மதிராஜா திலகர், சின்னபுங்கனேரி, கடலூர்

தமிழகத்தில் ஊரடங்கு முழுமையாகத் தளர்த்தப்பட்டால் என்னவாகும்?

மிச்சமிருக்கும் டாஸ்மாக் கடைகளும் திறக்கப்படும்.

Advertisment

பி.மணி, வெள்ளக்கோவில்

ஜெயலலிதாவுக்கே எம்.ஜி.ஆர்.தான் தலைவர். ஆனால், இன்றைய அ.தி.மு.க. பிரமுகர்களிலிருந்து முதல்வர் வரை தங்களுடைய சட்டைப் பையில் ஜெயலலிதா படத்தை மட்டும் வைத்திருப்பது ஏன்?

எம்.ஜி.ஆரை ஜெயலலிதாவே மறந்தார். மறைத்தார். தனது ஆட்சிக்காலத்தில் தன்னை மட்டுமே முன்னிறுத்திக் கொண்டார். அந்த ஜெ.வின் மர்ம மரணம் பற்றி வாய் திறக்காத-அவரால் வாழ்வு பெற்ற அ.தி.மு.க. பிரமுகர்கள் தங்கள் சட்டைப் பையில் படத்தை வைத்து பம்மாத்து செய்கிறார்கள். தி.மு.க.வில் கலைஞர் படம் ஸ்டாம்ப் சைஸ் ஆகிவிட்டது. சட்டைப் பாக்கெட்டில் மு.க.ஸ்டாலின் சிரிக்கிறார். இப்போது உதயநிதியும் பலரது பாக்கெட்டில் சிரிக்கிறார். அதுதான் அரசியல்.

Advertisment

கே.ஆர்.உபேந்திரன், தஞ்சாவூர்

மக்கள் யாரும் மது குடிக்கவில்லையென்றால் டாஸ்மாக் மூடப்படும் என்கிறாரே அமைச்சர் ஜெயக்குமார்?

ஏரியில் தண்ணீர் இல்லை என்றால் ப்ளாட் போட்டு விடுவோம் என்ற உண்மையையும் சேர்த்துச் சொல்லியிருக்கலாம்.

கே.இந்து குமரப்பன், விழுப்புரம்

பெருமையோடு உள்நாட்டு பொருட்களை வாங்க இந்தியர்கள் உறுதி ஏற்க வேண்டும் என்று பிரதமர் மோடி கூறியுள்ளாரே?

சுதந்திரப் போராட்டத்தின் போது அந்நியப் பொருட்களைப் புறக்கணித்து, சுதேசி இயக்கம் வளர்க்கப்பட்டது. சுதந்திரத்திற்குப் பிறகு இந்தியாவின் வளர்ச்சிக்காக கலப்பு பொருளாதாரம், தன்னிறைவுத் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட் டன. இதில் அரசு நிறுவனங்களின் பங்களிப்பு மிக முக்கியமானது. தற்போதுகூட, அரசுத்துறையான ரயில்வேதான், புலம் பெயர் தொழி லாளர்களின் மிச்சசொச்ச வாழ்க்கையை மீட்க உதவியது. அப்படிப்பட்ட அரசுத் துறைகளை கடந்த 6 ஆண்டு களாகத் தனியாருக்கு தாரை வார்ப் பதில் முழு முனைப்பு காட்டி வருவது மோடி அரசு. முந்தைய அரசுகள் ஙஹக்ங் ஒய் ஒய்க்ண்ஹ என்றன. அதற்குப் பதிலாக அந்நிய முதலீடுகளை இந்தியாவுக்குள் கொண்டு வருவதற்காக Made In India என மாற்றியது மோடி அரசு. ஆகாயம் முதல் பாதாளம் வரை எல்லாவற்றையும் தனியாருக்குக் கொடுத்துவிட்டு, உள்நாட்டுப் பொருட்களை வாங்க வேண்டும் என உறுதியேற்கச் சொல்வது நாட்டுநலம் அல்ல, வியாபாரம்.

வாசுதேவன், பெங்களூரு

கோபம் சரி, அது என்ன முன்கோபம்?

கோபம், நியாயமான காரணங் களுக்குக்கூட வரும். பிரதமருட னான வீடியோ கான்ஃபரன்சில் மம்தா பானர்ஜிக்கு வந்ததுபோல! முன்கோபம், தங்கள் தரப்பின் அநியாயத்தை மறைப்பதற்காக வருவது. புலம் பெயர் தொழிலாளர் கள் பற்றிக் கேட்டதும், நிர்மலா சீதாராமனுக்கு வந்தது போல.

