பி.மணி, வெள்ளக்கோவில், திருப்பூர் மாவட்டம்
மிருகபலத்துடன் மத்தியில் ஆட்சியைப் பிடித்த பா.ஜ.க., நாட்டையே ஆட்டி வைக்கிறது. அதே பலம் இருந்தும் ஆம்ஆத்மியால் டெல்லியில் எதுவும் செய்ய முடியவில்லையே?
பா.ஜ.க.விடம் மிருகபலத்துடன் அதிகார பலம் எனும் பற்களும் நகங்களும் இருப்பதால் பாய்ந்து கடித்து பிறாண்ட முடிகிறது. ஆம்ஆத்மி பல் பிடுங்கப்பட்டு நகம் வெட்டப்பட்ட அதிகாரமற்ற அரசு.
பா.ஜெயப்பிரகாஷ், பொள்ளாச்சி
மதுரையில் கட்டப் பட்ட ரவுண்டானா, திறப்பு விழா நாளிலேயே உடைந்து அமைச்சர் உள்ளிட்டவர்கள் தப்பியுள்ள நிகழ்வு பற்றி?
"விஞ்ஞானி'களான அமைச்சர் கள் புடைசூழ நடக்கும், "ராஜதந்திரி' முதல்வர் எடப்பாடியின் ஆட்சி என்பதால், ரவுண்டானா உடைந்து பள்ளம் விழுந்தும், யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என்பதை மட்டும் கவனியுங்கள்.
மேட்டுப்பாளையம் மனோகர், கோவை-14
விவாகரத்துக்கு காரணம் பெண்களுக்கு கல்வியும் செல்வமும் கிடைத்ததுதான் என்று ஆர்.எஸ்.எஸ்.தலைவர் மோகன் பகவத் கூறுகிறாரே?
விவாகரத்து வழக்குகளின் எண்ணிக்கை பெருகுவது சமூக அமைப்பில் உள்ள எல் ல
பி.மணி, வெள்ளக்கோவில், திருப்பூர் மாவட்டம்
மிருகபலத்துடன் மத்தியில் ஆட்சியைப் பிடித்த பா.ஜ.க., நாட்டையே ஆட்டி வைக்கிறது. அதே பலம் இருந்தும் ஆம்ஆத்மியால் டெல்லியில் எதுவும் செய்ய முடியவில்லையே?
பா.ஜ.க.விடம் மிருகபலத்துடன் அதிகார பலம் எனும் பற்களும் நகங்களும் இருப்பதால் பாய்ந்து கடித்து பிறாண்ட முடிகிறது. ஆம்ஆத்மி பல் பிடுங்கப்பட்டு நகம் வெட்டப்பட்ட அதிகாரமற்ற அரசு.
பா.ஜெயப்பிரகாஷ், பொள்ளாச்சி
மதுரையில் கட்டப் பட்ட ரவுண்டானா, திறப்பு விழா நாளிலேயே உடைந்து அமைச்சர் உள்ளிட்டவர்கள் தப்பியுள்ள நிகழ்வு பற்றி?
"விஞ்ஞானி'களான அமைச்சர் கள் புடைசூழ நடக்கும், "ராஜதந்திரி' முதல்வர் எடப்பாடியின் ஆட்சி என்பதால், ரவுண்டானா உடைந்து பள்ளம் விழுந்தும், யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என்பதை மட்டும் கவனியுங்கள்.
மேட்டுப்பாளையம் மனோகர், கோவை-14
விவாகரத்துக்கு காரணம் பெண்களுக்கு கல்வியும் செல்வமும் கிடைத்ததுதான் என்று ஆர்.எஸ்.எஸ்.தலைவர் மோகன் பகவத் கூறுகிறாரே?
விவாகரத்து வழக்குகளின் எண்ணிக்கை பெருகுவது சமூக அமைப்பில் உள்ள எல் லோருக்கும் கவலை தரக்கூடியதுதான். ஆனால், பெண் களால் மட்டுமே விவாகரத்துகள் நிகழ்வதுபோலவும், ஆண்களுக்கு இதில் தொடர்பில்லை என்பதுபோலவும் ஒரு தோற்றத்தை சித்தரிப்பது வழக் கமாக இருக்கிறது. குடும்ப வாழ்க்கை என்பது கணவன்- மனைவி இருவரும் சம அந்தஸ்துடன் ஒருவரையொருவர் புரிந்துகொண்டு வாழ்வது. இதைத் தான் கல்வி வலியுறுத்துகிறது. செல்வம் அந்த உரிமையை கொடுக் கிறது. காலங்காலமாக இவை இரண்டும் பெண் களுக்கு மறுக்கப்பட்டு வந்தது. அதற்குக் காரணம், ஆர்.எஸ்.எஸ். உயர்த்திப் பிடிக்கும் சனாதன வர்ணா சிரம தர்மம்தான். அதை பெரியார் போன்றவர்கள் போராட்டங்களாலும், அம்பேத்கர் அவர்கள் சட்டத்தாலும், கலைஞர் அதனை நடைமுறையிலும் மாற்றி அமைத்து பெண்களுக்கு கல்வியும் சொத்தும் கிடைக்கச் செய்தனர். ஆர்.எஸ்.எஸ். தலைவரால் அதனை ஏற்க முடியாமல் குற்றம் சுமத்துகிறார். அடிமைகளை விரும்புகிறவர் கள், உரிமைகளுக்கு எதிரான காரணங் களைத் தேடிக் கொண்டே இருப்பார் கள்.
எஸ்.அர்ஷத் ஃபயாஸ், குடியாத்தம்
சிவசேனா இந்துத்வா வை விட்டு விலகவில்லை. பா.ஜ.க.விடமிருந்து மட்டுமே விலகியுள்ளது என்கிறாரே உத்தவ்தாக்கரே?
