கே.ஆர். உபேந்திரன், தஞ்சாவூர்
""ஐதராபாத்தில் பெண் மருத்துவரை வன்கொடுமை செய்து கொன்ற குற்றவாளிகளை என்கவுன்டர் செய்ததுதான் சரியான நீதி. என்னைப் போல் நீதிமன்றத்திற்கு அலைவது தவிர்க்கப்பட்டது'' என நிர்பயாவின் தாயார் கூறுவது பற்றி?
கொரோனா பாதிப்பு ஏற்படாமல் போயிருந்தால் இந்திய ஊடகங்களின் ஹாட் டாபிக், நிர்பயா பாலியல் கொலை குற்றவாளிகளின் மரண தண்டனை குறித்துதான் இருந்திருக்கும். சட்டத்தின் ஓட்டைகளை நீதியின் கரங்கள் கொண்டு அடைக்காதவரை, சட்டரீதியான தவறுகளே நியாயமானதாக மக்கள் மனதில் தோன்றும். என்கவுண்ட்டர் பற்றிய நிர்பயாவின் தாயாரின் பார்வையும் அதுதான்.
பா.ஜெயப்பிரகாஷ், பொள்ளாச்சி
""அரசியலில் 40 ஆண்டுகள் மேலான அனுபவம் எனக்கு உள்ளது. மீண்டும் முதல்வர் பதவியில் அமர்வேன். தைரியமாக இருங்கள்'' என்று காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களுக்கு மத்தியபிரதேச முன்னாள் முதல்வர் கமல்நாத் கூறிய நம்பிக்கை பற்றி?
அரசியலில் அனுபவம் என்பது கொக்கு போன்றது. வாய்ப்பு என்பது உறுமீன் போன்றது. எப்போது வாய்ப்பு வரும்
கே.ஆர். உபேந்திரன், தஞ்சாவூர்
""ஐதராபாத்தில் பெண் மருத்துவரை வன்கொடுமை செய்து கொன்ற குற்றவாளிகளை என்கவுன்டர் செய்ததுதான் சரியான நீதி. என்னைப் போல் நீதிமன்றத்திற்கு அலைவது தவிர்க்கப்பட்டது'' என நிர்பயாவின் தாயார் கூறுவது பற்றி?
கொரோனா பாதிப்பு ஏற்படாமல் போயிருந்தால் இந்திய ஊடகங்களின் ஹாட் டாபிக், நிர்பயா பாலியல் கொலை குற்றவாளிகளின் மரண தண்டனை குறித்துதான் இருந்திருக்கும். சட்டத்தின் ஓட்டைகளை நீதியின் கரங்கள் கொண்டு அடைக்காதவரை, சட்டரீதியான தவறுகளே நியாயமானதாக மக்கள் மனதில் தோன்றும். என்கவுண்ட்டர் பற்றிய நிர்பயாவின் தாயாரின் பார்வையும் அதுதான்.
பா.ஜெயப்பிரகாஷ், பொள்ளாச்சி
""அரசியலில் 40 ஆண்டுகள் மேலான அனுபவம் எனக்கு உள்ளது. மீண்டும் முதல்வர் பதவியில் அமர்வேன். தைரியமாக இருங்கள்'' என்று காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களுக்கு மத்தியபிரதேச முன்னாள் முதல்வர் கமல்நாத் கூறிய நம்பிக்கை பற்றி?
அரசியலில் அனுபவம் என்பது கொக்கு போன்றது. வாய்ப்பு என்பது உறுமீன் போன்றது. எப்போது வாய்ப்பு வரும் என எதிர்பார்த்து அதற்கேற்ற தயாரிப்புகளுடன் பொறுமையாகக் காத்திருக்க வேண்டும். உறுமீன் வரும்போது கொத்திவிடவேண்டும். தன்னிடமிருந்து கொத்திச் செல்லப்பட்ட பதவியை மீண்டும் கொத்தி விடமுடியும் என நினைக்கிறது அனுபவம் நிறைந்த கமல்நாத் எனும் கொக்கு. பா.ஜ.க. வாயில் உள்ள உறுமீன் நழுவுகின்ற வாய்ப்பு எப்போது அமையுமோ!
நித்திலா, தேவதானப்பட்டி
கொரோனாவைத் தவிர வேறு செய்திகளே உலகத்தில் இல்லையா?
மேலே உள்ள கேள்வி-பதில்களில் உள்ளவை இரண்டுமே கொரோனாவுக்கு அப்பாற் பட்டவைதான். அதேநேரத்தில், உலகத்தில் போர் மேகம் சூழ்ந்திருந்த நாடுகளில்கூட தற்போது தற்காலிக அமைதி வெளிச்சத்தை ஏற்படுத்தி யிருக்கிறது கொரோனா. ஆனாலும், மக்களின் உரிமை, வாழ்வதாரத்திற்கான ஜனநாயக வழியிலான போராட்டங்கள் தொடரத்தான் செய் கின்றன. துருக்கியில் குரூப் யோரம் என்ற என்ற இசைக்குழுவைச் சேர்ந்த 28 வயது பாடகி ஹெலின்போலக், தங்கள் மீதான அரசின் அடக்குமுறைக்கு எதிராக 288 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து வீரமரணமடைந்துள்ளது பலருக்கும் தெரியாமல் போனது.
