வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு

அமெரிக்க அதிபர் தேர்தலில் தனக்கு எதிரான சூழலை உருவாக்க, சீன ஆய்வகத்தில் கொரோனா வைரஸ் உருவாக்கப்பட்டது என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் குற்றச்சாட்டுகிறாரே?

இந்திய பிரதமருக்கு பாகிஸ்தான். அவரது நண்பரான அமெரிக்க அதிபருக்கு சீனா. மக்கள் நம்புவதற்கேற்ற பகை நாடுகள்.

கே.ஆர்.உபேந்திரன், தஞ்சாவூர்

Advertisment

அரபு அமீரகத்தில் ஒரே நாளில் 32000 பேர் இந்தியாவுக்கு திரும்ப வர விண்ணப்பித்துள்ளார்களே?

கொரோனா நோய்த் தொற்றால் பல நாடுகளிலும் உள்ள இந்தியர்கள் தாயகம் திரும்ப விரும்புகிறார்கள். அரபு நாடுகளில் உள்ளவர்களின் மனநிலையும் அப்படித்தான் உள்ளது. அதுமட்டுமின்றி, அண்மைக்காலமாகவே வளைகுடா நாடுகளில் வெளிநாட்ட வர்களை வேலைக்கு சேர்ப்பதற்கு கட்டுப்பாடுகள் உருவாகி வருகின்றன. அதுமட்டுமின்றி, ஊரடங்கு நேரத்தில் இந்தியாவில் உள்ள இந்துத்வ அமைப்பினர் சமூக வலைத்தளங் களில் முஸ்லிம்கள் குறித்து எழுதிய பதிவுகளை அமீரக அரச குடும்பத்தினர் கவனித்து தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளனர். இதுவும் சிக்கலை உண்டாக்கியுள்ளது.

mm

Advertisment

இந்து குமரப்பன், விழுப்புரம்.

கொரோனோ வைரஸ் தடுப்புப் பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மை பணி யாளர்கள் உள்ளிட்ட போராளிக்கு ராணுவ வீரர்கள் ஹெலிகாப்டர் மூலம் மருத்துவமனை மீது மலர்கள் தூவி மரியாதை செலுத்தியதைப் பற்றி?

மருத்துவர்களுக்குத் தேவை மலர்தூவல் மரியாதை அல்ல. உரிய பாதுகாப்பு கருவிகளும், சரியான பரிசோதனைகளும். பணிச்சுமையைக் குறைக்கும் வகையில் நிரந்தரப் பணியாளர்களும், நியாயமான ஊதியமும்தான். இவற்றை செய்யாமல் மருத்துவத் துறையினரை பழிவாங்கிய மத்திய- மாநில அரசுகள், இப்போது மலர்தூவி திசை திருப்புகின்றன. ஆகாயத்திலிருந்து கிடைக்கும் மரியாதையைவிட பூமியில் கிடைக்கும் உரிமைகளே அவசியமானவை.

மதிராஜா திலகர், சின்னபுங்கனேரி, கடலூர்.

ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் அடித்தட்டு மக்களின் வாழ்வாதாரத் திற்கு அரசு என்ன நடவடிக்கை எடுக்கும்?

40 நாட்களைக் கடந்து நீடிக்கும் ஊரடங்கி னால் அடித்தட்டு மக்கள் மட்டுமல்ல, நடுத்தர- உயர்நடுத்தர வாழ்க்கை வாழும் மக்களும்கூட தங்கள் இருப்பையும் இயல்பையும் இழக்கத் தொடங்கியுள்ளனர். எந்தத் தரப்புக்கும் அரசுத் தரப்பிலிருந்து நியாயமான உதவி கிடைக்கவில்லை.

சி. கார்த்திகேயன், சாத்தூர் - 626203

மத்திய அரசே மது விற்பனைக்கு க்ரீன் சிக்னல் தந்து விட்டதே?

மத்தியஅரசு சொல்வதை அப்படியே கடைப் பிடிக்கும் மாநில அரசும் மே 7 முதல் டாஸ்மாக் கடை திறந்திருக்கும் என அறிவித்துள்ளது. அண்டை மாநிலங்களிலும் அமோக விற்பனை. க்ரீன் சிக்னலால் ரெட் úஸôன் அதிகமாகலாம் என எச்சரிக்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.

