மா.சந்திரசேகர், மேட்டுமகாதானபுரம்
"மத்தியபிரதேச காங்கிரஸ் அரசு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டால் நானே வீதியில் இறங்கிப் போராடுவேன்' என்கிறாரே அதே கட்சியின் ஜோதிராதித்ய சிந்தியா?
ஜூனியர் சிந்தியா எதிர்பார்த்த முதல்வர் பதவி, சீனியர் கமல்நாத் வசம் சென்றுவிட்டது. அதனால் சொந்தக் கட்சியின் ஆட்சிக்கெதிராகவே போராடவும் அதற்கு மக்கள் பிரச்சினைகளை காரணமாக காட்டவும் தயாராகிறார் சிந்தியா. பா.ஜ.க.வுக்கு காங்கிரஸ் எதிரி. காங்கிரசுக்கு காங் கிரஸ்காரர்களே எதிரி. இத்தனை படுதோல்வி களுக்குப் பிறகும் நிலைமை மாறவேயில்லை.
ஜெயசீலன், அயனாவரம், சென்னை
டெல்லியில் இரண்டு பெரிய கட்சிகளை வீழ்த்தி கெஜ்ரிவால் ஜெயித்ததுபோல தமிழ்நாட் டில் ஜெயித்து ஆட்சியைப் பிடித்துவிடலாம் என ரஜினி நினைப்பதில் தவறென்ன?
பா.ஜ.க.-காங்கிரஸ் இரண்டு கட்சிகளுக்கும் மாற்றாக ஆம்ஆத்மி என்ற தனிக் கட்சியை ஆரம்பித்தார் கெஜ்ரிவால். அதன்பிறகு, ஊழலை எதிர்ப்பதும்-வளர்ச்சித் திட்டங்களை நிறைவேற்று வதுமே தனது அரசியல் என்பதை முன்னிறுத்தி வாக
மா.சந்திரசேகர், மேட்டுமகாதானபுரம்
"மத்தியபிரதேச காங்கிரஸ் அரசு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டால் நானே வீதியில் இறங்கிப் போராடுவேன்' என்கிறாரே அதே கட்சியின் ஜோதிராதித்ய சிந்தியா?
ஜூனியர் சிந்தியா எதிர்பார்த்த முதல்வர் பதவி, சீனியர் கமல்நாத் வசம் சென்றுவிட்டது. அதனால் சொந்தக் கட்சியின் ஆட்சிக்கெதிராகவே போராடவும் அதற்கு மக்கள் பிரச்சினைகளை காரணமாக காட்டவும் தயாராகிறார் சிந்தியா. பா.ஜ.க.வுக்கு காங்கிரஸ் எதிரி. காங்கிரசுக்கு காங் கிரஸ்காரர்களே எதிரி. இத்தனை படுதோல்வி களுக்குப் பிறகும் நிலைமை மாறவேயில்லை.
ஜெயசீலன், அயனாவரம், சென்னை
டெல்லியில் இரண்டு பெரிய கட்சிகளை வீழ்த்தி கெஜ்ரிவால் ஜெயித்ததுபோல தமிழ்நாட் டில் ஜெயித்து ஆட்சியைப் பிடித்துவிடலாம் என ரஜினி நினைப்பதில் தவறென்ன?
பா.ஜ.க.-காங்கிரஸ் இரண்டு கட்சிகளுக்கும் மாற்றாக ஆம்ஆத்மி என்ற தனிக் கட்சியை ஆரம்பித்தார் கெஜ்ரிவால். அதன்பிறகு, ஊழலை எதிர்ப்பதும்-வளர்ச்சித் திட்டங்களை நிறைவேற்று வதுமே தனது அரசியல் என்பதை முன்னிறுத்தி வாக்கு கேட்டு, மூன்று முறை முதல்வ ராகப் பதவியேற்றுவிட்டார். ஆன்மிக அரசியல் என்ற கொள்கையை முன்கூட்டியே அறிவித்துவிட்ட ரஜினி, தனிக்கட்சி தொடங்கப் போவதாக அறிவித்து மூன்றாண்டுகள் ஆகப்போகிறது.
ஹரிணி, புதுப்பேட்டை, சென்னை
வாழ்க்கை என்பது என்ன?
தளராத நம்பிக்கை. ஆஸ்திரேலிய நாட்டின் பிரிஸ்பேன் நகரில் வசிக்கின்ற 9-வயது சிறுவன் குவாடன் பேல்ஸ், போதிய உடல் வளர்ச்சி இல்லாதவர். பள்ளியில் சக மாணவர்களின் கிண்டல் கேலியால் மனம் உடைந்து, தற்கொலை செய்துகொள்ளும் முடிவுடன், தூக்குக் கயிறு கேட்டு தன் தாயிடம் கெஞ்சிக் கதறும் காட்சி இணைய தளத்தில் பரவியது. பலரது நெஞ்சையும் உலுக்கிய இந்த வீடியோவை பிரபலங்களும் பார்த்தனர். இதையடுத்து, சிறுவனுக்கு ஆதரவாக பல நாடுகளிலிருந்தும் குரல்கள் ஒலித்தன. ஆஸ்திரேலிய ரக்பி விளையாட்டு சாம்பியன்ஷிப் போட்டியைத் தொடங்கி வைக்கும் வகையில் "ஆல் ஸ்டார்ஸ்' அணியின் கேப்டன் ஜோயல் தாம்சனின் விரல்களை ஒரு கையால் பிடித்துக்கொண்டு இன்னொரு கையால் ரக்பி பந்தையும் ஏந்தியபடி மைதானத்துக்கு குவாடன் வந்தபோது எழுந்த கரவொலி, வாழ்க்கையின் அர்த்தத்தை உணர்த்தியது. குவாடன் போலவே வளர்ச்சி குன்றிய ஹாலிவுட் நடிகர் பிராட் வில்லியம்சும் சிறுவனுக்காக 3 லட்சம் டாலருக்கு மேல் நிதி சேர்த்திருக்கிறார்.
