Advertisment

மாவலி பதில்கள்

mavalianswers

கே.ஆர்.ஜி.ஸ்ரீராமன், பெங்களூரு 77

குடும்ப அட்டைக்கு ஜூன் மாதமும் அரிசி உள்ளிட்ட உணவுப்பொருட்கள் இலவசமாகத் தருகிறதே எடப்பாடி அரசு?

Advertisment

அப்பனுக்கு சாராயம், பிள் ளைக்கு சத்துணவா என எம்.ஜி.ஆர். ஆட்சிக்காலத்தில் சிவாஜி கேட் டார். எடப்பாடி ஆட்சியில் ஆண் களுக்கு டாஸ்மாக், குடும்பத்துக்கு இலவச ரேஷன் என வளர்ந்திருக் கிறது.

ma

நித்திலா, தேவதானப்பட்டி

ஊரடங்கு கால இழப்பை எதிர்கொள்ள நிதி கொடுங்கள். இல்லையென்றால், நிதி திரட்டுகிற அதிகாரத்தை மாநிலத்திற்கு கொடுங்கள் எனப் பொங்குகிறாரே தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ்?

Advertisment

அழுத பிள்ளை பால் குடிக்கும் என்பார்கள். மக்கள் வயிற்றுப் பசியில் தவிக்கிறார்கள். மாநிலங்கள் நிதிப் பசியில் கதறு கின்றன. வரி வருவாயைத் தன் வசம் கொண்டுபோன மத்திய அரசு, உரிய பங்கைத் திருப்பித் தரவில்லை என்கிற நியாயமான கோபம் பல முதல்வர்களிடமும் இருக்கிறது. சந்திரசேகரராவ் தனது தொடர்ச்சி யான போராட்டங்களால் தெலங்கானா மாநிலம் உருவாவதில் முக்கியம

கே.ஆர்.ஜி.ஸ்ரீராமன், பெங்களூரு 77

குடும்ப அட்டைக்கு ஜூன் மாதமும் அரிசி உள்ளிட்ட உணவுப்பொருட்கள் இலவசமாகத் தருகிறதே எடப்பாடி அரசு?

Advertisment

அப்பனுக்கு சாராயம், பிள் ளைக்கு சத்துணவா என எம்.ஜி.ஆர். ஆட்சிக்காலத்தில் சிவாஜி கேட் டார். எடப்பாடி ஆட்சியில் ஆண் களுக்கு டாஸ்மாக், குடும்பத்துக்கு இலவச ரேஷன் என வளர்ந்திருக் கிறது.

ma

நித்திலா, தேவதானப்பட்டி

ஊரடங்கு கால இழப்பை எதிர்கொள்ள நிதி கொடுங்கள். இல்லையென்றால், நிதி திரட்டுகிற அதிகாரத்தை மாநிலத்திற்கு கொடுங்கள் எனப் பொங்குகிறாரே தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ்?

Advertisment

அழுத பிள்ளை பால் குடிக்கும் என்பார்கள். மக்கள் வயிற்றுப் பசியில் தவிக்கிறார்கள். மாநிலங்கள் நிதிப் பசியில் கதறு கின்றன. வரி வருவாயைத் தன் வசம் கொண்டுபோன மத்திய அரசு, உரிய பங்கைத் திருப்பித் தரவில்லை என்கிற நியாயமான கோபம் பல முதல்வர்களிடமும் இருக்கிறது. சந்திரசேகரராவ் தனது தொடர்ச்சி யான போராட்டங்களால் தெலங்கானா மாநிலம் உருவாவதில் முக்கியமானவராக இருந்தவர். அதே போராட்டக் குரலை முதல்வராக இருக்கும்போதும் வெளிப்படுத்துகிறார். பினராயி விஜயன், மம்தா பானர்ஜி, உத்தவ்தாக்கரே, அரவிந்த் கெஜ்ரிவால் எனப் பல முதல்வர் களும் இதே குரலை எழுப்புகிறார்கள். புதுச்சேரி யூனியன் முதல்வர் நாராயண சாமிகூட குரல் கொடுக்கிறார். மாநில சுயாட்சிக்கான தீர்மானத்தை சட்டமன்றத்தில் நிறைவேற்றிய பெருமை கொண்ட தமிழ்நாட்டிலும் ஒரு முதல்வர் இருக்கிறார்.

கே.ஆர்.உபேந்திரன், தஞ்சாவூர்

டாஸ்மாக் மதுக்கடைகளைத் திறக்கக்கூடாது என்கிற தி.மு.க.வினர் தங்கள் கட்சியின் மது ஆலை அதிபர்கள் யாரும் டாஸ்மாக்குக்கு சப்ளை செய்ய மாட்டோம் என்று சொல்வார்களா?

மது ஆலைகள் நடத்தும் தி.மு.க. வினரைக் கேட்டால், அனுமதி கொடுத்த மத்திய-மாநில அரசுகளைக் கேளுங்கள் என்பார்கள். ஆசை வெட்கமறியாது. அரசியலும் அதனடிப்படையிலான வியா பாரங்களும்தான்.

சி.கார்த்திகேயன், சாத்தூர்

பல நாட்டுத் தலைவர்களும் கொரோனாவுடனான ஆட்டத்தில் டக் அவுட் ஆகிவிட்டார்களே?