படங்கள் : குமரேசன்

____________

தமிழி

நித்திலா, தேவதானப்பட்டி

மூவேந்தர்களான சேர-சோழ-பாண்டியர்கள் மட்டும்தான் தமிழ்நாட்டின் பெருமையை நிலைநாட்டியவர்களா?

மூவேந்தர்களின் படையெடுப்பும் அவர்களின் நிர்வாகத் திறனும் பெருமைக்குரியனவாக கல்வெட்டுகளிலும் இலக்கியங்களிலும் பதிவு செய்யப்பட்டுள்ளன. கல்லணை, தஞ்சை பெரிய கோவில், கண்ணகிக் கோட்டம், மதுரை மீனாட்சியம்மன் கோவில் போன்ற அமைப்புகளும், தமிழ்ச் சங்கங்கள்-குடவோலைமுறை போன்ற நிர்வாக அமைப்புகளும் மூவேந்தர் களின் புகழ் பாடின. அதே நேரத்தில், வேளிர்கள் எனப்பட்ட சிற்றரசர்களும் தமிழ்ப் புலவர்களால் சிறப்பித்துப் பாடியுள்ளனர். கடையேழு வள்ளல்கள் எனப்படும் பறம்புமலை பாரி, கொல்லிமலை ஓரி, கோவலூர் காரி, பொதினிமலை பேகன், நளிமலை நள்ளி, தகடூர் அதியமான், பொதியமலை ஆய் ஆகியோரின் ஆட்சி பற்றிய குறிப்புகளை சங்க இலக்கியங் களில் பாட முடிகிறது. இதில் பாரிக்கும் கபிலருக்கும் இருந்த நட்பும், பெருவேந்தர் களால் பாரி போரில் வீழ்த்தப்பட்ட நிலையில், அவரது மகள்கள் அங்கவை-சங்கவை இருவரையும் கபிலர் பாதுகாத்ததும், அற்றைத் திங்கள் அவ்வெண்ணிலவில் என பாரி மகளிர் பாடிய சங்க இலக்கியப் பாடலும் துயர வரலாற்றின் வரிகள். அதியமானுக்கும் அவ்வையாருக்குமான நட்பு என்பது அரசருக்கும் புலவருக்குமான நட்பு பற்றியது மட்டுமல்ல, ஆண்-பெண் நட்புறவு எப்படி இருந்தது என்பதற்கும் சான்றாகும். இந்த ஏழு வள்ளல்களுடன் குதிரைமலை எழினி பற்றியும் இலக்கியக் குறிப்புகள் உள்ளன. இவர்களின் காலத்திற்குப் பிறகு ஆட்சி செய்த வாழ்ந்த வள்ளல்களில் குமணன், நல்லியக்கோடன் ஆகியோர் முக்கியமானவர்கள். அதில் குமணனின் தலையைக் கொண்டு வந்தால் பரிசு என அவரது சகோதரர் அறிவிக்க, தலைமறைவாக இருந்த தன்னை தேடி வந்து பாடல் பாடிய புலவர் பெருந்தலைச்சாத்தனாரிடம் வாளைக் கொடுத்து, தன் தலையை வெட்டிச் சென்று பரிசு பெற்றுக் கொள்ளுமாறு குமணன் சொன்னதும் இலக்கியத்தின் வழியாக அறிய முடிகிறது. சங்ககாலத்திற்குப் பிறகும் பல சிற்றரசர்கள் தமிழகத்தின் பெருமையை நிலைநாட்டியுள்ளனர். பல்லவர்கள் ஆட்சி கொடிகட்டிப் பறந்த காலத்தில், சோழர்களே குறுநில மன்னர்களாகத்தான் சுருங்கியிருந்தார்கள் என்கிறார் வரலாற்று ஆசிரியர் சதாசிவ பண்டாரத்தார். அதுபோலவே சோழர்கள் காலத்தில் பாண்டியர்களும் சில பகுதிகளை மட்டுமே ஆட்சி செய்யக்கூடியவர்களாக இருந் துள்ளனர். பெரிய அரசர்களோ, சிற்றரசர்களோ யாராக இருந்தாலும் அவர்கள் நிர்வாகத்தில் உள்ள பகுதியில் உள்ள மக்களின் மதிப்பைப் பெறும் வகையில் நிர்வாகம் செய்திருந்ததால் அவர்களை வரலாறு பதிவு செய்துள்ளது.