கே.ஆர்.ஜி.ஸ்ரீராமன், பெங்களூரு
ஓ.பி.எஸ். உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ.க்களின் தகுதி நீக்கம் குறித்து சபாநாயகரே முடிவெடுக்கலாம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதே?
11 எம்.எல்.ஏ.க்கள் விவகாரத்தில் எப்போது முடிவெடுப்பது என்பதை வலியுறுத்தும் அதிகாரம் உச்சநீதிமன்றத்திடம் இல்லை. ராதாபுரம் தொகுதி மறுவாக்கு எண்ணிக் கைக்குப் பிறகு யார் எம்.எல்.ஏ. என்பதை அறிவிப்பதிலும் உச்சநீதிமன்றம் வேகமாக இல்லை.
______________
தமிழி
சி.கார்த்திகேயன், சாத்தூர்.
சங்கம் வைத்து தமிழ் வளர்த்த தமிழகத்தில் பிற மொழிகளும் மதிக்கப்படுகிறதே?
தமிழ் நமக்கு தாய்மொழி. திராவிட மொழிக் குடும்பத்தில் உள்ள மொழிகளுக்கெல்லாம் தாயாக உள்ள மொழி. தாய் எப்படி தன் நலத்தைவிட தன் குழந்தைகள் நலத்தைக் காப்பதில் அக்கறை செலுத்துவாரோ அது போல தமிழ் மொழியும் தன் நிலத்தில் பிற மொழிகளுக்கும் இடம் தருகிறது. காக்கைக் கூட்டில் வேறு பறவைகள் முட்டையிட்டாலும் காகம் அடை காப்பதுபோல, திராவிட மொழிக் குடும்பத்தைச் சாராத மொழிகளைப் பேசுவோரும் தமிழ்நாட்டில் வசதியாக வாழ்ந்து வருகின்றனர். அதே நேரத்தில், மத்திய அரசாங்கத்தின் துணையோடு ஆதிக்கம் செலுத்தும் இந்தியும் சமஸ்கிருதமும் தங்கள் குடும்பத்தைச் சேர்ந்த மொழிகள் பலவற்றையும் அழித்து வருகின்றன. ராஜஸ்தானி, போஜ்புரி, சந்தாலி, மைதிலி உள்ளிட்ட பல மொழிகள் இந்தி ஆதிக்கத்தால் பாதிக்கப்பட்டு, தங்கள் உரிமைக்காகப் போராடி வருகின்றன. வட மாநிலங்களில் வாழும் பழங்குடி மக்கள் பேசும் மொழிகளின் நிலை இன்னும் பரிதாபம். ஐ.நா.அவையின் யுனெஸ்கோ நிறுவனத்தால் வெளியிடப்பட்ட, அழிவின் விளிம்பில் உள்ள மொழிகளின் பட்டியலில் உள்ள ஒரு மொழி, "அசுர்.' பழங்குடி மக்கள் நிறைந்த ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள லட்டேகார்-கும்லா மாவட்டங்களில் வாழும் பழங்குடி யினர் பேசும் "அசுர்' மொழிக்கு எழுத்து வடிவம் கிடையாது. ஒலி வடிவம்தான். இந்த மொழி பேசும் மக்களின் எண்ணிக்கை 22ஆயிரம் பேர். அதிலும் 8000பேருக்கு மட்டும்தான் "அசுர்' மொழி நன்றாகத் தெரிந்திருக்கிறது. மற்றவர்களை ஜார்கண்ட் மாநில அலுவல் மொழியான இந்தி ஈர்த்துவிட்டது. அதனால், "அசுர்' முற்றிலும் அழிந்து போகும் நிலைமையை உணர்ந்த பழங்குடி இனப்பெண்மணியான சுஷ்மா "அசுர்' என்பவர், தாய்மொழியைக் காக்கும் அமைப்பை உருவாக்கினார். மக்களிடம் மொழி பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக நடமாடும் வானொலியை உருவாக்கினார். "அசுர்' மொழியில் பாட்டு, பேச்சு ஆகியவற்றை அந்த மக்கள் வாழும் இடங்களில் நடமாடும் வானொலி மூலம் ஒலிபரப்பி வருகிறார். அதற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. "அசுர்' மக்களே வானொலி நிகழ்ச்சிகளில் பங்கேற்க ஆர்வம் காட்டுகின்றனர். ஆஸ்ட்ரோஆசியாடிக் மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தது "அசுர்' மொழி என்கிறார்கள் வல்லுநர்கள். இதில் திராவிட மொழிகளிடமிருந்து கடன்பெற்ற நிறைய சொற்கள் இருப்பதாகவும் சொல்கிறார்கள். "அசுர்' போல ஆகாமல் தமிழ் தன்னையும் காத்து, தன்னை அண்டி வந்தவர்களையும் காத்து வருகிறது.