கே.ஆர்.குபேந்திரன், தஞ்சாவூர்

மாற்று வழி செய்யாமல் நோட்டுக் களை செல்லாதென அறிவித்து மக்கள் எப்படியெல்லாம் தவித்தார்களோ, அதே போல முன்னேற்பாடு இல்லாமல் ஊரடங்கு உத்தரவையும் அமல்படுத்தியதால், லட்சக் கணக்கான மக்கள் அலைந்து திரியும் அவல நிலைக்கு ஆளாக்கப்பட்டது குறித்து?

இரவு 8 மணிக்கு பிரதமர் மோடி பேசுகிறார் என்றாலே அதன் பின்விளைவுகள் என்ன என்பதை அரசும் ஆளுந்தரப்பும் யோசிப்பதில்லை. பணமதிப்பிழப்பு நடவடிக் கையின்போது, நள்ளிரவிலேயே அது தெரிந்தது. ஊரடங்கு உத்தரவில் அன்றாட உழைப்புத் தொழிலாளர்களின் நிலை என்ன என்பதை முன்கூட்டியே யோசிக்காத தால், அவர்கள் பசி பொறுக்க முடியாமல் சொந்த ஊருக்குத் திரும்புவதற்காக சமூக விலக்கலை மறந்து கூட்டம் கூட்டமாக குவியவும், போக்கு வரத்து இல்லாததால் நடந்தே செல்ல வேண்டிய அவலமும் ஏற்பட்டது. இந்தியாவில் வாழ்கின்ற எல்லோரும் அதானி, அம்பானிகள் அல்ல. 130 கோடி மக்களில் பாதிக்கும் மேற்பட்ட வர்கள் டெல்லியிலும் உத்தரபிரதேச எல்லை யிலும் அலைந்து திரிந்தவர்களைப் போன்றவர்கள்தான் என்பதை இந்த இக்கட்டான நேரத்திலாவது பிரதமர் உள்ளிட்ட ஆளுந்தரப்பினர் புரிந்து கொள்வார்கள் என நம்புவோம்.

ம.ராகவ்மணி, வெள்ளக்கோவில்

Advertisment

வீட்டோடு இருப்பதால் மனஅழுத்தத்திற்கு ஆளாக நேரிடும் போல இருக்கிறதே?

மனிதர்களை சமூக மிருகங்கள் என்பார்கள். அதாவது, அவர்களால் தனித்து இருக்க முடியாது. சக மனிதர்களின் தயவுடன்தான் வாழ முடியும். முனிவர்கள்போல தவம் செய்பவர்களால்தான் தனித்திருக்க முடியும். இப்போது எல்லாருமே தவம் இருக்கும் முனிவர்கள்தான். இது மனித இயல்புக்கு மாறானது. 21 நாட்கள் வெளியில் செல்லாமல் வீட்டில் இருக்க வேண்டும் என்பதே மக்களுக்கு கடின மான அனுபவம்தான். பள்ளி-கல்லூரி மாணவர்கள்கூட இத்தனை நாட்கள் விடுமுறை என்றால் வெளியில் சுற்றுவதைத்தான் விரும்புவார்கள். வீட்டுக்குள்ளேயே முடங்க வேண்டும் என்பது அவர்களுக்கும் சிறைதான். ஒட்டுமொத்த குடும்பத்தினரையும் இந்த தனித்திருத்தல் மனஉளைச்சலுக்கு ஆளாக்கும் வாய்ப்பு உண்டு. அதே நேரத்தில், இது போன்ற வாய்ப்பு இனி கிடைக்குமா என நினைத்து குடும் பத்தினருடன் மனம் விட்டுப் பேசுவது, சமையல் உள்ளிட்ட வேலைகளில் பங்கெடுப்பது, இசை- புத்தகம்- உடற்பயிற்சி-விளையாட்டு-நடனம் உள்ளிட்டவற்றில் கவனம் செலுத்தும் போது அழுத்தம் நீங்கி புத்துணர்ச்சி உருவாகும்.

mavalianswers

Advertisment

நித்திலா, தேவதானப்பட்டி

கொரோனாவால் வாழ்க்கை மாறியிருக்கிறதா?

