கே.ஆர்.உபேந்திரன், தஞ்சாவூர்
தேர்தலில் வீட்டுக்கு வீடு பணம் கொடுக்க முடிந்தவர்களால், கொரோனா நோய்த் தொற்றுக்காக வீட்டுக்கு வீடு டெஸ்ட் செய்ய முடியாதா?
பணம் பட்டுவாடாவைக் கச்சிதமாக செய்ய கட்சிக்காரர்களால் முடியும். டெஸ்ட் செய்வது அவர்களால் முடியுமா? அல்லது அவர்களை நம்பி ஒப்படைக்கத்தான் முடியுமா? அப்புறம், பணம் என்றால் வாக்காளர்களும் தயக்கமின்றி வாங்கிக்கொள்வார்கள். டெஸ்ட் என்றால் மக்கள் தயக்கமின்றி முன்வருவார்களா?
பா. ஜெயப்பிரகாஷ், பொள்ளாச்சி.
கொரோனா வைரஸ் தொற்றை தவிர்க்க பிரதமர் உட்பட அனைவரும் விலகியிருக்கசொல் கிறார்கள். ஆனால் ""ஒன்றிணைவோம் வா' என சொல்லி ஸ்டாலின் கொரோனாவை பரப்பு கிறார்'' என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளது பற்றி?
அமைச்சரின் ‘டாடியான பிரதமர் மோடியே, மக்கள் தங்களை தனிமைப்படுத்திக்கொண்டு, தங்களால் இயன்ற அளவு பிறருக்கு உதவி செய்வதைப் பற்றிப் பெருமையாகப் பேசியிருக் கிறார். உதவி செய்ய ஒன்றிணைவோம் வா என்று ஸ்டாலின் சொல்வதுதான் அமைச்சரு
கே.ஆர்.உபேந்திரன், தஞ்சாவூர்
தேர்தலில் வீட்டுக்கு வீடு பணம் கொடுக்க முடிந்தவர்களால், கொரோனா நோய்த் தொற்றுக்காக வீட்டுக்கு வீடு டெஸ்ட் செய்ய முடியாதா?
பணம் பட்டுவாடாவைக் கச்சிதமாக செய்ய கட்சிக்காரர்களால் முடியும். டெஸ்ட் செய்வது அவர்களால் முடியுமா? அல்லது அவர்களை நம்பி ஒப்படைக்கத்தான் முடியுமா? அப்புறம், பணம் என்றால் வாக்காளர்களும் தயக்கமின்றி வாங்கிக்கொள்வார்கள். டெஸ்ட் என்றால் மக்கள் தயக்கமின்றி முன்வருவார்களா?
பா. ஜெயப்பிரகாஷ், பொள்ளாச்சி.
கொரோனா வைரஸ் தொற்றை தவிர்க்க பிரதமர் உட்பட அனைவரும் விலகியிருக்கசொல் கிறார்கள். ஆனால் ""ஒன்றிணைவோம் வா' என சொல்லி ஸ்டாலின் கொரோனாவை பரப்பு கிறார்'' என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளது பற்றி?
அமைச்சரின் ‘டாடியான பிரதமர் மோடியே, மக்கள் தங்களை தனிமைப்படுத்திக்கொண்டு, தங்களால் இயன்ற அளவு பிறருக்கு உதவி செய்வதைப் பற்றிப் பெருமையாகப் பேசியிருக் கிறார். உதவி செய்ய ஒன்றிணைவோம் வா என்று ஸ்டாலின் சொல்வதுதான் அமைச்சருக்குப் புரியவில்லை என்றால், அவர் டாடி சொல்வதுமா புரியவில்லை.
வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு
ஊரடங்கை விளையாட்டுத் தனமாக நினைக்காமல் பொது மக்கள் முழு ஒத்துழைப்பு கொடுத்தால்தான் கொரோனா வைரûஸ தடுக்கலாம் என்று முதல்வர் பேச்சு?
நூறு சதவீதம் உண்மை. மக்கள் மன்றத்திற்கு இப்போது சொல்வதை, சட்டமன்றம் நடந்த போது எதிர்க்கட்சிகள் சொன்ன போதே முதல்வரும் கடைப்பிடித் திருக்கலாம்.
கே.ஆர்.ஜி.ஸ்ரீராமன், பெங்களூர் 77
நாட்டில் மக்கள் கஞ்சிக்கே அல்லல்படும்போது... நடிகர். எஸ்.வி.சேகர். தன் வீட்டுக்கு வந்த பால் திரிந்து போய் விட்டது என்றும் உடனடியாக ஆவின் அதிகாரிகள் மாற்றித் தந்தது பற்றியும் ட்விட்டரில் பதிவிட்டுள்ளாரே?
ஒரு முதல்வரையும் அதன் தலை மையிலான அரசையும் கொச்சைப் படுத்தும் ஆணவத்தின் வெளிப்பாடு.
இந்து குமரப்பன், விழுப்புரம்.
வங்கிகளை ஏமாற்றிய கார்ப்ப ரேட் முதலாளிகளுக்கு 68000 கோடி கடனை தள்ளுபடி செய்து விட்டதே மோடி அரசாங்கம்? இது சரியா தவறா?
