கே.ஆர்.உபேந்திரன், தஞ்சாவூர்
ஒரு சானிடைசர் அல்லது சோப்பினால் கொரோனா கிருமி சாகும் என்றால், அதன் இடுபொருள் அல்லது மூலப் பொருளை உபயோகித்து கொரோனாவுக்கான மருந்தை கண்டுபிடிக்க முடியாதா?
தவிர்ப்பதற்கும் தடுப்பதற் கும் வேறுபாடு உள்ளது. மேல் புறத்தில் பாதிப்பு ஏற்படாமல் பாதுகாக்கத்தான் சானிடைசர், சோப்பு ஆகியவை பயன்படுத்தப் படுகின்றன. அதனைத் தவிர்த்தால், கொரோனா தொற்றைத் தடுக்க முடியாது. கொரோனா சிகிச்சைக்கான மருந்து, அது வராமல் இருப்பதற்கான தடுப்பூசி உள் ளிட்டவை தீவிர ஆராய்ச்சியில் உள்ளன. அவை, வெறுமனே சோப்பு போடும் விஷயமல்ல.
கே.ஆர்.ஜி. ஸ்ரீராமன், பெங்களூர்
ஊரடங்கு தளர்த்தப்பட்டாலும் சமூக இடைவெளியை 2022 வரை மக்கள்... பின்பற்ற வேண்டும் என்கிற நிலையில், முன்னாள் பிரதமர் தேவகவுடா பேரன்- முன்னாள் கர்நாடக முதல்வர் குமாரசாமியின் மகன் திருமணம் ஊரடங்கு நாளில் ஆடம்பரமாக அவர்களின் பண்ணை வீட்டில் நடந்துள்ளது பற்றி?
முதலமைச்சரானதும் அதிகாரப்பூர்வ இல்லம் என்ற முறையில் தன் வீட்டுக்கு அரசு செலவில் போடப்
கே.ஆர்.உபேந்திரன், தஞ்சாவூர்
ஒரு சானிடைசர் அல்லது சோப்பினால் கொரோனா கிருமி சாகும் என்றால், அதன் இடுபொருள் அல்லது மூலப் பொருளை உபயோகித்து கொரோனாவுக்கான மருந்தை கண்டுபிடிக்க முடியாதா?
தவிர்ப்பதற்கும் தடுப்பதற் கும் வேறுபாடு உள்ளது. மேல் புறத்தில் பாதிப்பு ஏற்படாமல் பாதுகாக்கத்தான் சானிடைசர், சோப்பு ஆகியவை பயன்படுத்தப் படுகின்றன. அதனைத் தவிர்த்தால், கொரோனா தொற்றைத் தடுக்க முடியாது. கொரோனா சிகிச்சைக்கான மருந்து, அது வராமல் இருப்பதற்கான தடுப்பூசி உள் ளிட்டவை தீவிர ஆராய்ச்சியில் உள்ளன. அவை, வெறுமனே சோப்பு போடும் விஷயமல்ல.
கே.ஆர்.ஜி. ஸ்ரீராமன், பெங்களூர்
ஊரடங்கு தளர்த்தப்பட்டாலும் சமூக இடைவெளியை 2022 வரை மக்கள்... பின்பற்ற வேண்டும் என்கிற நிலையில், முன்னாள் பிரதமர் தேவகவுடா பேரன்- முன்னாள் கர்நாடக முதல்வர் குமாரசாமியின் மகன் திருமணம் ஊரடங்கு நாளில் ஆடம்பரமாக அவர்களின் பண்ணை வீட்டில் நடந்துள்ளது பற்றி?
முதலமைச்சரானதும் அதிகாரப்பூர்வ இல்லம் என்ற முறையில் தன் வீட்டுக்கு அரசு செலவில் போடப்பட்ட சோபா செட்டுகளை அகற்றச் சொன்னவர் அறிஞர் அண்ணா. விதிமுறைகளைக் கடைப்பிடிப்பதில் முன்னோடியாக இருக்க வேண்டியவர்கள் தலைவர்கள். விதிகளில் உள்ள தளர்வுகளைத் தங்களுக்கு சாதகமாக்கிக் கொள்ளும் சந்தர்ப்பவாதம் நிறைந்தவர்கள் சராசரி அரசியல்வாதிகள்.
சி. கார்த்திகேயன், சாத்தூர்
தமிழக முதல்வர் Vs எதிர்க்கட்சித் தலைவர் எப்படி?
கேரள முதல்வரைப் போல தமிழக முதல்வர் அனைத்துக் கட்சிகளையும் கலந் தாலோசித்து முடிவெடுக்கும் பக்குவத்தைக் கடைப்பிடிக்கவில்லை. ராகுல்காந்தியைப் போல அரசாங்கத்தை பகிரங்கமாக குற்றம் சாட்டாமல் பலவீனங்களை சுட்டிக்காட்டும் போக்கை மு.க.ஸ்டாலின் பின்பற்றவில்லை. முதல்வர் அலட்சியப்படுத்தினார். எதிர்க் கட்சித் தலைவர் அடித்து ஆடினார்.
பா. ஜெயப்பிரகாஷ், பொள்ளாச்சி.
இத்தாலியில் ஊரடங்குக்கு இடையே ஆமையை வாக்கிங் அழைத்துச் சென்ற பாட்டிக்கு 33,500 அபராதம் விதிக்கப் பட்டது பற்றி..?
