மதிராஜா திலகர், சின்னபுங்கனேரி

எடப்பாடியின் மூன்றாண்டு கால ஆட்சியில் நிறைகள் அதிகமா? குறைகள் அதிகமா?

நிறைகள் குறைந்தும், குறைகள் நிறைந்தும் கோளாறு கள் அதிகமான ஆட்சி "மேலோ ரின்' தயவுடன் மூன்றாண்டு களைக் கடந்திருக்கிறது.

அ.குணசேகரன், புவனகிரி

Advertisment

சீனஅதிபர் ஜின்பிங் தமி ழகத்திற்கு வந்ததற்கும், அமெ ரிக்க அதிபர் டிரம்ப் குஜராத் வந்ததற்கும் என்ன வேறுபாடு?

சென்னையிலிருந்து மாமல்லபுரம் சென்று திரும்பிய சீனஅதிபர் வழிநெடுக இருந்த மென்பொருள் மையங்கள் (ஐ.டி. பார்க்), அடுக்குமாடி குடியிருப்பு கள், சாதாரண வீடுகள் எல்லா வற்றையும் பார்த்தபடியே போனார். குஜராத் சென்ற அமெ ரிக்க அதிபருக்காக, அங்குள்ள குடிசைப் பகுதிகளை மறைப்ப தற்கு சீனப்பெருஞ்சுவர் போல நெடுஞ்சுவர் கட்டவேண்டி யிருந்தது.

dd

Advertisment

நித்திலா, தேவதானப்பட்டி

கருவுற்றிருக்கும் காதலியைத் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்திருக் கிறாரே இங்கிலாந்து பிரதமர்?

இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன், தனது பெண் நண்பர் கேரி சைமன்ட்ஸ் மூல மாக விரைவில் குழந்தையை எதிர்பார்ப்பதாகக் கூறி, அதனை யொட்டி அவரை முறைப்படி திருமணம் செய்துகொள்வதற் கான நிச்சயதார்த்தமும் நடந்துள் ளது. அமெரிக்கா-இங்கிலாந்து போன்ற மேலைநாடுகளில் இத்தகைய உறவுகள் அங்குள்ள மக்களிடம் சகஜம் என்றாலும், தங்களை ஆட்சி செய்பவர்கள் தங்கள் குடும்ப விவகாரங்களில் ஒளிவு மறைவில்லாமல் இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு உண்டு. அதற்கேற்ப, ஆட்சியாளர்கள் உண்மைகளை வெளிப்படுத்துகிறார்கள். திருமணமானவரா, மனைவி இருக் கிறாரா என்பது உள்பட எதுவும் அந் நாட்டை ஆள்பவர்களால் வேட்புமனு விலும் மறைக்கப்படுவதில்லை. வெளியிடங்களிலும் மறைக்க முடிவதில்லை.

கே.கே.பாலசுப்ரமணியன், குனியமுத்தூர், கோவை-8

தேர்தல் வியூக நிபுணர் என நம்பப்படுகின்ற பிரசாந்த் கிஷோர் மீது மோசடி வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதே?

ஐடியாவை திருடிவிட்டார் என் பதுதான் அவர் மீதான குற்றச்சாட்டு. ஐடியாக்கள் திருடு போகும். அடிப் படைக் கொள்கைகளையும் அதன் மூலம் கிடைக்கும் மக்கள் செல்வாக் கையும் எவரும் களவாடிவிட முடி யாது என்பதை பிரசாந்த் கிஷோரை நம்புகிறவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.

கே.ஆர்.ஜி.ஸ்ரீராமன், பெங்களூரு-77

தமிழகத்தில் நல்லாசிரியர் விருது பெற்ற இரண்டு ஆசிரியர்கள், பாலியல் குற்றத்துக்காக 5 ஆண்டு சிறைத் தண்டனை பெற்றுள்ளார்களே?

அடப்போங்க சார்.. உச்சநீதி மன்றம் வரை உறுதி செய்யப்பட்ட சொத்துக்குவிப்பு ஊழல் வழக்கின் ஏ1-க்கு அரசு செலவில் பிரம்மாண்ட சமாதி கட்டி, பாரத் ரத்னா விருது வழங்கவேண்டும் எனத் தீர்மானம் போடுகிற மண் சார் இந்த தமிழ்நாடு.

மல்லிகா அன்பழகன், சென்னை-78

30 பொறியியல் கல்லூரிகள் கலைக்கல்லூரிகளாக மாறப் போகின்றனவாமே?

"தொழில்'’ படிப்புகள் இப்போது ‘வியாபாரம்’ ஆவதில்லை. அதனால் "கலை', "விலை'’ போகுமா எனக் கணக்குப் பண்ணுகிறார்கள் கல்வி வணிகத்தினர்.

