ஜெயசீலன், அயனாவரம், சென்னை
தேசியப் பேரிடர் என கொரோனாவை அறிவித்த அரசுகள், அதனால் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு நிவா ரண நிதி அறிவிக்கவில்லையே?
அறிவிப்பார்கள். ஊரடங்கு முடிந்த பிறகு, வழங்குவார்கள். அப்போதுதானே போட்டோ எடுக்க முடியும்.
பா.ஜெயப்பிரகாஷ், பொள்ளாச்சி
கொரோனா தடுப்புக்கான மருந்தை 30 நாடுகள் இந்தியாவிடம் எதிர்பார்க்கும் சூழலை உருவாக்கியது காங்கிரஸ் அரசுதானே?
நேரு ஆட்சியில் கலப்பு பொருளாதாரம் என்ற அடிப் படையில், அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் இரண்டுமே ஊக் கப்படுத்தப்பட்டன. அதனால் தான் இந்தியா பல துறைகளிலும் தாக்குப்பிடித்தது. குறிப்பாக அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் கட்டமைப்பு தான் இன்றைய கொரோனா காலத்தில் மக்களுக்குப் பெரும் உதவியை செய்து வருகிறது. உலக வல்லரசுகளின் அச்சுறுத்தலை மீறி, இந்தியாவில் ஹைட்ராக்சி குளோரோகுயின் உள்ளிட்ட மருந்துகளைத் தயாரிக்கும் முடிவை மேற்கொண்டவர் முன் னாள் பிரதமர் இந்திராகாந்தி. மருத்துவ ரீதியாகவும் வணிக ரீதியாகவும் இது இந்தியாவுக்கு சாதகமானது. அதனால்தான் அமெரிக்கா உள்ளிட்ட பெரிய நாடுகள் இந்தியாவிடம் மருந்தை எதிர்பார்க்கின்றன. 1991க்குப் பிறகு புதிய பொருளாதாரக் கொள்கை யைக் கொண்டுவந்ததும் காங் கிரஸ் அரசுதான். அரசு நிறு வனங்கள் குறைக்கப்பட்டு, தனியார்- பன்னாட்டு ஆதிக்கம் அதிகமானது. அதன் சாதக-பாத கங்கள் இன்றளவும் விவாதிக்கப் படுகின்றன. காங்கிரûஸ குறை சொல்லும் பா.ஜ.க., பொருளா தாரக் கொள்கையில் காங்கிரûஸ விட வேகமாக தனியாருக்கு சாதகமாக செயல்படுகிறது. அர சின் பொதுத்துறை நிறுவனங் களை தனியாரிடம் விற்கிறது. வங்கிகளில் உள்ள பணத்தை தனக்கு வேண்டிய தொழிலதிபர் களுக்கு கடனாக கொடுத்து அவர்களை வெளிநாடுகளுக்கு தப்பிக்க வைக்கிறது. இப்போது கொரோனா நெருக்கடியில், அதே அரசுத்துறை மூலம் தன் இமேஜை பாதுகாத்துக் கொள்ள வியூகம் வகுக்கிறது.
பாலச்சந்திரன், உடுமலைப்பேட்டை
தேவேந்திர குல (வேளாளர்) சமுதாயத்தினரை இணைத்து பெயரிடுவது, எஸ்.சி. பட்டியலிலிருந்து ஓ.பி.சி. பட்டி யலுக்கு மாற்றுவது போன்ற கோரிக்கைகள் கிடப்பிலேயே உள்ளனவே, வாக்குறுதி தந்த வர்கள் நிறைவேற்றுவார்களா?
பொருளாதார வீழ்ச்சி யையே கொரோனா தலையில் கட்டுகிறவர்களிடம் இப்போ தைக்கு இந்த கோரிக்கையின் நிறைவேற்றத்தை எதிர்பார்க்க முடியுமா? வாக்குறுதியை நம்பி அரசியல் செய்த சமுதாயத் தலைவர்கள்தான் நியாயமான பதில் தரவேண்டும்.
கே.ஆர்.உபேந்திரன், தஞ்சாவூர்
சமீபகாலமாக தமிழ் நாட்டில் நகைக் கடைகளைவிட, நகை அடகு கடைகள் அதிக மாகியிருக்கிறதே?
அதிகாரத்தையே அடகு வைத்துவிட்ட ஆட்சியாளர்கள் ஆளும் மாநிலத்தில், மக்களின் வாழ்வும் அடகு கடைகளை நோக்கித்தானே செல்லும்.
