மாவலி பதில்கள்

mm

சங்கரசுப்பிரமணியன், திருநெல்வேலி

பெட்டிக்கடை முதல் பெரிய மால் கள் வரை திணறுகிற நாட்டில் யார்தான் கொண்டாட்டமாக இருக்கிறார்கள்?

விதவிதமாக போஸ் தரும் நித்தி யானந்தாவும் ஜக்கி வாசுதேவும்.

nm

நித்திலா, தேவதானப்பட்டி

பிறந்தநாள் காணும் மு.க.ஸ்டாலின் சாதித்தது என்ன? சறுக்கியது எங்கே?

கலைஞர் இறந்தபோது, “"உங்களை ஒரு முறை அப்பா என்று அழைக்கட்டுமா?' என இரங்கல் அறிக்கை வெளியிட்டார் ஸ்டாலின். தி.மு.க.வின் மற்ற உடன் பிறப்புகளைப் போலவே தன்னையும் கலைஞரின் தொண்டனாகக் கருதி செயல்பட்டவர் அவர். கலை ஞரின் மகன் என்பதால் அவருக்கு பதவிகள் கிடைத்தன. ஆனால், அதிகாரங்கள் கிடைக்கவில்லை. ஸ்டாலினுக்கு கலைஞர் தேர்வு வைத்துக்கொண்டே இருந்தார். ஆனால், கடைசிவரை "டிகிரி' தரவில்லை. கலைஞரின் மறைவுக்குப் பிறகு, கலைஞரின் குடும்பத்தினரும், கட்சி யின் மூத்தவர்களும் ஸ்டாலினுக்கு எதிராக செயல் படுவார்கள் என பல முகாம்களும் எதிர்பார்த்த

சங்கரசுப்பிரமணியன், திருநெல்வேலி

பெட்டிக்கடை முதல் பெரிய மால் கள் வரை திணறுகிற நாட்டில் யார்தான் கொண்டாட்டமாக இருக்கிறார்கள்?

விதவிதமாக போஸ் தரும் நித்தி யானந்தாவும் ஜக்கி வாசுதேவும்.

nm

நித்திலா, தேவதானப்பட்டி

பிறந்தநாள் காணும் மு.க.ஸ்டாலின் சாதித்தது என்ன? சறுக்கியது எங்கே?

கலைஞர் இறந்தபோது, “"உங்களை ஒரு முறை அப்பா என்று அழைக்கட்டுமா?' என இரங்கல் அறிக்கை வெளியிட்டார் ஸ்டாலின். தி.மு.க.வின் மற்ற உடன் பிறப்புகளைப் போலவே தன்னையும் கலைஞரின் தொண்டனாகக் கருதி செயல்பட்டவர் அவர். கலை ஞரின் மகன் என்பதால் அவருக்கு பதவிகள் கிடைத்தன. ஆனால், அதிகாரங்கள் கிடைக்கவில்லை. ஸ்டாலினுக்கு கலைஞர் தேர்வு வைத்துக்கொண்டே இருந்தார். ஆனால், கடைசிவரை "டிகிரி' தரவில்லை. கலைஞரின் மறைவுக்குப் பிறகு, கலைஞரின் குடும்பத்தினரும், கட்சி யின் மூத்தவர்களும் ஸ்டாலினுக்கு எதிராக செயல் படுவார்கள் என பல முகாம்களும் எதிர்பார்த்த நிலை யில், சிறு சலசலப்பும் இல்லாமல் கட்சியின் பொதுக்குழு மூலம் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். நாடாளுமன்றத் தேர்தலில் இந்தியாவுக்கே வழிகாட்டும் வகையில் கூட்டணி அமைத்து, தொகுதிகளைப் பங்கீடு செய்து மத்திய-மாநில ஆளுங்கட்சிகளின் கூட் டணியைத் தமிழகத்தில் தோற்கடித்தார். ஊரக உள்ளாட்சித் தேர்தலில் தமிழக அரசியல் வரலாற்றில் இல்லாத அளவுக்கு எதிர்க்கட்சியான தி.மு.க.வுக்கு வெற்றி யைப் பெற்றுத்தந்தார். ஆந்திரா, மகா ராஷ்ட்ரா, ஜார்கண்ட் என பிற மாநில முதல்வர்களின் பதவியேற்பு விழாவில் முதல் மரியாதை பெற்று தன் தலைமைத் துவத்தை நிரூபித்தார். இவையெல்லாம், கலைஞருக்குப் பிறகு தி.மு.க.வை வளர்த் துள்ள மு.க.ஸ்டாலினின் சாதனைகள். இவற்றைக் கடந்து, அவரிடம் மக்கள் எதிர் பார்ப்பது, தமிழ்நாட்டின் ஆட்சி மாற்றத்தை! 21 தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலின்போது அதற்கான வாக்குறுதியை அளித்து, அதிக இடங் களில் வென்றாலும் ஆட்சியைப் பிடிக்கும் எண்ணிக்கையைத் தொட முடியாமல் போனது சறுக்கல். சறுக்கல்களையும் கடந்து சாதனை படைத்த கலைஞரின் உழைப்பும் வியூகமும்தான் ஸ்டாலினுக்கு கிடைக்க வேண்டிய பிறந்தநாள் பரிசு.

வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு

"தமிழகத்தில் 3 ஆண்டுகளில் 300 ஆண்டுக்கான வளர்ச்சித் திட்டங்கள்' என்று அமைச்சர் ஆர்.வி. உதயகுமார் பெருமை அடைந்துள்ளாரே?

அதாவது, "புரட்சித்தலைவி' ஜெயலலிதா திறமையில்லாதவர். "விவ சாயி' எடப்பாடி பழனிச்சாமி திறமை யானவர் என்று ஜெ. பிறந்தநாள் சமயத்தில் சொல்லியிருக்கிறார் அமைச்சர்.

அ.பா.ராசன், திருமங்கலம், மதுரை

"எத்தனை அழுத்தங்கள் வந்தாலும் குடியுரிமை திருத்தச் சட்டத்தை வாபஸ் பெறப்போவதில்லை' என்று பிரதமர் மோடி சொல்வது துணிவா, ஆணவமா, சர்வாதிகாரமா?

பா.ஜ.க.வினர் பார்வையில் துணிவு. எதிர்க்கட்சிகள் பார்வையில் ஆணவம். செயல்பாட்டு அடிப்படையில் சர்வாதி காரம். விளைவு? தலைநகரம் டெல்லியில் தோண்டப்படும் ஜனநாயகத்திற்கான புதைகுழி.

___________

தமிழி

டி.ஜெய்சிங், கோயம்புத்தூர்

கீழடி அகழாய்வு ஆராய்ச்சி 5-ஆம் கட்டம் முடிந்து 6-ஆம் கட்ட ஆய்வு முதல்வர் எடப்பாடியால் தொடங்கப்பட்டுள்ளது? இதில் புதிதாக என்னென்ன கண்டெடுக்கப்பட வாய்ப்புகள் உள்ளன?

mm

சங்க காலத் தமிழரின் வைகை ஆற்று நாகரிகம் தொடர் பான ஆதாரங்கள் பலவும் கீழடி அகழாய்வில் கிடைத்த காரணத்தால், அது கி.மு. ஆறாம் நூற்றாண்டைச் சேர்ந்தது என்பது கண்டறியப்பட்டுள்ளது. தற்போதைய அகழாய்வில் கீழடி யில் முதன்முதலாக முதுமக்கள் தாழி ஒன்று கண்டெடுக்கப்பட் டுள்ளது. மதுரைக்கு அருகேயுள்ள கீழடியில் கிடைத்த ஆவணங் கள் போலவே, அதே மதுரைக்குப் பக்கத்தில் உள்ள பேரையூர் மலையடிவாரத்தில் அண்மையில் தொல்லியல் ஆய்வாளர் முனீஸ்வரனும் அவரது குழுவினரும் மேற்கொண்ட தொல் லியல் ஆய்வில் மூன்றாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட முதுமக்கள் தாழிகள் முப்பதுக்கும் அதிகமாகக் கண்டெ டுக்கப்பட்டுள்ளன. இறந்தபிறகு, மனிதர்கள் மீண்டும் தாயின் கருவறைக்குள் செல்வதாக நம்பியதால், தாழிகளில் கருவறை போலவே குடைந்த பகுதிகளும் காணப்படு கின்றன. தாய் தெய்வ வழிபாட்டுக்கான குறியீடுகளும் பானைகளில் உள்ளன என்கிறார் ஆய்வாளர் முனீஸ்வரன். பேரையூரில் நடத்தப்பட்ட ஆய்வில் பெருங்கற்காலத்தைச் சேர்ந்த இடுகாடு கண்டறியப்பட்டுள்ளது. அதுபோல அப்போதே பயன்படுத்தப்பட்ட இரும்புப் பொருட்களும் கிடைத்துள்ளன. எழுத்தறிவு குறித்த ஆதாரங்களோ, எழுத்து வடிவங்களோ தொடர்ச்சியான ஆய்வில் கிடைக்குமானால், தமிழர்களின் பண்பாட்டு நாகரிக வரலாறு மேலும் பல நூற்றாண்டுகள் பழமையானதாக அறியப்படும். கீழடி ஆய்வில் மத்திய அரசு அக்கறை செலுத்தாத நிலையில், மாநில தொல்லியல்துறை அதனை முன்னெடுத்தது. கீழடியில் அருங்காட்சியகம் அமைப்பதற்கு முதற்கட்ட நிதியும் ஒதுக்கப்பட்டுள்ளது. அதுபோலவே பேரையூர் உள்ளிட்ட மற்ற பகுதிகளிலும் முறையான தொல்லியல் ஆய்வுகள் நடத்தப்பட வேண்டும்.

nkn290220
இதையும் படியுங்கள்
Subscribe