____________

தமிழி

நித்திலா, தேவதானப்பட்டி

இந்தியாவின் மூத்த மொழி யான தமிழுக்கு இன்றைய இந்தியாவில் என்ன நிலைமை?

mm

ஊரடங்கு நான்காவது கட்டத்துக்கு நகர்ந்துள்ள நிலையில், 130 கோடி மக்களுக்கு மேல் உள்ள நாட்டின் பிரதமர் அரை மணி நேரத்துக்கும் மேல் உரையாற்றும்போது, இந்தியாவில் உள்ள மக்களில் பாதிக்கும் மேற்பட்டோருக்கு அது அந்நிய மொழி உரையாகவே இருக்கிறது. இந்தியிலேயே நீண்ட நேரம் பேசுகிறார் பிரதமர். அதில் உள்ள முக்கியமான அறிவிப்புகளை மட்டும் முக்கி முக்கி மொழிப்பெயர்த்து- முழிபிதுங்கி வெளியிட வேண்டிய நிலையில் இருக்கிறார்கள் ஊடகத்தினர். இந்தி பேசுகிறவர்கள் இந்தியாவில் அதிகமாக இருக்கலாம். ஆனால், ஒட்டுமொத்த இந்தியாவில், இந்தி பேசுகிறவர்களைவிட மற்ற தாய்மொழிகளைப் பேசுபவர்களின் எண்ணிக்கையே அதிகம். ஆனாலும், இந்தி என்பது இந்தியாவின் தேசிய மொழி என்ற பொய்யான கட்டுக் கதையைப் பரப்பி, அதனைப் பிரதமர் வரை திணிக்கிறார்கள். இந்தி, இந்தியாவின் தேசிய மொழியல்ல. மத்திய அரசின் அலுவல் மொழி மட்டுமே. அதிலும்கூட, இணை மொழியாக ஆங்கிலம் நீடிக்கிறது.

இந்தியின் ஆதிக்கத்தால் தமிழ் உள்ளிட்ட திராவிடமொழிக் குடும்பங்கள் மட்டுமல்ல, இந்தி பேசும் மாநிலங்களில் பேசப்படும் மைதிலி, போஜ்புரி, ராஜஸ்தானி, சந்தாலி, அவதி, புந்தலி உள்ளிட்ட பல மொழிகளும் ஒடுக்கப்படுகின்றன. மராட்டியம், வங்காளம், பஞ்சாபி மொழி பேசுபவர்களும் இந்தி ஆதிக்கத்திற்கு எதிராகக் குரல் கொடுக்கின்ற காலம் இது. ஆனால், இந்திய ஒன்றிய அரசு திரும்பத்திரும்ப இந்தி-சமஸ்கிருத திணிப்பை மேற்கொள் கிறது. ஆத்மநிர்பர் பாரத் அபியான் என்றும், ஜன்தன் என்றும், ஜல்சக்தி என்றும் திட்டங்களுக்கெல்லாம் சமஸ்கிருத- இந்திப் பெயர்களை சூட்டி, அதனைப் பிற மொழிகளிலும் அப்படியே எழுதுகின்ற வழக்கம் மோடி ஆட்சியில் அதிகரித்துவிட்டது. இந்தி ஆதிக்கத்தால் இந்தியாவில் உள்ள எல்லா மொழிகளும் எதிர்கொள்ளும் நெருக்கடியை மூத்த மொழியான தமிழும் எதிர்கொள்கிறது. 1967ல் அண்ணா முதல்வரானபோது, தமிழக அரசின் கோபுரம் சின்னத்தின் கீழ் ‘சத்யமேவ ஜெயதே’ என்று இருந்ததை "வாய்மையே வெல்லும்' என மாற்றினார். அதுபோல, மோடி அரசின் திட்டங்களை எல்லாம் தமிழிலும் பிற மொழிகளிலும் மாற்ற வேண்டும். பிரதமரின் உரை நிகழ்த்தப்படும்போதே இந்திய அரசியல் சட்டத்தின் எட்டாவது அட்டவணையில் உள்ள தமிழ் உள்ளிட்ட 22 மொழிகளிலும் அது முழுமையாக மொழிபெயர்க்கப்பட வேண்டும்.