புது பவுலரின் முதல் இன்னிங்ஸில் அப்படி நடப்பது சகஜம்தான். தடுப்பூசி என்கிற ஹிட்டர் களமிறங்கட்டும். அப்புறம் பார்க்கலாம்.

கே.இந்துகுமரப்பன், விழுப்புரம்

கோவில் உள்ளிட்ட வழிபாட்டுத் தலங்களே மூடியிருக்கும்போது டாஸ்மாக் மதுக்கடைகளைத் திறப்பது நியாயமா?

கோவிலைத் திறந்தால் உண்டியலுக் குத்தான் காசு போகும். டாஸ்மாக்கைத் திறந்தால் அரசு கஜானா முதல் ஆளுங்கட்சி யினர் கல்லாப்பெட்டி வரை நிறையுமே!

வாசுதேவன், பெங்களூரு

"சும்மா' என்பதற்கான அர்த்தம் பலருக்கும் புரிந்திருக்குமே?

அர்த்தம் மட்டுமல்ல, சும்மா இருப்பது எத்தனை கடினமானது- எவ்வளவு சிக்கலானது என்பதும் புரிந்திருக்கும்

___________________

தமிழி

கே.பி.கே.பாஸ்கர்காந்தி, சிங்கப்பூர்

ஏழை-பணக்காரர் எவராக இருந்தாலும் பசி தீர்த்தல் மட்டுமே மனிதனின் அடிப்படைத் தேவை என்பதை இந்தக் கொரோனா காலம் உணர்த்தியிருக்கிறது. இது பற்றி பழந்தமிழர்களின் பார்வை என்ன?

கொரோனா நோய்த்தொற்றைக் கண்டு உலகம் அலறுகிறது. அதேநேரத்தில், கொரோனாவால் பாதிக்கப்படு வோமா மாட்டோமா எனத் தெரியாமல் வீட்டிலேயே முடங்கி இருந்தால் பசிக்கான உணவுக்கு என்ன செய்வது எனக் கேட்டு ஊரடங்கு நேரத்திலும் பல மைல்கள் நடந்த மக்களைப் பார்க்கிறோம். கொரோனா போலவே பசியும் கொடூரமானது. அதனால்தான், பழந்தமிழர்கள் பசிப்பிணி என்றார்கள். அந்த நோயைப் போக்குவதற்கான மருந்து, உணவு வழங்குதல். விருந்தினராக வந்தாலும், பசிக்காக வீடு தேடி வந்தாலும் அவர்களுக்கான உணவை நிறைவாக வழங்குவதை ஒரு பண்பாட்டு அடையாளமாக கடைப்பிடித்தனர் தமிழர்கள். விருந்தோம்பல் என்று ஓர் அதிகாரத்தையே எழுதியிருக்கிறார் வள்ளுவர். சிலப்பதிகாரத்தில் இல்லறக் கடமைகளில் ஒன்றாக அறவோர்க்கு அளித்தல் என அறநெறியுடன் வாழ்வோருக்கு உணவளித்தல் ஒரு கடமையாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. சிலப்பதிகாரத்துடன் இணைத்துப் போற்றப்படும் இரட்டைக் காப்பியமான மணிமேகலை மற்ற இலக்கியங்களைவிட அதிகமாக பசிப்பிணி போக்கும் உணவளித்தல் குறித்து பாடுகிறது. கடல் தெய்வத்தால் மணிபல்லவத் தீவில் கொண்டு சேர்க்கப்படுகிறார் மணிமேகலை. ஆபுத்திரன் என்பவர் தன் கையில் உள்ள அமுதசுரபி எனும் அள்ள அள்ளக் குறையாத உணவு வழங்கும் பாத்திரத்துடன் அந்தத் தீவுக்கு வந்த நிலையில், உணவளிக்க யாரும் இல்லாததால், தான் மட்டும் சாப்பிட விரும்பாமல் உயிர் துறக்கிறார். ஆபுத்திரன் கையிலிருந்து அமுதசுரபி, அந்தத் தீவுக்கு வந்த மணிமேகலைக்கு கிடைக்கிறது. அவர் அந்த அமுதசுரபி மூலம் கொடிய பசிநோயால் தவித்த காயசண்டிகைக்கு உணவளித்து பசிநோயைப் போக்கியதுடன், பசிப்பிணியால் தவிக்கும் மக்களையெல்லாம் அமுதசுரபியால் காப்பாற்றுகிறார். இதனை மணிமேகலை காப்பியத்தை எழுதிய சீத்தலைச்சாத்தனார், ஆற்றா மக்கள் அரும்பசி களையோர்- மேற்றே உலகின் மெய்நெறி வாழ்க்கை- மண்திணி ஞாலத்து வாழ்வோர்க்கெல் லாம்- உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே’ எனப் பாடுகிறார். ஈ என்ற உயிர் எழுத்துக்கே பிறருக்கு உணவிடு எனும் ஈதல் எனும் அர்த்தம் உண்டு. ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லது ஊதியம் இல்லை உயிர்க்கு என்கிறார் வள்ளுவர். அதனால்தான் இந்த கொரோனா காலத்திலும் உணவளிப்பது தமிழகத்தில் சமூக-அரசியல் பண்பாடாக உள்ளது.

nkn090520
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe