சி.கார்த்திகேயன், சாத்தூர்

காஞ்சிபுரம் -தஞ்சாவூர் என்ன வித்தியாசம்?

காஞ்சி மூத்தது, தஞ்சை இளையது. இரண்டிலும் சமஸ்கிருத ஆதிக்கம் நிலவியது. தமிழை "நீச பாஷை' என்ற குரல் காஞ்சியிலிருந்து கேட்டது. அந்தத் தமிழை இறைவன் காதில் ஒலிக்கும்படி செய்துள்ளது தஞ்சை.

சங்கரசுப்பிரமணியன், திருநெல்வேலி

Advertisment

காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தபோது அமைதியாக இருந்தவர்கள், பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடத்தில் ராமர் கோவில் கட்ட உச்சநீதிமன்றம் அனுமதித்து உத்தரவிட்டபோது அமைதியாக இருந் தவர்கள் குடியுரிமை திருத்தச் சட்டம் என்.ஆர்.சி., என்.பி.ஆர். இவற்றை எதிர்த்து தீவிரமாகப் போராடுகிறார்களே?

gg

காஷ்மீரில் இன்னமும் பரூக் அப்துல்லா, உமர் அப்துல்லா, மெகபூபா உள்ளிட்ட முன்னாள் முதல்வர்கள் வீட்டுச் சிறையில் அடைக்கப்பட்டிருப்பதுடன், அவர்கள் மீது பொது பாது காப்பு சட்டமும் பாய்ந்துள்ளது. இதனை நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கண்டித்துள்ளன. ராமர்கோவில் விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்புக்குப்பின், புதிய மசூதி கட்ட ஒதுக்கப்பட்ட இடம் குறித்து அதிருப்தி ஏற்பட்டுள் ளது. அதே நேரத்தில், தீர்ப்பு பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. குடியுரிமை திருத்தச் சட்டம் என்பது மதரீதியாக நாட்டைப் பிளவுபடுத்துவது. அதற்கு துணையாக என்.ஆர்.சி., என்.பி.ஆர். ஆகியவை கொண்டு வரப்படுகின்றன என்பதை முஸ்லிம்கள் மட்டுமல்லாமல், அனைத்து மதத்தினரும் உணர்ந்திருக்கிறார்கள். முன்னாள் குடியரசுத்தலைவர் குடும்பம், முன்னாள் ராணுவ வீரர் ஆகியோருக்கு அசாமில் நேர்ந்த கதியை அறிந்திருக்கிறார்கள். அதனால்தான், தமிழகத்தில் தி.மு.க. கூட்டணி நடத்தும் கையெழுத்து இயக்கத்திற்கு இந்து, முஸ்லிம் என்ற பேதமின்றி அனைத்துத் தரப்பினரும் ஆதரவு தந்து கையெழுத்திடுகிறார்கள்.

மு.ரா.பாலாஜி, கோலார்தங்கவயல்

போயஸ் கார்டனில் உள்ள "வேதா இல்லம்' எப்போது கண்காட்சியாகும்?

‘கண்காட்சியானால், 75 நாள் ‘கால்’ காட்சி பற்றிய பல உண்மைகள் தெரிந்துவிடுமே!

கே.ஆர்.ஜி.ஸ்ரீராமன், பெங்களூரு 77

அவ்வையின் "பூமி திருத்தி உண்' என்ற ஆத்திசூடியை மேற்கோள் காட்டி பட்ஜெட் தாக்கல் செய்திருக்கிறாரே நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்?

அவ்வை பாடிய தமிழ்நாட்டில் காவிரிப் படுகையை பெட்ரோலிய மண்டலமாகத் திருத்த நினைக்கிறது நிதிஅமைச்சரை உள்ளடக்கிய பா.ஜ.க அமைச்சரவை. அ.தி.மு.க. அரசு தன் வாக்குறுதி யை நிறைவேற்றுமா என பார்க்கலாம்.

பா.ஜெயப்பிரகாஷ், பொள்ளாச்சி

திருமணமாகி இரண்டே வாரத்தில் விவாக ரத்து பெற்றிருக்கிறார்களே ஹாலிவுட் நடிகை பமீலா -தயாரிப்பாளர் ஜான்பீட்டர்ஸ் தம்பதி?

வாழ்க்கை என்பது சினிமா சீன் அல்ல என்பதை அத்தனை சீக்கிரமாக உணர்ந்திருப்பார் களோ!

