அண்ணா அன்பழகன், அந்தணப்பேட்டை

"ரஜினி, கமல் என எத்தனை பேர் வந்தாலும் ஒத்தையாக சமாளிப்போம்' என்கிறாரே அமைச்சர் ஜெயக்குமார்?

மூன்று ராஜ்யசபா சீட்டு களில் ஒன்றை ஒதுக்கி, ஒற்றை ஆளான ஜி.கே.வாசனை சமாளித்தது போலவா?

லட்சுமிதாரா, வேலூர் (நாமக்கல்)

Advertisment

உலகக் கோப்பை ஃபைனலில் இந்திய பெண்கள் அணி சொதப்பிவிட்டதே?

இதே பெண்கள் அணிதான் லீக் போட்டியில் ஆஸ்திரேலியாவை வென்றது. அந்த அணி இறுதிப் போட்டியில் அதே ஆஸ்திரேலியாவிடம் பரிதாபமாகத் தோற்றது. நெருக்கடிகள் முற்றும்போது வியூகங்களில் கவனம் தேவை. இந்திய கிரிக்கெட்டின் ஆண், பெண் இரு அணிகளிலும் இது அடிக்கடி தவறிவிடுவதால் கோப்பை கை நழுவுகிறது.

mm

Advertisment

நித்திலா, தேவதானப்பட்டி

முருகனைத்தானே சுப்பிரமணியசாமி என்று கும்பிடுகிறார்கள். இதில் தமிழ்த்தேசியவாதிகளுக்கு என்ன பிரச்சினை?

தமிழ் முருகனுக்கும் ஆரிய சுப்பிரமணியசாமிக்கும் என்ன வேறுபாடு, எந்தளவில் மரி யாதை என்பதை கோவிலில் மட்டுமல்ல, காஞ்சி மடம் நடத்திய விதத் திலும் தெரிந்து கொள்ளலாம். முருகன், பொன்.ராதாகிருஷ்ணன் நிலைமையையும் சுப்பிரமணிய சுவாமி நிலையையும் படம் பார்த்து அறிக.

வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு

"தமிழகத்தில் மட்டுமாவது சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு வேண்டும்' என டாக்டர் ராமதாஸ் வலியுறுத்து கிறாரே?

69% இடஒதுக்கீடு தொடர் பான வழக்கில், ஒவ்வொரு சமூகத்தின் எண்ணிக்கை குறித்து உச்சநீதிமன்றம் தொடர்ந்து கேள்வி எழுப்பியுள்ளது. சாதிவாரிக் கணக்கெடுப்பின் மூலம் அரசு அதற்கான தரவு களைத் தரலாம். இடஒதுக் கீட்டை நிலைநிறுத்தலாம். டாக்டர் ராமதாஸ் இதனைத் தொடர்ந்து வலியுறுத்தி வரு கிறார். ஆனாலும், நடைமுறைச் சிக்கல்களால் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நிறை வேறாமல் இருக்கிறது.

கே.ஆர்.உபேந்திரன், தஞ்சாவூர்

உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்க்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவி அளிக்கப் பட்டிருக்கிறதே?

சதாசிவம் தொடங்கி கோகாய் வரை நீதி அரசர்களை விதவிதமாக கௌரவிக்கிறார்கள் பா.ஜ.க.வின் பிரதம அமைச்சரும் உள்துறை அமைச்சரும்.

சி.கார்த்திகேயன், சாத்தூர்

"சாகுற நாள் தெரிஞ்சா வாழுற நாள் நரகமாகும்' என்கிற டயலாக் இப்போது யாருக்குப் பொருந்தும்?

கொரோனா பீதியில் உள்ள மொத்த உலகத்திற்கும் தான்.

ஜெயசீலன், அயனாவரம், சென்னை

சொத்துக் குவிப்பு வழக்கில் சிறைக்கு போவதற்கு முன் சசிகலா, ஜெ. சமாதியை அடித்து உறுதி ஏற்றதும், எழுச்சி புரட்சி ஏற்பட வேண்டும் என பிரஸ்மீட்டின் போது போடியத்தில் அடித்து ரஜினி பேசியதும் எதைக் காட்டுகிறது?

