மாவலி பதில்கள்!

mm

சங்கரசுப்பிரமணியன், திருநெல்வேலி

இதுபோல மக்கள் எப்போ தாவது தனிமைப்பட்டு இருந்திருக் கிறார்களா?

எப்போதெல்லாம் மனிதகுலம் அச்சப்படுகிறதோ அப்போதெல்லாம் அது தன் நெருங்கிய உறவுகளுடன் தனிமையில் பாதுகாப்பாக ஒதுங்குவது வழக்கம். குகையில் வாழ்ந்த ஆதி மனிதர்கள் தொடங்கி மாளிகையில் வாழும் ஆடம்பர மனிதர்கள் வரை.

mm

தூயா, நெய்வேலி

கொரோனா எல்லாரையும் தொற்றிக்கொள்ளும் என்கிறபோது, மருத்துவர்களும் செவிலியர்களும் மற்ற பணியாளர்களும் எப்படி அதற் கான சிகிச்சைகளை மேற்கொள் கிறார்கள்?

மருத்துவத்துறை என்பது அர்ப் பணிப்பு உணர்வினைக் கொண்டது. மக்களின் உயிர் தம் கையில் என்பதால், தங்கள் உயிரைப் பற்றி இரண் டாம்பட்சமாக கருதுபவர்கள்தான் உண்மையான மருத்துவத்துறையினர். இந்தோனேஷியா நாட்டில் கொரோ னாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் பணியில் ஈடுபட்ட 6 டாக்டர்கள் தங்கள் உயிரை இழந்துள்ளனர். அவர்களில், தெற்கு ஜகார்தாவைச் சேர்ந்த ஹாடியோ அலி என்பவர் தனக்கு கொரோனா தொற்று உறுதியானதையும், மர

சங்கரசுப்பிரமணியன், திருநெல்வேலி

இதுபோல மக்கள் எப்போ தாவது தனிமைப்பட்டு இருந்திருக் கிறார்களா?

எப்போதெல்லாம் மனிதகுலம் அச்சப்படுகிறதோ அப்போதெல்லாம் அது தன் நெருங்கிய உறவுகளுடன் தனிமையில் பாதுகாப்பாக ஒதுங்குவது வழக்கம். குகையில் வாழ்ந்த ஆதி மனிதர்கள் தொடங்கி மாளிகையில் வாழும் ஆடம்பர மனிதர்கள் வரை.

mm

தூயா, நெய்வேலி

கொரோனா எல்லாரையும் தொற்றிக்கொள்ளும் என்கிறபோது, மருத்துவர்களும் செவிலியர்களும் மற்ற பணியாளர்களும் எப்படி அதற் கான சிகிச்சைகளை மேற்கொள் கிறார்கள்?

மருத்துவத்துறை என்பது அர்ப் பணிப்பு உணர்வினைக் கொண்டது. மக்களின் உயிர் தம் கையில் என்பதால், தங்கள் உயிரைப் பற்றி இரண் டாம்பட்சமாக கருதுபவர்கள்தான் உண்மையான மருத்துவத்துறையினர். இந்தோனேஷியா நாட்டில் கொரோ னாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் பணியில் ஈடுபட்ட 6 டாக்டர்கள் தங்கள் உயிரை இழந்துள்ளனர். அவர்களில், தெற்கு ஜகார்தாவைச் சேர்ந்த ஹாடியோ அலி என்பவர் தனக்கு கொரோனா தொற்று உறுதியானதையும், மரணம் நெருங்கி வருவதையும் அறிந்ததும், தன் குடும்பத்தாரிடம் பிரியா விடை பெறுவதற்காக மருத்துவமனையிலிருந்து சென்றவர், வீட்டுக்குள் நுழையாமல் வாசலிலேயே நின்று, தூரத்திலிருந்தே தன் இரு பிள்ளைகளையும் கர்ப்பிணியாக இருக்கும் மனைவியையும் மாஸ்க் அணிந்த முகத்துடன் பார்த்துவிட்டு, மருத்துவமனை வாகனத்தில் ஏறி ஐ.சி.யூ.வுக்கு சென்றுவிட்டார். அதன்பிறகு அவர் திரும்பவில்லை. அவரது கடைசி சந்திப்பை கர்ப்பிணி மனைவி தன் செல்போனில் படம் பிடித்துள்ளார். மருத்துவர்களின் தன்னலமற்ற அர்ப்பணிப்பு உணர்வின் வரலாற்றுப் பதிவாகியிருக்கிறது அந்தப் படம்.

சாரங்கன், கும்பகோணம்

அரசியல்-கொரோனா என்ன வித்தியாசம்?

