா செயல்படுகிறது? நிதியமைச்சரின் அலுவலகமும் சேர்ந்து செயல்படுகிறதே.. ஏழைகளுக்கு பணம் கொடுக்கவே மாட்டோம் என்ற முடிவுடன்.
இந்து குமரப்பன், விழுப்புரம்
எம்.பி. பதவிக்காக வயது வித்தியாசம் பார்க்காமல் உதய நிதியிடம் கெஞ்சினேன் என்கிறாரே வி.பி. துரைசாமி?
ஒரு சீனியர், வயதிலும் அரசியலிலும் படு ஜூனியரான ஒருவரிடம் கெஞ்ச வேண்டிய சூழல் ஏற்படுவது கட்சி நிர்வாகத்தின் சீர்கேடு. பதவிக்காக யாரை வேண்டுமானாலும் கெஞ்சுவது என்கிற மனநிலையில் இருப்பது அரசியல் பொதுவாழ்வுக்கே பெருங்கேடு.
சு.வெங்கடேஷ், கோட்டயம்
இந்திய ஹாக்கி அணியின் பொற்காலம் மீண்டும் திரும்புமா?
இருபதாம் நூற்றாண்டின் முதல் பாதிவரை ஒலிம்பிக் போட்டிகளில் இந்திய ஹாக்கி அணியின் ஆட்டம் மேற்கத்திய நாடுகளை ஆச்சரியப்படவைத்தது. இரண்டாம் உலகப்போருக்குப் பின் 1948, 1952, 1956 எனத் தொடர்ச்சியாக மூன்று ஒலிம்பிக் போட்டிகளில் தங்கப்பதக்கம் வென்று ஹாட்ரிக் சாதனை புரிந்தது இந்திய ஹாக்கி அணி. 1952ஆம் ஆண்டு ஒலிம்பிக்கில் இறுதிப்போட்டியில் நெதர்லாந்துக்கு எதிரான 6 கோல்களில் 5 கோல்களை அடித்த பல்பீர்சிங் சீனியர்தான் 1956ல் ஆஸ்திரேலியா மெல்போர்னில் நடந்த ஒலிம்பிக்கில் கேப்டனாக இருந்து ஹாட்ரிக் தங்கத்தைப் பெற்றுத் தந்தவர். அதன்பின்னர் உலகளாவிய அளவில் ஹாக்கியில் ஏற்பட்ட மாற்றங்கள், பாகிஸ்தானின் அதிரடி ஆட்டம், மேற்கத்திய நாடுகளின் உத்தி இவற்றை இந்தியா கவனிக்கத் தவறியதால் சரிவு ஏற்பட்டது. கிரிக்கெட் ஆதிக்கமும் ஒரு காரணம். 1980 ஒலிம்பிக்கில் கடைசியாக ஆறுதல் தங்கப்பதக்கம் பெற்றோம். பல்பீர்சிங் சீனியர் மே 25 அன்று இறந்துவிட்டார். இந்திய ஹாக்கி மரணப்படுக்கையில் இருக்கிறது.
வாசுதேவன், பெங்களூரு
மல்கோவா மாம்பழத்துக்கு ஈடு?
மல்கோவாவின் சுவை மட்டுமல்ல. பாடப்புத்தகத்திலிருந்து சினிமா பாட்டுப் புத்தகம்வரை மாம்பழமாம் மாம்பழம் மல்கோவா மாம்பழம் என்ற பாட்டு இடம்பெற்றிருப்பதும் அதன் சிறப் பம்சம். பங்கனப்பள்ளி, செந்தூரா, ருமேனி, இமாம்பசந்த் எனப் பலவகை மாம்பழங்கள் வந்து மார்க்கெட்டைப் பிடித்துவிட்டன. இந்தக் கொரோனா காலத்தில் மார்க்கெட்டுகள் மூடப் பட்டதால் பழைய மல்கோவாவை நினைத்து நாக்கை சப்புக் கொட்டிக் கொள்ள வேண்டியிருக்கிறது.
சி.கார்த்திகேயன், சாத்தூர்
மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்த்தனுக்கு உலக சுகாதார நிறுவனத்தில் புதிய பொறுப்பு கிடைத்துள்ளதே?