___________
தமிழி
சு.வெங்கடேஷ், கோட்டயம்
தூய்மைப் பணியாளர்களை பக்கத்திலேயே நெருங்கவிடாத பழக்கம் கொண்டிருந்த மண்ணில், அவர்களின் கால்களைக் கழுவி நன்றி செலுத்தும் அளவுக்கு பண்பாட்டு மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறதா கொரோனா?
செய்யும் தொழிலே தெய்வம் என்பதுதான் நமது பண்பாடு. ஆனால், காலப்போக்கில் தொழில்களில் ஏற்றத்தாழ்வுகளை உருவாக்கி, அத்தியாவசிய- அடிப் படையானத் தொழில் செய்வோரை தனி சாதியாக ஒதுக்கி, அதை அவர்கள் மட்டுமே செய்யவேண்டும் என்பதைத் தலையெழுத்தாக்கி, அதனிலும் கொடுமையாக அவர்களைத் தீண்டத்தகாதவர்களாக ஒதுக்கி வைத்தது வருணாசிரம தர்மம். அது நம் பண்பாட்டுக்கு நேர் எதிரானது. ஆனால், எல்லா வீடுகளிலும் ஏதோ ஒரு வகையில் வருணாசிரமம் குடியேறிவிட்டதால், நமக்குள்ளும் சாதி ஏற்றத்தாழ்வு சிந்தனைகள் ஆக்கிரமித்தன. அதனை சுத்தம் என்கிற பெயரிலும், ஆரோக்கியம் என்கிற பெயரிலும் கடைப்பிடித்து, நம்மை நாமே சமாதானப்படுத்திக் கொண்டோம். உண்மையில், நமக்கான சுத்தத்தையும் சுகாதாரத்தையும் உருவாக்கு வதற்காகத்தான் அவர்கள் பாடுபடுகிறார்கள் என்ற உண்மை தெரிந்திருந்தோம் அதனை மனதுக்குள் ஒளித்து வைத்துவிட்டோம். "ஆகாரத்திற்காக அழுக்கை சாப்பிட்டு தடாகத்தை சுத்தம் செய்கிற மீன்' என்று பராசக்தியில் கலைஞர் எழுதிய வசனம்போல, தூய்மைப் பணியாளர்கள் நம்முடைய புறக்கணிப்பை மீறி, தங்கள் பணியை செய்து சமுதாயத்தைக் காப்பாற்றி வந்தனர். கொரோனா நேரத்தில் நம்மில் பலரும் வீட்டில் முடங்கிக் கிடக்கும் நேரத்தில்தான் அவர்களின் அர்ப்பணிப்பை உணர்கிறோம். தமிழ்நாட்டிலும் இந்திய அளவிலும் தூய்மைப் பணி செய்வோரில் பெரும்பான்மையினர் தொல்குடிகள். அவர்களிடம் இயல்பாகவே சமூக ஒழுங்கு இருக்கும். இயற்கையுடன் இயைந்த வாழ்வை மேற்கொள்பவர்கள். நோய் பரவும் சூழலிலும் பேரிடர் காலங்களிலும் என்னவிதமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்கிற பாரம்பரிய அறிவையும் உடையவர்கள். சுனாமியின்போது அந்தமான்- நிகோபார் பழங்குடி மக்கள் அதனை முன்கூட்டியே உணர்ந்து, உயரமான இடங்களுக்கு சென்று பாதுகாத்துக் கொண்டது குறிப்பிடத்தக்கது. தற்போது ஒடிசா மாநிலம் கோரபுட் மாவட்டத்தில் உள்ள பழங்குடி கிராமத்தில் வாழும் தொல்குடிகள் இந்தக் கொரோனா காலத்தில், தனி மனித இடைவெளிக்காக அரசு நிர்வாகத்தினரால் போடப்பட்ட வட்டங்களில் வரிசையாக நின்று, குடிநீர் எடுத்துச் செல்லும் படத்தை அம்மாநில அரசின் சிறப்பு ஆலோ சகரும் தமிழருமான ஆர்.பாலகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ். பதிவிட்டிருக்கிறார். அவர்கள் தங்கள் பண்பாட்டுடன் இருக்கிறார்கள். நாகரிக மனிதர்கள்தான் சாதி இடைவெளியை இறுகப் பற்றிக் கொண்டிருக்கிறார்கள்.