____________

தமிழி

அயன்புரம் த.சத்தியநாராயணன், சென்னை-72

dd

பழந்தமிழர்கள் எந்த அளவுக்கு பெண்களை மதித்துப் போற்றினார்கள்?

அக்காலத்து சமூகம், தாய்வழிச் சமூகமாகவே இருந்துள்ளது என்கிறார்கள் வரலாற்று ஆய்வாளர்கள். அதாவது, பெண்களுக்கே சமூகத்தில் முதன்மையான இடம். பின்னர் சொத்துக்களைப் பங்கிட்டுக் கொள்ளும் நிலவுடைமைச் சமுதாயம் உருவானபோது, பெண்களும் ஆண்களின் உடைமைகளாக்கப்பட்டனர். கருவைச் சுமந்து, பிள்ளைகள் பெற்றுக்கொள்ளும் தன்மை பெண்களுக்கு இருப்பதால், ரத்த பந்தங்களையும் அதனடிப்படையிலான சொத்துகளையும் பாதுகாப்பதற்காக தாய்வழிச் சமூகத்தை மாற்றி, ஆண்வழிச் சமூகமாக ஆக்கினார்கள். வரலாற்றுப் போக்கில் நடந்த இந்த மாற்றம் தமிழ் நிலத்திலும் உருவானது என்றாலும், பெண்களுக்குரிய மதிப்பு பழந்தமிழர் சமூகத்தில் நிறைந்திருப்பதை தாய்த்தெய்வ வழிபாட்டின் அடிப்படையில் காண முடியும். கீழடியில் நடத்தப்பட்ட ஆய்வுகளில் தற்கால வழிபாட்டு முறைகளுக்கான ஆதாரங்கள் இதுவரை கிடைக்கவில்லை என்றாலும், தாய்த் தெய்வ வழிபாடு என்பது பண்டைய தமிழர்களிடம் இருந்தது என்பதற்கு அரிக்கமேடு, ஆதிச்சநல்லூர், பேரையூர் உள்பட பல இடங்களில் கிடைத்துள்ள தொன்மங்கள் ஆதாரங்களாகியுள்ளன. தொல்தமிழர் நாகரிகத்தின் நீட்சியான சிந்துசமவெளி நாகரிகம் தொடர்பான அகழாய்வுகளிலும் தாய்த்தெய்வ வழிபாட்டிற்கான சான்றுகள் கிடைத்துள்ளன. தமிழர்களின் தாய்த்தெய்வ வழிபாட்டின் தொடர்ச்சியாக அமைந்த சமூகப் படிவங்களான காடுகிழாள்-கொற்றவை-காளி போன்றவற்றை இலக்கியங்கள் நமக்கு சுட்டிக்காட்டுகின்றன. ஐந்து வகை நிலங்களில் கடுமையான பகுதியான பாலை நிலத்தின் தெய்வமாக பெண் தெய்வமான கொற்றவையே வணங்கப்பட்டுள்ளது. (பிற்காலத்தில் கொற்றவையை, துர்க்கையாக்கி கோவிலுக்குள் வைத்துவிட்டார்கள். தமிழகத்தில் புகழ் பெற்று விளங்கும் சைவத் திருத்தலங்களில் உள்ள துர்க்கை சன்னதி பலவற்றின் மூலப்பெயர் கொற்றவையாகவே இருக்கும் என்கிறார்கள் ஆய்வாளர்கள்) சைவ சித்தாந்தப் பெருமன்றத்தினை வழிநடத்தும் முனைவர் நல்லூர் சரவணன், ""தாய்வழிச் சமூகத்தின் தேர்ச்சியான பிள்ளை வடிவம்தான் முருகன் எனும் ஆளுமை'' என்கிறார். தாய்வழியின் தொடர்ச்சி என்பது சேய் என்பதால், முருகனை "சேயோன்' என்று அழைத்து, குறிஞ்சி நிலத் தலைவனாக- கடவுளாக பழந்தமிழர்கள் கொண்டாடி யிருப்பதை அவர் சுட்டிக்காட்டுகிறார். தாயின்றி சேய் இல்லை என்பதால், தமிழர்கள் வழிபாட்டில் தாய்த்தெய்வம் முதன்மைபெற்று, அதன் நீட்சியாக இலக்கியத்தில் பெண்பாற்புலவர்கள் இடம் பெற்று, அன்றைய ஆட்சித்துறை வரை அவர்கள் மதிப்பும் முக்கியத்துவமும் பெற்றிருந்ததை அறிய முடிகிறது.