மு.ரா.பாலாஜி, கோலார் தங்கவயல்

காவலர்களுக்கு மன அழுத்தம் குறைவதற்காக "தர்பார்' படத்துக்கு அழைத்துச் சென்றி ருக்கிறாரே எஸ்.பி. ரோஹித்நாதன்?

ரஜினி நடித்த படங்கள் எப்போதுமே ரசிகர்களின் மன அழுத்தத் தைக் குறைத்துவிடும். அரசியல் சாயம் பூசிய பேச்சுகள்தான் தேவையற்ற பரபரப்புகளை உண்டாக்கி, மனஅழுத்தத்தை அதிகரிக்கச் செய்துவிடும்.

பா.ஜெயப்பிரகாஷ், பொள்ளாச்சி

Advertisment

"போலீஸ் பாதுகாப்பு இல்லா மல் எந்த பல்கலைக்கழகத்திற்காவது சென்று மாணவர்கள் மத்தியில், நாட்டுக்கு என்ன செய்யப்போகிறேன் என்று பிரதமர் மோடியால் பேச முடியுமா' என்று ராகுல்காந்தி சவால் விடுகிறாரே?

தனக்கான சிறப்பு பாதுகாப்பு அகற்றப்பட்ட நிலையில், பொது நிகழ்ச்சிகளுக்குச் செல்லும் ராகுல்காந்தி, நாடு முழுவதும் மாணவர்களின் போராட்டம் வலுவடைந்த நிலையில், பிரதமரைப் பார்த்து இந்தக் கேள்வியை எழுப்பியுள்ளார். நாடாளுமன்றமாக இருந்தாலும், ஊடக கேமராக்களாக இருந்தாலும், பல்கலைக்கழகங்களாக இருந்தாலும் நேருக்கு நேர் சந்திப்பதில் மோடிக்கு ஆர்வமில்லை. பள்ளிக்கூட மாணவர்கள் தேர்வு எப்படி எழுத வேண்டும் என்று தொலைக்காட்சி மூலம் உரையாற்றுவதில்தான் அவருக்கு ஆர்வம்.

prince

Advertisment

நித்திலா, தேவதானப்பட்டி

இங்கிலாந்து இளவரசர் ஹாரியும் இளவரசியான அவரது காதல் மனைவியும் அரச பரம்பரை அந்தஸ்தான ராயல் ஃபேமிலி என்பதை தாமாக முன்வந்து இழந்திருக்கிறார்களே?

உலகின் மூத்த ஜனநாயக நாடு என்ற பெருமை இங்கிலாந்துக்கு இருந்தபோதும், அங்கே பழைமை மாறாத வகையில் அரச குடும்பத்திற்கு தனி செல்வாக்கு உண்டு. அரச குடும்பத்திற்கு இணையான தகுதி இல்லா தவர்களை இளவரசர்களோ, இளவரசிகளோ திருமணம் செய்து கொள்வதை அரண் மனைக் குடும்பம் விரும்புவதில்லை. அதனை மீறித்தான் ஹாரியின் பெற்றோர் சார்லஸ்- டயானாவுக்கு 1980-களின் தொடக்கத்தில் திருமணம் நடைபெற்றது. அப்போதிருந்தே அரசி இரண்டாம் எலிசபெத்துக்கும் டயானாவுக்கும் சரிப்பட்டு வரவில்லை. பல குழப்பங்கள் வெறுப்புகளுக்குப் பிறகு, டயானா தனிமைப்பட்டு விபத்தில் இறந்தார். சார்லஸ் மறுமணம் புரிந்த இளவரசராக நீடிக்கிறார். அவரது மகன் ஹாரி, ஹாலிவுட் நடிகையான மேகன் என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவர் கறுப்பினத்தைச் சேர்ந்தவர். அரண்மனைக்கு இது அந்நிய மானது. உள்ளுக்குள் புகைச்சல் ஏற்பட்ட நிலையில், தன் அப்பா சார்லஸைப் போல இல்லாமல், தன் சொந்த வாழ்வுக்காக அரண்மனைப் பட்டங்களைத் துறந்து, கனடாவில் வாழும் தன் மனைவி மேகன் 8 மாத மகன் ஆர்ச்சியுடன் இணைந்திருக்கிறார் ஹாரி. அரசியின் ஒப்புதலுடன் இந்த தனிக்குடித்தனம் அரங்கேறியுள்ளது.

லட்சுமிகாந்தம், வேலூர்(நாமக்கல்)

ஜெ.வின் ஆவி பழிவாங்கப் புறப்பட்டுவிட்டதாமே?