பொதுப்புத்தியில் இரண்டும் ஒன்றாகத்தான் பார்க்கப்படுகிறது. கொரோனா போன்ற பேரிடர் காலங் களில் மக்களைக் காக்க வேண்டிய அக்கறையுள்ள அரசியல் தலைவர்களின் கைகளில் ஆட்சி இருக்கும் போது அதற்கான நடவடிக்கைகள் வேகம் பெறுவது வழக்கம். ஆனால், சில அரசியல்வாதிகளோ கொரோனாவையும் மீறி தங்கள் சுயநல அரசிய லிலேயே கவனம் செலுத் துகிறார்கள். உலகமே அச்சப்பட்டுக் கொண்டி ருந்த நேரத்தில், மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை வளைத்து மீண்டும் ஆட்சியைப் பிடிப் பதில் கொரோனாவைவிட பயங்கரமாக பா.ஜ.க. செயல் பட்டது. வீட்டிலேயே முடங்குங்கள் எனப் பிரதமரே உத்தரவிட்டும், கூட்டம் சேர்த்துக்கொண்டு அயோத்தியில் ராமர் கோவிலுக்கான வேலை களைத் தொடங்கி யிருக்கிறார் உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்.

கே.பி.கே.பாஸ்கர்காந்தி, சிங்கப்பூர்

இந்தக் கடுமையான நேரத்திலும் மகிழ வைத்தது?

எத்தனை கீரியசான சூழலையும் சிரிப்பாக மாற்றிவிடும் மீம்ஸ்களின் எவர்க்ரீன் ஸ்டார் வடி வேலுதான்.

__________

தமிழி

mm

நித்திலா, தேவதானப்பட்டி

தொற்று நோய்களுக்குப் பழந்தமிழ் மருத்துவத்தில் கடைப்பிடிக்கப்பட்ட மருந்துகள் என்னென்ன?

தொற்று நோய் என்பது காலந்தோறும் மாறிக் கொண்டிருப்பவை. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வீட்டிலிருந்து யாரும் வெளியேறாமலும், வீட்டுக்குள் புதிதாக யாரையும் அனுமதிக்காமலும் பாதுகாத்துக் கொள்வது வழக்கம். ஒரு காலத்தில் காலரா என்பது தொற்று நோயாக இருந்தது. தண்ணீர் வழியாக அது பரவியது. ஆற்று நீரை மக்கள் குளிப் பதற்கு, துவைப்பதற்கு, சமைப்பதற்கு, கால் கழுவுதற்கு எனப் பல நிலைகளிலும் பயன்படுத்திய நிலையில், அந்த ஆறு ஓடும் பாதையில் உள்ள ஊர்கள் பலவும் காலரா தொற்றால் பாதிக்கப்பட்டு, உயிரிழப்புகள் ஏற்பட்டன. பின்னர், காலராவுக்குத் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டதும், தண்ணீரைப் பயன் படுத்தும் முறைகளிலும் மாற்றங்கள் ஏற்பட்டன. குறிப்பாக, குடிநீர் விநியோகத்தை அரசு நிறுவனங்கள் ஏற்றன. குழாய் மூலம் வீடுகளுக்கு அனுப்பப்படும் குடிநீரில் குளோரின் பவுடர் கலந்து அதன் மூலமாக தொற்று நோய்கள் பரவாமல் கட்டுப்படுத்தும் முறைகள் மேற்கொள்ளப்பட்டன. காலராவுக்கு முன்பும் பின்பும் பல தொற்று நோய்கள் வந்துள்ளன. தற்போது கொரோனோ எல்லாரையும் பயமுறுத் துகிறது. பெரும்பாலான தொற்றுநோய்கள், பலவீனமான உடல்நலனை, அதாவது நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்களை முதலில் தாக்குகிறது. அவர்களை மரணத்தை நோக்கித் தள்ளுகிறது. தமிழர்களைப் பொறுத்தவரை, பழங் காலத்திலிருந்தே நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட திடமான உடல் வாகுக்கு உரிய உணவினை சாப்பிட்டு வருகிறார்கள். ஒவ்வொரு வீட்டின் சமையலறையிலும் உள்ள அஞ்சறைப் பெட்டிதான், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்யும் மெடிக்கல் கிட். அதில் உள்ள கீரகம், மிளகு, வெந்தயம் இவை போக மஞ்சள், இஞ்சி, பூண்டு உள்ளிட்ட பலவும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக்கூடியவை. அதுபோல அந்தந்த பருவத்தில் விளையக்கூடிய காய்கறிகளும் பழங்களும் உடல்நலத்தைப் பாதுகாக்கக்கூடியவை. சமைப்பதற் கான பொருட்களை மில்லில் அரைப்பதைவிடவும், சமைத்த உணவுப் பொருட்களை வாயில் அரைத்துக் கூழாக்கி உண்பது என்பது உடல்நலன் காக்கும். சாப்பாட்டை வாயிலேயே கூழாக்கும் வகையில் நன்கு அரைத்து வயிற்றுக்குள் அனுப்ப வேண்டும். தண் ணீரை சாப்பாடு போல நிதானமாக ருசித்து குடிக்க வேண்டும். இவையிரண்டும் தமிழர்கள் எனும் தொல் குடியினர் தொடங்கி இன்றுவரை உடல்நலன் காக்க நினைப்போரின் வழிமுறையாகும்.

nkn310320
இதையும் படியுங்கள்
Subscribe