பி.மணி, வெள்ளக்கோவில்

கொரோனா வைரஸ் தாக்கப்பட்டவர்கள் சாமானியர்களாக இருந்தாலும் அவர்களுக்கு அரசு மரியாதை கிடைக்கிறதே?

பதவிக்காக டெல்லியிடம் கும்பிடு போடும் ஆட்சியாளர்களை ராஜதந்திரிகள் என்பதும், வைரஸ் தாக்கியிருக்குமோ என்ற மரணபீதியுடன் கையாளப்படுவதை அரசு மரியாதை என்று பார்ப்பதும் தமிழ்நாட்டின் மாறுபட்ட கோணம்.

Advertisment

____________

தமிழி

dd

எம்.கல்யாணசுந்தரம், கும்பகோணம்

நாம் கொண்டாடும் மகிழ்ச்சிக்குரிய விழாக்களில் குத்துவிளக்கு ஏற்றுவதும் மங்கள இசை இசைக்கப்படுவதும் மத அடையாளங்களா? தமிழர்களின் பாரம்பரிய பண்பாட்டு நடைமுறைகளா?

சிறப்பான விழாக்களின் ஒளியும் ஒலியும்தான் குத்துவிளக் கும் நாதசுரம் போன்ற மங்கள இசையும். இது காலத்திற்கேற்ப மாறி வந்திருக்கிறது. நல்ல நிகழ்ச்சி களில் விளக்குகளை ஏற்றுவதையும், இசை முழங்குவதையும் தமிழர்கள் தங்களின் பண்பாட்டு அடையாள மாகக் கொண்டிருப்பதை இலக்கி யங்களின் வழியே காண முடிகிறது. வெற்றி முரசு, சங்கு, கொம்பு, பறை, துடி, யாழ் எனப் பல வகை இசைக்கருவிகளை சிலப்பதிகாரம் உள்ளிட்ட இலக்கியங்கள் எடுத்துக் காட்டுகின்றன. நரம்பு இசைக் கருவி, தோல் இசைக் கருவி, ஊதுகின்ற இசைக் கருவி எனப் பல வகையில் இசையை அக்காலத் தில் வெளிப்படுத்தியிருக்கிறார்கள். மொழிக்கு முன்பாகவே இசை உருவாகிவிட்டது என்கிறார்கள் வரலாற்று ஆய்வாளர்கள். வேட்டை யாடும் பழங்குடிகளாக இருந்த மனிதர்கள், தூரத்தில் இருக்கும் சக மனிதர்களை அழைப்பதற்கு "ஏ...' "ஓ...' என்று குரலெழுப்பியதே ஓர் இசை வடிவம்தான். அது சரியாக எட்டவில்லை என்கிற நிலையில்தான், ஊது கருவிகளை யும், தாளக் கருவிகளையும் பயன் படுத்தினார்கள். காட்டு வாழ்க்கை யிலிருந்து வீட்டு வாழ்க்கை, அரண்மனை வாழ்க்கை, அரங்க நிகழ்வு என மனித சமூகம் மாறிய நிலையில், இசைக்கருவிகளின் வடிவமும் தன்மையும் மாறின. பாரம்பரியமான முறையில் ஏற்பட்ட மாற்றங்களின் விளைவே நாதசுரம், தவில் போன்ற கருவிகள். இதில் மிகவும் பிற்காலத்தியது, மிருதங்கம். காட்டுத்தீயைக் கண்டு அஞ்சிய பழங்கால மனிதன், வேட்டையாடிய உணவை சமைத்துச் சாப்பிடத் தொடங்கியபோது தீயின் தேவையை உணர்ந்தான். அதனை வணங்கினான். இரவுப் பொழுது களில் அகல் விளக்காகப் பயன்படுத்தினான். பின்னர் வளர்ச்சி பெற்ற காலத்தில் பல வகை ஒளி விளக்குகள் உருவாகின. அதில் கலைநயத் தோடு அமைந்தது ஐந்து முகங்கள் கொண்ட குத்துவிளக்கு. அதனை மங்கல நிகழ்ச்சிகளில் பயன்படுத் தும் வழக்கம் தொடர்கிறது. ஒரு பழக்கம் தொடங்கப்பட்டு அது தொடரப்படுமானால், அதுவே பின்னர் பண்பாடாக மாறிவிடும். மக்களின் பண்பாட்டு அடையாளங்களை நிறுவனமயமாக்கி, தங்களுக்கான சுயலாபம் தேட நினைப்பவர்கள் அதனை மத அடையாளங்களாக உருவாக்கிக்கொள்கிறார்கள்.