பி.மணி, வெள்ளக்கோவில்
உலகளவில் கொரோனாவிலிருந்து இந்தியா கற்றுக்கொண்ட பாடம் என்ன?
வாழ்க்கையின் அடிப்படை தேவை என்பது 3 வேளை சோறு என்பதை புதிய பொருளாதாரக் கொள்கைக்குப் பிறகான இந்தியா இந்த கொரோனா காலத்தில் புரிந்து கொண்டிருக் கிறது. சோற்றுக்கு அடுத்தபடியாக அதிஅத்வாசியமானவை செல்போனும், டி.வி.சேனல்களும் என்பதை புதிய பொருளாதாரக் கொள்கையில் புரண்ட இந்திய மக்கள் உணர்த்தியிருக் கிறார்கள்.
---------------
தமிழி
ரங்கபாஷ்யம், திருவல்லிக்கேணி, சென்னை 5
தமிழர்களால் நாக்கைக் கட்டுப் படுத்த முடியாதா? 21 நாளும் வீட்டில்தான் என்ற நிலையில், ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் கறி-மீன் வாங்குவதற்கு சமூக ஒழுங்கை கடைப்பிடிக்காமல் கூட் டம் கூடினால் நோய்த் தொற்றுப் பரவாதா?
தமிழர்கள் மட்டுமல்ல உலகில் உள்ள மனிதர்கள் எல்லோருமே சுவையான உணவை விரும்புகிறவர் கள்தான். ருசி பார்க்காமல் பசிக்கு சாப்பிடுபவர்கள் துறவிகள்- முனி வர்களாக இருக்கலாம். ஆனால், அந்த ஏரியாவிலும் போலிகள் நிறைந்து விட்டார்கள். பொருளாதாரச் சூழலில் வேறெந்த வழியும் இல்லாதவர்கள் வெந்ததைத் தின்று விதி வந்தால் சாகலாம் என நினைப்பார்கள். அவர்களுக்காக வாழ்வாதாரத்தை ஏற்படுத்திக் கொடுத்தால் சுவையான உணவை சாப்பிடவே விரும்புவார்கள். தனக்கு இருந்தாலும் இல்லா விட்டாலும் தன் பிள்ளைகள்- குடும்பத்தினர் சுவையான- சத்தான உணவை சாப்பிட வேண் டும் என நினைப்பது தாயின் மனது. அதனால்தான் ஏழைத்தாயாக இருந்தாலும் பணக் காரத் தாயாக இருந்தாலும் சமைய லறையில் நுழைந்து விட்டால், தங்கள் குடும்பத்தவரின் சுவையறிந்து- அவர்களின் உடல் நலனுக்கானத் தேவையறிந்து சமைக் கிறார்கள். பாரதிதாசன் தன்னுடைய குடும்ப விளக்கு நூலில், ""கொண்ட வருக்கு எது பிடிக்கும்... குழந்தைகள் எதை விரும்பும்... தண்டூன்றி நடக்கும் மாமன்-மாமிக்கு தக்கதென்ன'' என அவரவர் தேவையறிந்து சமைப்பதாகப் பாடியதுடன், "கறிகள்தோறும் உண்பவர் தம்மைக் கண்டார்'’எனவும் குறிப்பிட்டிருப்பார்.
அவரவர் உடல்நலனுக்கேற்ற காய்கறிகள், பழங்கள், இறைச்சி வகை கள், தானியங்கள் இருக்கின்றன. அந்தந்த மண்ணின் தன்மைக்கேற்ற உணவு அந்தந்த மக்களால் சாப் பிடப்படுகிறது. உடல் ஆரோக்கியத் தைக் கடந்து, உணவு என்பது பழக்கவழக்கமாகவும் மாறி விடுகிறது. தமிழர்களின் உணவு முறை என்பது மரபுரீதியாக அனைத்து வகை சத்துகளையும் உள்ளடக்கியது. அத்துடன், மருத்துவ குணமும் உடையது. உணவே மருந்து என் பதன் மூலம் பாரம்பரியமாக உடலுக்கு கிடைத்துள்ள ஊட்டமும், நவீன மருத்துவம் கண்டறிந்த தடுப்பு மருந்துகளால் அதிகரித்துள்ள நோய் எதிர்ப்புத் திறனும் அவர்களை கொரோனா அச்சத்தையும் மீறி கறி-மீனுக்காகக் கூட வைக்கிறது. குறிப்பாக, ஞாயிற்றுக்கிழமை களுக்கு முந்தைய நாட்களை விரத நாட்களாகக் கடைப்பிடிக்கும் பழக்கத்தினால் பெரும்பாலானவர்கள் அந்த ஒற்றை நாளில் அசைவம் சாப்பிட்டே ஆக வேண்டும் என்ற சுவைக்குப் பழகிவிட்டார்கள். ஊரடங்கு என்பதால் இறைச்சிக் கடைகள் குறைக்கப்பட்டதாலும், இடத்தை மாற்றியதாலும் கூடுகின்ற கூட்டம் நோய்த்தொற்று பற்றிய அச்சத்தை உருவாக்குகிறது. சுவையைவிடவும் மேலானது உயிர் என்பதை மக்களும் அரசும் கவனத்தில் கொண்டு அதற்கேற்ப செயல்பட வேண்டும்.