தன்னுடைய முதல்வர் கனவு நிறைவேறாமல் செய்தவர் களை விடாதீர்கள் என்பது ஜெ. சமாதியில் அடித்த சசிகலா தனது தொண்டர்களுக்கு சொன்ன செய்தி. "என் மீது ஏற்றப்பட் டுள்ள முதல்வர் கனவு நிறை வேறவேண்டுமென்றால் நான் நினைக்கிற அரசியல் களத்தை உருவாக்கிவிட்டு அப்புறம் வாங்க' என்பது தனது ரசிகர்களுக்கும் தன்னை வைத்து தங்கள் தேவை யை நிறைவேற்ற நினைப்பவர் களுக்கும், ரஜினி அடித்துச் சொல்லியுள்ள செய்தி

___________

தமிழி

சாரங்கன், கும்பகோணம்

தமிழக அரசின் தமிழ்த்தாய் வாழ்த்து, 50 ஆண்டுகளைக் கடந்திருக்கிறதே, பழங்காலத்தில் இதுபோன்ற வாழ்த்துகள் உண்டா?

வாழ்த்துவதும் வணங்குவதும் தமிழர்களின் பண்பாடு. இறைவனை, மன்னனை, சான்றோரை, மூத்தவர்களை வணங்குவார்கள். இளையோரை வாழ்த்துவார்கள். புலவர்கள் மன்னர்களை வாழ்த்திப் பாடுவது உண்டு. கடவுளையும் வாழ்த்துவது அவர்களின் மரபு. தமிழை, தாயாக இறையாக தங்களின் உயிராகக் காண்பது தமிழர்களின் வழக்கம். "தமிழ்நாடு' என இந்த மாநிலத்திற்குப் பெயர் சூட்டிய அறிஞர் அண்ணா தனது ஆட்சிக்காலத்தில் "தமிழ்த்தாய் வாழ்த்து' ஒன்றை அரசின் சார்பில் தேர்வு செய்திட முயற்சி எடுத்தார். இரண்டாண்டு காலத்திற்குள் அண்ணா மறைந்ததால், கலைஞர் ஆட்சியில், மனோன்மணியம் சுந்தரனார் எழுதிய, "நீராரும் கடலுடுத்த' பாடல் தமிழ்த்தாய் வாழ்த்தாக 1970-ஆம் ஆண்டு மார்ச் 10-ஆம் நாள் உறுதி செய்யப்பட்டது. 23-11-1970-ல் அதற்கான அரசாணை வெளியிடப்பட்டது. எப்படி தேசிய கீதத்திற்கு இந்தியாவில் உள்ள அனைவரும் மதிப்பளிக்கிறோமோ, அதுபோல ஜனாதிபதி, பிரதமர், ஆளுநர் என தமிழ் தெரியாத யாராக இருந்தாலும் எழுந்துநின்று மதிப்பளித்திட வேண்டும் என்கிற மாநில சுயாட்சிக்கான அடையாளமாக அமைந்துள்ளது தமிழ்த்தாய் வாழ்த்து. தமிழறிஞர் மறைமலை இலக்குவனார் அவர்கள் இதுகுறித்து கூடுதல் செய்தியாக பிற மாநிலங்களில் உள்ள தாய்மொழி வாழ்த்து குறித்து பதிவு செய்துள்ளார். ஒடிசா மாநிலத்தில் "பந்தே உத்கல் ஜன்னி' என்ற பாடலும், அசாம் மாநிலத்தில் "ஓ மு அப்னா தேஷ்'’ என்ற பாடலும், கர்நாடகத்தில் "ஜெயபாரத ஜனனிய தனுஜதே' என்ற பாடலும் அந்தந்த மாநில அரசுகளின் அங்கீகாரம் பெற்றவை. ஆந்திராவில் "மா தெலுகு தல்லகி', குஜராத்தில் "ஜெய்ஜெய் காரவி குஜராத்', மத்தியபிரதேசத்தில் "மேரா மத்யபிரதேஷ்', மகாராஷ்ட்ராவில் "ஜெய ஜெய மகாராஷ்ட்ர மாசா' என்ற பாடலும் மக்களால் பாடப்படுகின்றன என்று குறிப்பிட்டுள்ளார் மறைமலை இலக்குவனார். இந்தியா என்பது மாநில அரசுகளின் ஒன்றியம். எனவே அந்தந்த மாநிலங்களுக்கென மொழி, வாழ்த்து, சின்னம், மலர் உள்ளிட்டவை உண்டு. ஆனால், இந்திய மாநிலங்களில் தனித்துவம் பெற்றிருந்த ஜம்மு-காஷ்மீருக்கான தனிக்கொடியை நீக்கி, அதன் சிறப்பு அந்தஸ்திற்கான சட்டத்தையும் ரத்து செய்து, மற்ற மாநில உரிமைகளையும் அச்சுறுத்துகிறது மத்திய பா.ஜ.க. அரசு.