அண்ணாஅன்பழகன், அந்தணப்பேட்டை
எந்த பால் போட்டாலும் எடப்பாடி பழனிசாமி அடித்து விளாசுகிறார் என்று இயக்குநர் அமீர் பாராட்டியிருக்கிறாரே?
பா.ஜ.க.வே கோச்சாகவும் அம்பயராகவும் இருக்கும்வரை எப்படி வேண்டுமானாலும் விளாசலாம். நேர்மையான மேட்ச் நடக்கும்போது உண்மையான விளாசல் யாருக்கென தெரியும்.
எம்.முஹம்மதுரபீக் ரஷாதீ, விழுப்புரம்
அரச பயங்கரவாதம் என்கிறார்களே அப்படின்னா?
குடிஉரிமை திருத்தச் சட்டம் மத்திய அரச பயங்கரவாதம். 5-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாநில அரச பயங்கரவாதம்.
ஏழாயிரம்பண்ணை எம்.செல்லையா, சாத்தூர்
"பா.ஜ.க. மாநிலத்தலைவர் பதவி கிடைக்காத கோபத்தை பொன்.ராதாகிருஷ்ணன் எங்கள் மீது திருப்புகிறார்' என்கிறாரே அமைச்சர் ஜெயக்குமார்?
"கூட்டணி தர்மத்திற்காகப் பொறுத்திருக் கிறேன்' என்று சொல்லியிருக்கிறார் பொன்னார். "கூட்டணி தர்மம்' என்று சொன்னாலே உள்ளுக்குள் ஏதோ அதர்மம் இருக்கிறது என்று தான் அர்த்தம். முற்றிய அரசியல் கத்திரிக்காய் ஓப்பன் மார்க்கெட
அண்ணாஅன்பழகன், அந்தணப்பேட்டை
எந்த பால் போட்டாலும் எடப்பாடி பழனிசாமி அடித்து விளாசுகிறார் என்று இயக்குநர் அமீர் பாராட்டியிருக்கிறாரே?
பா.ஜ.க.வே கோச்சாகவும் அம்பயராகவும் இருக்கும்வரை எப்படி வேண்டுமானாலும் விளாசலாம். நேர்மையான மேட்ச் நடக்கும்போது உண்மையான விளாசல் யாருக்கென தெரியும்.
எம்.முஹம்மதுரபீக் ரஷாதீ, விழுப்புரம்
அரச பயங்கரவாதம் என்கிறார்களே அப்படின்னா?
குடிஉரிமை திருத்தச் சட்டம் மத்திய அரச பயங்கரவாதம். 5-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாநில அரச பயங்கரவாதம்.
ஏழாயிரம்பண்ணை எம்.செல்லையா, சாத்தூர்
"பா.ஜ.க. மாநிலத்தலைவர் பதவி கிடைக்காத கோபத்தை பொன்.ராதாகிருஷ்ணன் எங்கள் மீது திருப்புகிறார்' என்கிறாரே அமைச்சர் ஜெயக்குமார்?
"கூட்டணி தர்மத்திற்காகப் பொறுத்திருக் கிறேன்' என்று சொல்லியிருக்கிறார் பொன்னார். "கூட்டணி தர்மம்' என்று சொன்னாலே உள்ளுக்குள் ஏதோ அதர்மம் இருக்கிறது என்று தான் அர்த்தம். முற்றிய அரசியல் கத்திரிக்காய் ஓப்பன் மார்க்கெட்டுக்கு விரைவில் வரும்.
லட்சுமிசெங்குட்டுவன், வேலூர்(நாமக்கல்)
"தி.மு.க.வில் ஒரு ஸ்டாலின், அ.தி.மு.க.வில் ஓராயிரம் பழனிசாமி' என்கிறாரே எடப்பாடி?
"ஆட்சிக்கு வந்தால் ஜெ. மரணம், பொள்ளாச்சி பாலியல் கொடூரம், கொடநாடு விவகாரம் ஆகியவற்றைக் கையில் எடுப்பதுதான் தன்னுடைய முதல்பணி என்று மு.க.ஸ்டாலின் கூறுகிறாரே' என தாங்களே இன்னொரு கேள்வி யும் கேட்டிருக்கிறீர்கள். தி.மு.க.வில் உள்ள ஒரு ஸ்டாலின் இதை சீரியசாக கையிலெடுத்தால், அ.தி.மு.க.வில் எத்தனை ஆயிரம் பழனிசாமிகள் என்பது தெரிந்துவிடும்.
மேட்டுப்பாளையம் மனோகர், கோவை-14
அமெரிக்க அதிபர் டிரம்ப் -இந்திய பிரதமர் மோடி ஒப்பிடுக.
எளிமையாகச் சொல்வதென்றால் அமெ ரிக்காவின் மோடி, இந்தியாவின் டிரம்ப்.
அ.குணசேகரன், புவனகிரி
நித்தியானந்தா உண்மையில் எங்குதான் உள்ளார்?
சட்டமும் நீதியும் சட்டென எட்ட முடியாத தொலைவிலும், அரசு அதிகாரத்திற்கு அருகிலும்.
பா.ஜெயப்பிரகாஷ், பொள்ளாச்சி
பா.ஜ.க. தேசியத் தலைவராக ஜே.பி.நட்டா போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டது குறித்து?
