தூயா, நெய்வேலி
ஊரடங்கில் வீட்டுக்குள் இருப்பவர்கள் பழைய கால வாழ்க்கை போல வாழ்கிறார்களே, ஊரடங்கு தளர்ந்தபிறகும் அது தொடருமா?
கொரோனா கற்றுக்கொடுத்துள்ள வாழ்க்கைமுறையையும் பாரம்பரிய உணவு உள்ளிட்டவை பற்றியும் இப்போதுகூட நவீன தொழில்நுட்பமான வாட்ஸ்ஆப் வாயிலாகத்தான் பரிமாறிக்கொள் கிறது நமது சமூகம். ஊரடங்கு தளரட்டும். சுயக்கட்டுப்பாட்டுடன் பாரம்பரியம் தொடர்கிறதா, காய்ந்தமாடு கம்பங்கொல்லையில் பாய்ந்தது என்கிற பழமொழி நிஜமாகிறதா என்பது தெரியும்.
கே.ஆர்.உபேந்திரன், தஞ்சாவூர்
எச்.டி.எஃப்.சி. வங்கியின் 1% பங்கு களை சீனா வாங்கியதற்கு அலறிய மத்திய அரசு, ஃபேஸ்புக் நிறுவனம் அம்பானி -ஜியோவின் 10% பங்குகளை வாங்குகையில் மௌனம் சாதிக்கிறதே?
பக்கத்து வீட்டுப் பணக்காரருடன் காம்பவுண்டு தகராறு ஏற்படுவதும், தொலைவில் உள்ள பணக்கார வீட்டுக்காரருடன் பழக்கவழக்கம் தொடர வேண்டும் என்பதுதானே மனித இயல்பு. இந்தியப் பொருளாதாரத்திற்குள் பக்கத்தில் உள்ள வல்லரசு நாடான சீனாவின் ஆதிக்கம் என்பதில் மத்திய அரசு கவனமாக இருக்கிறது. அமெரிக்கா, தூரத்தில் உள்ள வல்லரசு. அதன் துணை ரொம்பவே தேவைப் படுகிறது. டிரம்ப் மிரட்டினாலும் இந்தியத் தரப்பில் பெருந்தன் மையுடன் நடந்துகொள்ளும்.
சி.கார்த்திகேயன், சாத்தூர்
கொரோனா... எடப்பாடி பழனிசாமிக்கு அடுத்த சட் டப்பேரவை தேர்தலில் முதல்வர் வேட்பாளர் இமேஜிற்கு உதவுமா?
இழவு வீட்டில் ஒப்பாரி வைக்கும்போது, பந்தலிலே பாவக்காய் தொங்குதடி பார்த்துக் கோ என்று ஓரக்கண்ணால் அந்த வீட்டின் கொல்லைப்புறம் உள்ள பாகற்காய் கொடி மீது கண் வைத்தபடியே ஒப்பாரி வைப்பார் களாம். அதுபோல, இங்கே எல்லா இழவிலுமே தேர்தல் அரசியலுக்கான கணக்கு போடப் படுவது வழக்கம். இந்திராகாந்தி படுகொலை, ராஜீவ்காந்தி படு கொலை போன்றவைகூட தேர் தல் இமேஜூக்கு பயன்படுத்தப் பட்ட நிலம் இது.
பா.ஜெயப்பிரகாஷ், பொள்ளாச்சி
'டுவிட்டர்' போன்ற தளங்களை ஒழிக்கவேண்டும் அதற்கு பதிலாக இந்தியாவைச் சேர்ந்த சமூக வலைத்ததளத்தை உருவாக்க வேண்டும்"" என்று ஹிந்தி நடிகை கங்கனா கூறிய கருத்து பற்றி?
மாற்றுக்கருத்துகளை அனுமதிப்பதுதான் ஜனநாயகத் தின் சிறப்பு. ஆனால், தற்போது நாட்டின் ஆட்சியாளர்கள் முதல் அவர்களை ஆதரிக்கும் பிரபலங் கள் வரை மாற்றுக்கருத்துகளை அனுமதிக்கும் தளங்களை ஒழித்து, ஹிட்லர்த்தனமான நிலைமை வேண்டும் என்கி றார்கள். வெறுப்புணர்ச்சி என்பது இருபக்கமும் கூர்மையான ஆயுதம் என்பதை அவர்கள் உணரும் காலம் வரும்.
சு.வெங்கடேஷ், கோட்டயம்
கொரோனா கற்றுத்தந்துள்ள பாடம் என்ன மாவலி?
