மாவலி பதில்கள்!

ff

வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு

"நாட்டின் பொருளாதார வளர்ச்சி ஐ.எம்.எஃப்.' கணித்ததை விட குறைந்தாலும் வியப்பில்லை' என்ற ப.சிதம்பரத்தின் கருத்து பற்றி?

இன்றைய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கல் செய்துள்ள நிலையில், அதற்கு முந்தைய நாள் தாக்கலான பொருளாதார ஆய்வறிக்கையின் அடிப்படையில் பார்த்தாலும் முந்தைய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் கணிப்பும் கருத்தும் பலித்துவிடுமோ என்ற அச்சம் ஏற்படுகிறது.

ஏழாயிரம்பண்ணை எம்.செல்லையா,சாத்தூர்

"அமைச்சராக இல்லாவிட்டால் ஏர் இந்தியா பங்குகளை வாங்கியிருப்பேன்' என்கிறாரே பியூஸ் கோயல்?

மற்ற அமைச்சர்களின் மைன்ட்வாய்ஸை ஒற்றை அமைச்சராக சொன்ன பியூஷ் கோயலைப் பாராட்டத்தான் வேண்டும்.

பா.ஜெயப்பிரகாஷ், பொள்ளாச்சி

"தந்தை பெரியார் வழியில் அ.தி.மு.க. பயணிக்கும்' என்கிறாரே அமைச்சர் செங்கோட்டையன். அ.தி.மு.க.வின் பெரியார் வழிதான் என்ன?

நிச்சயமாக 5ஆம் வகுப்புக்கு பொதுத்தேர்வு நடத்துவது பெரியார் வழி அல்ல. அதிகாரம் என்பது குறிப்பிட்டோ

வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு

"நாட்டின் பொருளாதார வளர்ச்சி ஐ.எம்.எஃப்.' கணித்ததை விட குறைந்தாலும் வியப்பில்லை' என்ற ப.சிதம்பரத்தின் கருத்து பற்றி?

இன்றைய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கல் செய்துள்ள நிலையில், அதற்கு முந்தைய நாள் தாக்கலான பொருளாதார ஆய்வறிக்கையின் அடிப்படையில் பார்த்தாலும் முந்தைய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் கணிப்பும் கருத்தும் பலித்துவிடுமோ என்ற அச்சம் ஏற்படுகிறது.

ஏழாயிரம்பண்ணை எம்.செல்லையா,சாத்தூர்

"அமைச்சராக இல்லாவிட்டால் ஏர் இந்தியா பங்குகளை வாங்கியிருப்பேன்' என்கிறாரே பியூஸ் கோயல்?

மற்ற அமைச்சர்களின் மைன்ட்வாய்ஸை ஒற்றை அமைச்சராக சொன்ன பியூஷ் கோயலைப் பாராட்டத்தான் வேண்டும்.

பா.ஜெயப்பிரகாஷ், பொள்ளாச்சி

"தந்தை பெரியார் வழியில் அ.தி.மு.க. பயணிக்கும்' என்கிறாரே அமைச்சர் செங்கோட்டையன். அ.தி.மு.க.வின் பெரியார் வழிதான் என்ன?

நிச்சயமாக 5ஆம் வகுப்புக்கு பொதுத்தேர்வு நடத்துவது பெரியார் வழி அல்ல. அதிகாரம் என்பது குறிப்பிட்டோர் கைகளில் மட்டும் இல்லாமல் எல்லாருக்கும் கிடைக்க வேண்டும் என்பது பெரியார் வழி. ஒருவேளை, செங்கோட்டையன் சொல்வது, எடப்பாடியாரை நோக்கியோ!

mm

முருகராமலிங்கம், சுந்தரபெருமாள் கோவில்

அரசியலில் அழிக்க முடியாத புகழ் என்று எதைக் கூறுவது? யாரைக் குறிப்பிடுவது?

அண்மைக் காலத்தில் அழிக்க முடியாத புகழ் என்று பெரிதாக எதுவுமில்லை. ஆனால், அழிக்க முடியாத கறைகள் நிறைய உள்ளன. காந்தியை கோட்சே சுட்டுக்கொன்ற நாளான ஜனவரி 30 அன்று, ஜாமியா பல்கலைக்கழக மாணவர்களை நோக்கி, துப்பாக்கியால் சுட்டு, ஒருவரைக் காயப்படுத்திய "ராம்பக்த்’ கோபால் என்கிற நவீன கோட்சேவும், அவன் நின்ற இடத்திலிருந்து 50 மீட்டர் தூரத்தில் வரிசையாக நின்றிருந்த போலீசார் அதனை வேடிக்கை பார்த்துக்கொண்டும், போட்டோ எடுத்தபடியும் நின்றதும், காந்தி நினைவு நாளில் ஜனநாயகம் மீண்டும் படுகொலை செய்யப்பட்டிருப்பதன் கொடூர அடையாளம்.

mm

தனலெட்சுமி, மதுரை

பாடகர் டி.எம்.கிருஷ்ணாவின் புத்தகத்தை வெளியிட கலாஷேத்ரா தடை விதித்தது பற்றி?