நட்டாலும் நடாவிட்டாலும் அதிகாரமும் கட்டமைப்பும் உள்ளவரை பா.ஜ.க.வின் வயலில் விளைந்துகொண்டுதான் இருக்கும்.
வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு
"பாரத ரத்னா விருதைவிட காந்தி மிகவும் உயர்ந்தவர்' என்ற உயர்நீதிமன்றக் கருத்து?
மதவாத அரசியலுக்கு விதையூன்றி, பிரிட்டிஷாரிடம் மன்னிப்பு கேட்டு கடிதம் எழுதி, காந்தி படுகொலை வழக்கில் விசாரணைக்குள்ளான சாவர்க்கருக்கு பார தரத்னா வழங்க பரிந்துரைக் கும் ஆட்சியாளர்கள் உள்ள நாட்டில், காந்தியை அவரது நினைவு தின (ஜனவரி 30) சமயத்தில் காப்பாற்றியிருக்கிறது உயர்நீதிமன்றம்.
________________
தமிழி
நீநிகா, சென்னை
சமஸ்கிருத மந்திரங்கள்தான் முதன்மையானவை; அதிலிருந்து மொழிபெயர்க்கப்பட்ட தமிழ் மந்திரங்களுக்கு அந்தளவு சக்தி இல்லை என்கிறார்களே?
சமஸ்கிருதத்தில் ஓம் என்பதுதான் பிரணவ மந்திரம் எனப்படுகிறது. அதாவது, ஆதி மந்திரம் முதன்மையான மந்திரம். சூரியனிலிருந்து பூமி உள்ளிட்ட கிரகங்கள் வெடித்து உருவானபோது ஒலித்ததும் ஓங்கார ஒலியான இந்த ஓம்தான் என்கிறார்கள். தமிழில் "ஓ' என்ற உயிரெழுத்தும் "ம்' என்ற மெய்யெழுத்தும் இருக்கிறது. சமஸ்கிருத உயிரெழுத்துகளில் "ஓ' என்ற நெடில் கிடையாது. அதுபோல "ஏ' என்ற நெடிலும் கிடையாது. "எ, ஒ' ஆகிய குறில்கள் மட்டுமே உண்டு. "ஓ' என்ற நெடிலே இல்லாத மொழியில் "ஓம்' என்ற முதன்மை மந்திரம் எப்படி தோன்றியிருக்க முடியும் எனக் கேட்கிறார்கள் தமிழ்நாட்டின் சிவனடியார்கள். சமஸ்கிருதம் மற்றும் இந்தி மொழிகளில் "ஓம்' என்பதற்கு ஒரு குறியீடு உள்ளது. அது, சமஸ்கிருத இந்தி "ஊ' என்ற எழுத்தை யும் "ம்' என்ற எழுத்தையும் இணைத்த குறியீடு. அதாவது, சமஸ்கிருதத்தில் "ஊம்' என்றுதான் குறிப்பிடு கிறார்களே தவிர, "ஓம்' என்று எழுதவில்லை என்பதையும் சிவனடியார்கள் சுட்டிக்காட்டுகிறார்கள். தமிழுக்கு மூத்தது சமஸ்கிருதம் என எப்படியாவது நிறுவிவிடவேண்டும் என பல முயற்சிகள் காலந்தோறும் மேற்கொள்ளப்படுகிறது. சமஸ்கிருதம் என்பதற்கு "நன்கு செய்யப்பட்ட'’ என்ற பொருள் உண்டு. அதாவது, வேதமந்திரங்கள் ஓதுவதற்காக தங்களுக்கேற்ற வகையில் உருவாக்கி, அதன்பின் இலக்கியங்களும் படைக்கப்பட்ட மொழிதான் சமஸ்கிருதம். அரசர்களிடத் திலும் சமஸ்கிருதம் செல்வாக்குப் பெற்றிருந்திருக்கிறது. ஆனால், அது ஒருபோதும் மக்கள் பேசும் மொழியாக இருந்ததில்லை. தமிழ்மொழி என்பது பல்லாயிரம் ஆண்டுகளாக மக்களால் பேசப்படும் மொழி. தமிழர்கள் தங்களுக்கான தனிப்பட்ட வாழ்வியலையும் வழிபாட்டு முறையையும் கொண்டிருந்தார்கள். அதனை ஆகமம் என்ற பெயரில் ஆரியமும் அது பெற்ற குழந்தையான சமஸ்கிருதமும் விழுங்கியது நெடும் வரலாறு. அதனை மீட்பதற்காக நடத்தப்பட்ட போராட்டம்தான் வள்ளுவரின் திருக்குறள், திருமூலரின் திருமந்திரம், நாயன்மார்கள் -ஆழ்வார்கள் உள்ளிட்டோரின் தெய்வத் தமிழ்ப் பதிகங்கள், வள்ளலாரின் திருஅருட்பா. இவை எதுவும் சமஸ்கிருதத்தின் மொழிபெயர்ப்பல்ல. சமஸ்கிருத ஆதிக்கத்தைப் பெயர்த்து தள்ளிய தமிழ்ப் போர்க் கருவிகள்.