புலிகளுக்கு கோடுகளும், சிறுத்தைகளுக்கு புள்ளிகளும் இயல்பானவை. அவற்றை மறைக்க முடியாது.
நித்திலா,தேவதானப்பட்டி.
வீட்டுக்காவலில் அடைக்கப்பட்டிருந்த ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா விடுதலை செய்யப்பட்டிருக் கிறாரே?
ஆகஸ்ட் மாதம் கைது செய்யப்பட்டு மார்ச் மாதத்தில் விடுதலையான பரூக்கின் வார்த்தை களில் நிதானம் தெரிகிறது. அரசியல் விமர்சனத்தை அவர் முன்னெடுக்க வில்லை. தன்னைப் போலவே சிறைப்படுத்தப்பட்ட மற்ற தலைவர்களின் விடுதலைக்காக காத்திருப்பதாகவும், அனைத்து தலைவர்களும் ஒன்றுபட்டு நின்று காஷ்மீருக்கான உரி மையை மீட்கவேண்டும் என்றும் சொல்லியிருக் கிறார் 82 வயது பரூக் அப்துல்லா. காஷ்மீர் சிங்கம் பாயப் போகிறதா, பதுங் கப்போகிறதா? பார்க்கலாம்.
_____________
தமிழி
அ.யாழினி பர்வதம், சென்னை-78
தஞ்சை சரஸ்வதி மகாலின் சிறப்பம்சங்கள் தமிழ்ப் பண்பாட்டை அறிய உதவுகின்றனவா?
தஞ்சை பெரியகோவில் தமிழ்ப் பண்பாட்டு கட்டடக்கலை சார்ந்த அடையாளமாக உலகை ஈர்ப்பதுபோலவே, சரஸ்வதி மகாலும் உலகளாவிய அறிஞர்களின் கவனத்தை ஈர்க்கக்கூடியது. சிதம்பரம் நடராசர் கோவிலில் கறையான்களுக்கு இரையாகிக்கொண்டிருந்த தேவாரம் ஓலைச்சுவடிகளை மீட்டவர் மாமன்னன் இராஜராஜ சோழன். அப்போதிருந்தே தஞ்சையை மையமாகக் கொண்டு ஆட்சி செய்தவர்களுக்கு தமிழரின் அறிவுச் செல்வங்களைப் பாதுகாக்கும் ஆர்வமும் முனைப்பும் அதிகரித்தது. சோழர்கள் காலத்தில் தொடங்கிய இந்த ஓலைச்சுவடிகள் சேமிப்பு பின்னர் தஞ்சையை ஆட்சி செய்த நாயக்க மன்னர்களாலும், அதன்பின்னர் ஆட்சி செய்த மராட்டியர்களாலும் பின்பற்றப்பட்டது. அப்படி உருவானதுதான் தஞ்சையில் உள்ள சரசுவதி மகால் நூலகம். கல்வெட்டுகளில் உள்ள குறிப்புகளின்படி சுரசுவதி பண்டாரகம், புத்தகப் பண்டாரகம் என்று தொடக்கத்தில் பெயர் வைத்துள்ளனர். இங்கே வேலை செய்தவர்களை சரசுவதி பண்டாரிகள் என்றும் அழைத்துள்ளனர். நாயக்கர்கள் காலத்தில் ஒரு கட்டமைப்புக்குள் வந்த நூலகம், மராட்டியர்கள் ஆட்சியில் சிறப்பாகப் பராமரிக்கப்பட்டது. வரலாறு, மருத்துவம், அறிவியல், இசை, நாட்டியம், சிற்பம், சமயம், தத்துவம் ஆகிய துறைகள் சார்ந்த சுவடிகளும், நூல்களும், ஓவியங்களும் சரசுவதி மகாலில் சேகரித்து வைக்கப்பட்டுள்ளன. தமிழ்ப் பண்பாட்டை இவற்றிலிருந்து முழுமையாக அறிய முடியுமா என்பதைவிட, தமிழ்நாட்டில் நடைபெற்ற ஆட்சிகளினால் என் னென்ன தாக்கங்கள் ஏற்பட்டன, எந்தெந்த மொழிகள் மேலோங் கின என்பதை சரசுவதி மகால் நூலகம் வாயிலாக அறிந்துகொள்ள முடியும். நாயக்கர்கள், மராட்டியர்கள் ஆட்சிக்காலத்தில் அதிகம் சேகரிக்கப்பட்டவை சமஸ்கிருத ஓலைச்சுவடிகள்தான். அதனை யடுத்தே தமிழ், தெலுங்கு சுவடிகளின் எண்ணிக்கை இருந்தன. நூலகத்தின் மீது அதிக அக்கறை செலுத்தியவர் மராட்டிய மன்னரான இரண்டாம் சரபோஜி. அவர் காசிக்கு சென்றபோது ஏராளமான சமஸ்கிருத சுவடிகளைக் கொண்டு வந்து சரசுவதி மகாலில் சேர்த்துள்ளார். அதேநேரத்தில், சீவகசிந்தாமணி, திருமந்திரம் உள்ளிட்ட பழந்தமிழ் நூல்களின் ஓலைச்சுவடிகளும் இங்கு சேகரிக்கப்பட்டுள்ளன. பிரிட்டிஷ் ஆட்சியாளர்களிடம் இந்த நூலகத்தை மராட்டிய மன்னர்கள் ஒப்படைத்தபிறகு, அவர்களும் ஒரு குழு அமைத்து இதனைப் பாதுகாத்த துடன் ஐரோப்பிய மொழிகளான ஆங்கிலம், இலத்தீன், பிரெஞ்சு நூல்களை இடம்பெறச் செய்தனர்.