அந்த பாட்டி வழக்கம்போலக்கூட நடைப்பயிற்சி மேற்கொண்டிருக்கலாம். ஆனால் வல்லரசுகள், வளர்ந்த நாடுகள் அனைத்தும் கொரோனா தடுப்பில் எப்படி செயல்படுகின்றன என்பதைக் காட்டுவது போல இருக்காதா, ஆமையுடனான வாக்கிங்.
மதிராஜா திலகர், சின்னபுங்கனேரி, கடலூர்
மே 3-ம் தேதிக்குப் பிறகும், 'ஊரடங்கு உத்தரவு' நீட்டிக்கப்படும் வாய்ப்பு உள்ளதா?
ஊரடங்கு தொடர்ந்து நீட்டிக்கப்பட் டால் பல கோடி மக்களின் வாழ்வு அடங்கி விடும். அதன் வெளிப்பாடுதான், இரண்டா வது ஊரடங்கு அறிவிப்பு வந்ததும் மும்பை ரயில் நிலையம் முன்பு கூடிய வெளிமாநிலத் தொழிலாளர்களின் கூட்டம்.
_____________
தமிழி
சாரங்கன், கும்பகோணம்
டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டிருக்கும் நிலையில் வேறு வகையான மதுபோதை களுக்காக அல்லாடும் குடிமக்கள், வீட்டிலேயே குக்கரில் சாராயம் காய்ச்சும் அளவுக்கு வந்துவிட்டனரே! தமிழர் மரபில் குடிப்பழக்கம் தவிர்க்க முடியாததா?
கள்ளுண்ணாமை என்பதை வலியுறுத்தி தனி அதிகாரமே எழுதி 10 குறட்பாக்களை அதில் வைத்துள்ளார் திருவள்ளுவர். குடிக்காமல் இருப்பது நல்லது என்று திருக்குறள் வலியுறுத்துகிற நிலையில், குடிப்பழக்கம் அக்காலந்தொட்டே இருந்திருக்கிறது என்பதும், அதனால்தான் வள்ளுவர் அதனை வலியுறுத்தியுள்ளார் என்பதைப் புரிந்துகொள்ள முடியும். மது என்பது போதைக்குரிய தாக, வெற்றிக் கொண்டாட்டமாக, பெருமிதத்தின் அடையாள மாக, பேறுகால மருத்துவமாக, போர்க்களத்திற்கான ஊக்க சக்தியாக பல கோணங்களில் தமிழர்களால் கையாளப்பட்டுள் ளது. அரசன் தன் படையில் இருந்த வீரர்களில் தன் மகனுக்கு அதிக மது கொடுத்ததை ஒரு தாய் பெருமையுடன் குறிப்பிடு வதை சங்க இலக்கியத்தில் காணமுடியும். மன்னன் அதியமான் தனக்கு மது வழங்கியதுடன், இறைச்சியையும் தன் கையால் பரிமாறியதை சங்கப்பாடலில் குறிப்பிட்டுள்ளார் அவ்வையார்.
நரந்த நாறுந் தன்கையாற்
புலவு நாறு மென்றலை தைவரு மன்னே (புறம்-235)
இன்றைக்கு இளைஞர்கள் பீர் குடிக்கத் தொடங்கும்போது, ‘எறும்பு கடிச்சது மாதிரி இருக்கும் அவ்வளவுதான். பெருசா போதை இருக்காது’என்று ஏற்கனவே அதற்குப் பழகியவர்கள் சொல்வார்கள். போதை அதிகமுள்ள மது என்பது எறும்பு கடிப்பது போல இருக்கக்கூடாது, பாம்புக்கடி-தேள்க்கடி விஷம் போல விறுவிறுவென ஏறவேண்டும் என்பதையும், "தேட்கடுப்பன்ன நாட்படுதேறல்' என்ற சங்க இலக்கிய வரி மூலம் அறியலாம். தேக்கள், தேறல், நறவு, மட்டு, சொல்விளம்பி, தோப்பி, கள் நறும்பிழி, மது எனப் பல வகைகளில் போதைக்குரிய பானங்களை பழந்தமிழர்கள் குறிப்பிடுகிறார்கள். ஊறவைத்த அரிசிச்சோறு, நன்கு கனிந்த பழங்கள், தேன், பனை மற்றும் தென்னை மரங்களிலிருந்து இறக்கும் கள், கரும்புச் சாறு, பனை வெல்லம், திப்பிலி உள்ளிட்ட பலவும் மது தயாரிப்பதற்குப் பயன்படுத்தப்பட்டுள்ளன. எவற்றை எந்த அளவில் கலந்தால் என்ன வகை மது கிடைக்கும் என்பதற்கான குறிப்புகளும் உண்டு. அரண்மனைகளில் உயர்ரக மது வகைகள்- பிறநாட்டு மதுவகைகள் இருப்பது வழக்கம். உடல் உழைப்போர் இயற்கையான மதுவகைகள், வீட்டிலேயே அளவாகத் தயாரிக்கும் மது வகைகள் ஆகியவற்றை அருந்துவர். ஆனால், அரசாங்கமே மது விற்பனை செய்ததற்கான சான்று எதுவும் பழந்தமிழர் வரலாற்றில் இல்லை. அந்தப் புதுவகைப் பண்பாடு தற்காலத்திய தமிழகத்தில்தான் உள்ளது. அதற்குப் பழகிய குடிமக்கள், கடை இல்லா நேரத்தில் காய்ச்சித்தான் பார்க்கலாமே என முயற்சிக்கும் விபரீதத்தைக் காண்கிறோம்.