"செபாஸ்டியன் அண்ட் சன்ஸ்' என்கிற தனது புதிய புத்தகத்தில் கர்நாடக இசைப்பாடகர் டி.எம்.கிருஷ்ணா, மிருதங்கம் என்கிற இசைக்கருவி தயாரிக்கப் பயன்படும் பசுந்தோல் பற்றியும், பசுவைப் புனிதம் எனக்கருதும் பிராமணர்கள், தாங்கள் வாசிக்கும் மிருதங்கத்திற்காக அந்தப் பசுவின் தோலைப் பெறுவதற்கு, தாழ்த்தப்பட்ட சமுதாயத்தினருடன் கொண்டிருந்த பழக்கத்தையும், மிருதங்கம் செய்வோரின் வாழ்க்கைக்கும், அதனை வாசிப்போரின் பெருமைக்கும் இடையில் உள்ள சமுதாய அரசியல் கண்ணோட்டங்களை எழுதியுள்ளார். அது போதாதா தடை விதிக்க!

மேட்டுப்பாளையம் மனோகர், கோவை-14

மேற்கு வங்கத்தில் நேதாஜி சிலையின் கையில் பாரதிய ஜனதா கொடி கட்டப்பட்டது பற்றி?

அங்கே ஒரு நேதாஜிதான். இங்கே எத்தனையோ அண்ணா சிலைகள். அதில் தி.மு.க., அ.தி.மு.க., ம.தி.மு.க., அ.ம.மு.க. இன்னும் பல கட்சிகளால் அண்ணாவின் கைகள் படாதபாடு படுகின்றன.

___________

தமிழி

அயன்புரம் த.சத்திய நாராயணன், சென்னை-72

பண்டைய தமிழர் வாழ்வில் கல்விமுறை எந்தவகையில் இருந்தது? பாட சாலைகள் செயல்பட்டனவா?

கீழடியில் நடந்த அகழாய்வின் வழியாக, எளிய மக்கள் பயன்படுத்திய பானை ஓடுகளில் "ஆதன்' உள்ளிட்ட பழந்தமிழ்ச் சொற்கள் கீறல் எழுத்துகளாக எழுதப்பட்டுள்ளன. பானைகள் சூளையில் சுடப்பட்ட பிறகே இந்த எழுத்துகள் இடம்பெற்றுள்ளன என்பதிலிருந்து, பானைகளைப் பயன்படுத்தியவர்களே இதனை எழுதியிருக்க வேண்டும் என்கின்றனர் ஆய்வாளர்கள். பானைகளைச் செய்யும் தொழிலில் ஆண்கள் ஈடுபட்டிருந்தாலும், அதனைப் பயன் படுத்துவதில் ஆண்களைவிட பெண்களே அதிகமாக இருந்த காலம் அது. எனவே, ஆண்-பெண் என்ற பேதமின்றி எழுத்தறிவு பெற்றுள்ளனர் என்பதும் விளங்குகிறது. கி.மு. 6ஆம் நூற்றாண்டில் சங்ககாலத் தமிழர் கல்வியறிவு பெற்றிருந்தனர் என்பதை சங்கப்பாடல்கள் வாயிலாகவே நாம் அறிய முடியும். அவ்வையார், வெள்ளிவீதியார், நச்செள்ளையார், அஞ்சில் அஞ்சியார், ஒக்கூர் மாசாத்தியார், வெண்ணிக்குயத்தியார், நப்பசலையார், பாரிமகளிர் எனப் பல பெண்பாற் புலவர்கள் பாடிய பாடல்கள் நமக்கு கிடைக்கின்றன. காஞ்சிப் பல்கலைக்கழகம் போன்றவை பிற்காலத்தில் உருவாக்கப்பட்டிருந்தாலும், சேர சோழ பாண்டியர் எனும் மூவேந்தர் காலத்தில் கல்விக்கென முக்கியத்துவம் தரப்பட்டிருப்பதை இலக்கியங்கள் வாயிலாக அறிய முடிகிறது. "உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும் பிற்றல் நிலைமுனியாது கற்றல் நன்றே' என்று பாடியுள்ளார் மன்னரும் புலவருமான ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியப் பாண்டியன். ஆசிரியருக்கான ஊதியத்தை எந்த வகையிலேனும் தந்து கல்வி கற்பது நன்று என அந்தப் பாடல் வலியுறுத்துகிறது. தாய்ப் பாசமாக இருந் தாலும், அரசவையாக இருந்தாலும் படித்தவர்களுக்கு அங்கே கூடுதல் சிறப்பு என்கிற மன்னர், வேற்றுமை தெரிந்த நாற்பால் உள்ளும் கீழ்ப்பால் ஒருவன் கற்பின் மேற்பால் ஒருவனும் அவன்கண் படுமே என்பதிலிருந்து, "நால் வருணங்களில் கீழானவ னாகக் கருதப்படுபவன் கல்விகற்றால், அவனிடம், மேலானவன் என நினைத்திருப்போனும் கல்வி கற்க வருவான்' என்றும் பாடியிருப்பதிலிருந்து அக்காலத்தில் கல்விக்குத் தரப்பட்ட முக்கியத்துவத்தை அறியலாம்.

nkn050220
இதையும் படியுங்கள்
Subscribe