சுழற்சி முறையில் ஒவ்வொரு நாட்டின் சுகாதார அமைச்சருக்கும் வழங்கப்படும் கௌரவமிக்க பதவி அது. பள்ளியில் மதிப்பெண் பெறாத மாண வனை க்ளாஸ் லீடர் ஆக்கியதுபோல இப்போதைய கொரோனா காலத்தில் இந்திய சுகாதாரத்துறை அமைச்சருக்கு இந்தப் பொறுப்பு வாய்த்திருக்கிறது.
____________
தமிழி
ஜான்ஜோசப், திருக்கருகாவூர்
பல மைல்கள் நடந்து செல்வோரின் உயிர்கள் பற்றி ஆட்சியாளர்கள் கவலைப்படாமல் இருக்கிறார்களே, அந்தக் காலத்திலும் இப்படித்தானா? உயிர்கள் பற்றி தமிழர்களின் பார்வை என்ன?
மனிதர்களை மட்டுமல்ல, புல்-பூண்டு-புழு-பூச்சி களையும் உயிர்களாகக் கருதும் பண்பாடுதான் தமிழ் மரபு. பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்றுதான் வள்ளுவர் குறிப்பிடுகிறார். பிறப்பில் சமம் என்பது மனிதர்களுக்கு மட்டுமல்ல, அனைத்து வகை உயிரினங்களுக்குமானது. வள்ளுவருக்கு முன்பாக தொல்காப்பியர், இன்றைய அறிவியல் பார்வைக்கேற்ப உயிர்களை வகைப்படுத்தி யுள்ளார். ஓரறிவு என்பது உடலால் தொட்டு அறியும் உயிர்கள். சூரிய ஒளி பட்டு உணவு தயாரிக்கும் செடி- கொடி உள்ளிட்ட தாவரங்கள் இதில் அடங்கும். உடலால் தொட்டு நாக்கால் சுவைக்கும் சங்கு, சிப்பி போன்ற உயிரினங்கள் இரண்டு அறிவுடையவை. உடல் தொடல், நாவின் உணர்ச்சியுடன் மூக்கால் வாசனையை உணரக் கூடிய எறும்பு போன்றவை மூன்று அறிவு கொண்டவை. இந்த மூன்று அறிவுடன் கண்ணால் காண்கின்ற தன்மையும் கொண்ட வண்டுகள், தும்பிகள் போன்றவை நான்கு அறிவு உடையவை. செவிகள் மூலம் கேட்கும் திறனும் கொண்ட பறவைகள்-விலங்குகள் ஆகியவை ஐந்தறிவு கொண்டவை. இந்தப் புலன்களின் அறிவுடன், சிந்திக்கும் அறிவான பகுத்தறிவையும் கொண்ட மனிதர்கள் ஆறு அறிவு கொண்டவர்கள் என வரிசைப்படுத்தியிருக்கிறது தொல்காப்பியம்.
மாணிக்கவாசகர் தன் திருவாசகத்தில் இறைவனை நோக்கிப் பாடும்போது புல்லாகப் பிறப்பெடுத்து, பூண்டாக, புழுவாக, மரமாக, பறவையாக, பாம்பாக, மனிதராக, இன்னும் பல வடிவங்களாக எல்லாப் பிறப்புகளிலும் பிறந்தேன் எனக் கூறுவது, எல்லா உயிர்களின் தன்மையையும் எடுத்துரைப்பதாகும். எல்லா உயிர்களையும் தம் உயிர் போல நினைக்கின்ற தாயுமானவரின் பாடலும் உயிர்கள் மீதான தமிழ் மரபின் தொடர்ச்சிதான். வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன் என்றார் வள்ளலார் ராமலிங்க அடிகள். பச்சைப் பயிராக இருந்தாலும் பச்சைக் குழந்தையாக இருந்தாலும் ஒவ்வொன்றும் உயிர்தான் என்பதன் வெளிப்பாடே இந்த வரிகளாகும். சிந்தனைக்கு செயலாக்கம் தருவதுதான் பகுத்தறிவின் சிறப்பு. ஆனால், இந்தப் பேரிடர் காலத்தில் சக உயிர்களை யல்ல, சக மனிதர்களின் நிலையையே அலட்சியப்படுத்தும் அரசுகளைப் பார்க்க நேரிட்டதும் கொரோனாவைவிடவும் கொடூரமானது.