கடுமையானவர்கள் எனக் கருதப்படும் போலீசார், உலக நாடுகள் உள்ளூர் வரை கலக்கலாக நடனமாடி விழிப்புணர்வு ஊட்டுவதைப் பார்க்க வில்லையா?

____________

தமிழி

எம்.கோவிந்தன், முகப்பேர்.

தமிழின் மரபுவழி மருத்துவ மான சித்த மருத்துவம் பரிந்துரைக்கும் கபசுரக் குடிநீர், கொரோனா போன்ற தொற்று நோய்களை எந்த வகையில் கட்டுப்படுத்தக் கூடியது?

சித்த வைத்தியத்தில் காய்ச்சலை 60க்கும் மேற்பட்ட வகைகளில் பிரித்துள்ளனர். இதில் கிருமி மற்றும் நோய்த்தொற்று காரணமான காய்ச்சல்களைக் கட்டுப்படுத்த நிலவேம்பு கசாயம், கபசுரக் குடிநீர் போன்றவை பயன்படும் என்கிறது சித்த மருத்துவம். தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பரவியபோது, சென்னை மாநகராட்சி சார்பில் நிலவேம்புக் கசாயம் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. அதற்கு அனுமதியளித்த அன்றைய முதல்வர் ஜெயலலிதா, தமிழகம் முழுவதும் டெங்கு தடுப்பு நடவடிக்கையாக நிலவேம்பு கசாயம் வழங்கிடச் செய்தார். அதே நேரத்தில், தமிழகத்தில் டெங்கு பரவாமல் தடுப்பது என்ற பெயரில், காய்ச்சலில் இறந்தவர்களுக்கு டெங்கு இருந்ததா என்பது உறுதி செய்யப்படவில்லை. அதனை மர்மக் காய்ச்சல் என்றே குறிப்பிட்டது ஜெ. அரசு. எனினும், இன்றுவரை, காய்ச்சல் பரவும்போது நிலவேம்பு குடிநீரைக் குடிக்கும் பழக்கம் தமிழக மக்களிடம் தொடர்கிறது. சித்த வைத்தியத்தில் பயன்படுத்தப்படும் மூலிகைகள் பலவும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்பவை. கபசுரக் குடிநீரில் சுக்கு, திப்பிலி, இலவங்கம், சிறுகாஞ்சேரி, ஆடுதொடா(ஆடாதொடை) இலை, அக்ரகாரம், முள்ளிவேர், கற்பூரவள்ளி, கோஷ்டம், சீந்தில்தண்டு, சிறுதேக்கு, நிலவேம்பு சமுலம், வட்ட திருப்பி வேர், கோரைக்கிழங்கு, கடுக்காய் தோல் என 15 வகை மூலிகைகள் கலந்திருப்பதால் இதனை அரசின் இம்ப்காப்ஸ் நிறுவனமே விற்பனை செய்கிறது. கொரோனாவுக்கான முன்னெச்சரிக்கை மருத்துவம்தான் கபசுரக்குடிநீர். இரு பங்கு நீரில் கபசுர பொடியை சேர்த்து ஒரு பங்காக சுண்ட வைத்து, வடிகட்டி நாளுக்கு ஒரு முறை அருந்தினால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். அது கொரோனா பாதிப்பிலிருந்து தடுக்கும் என்கிறார்கள் சித்த மருத்துவர்கள். அதனால், கபசுரக்குடிநீர் மருந்தை வாங்குவதற்கு பெரும் கூட்டம் கூடுகிறது. பல இடங்களில் கிடைக்கவில்லை என்றும் புகார் தெரிவிக்கப்படுகிறது. சித்த மருத்துவ ஆராய்ச்சியாளர்களான சிவராமன், வீரபாகு போன்றவர்கள் கபசுரக்குடிநீர் என்பது தற்காப்புதான் என்பதையும், அதுவே முழுமையான மருந்து அல்ல என்றும், கொரோனாவை ஒருங்கிணைந்த மருத்துவ முறைகள் மூலமாகத்தான் வெல்ல முடியும்-அதன் முதல் படி தனித்திருத்தல் என அக்கறையுடன் தெரிவித்திருப்ப தையும் கவனித்திட வேண்டும்.