அது தள்ளுபடி இல்லையாம். கணக்கீடுதானாம். எதுவாகவோ இருக்கட்டும். பணம் திரும்பி வருமா என்றால் பதில் இல்லை.
பி.மணி, வெள்ளக்கோவில், கோவை
ஒரு ருபாய் இட்லி பாட்டி சமூக சேவை எப்படி?
ஏழையின் சிரிப்பில் மட்டுமல்ல, ஏழையின் பசி உணர்ந்த ஏழையின் சேவையிலும் இறைவனைக் காணலாம் என்பதை நிரூபித்திருக்கிறார்.
வாசுதேவன், பெங்களூரு
இவ்வளவு இடர்பாடுகளின் நடுவே அலைகள் மற்றும் நேரம் தங்களது வேலைகளை ஓய்வில்லாமல் செய்து வருவது எவற்றை குறிப்பிடு கின்றன?
காலம் யாருக்காகவும் காத்திருப்ப தில்லை. காலத்தின் தன்மை உணர்ந்து பயணிப்பவர்கள் எதுகுறித்தும் கவலைப் படுவதில்லை.
________________
தமிழி
சி. கார்த்திகேயன், சாத்தூர் - 626203
நாம் நம் அன்றாட வாழ்வில் செய்யும் பூஜை உள்ளிட்டவை அனைத்தும் சமஸ்கிருத மொழியில்தானே இருக்கிறது?
நெஞ்சகமே கோவில், நினைவே சுகந்தம், அன்பே மஞ்சன நீர், பூசை கொள்ள வாராய் பராபரமே எனப் பாடப்பட்டிருப்பது தமிழில்தான். தமிழ் வழிபாட்டு முறையும் வாழ்வியல் முறையும் தனித்தன்மை வாய்ந்தவை. இயற்கையை வணங்கியவர்கள் தமிழர்கள். தங்களுக்குப் பயன்தரும் அனைத்துக்கும் நன்றி தெரிவிப்பதே தமிழர் வழிபாட்டின் அடிப்படைப் பண்பு. தமிழர் திருநாள் எனப் போற்றப்படும் தை முதல் நாள் அன்று கொண்டாடப்படும் பொங்கல் விழாவில் இதனை இப்போதும் காணலாம். வயலில் அறுவடை செய்த நெல்லில் இருந்து கிடைத்த புது அரிசியை புதுப்பானையில் இட்டு மஞ்சள், இஞ்சி, கரும்பு ஆகியவற்றுடன் பொங்கலிட்டு, இயற்கையின் மூலவரான சூரியனுக்குப் படைத்து, உழவுத்தொழிலுக்கு உறுதுணையாக இருந்த கால்நடைகளான மாடுகளுக்கும் விழா எடுத்து, குடும்பத்தில் உள்ள பெரியவர் களிடம் வாழ்த்துகள் பெற்று, தன் வாழ்வில் துணையிருக்கும் அனைத்து உயிர்களுக்கும் நன்றி செலுத்துவதைக் காணலாம். இதுதான் தமிழர் பண்பு. தனக்கும், தான் வழிபடும் சிறப்புக்குரியவற்றுக்கும் இடையே எந்த இடைத்தரகரும் இல்லாமல், தனது மொழியிலேயே வழிபாடு நடத்தியவர்கள் தமிழர்கள். இயற்கை வழிபாட்டைத் தொடர்ந்து, மூத்தோர் வழிபாடு, நடுகல் வழிபாடு, குலதெய்வ வழிபாடு எனத் தொடர்ந்த நாட்டார் வழிபாட்டியலிலும் தாய்மொழியே தமிழனுக்கும் கடவுளுக்குமான மொழியாக இருந்தது. கி.பி.ஆறாம் நூற்றாண்டிலிருந்து எட்டாம் நூற்றாண்டுக்குள்ளாக பலவித மாற்றங்கள் உருவாகி, விக்கிரக வழிபாடுகள் பெருகியபோது, தமிழர்களின் பழைய வழக்கங்களும், பழந்தமிழ் மொழியும் வழிபாட்டுத் தலங்களிலிருந்து மாறும் நிலை ஏற்பட்டது. சமஸ்கிருதம் குடியேறியது. அதிலிருந்து, தமிழை மீட்பதற்கான புரட்சியாகத்தான் நாயன்மார்கள் பாடிய தேவாரம், திருவாசகங்களும்- ஆழ்வார்கள் பாடிய திவ்யபிரபந்தங்களும் அமைந்தன. திருமூலரின் திருமந்திரம் என்பது உடலைப் போற்றிப் பாதுகாத்து, உள்ளத்திற்குள் தெய்வத்தைக் காண்பதற்கான வழியைக் காட்டுவதாகும். வள்ளலாரின் திருஅருட்பாவும் சாதி-சம்பிராதய-சமஸ்கிருத ஆதிக்கத்திற்கு எதிரான மக்கள் வழிபாட்டிற்கான நெறிமுறையே. இவை குறித்தெல்லாம் பெரியளவில் பரப்புரைகளும் விழிப்புணர்வும் ஏற்படாத காரணத்தால், கோவில் கருவறையிலிருந்து வீட்டு பூசையறை வரைக்கும் சமஸ்கிருத மயக்கத்தில் ஆழ்ந்திருக்கிறார்கள் தமிழர்கள்.