உலகம் ஒரு பெரிய உருண்டை. அதில் அவரவர் நிற்பதற்கு மிஞ்சியது, ஒரு சிறு வட்டம்.
_____________
தமிழி
நித்திலா, தேவதானப்பட்டி
கோவில்களைப் போல மருத்துவமனைகளுக்கும் கல்விக்கூடங்களுக்கும் செலவழித்திருக்கலாமே என நடிகை ஜோதிகா பேசியதினால், மாமன்னன் ராஜராஜசோழனையும் தஞ்சை பெரியகோவிலையும் அவர் இழிவுபடுத்தி விட்டார் என சர்ச்சையாகிவிட்டதே?
தஞ்சையில் நடந்த ஒரு படப்பிடிப் பின் போது, பெரிய கோவிலுக்குப் பக்கத் தில் உள்ள அரசு இராசா மிராசுதார் மருத்துவமனையில் படமாக்கப்பட்ட ஒரு காட்சியின்போது, அரசு மருத் துவமனையின் நிலையைப் பார்த்து தான் ஜோதிகா அந்தக் கருத்தைத் தெரிவித்தார் என்கிறார் படத்தின் இயக்குநர். ஆனால், உலகப் புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோவிலையும் அதனைக் கட்டிய ராஜராஜனையும் ஜோதிகா விமர்சித்துவிட்டார் என சமூக ஊடகங்களில் பெரும் விவாதமாகிவிட் டது. பாறைகளோ மலைகளோ இல்லாத தஞ்சை மண்ணில் கருங்கற்களால் மிக உயரமான கோபுரம் கொண்ட பெரிய கோவிலை ராசராச சோழன் கட்டியது மிகப் பெரிய சாதனைதான். அதற்கான அடித்தளமும் மிகக் குறைந்த ஆழத்திலேயே அமைக்கப்பட்டுள்ளது. குஞ்சரமல்லன் எனும் தலைமைச் சிற்பியால் மாமன்னன் ராசராசன் ஆணைப்படி கி.பி. 11ஆம் நூற்றாண்டில் எழுப்பப்பட்ட பெரிய கோவிலின் கட்டுமானம் இன்றளவும் ஆச்சரியம்தான். அதுபோன்ற இன்னொரு ஆச்சரியமும் சோழர் ஆட்சிக்காலத்தில் உண்டு. அது பெரியகோவில் கட்டப்படுவதற்கு ஏறத்தாழ 800 ஆண்டுகளுக்கு முன் கி.பி.2ஆம் நூற்றாண்டில் கரிகாலச் சோழன் கட்டிய கல்லணையாகும். உலகின் மூத்த அணை களில் முன்வரிசையில் நிற் கிறது கல்லணை.
பெருக் கெடுத்து ஓடும் வெள் ளத்தில் யானைகளை நிறுத்தி, அதன் காலடி யில் உருவான பள்ளத் தில் கற்களால் அடித் தளமிட்டு, அதன் மீது அடுத்த கல் வரிசையை வைத்து, காவிரியிலிருந்து கொள்ளிடத்திற்கு சென்ற உபரி நீரை, தஞ்சை மண்டல பாசனத்திற்குப் பயன்படுத்திய அணைதான், கல்லணை. மிகக்குறைவான உயரம் கொண்டிருந்தாலும், நீண்டகாலம் அது நிலைத்து நிற்பதைப் பார்த்த பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் அதனை உயர்த்திக் கட்டினர். சர் ஆர்தர் காட்டன் என்ற பிரிட்டிஷ் இன்ஜினியர் உள்ளிட்ட பல வெள்ளைக்கார நிபுணர்கள் மிகச் சிறந்த முறையில் அதனை செய்ததுடன், புதாறு என்ற கால்வாயையும் வெட்டினர். தஞ்சை பெரிய கோவிலை ஒட்டி தற்போது ஓடுகின்ற அந்த ஆறு என்பது 100 ஆண்டுகளுக்கு முன், கல்லணையிலிருந்து வெட்டப் பட்ட கால்வாய்தான். அதனால், தஞ்சையின் பல பகுதி கள் வளம் பெற்றன. கட்டுமானங்களின் பெருமை என்பது அது மக்களுக்குத் தரும் நன்மையையும் மகிழ்வையும் பொறுத்தது. இன்றைய மக்களுக்குத் தேவை கல்வியும் மருத்துவமும் என்பதில் மாற்றுக்கருத்து கிடையாது.