ஆவிகள் பழிவாங்கும் என்றால், இவர்களை ஜெ.வின் ஆவி பழிவாங்குவதற்கு முன், ஜெ.வை எம்.ஜி.ஆர். ஆவி படாதபாடு படுத்தியிருக்க வேண்டும்.

_______________

தமிழி

சுந்தரமூர்த்தி, திருவெண்ணெய்நல்லூர்

கருவூர்த் தேவர் என்கிற சித்தர் கொடுத்த சாபத்தால்தான் தஞ்சை பெரிய கோவில் விவகாரத்தில் ஆட்சியாளர்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்று சொல்லப்படுகிறதே?

மாமன்னன் ராஜராஜனின் குரு எனப் போற்றப்படும் கருவூரார்தான் தஞ்சை பெரிய கோவில் அமைவதற்கு காரணம் என்கிறார்கள் தமிழார்வலர்கள். தமிழ் எழுத்துகள் 247 என்பதால் தஞ்சை பெரிய கோவிலின் உயரமும் அதே எண்ணிக்கையில் வருகிறபடி கோபுரத்தின் உயரம் உயிர்மெய் எழுத்துகளின் எண்ணிக்கையின்படி 216 அடியிலும், பெரு வுடையாரான சிவலிங்கம் உயிரெழுத்துகளின் எண்ணிக்கைப்படி 12 அடி உயரத்திலும், அதன் பீடம் மெய்யெழுத்துகள் எண்ணிக் கைப்படி 18 அடியிலும் அமைக்கப்பட்டிருப்பதாகவும், சிவலிங்கத் திற்கும் நந்திக்குமான இடைவெளி 247 அடி என்றும் குறிப் பிடுகிறார்கள். தமிழர் கட்டடக்கலையின் உலக அடையாளமாக விளங்கும் தஞ்சைப் பெருவுடையார் கோவில் தற்போது சொல்லப்படும் வடமொழி ஆகம விதிகளுக்கு உட்பட்டதல்ல என்றும், கருவூரார் ஆலோசனைப்படி கட்டப்பட்ட இந்தக் கோவிலில் தமிழ் வழிமுறைப்படியே குடமுழுக்கு நடத்திடவே வலியுறுத்தினார் என்றும், மன்னரைச் சுற்றியிருந்தவர்கள் குழப்பிய காரணத்தால், சமஸ்கிருத வழிமுறையில் பெருவுடையார் கோவிலுக்கு ராஜராஜன் கும்பாபிஷேகம் செய்திடவே, தமிழைப் புறக்கணித்த காரணத்தினால் கருவூரார் கொடுத்த சாபத்தின் காரணமாகத்தான் பெருவுடையார் கோவில் கட்டியபிறகு ராஜராஜனும் அதிக காலம் ஆட்சி செய்யவில்லை என்றும், இன்று வரை ஆட்சியாளர்களுக்கு தஞ்சை கோவில் நெருக் கடியை ஏற்படுத்தி வருகிறது என்றும் நம்பிக்கையுள்ளவர்கள் தெரிவிக்கிறார்கள். பொதுவாக, சித்தர்கள் என்பவர்கள் ஆன்மிக உலகின் கலகக்காரர்கள். வடமொழிப் பண்பாட்டு ஆதிக்கத்திற்கு எதிராகத் தமிழைக் கொண்டு புரட்சி செய்தவர்கள். உடல், மனம் இரண்டையும் இணைத்து ஒருமுகப்படுத்துகின்ற வல்லமையைத் தங்களின் கடுமையான பயிற்சிகள் மூலம் மேற்கொண்டவர்கள். அவர்களுக்கு இறைவழிபாடு உண்டு. அதே நேரத்தில், அதன் பேரில் நடக்கும் மோசடிகளை வெளிப்படுத்தியவர்கள். "நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்.. சுட்டசட்டி சட்டுவம் கறிச்சுவை அறியுமோ' என்று கேட்ட சிவவாக்கியரும் சித்தர்தான். "அன்பே சிவம்' என்ற திருமூலரும் சித்தர்தான். தமிழர்களின் பண்பாட்டு அடையாளத்தைக் காப்பாற்றுவதில் சித்தர்கள் கடைப்பிடித்த வழிமுறைகள் பிற்காலங்களில் மாறிவிட்டன. கருவூராரும் தமிழார்வத்துடன் ராஜராஜனிடம் வலியுறுத்தியதற்கு மாறாக, தஞ்சைப் பெருவுடையார் கோவில் ஆரியத்தின் கைகளுக்குள் சிக்கிக்கொண்டது.