அ.யாழினிபர்வதம், சென்னை-78

மு.க.ஸ்டாலினுக்கு வழங்கப்பட்ட மத்திய படை பாதுகாப்பு நீக்கப்பட்டிருக்கிறதே?

பாதுகாப்பு கொடுக்கப்பட்டதிலும் அரசியல் உண்டு. நீக்கப்பட்டதிலும் அரசியல் உண்டு. ஸ்டாலினே சொல்லியிருப்பதுபோல, அவரிடமிருந்து நீக்கப்பட்ட பாதுகாப்பை, பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட வன்முறை விதைக்கப்படும் இடங்களில் உறுதிப்படுத்த வேண்டும்.

Advertisment

பா.ஜெயப்பிரகாஷ், பொள்ளாச்சி

"கடந்த 5 ஆண்டுகளில் எங்களுடைய அரசு சிறந்த பணிகள் செய்திருப்பதாக நினைத்தால் எங்களுக்கு ஓட்டுப் போடுங்கள் என்று மக்களிடம் கேட்போம்' என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியிருக் கிறாரே?

ஆட்சியைப் பிடிக்க நினைப்பவர்கள் என்ன செய்யப்போகிறோம் என்பதும், ஆட்சியைத் தக்க வைக்க நினைப்பவர்கள் என்ன செய்திருக்கிறோம் என்று சொல்லி வாக்குக் கேட்பதும் ஜனநாயக மேம்பாட்டுக்கான அடையாளம். கெஜ்ரிவாலின் வார்த்தை களில் அந்த அடையாளமும் முதிர்ச்சியும் தெரிகின்றன.

Advertisment

mavali

நித்திலா, நெய்வேலி

ஓமன் நாட்டு மன்னர் மரணத்திற்கு தமிழகத்தில்கூட கண்ணீர் அஞ்சலி பதாகை கள் வைக்கப்பட்டிருக்கிறதே?

"மன்னன் உயிர்த்தே மலர் தலை உலகம்'’என்கிறது புறநானூறு. "மக்களைக் காக்கும் மன்னவன் இறை என வைக்கப்படும்' என்கிறது திருக்குறள். இவையெல்லாம் இந்தியாவுக்கு வந்து படித்தவ ரான ஓமன் மன்னரான சுல்தான் கபூஸ் முழுமையாக அறிந்திருந்தாரா எனத் தெரியாது. தன் தந்தையிட மிருந்து ஆட்சியைக் கைப்பற் றிய சுல்தான் கபூஸ், எண்ணெய் வள மிக்க வளைகுடா நாடுகளில் ஒன்றான ஓமனை வளர்ச்சி பெறச் செய்வதில் மனிதவளத்தை சிறப்பாகப் பயன்படுத் தியவர். அந்த நாட்டில் மக்கள்தொகைக் குறைவு என்பதால் வெளிநாட்டினர் பலர் வேலை தேடிச் சென்றனர். உள்நாட்டு மக்கள் சோம்பேறிகளாக இருந்தனர். இந்த நிலையை மெல்ல மெல்ல மாற்றி, சொந்த நாட்டு மக்களை உழைப்பாளிகளாக்கி, வெளிநாட்டி னருக்கான வாய்ப்பைக் குறைத்து, உள்நாட்டு மக்களைப் பல துறைகளிலும் முன்னேறச் செய்தவர். வளைகுடா நாடுகளில் "அரபு வசந்தம்' என்ற பெயரில் மக்கள் போராட்டங்கள் வெடித்தபோது ஓமன் நாடு அதிகம் பாதிக்கப்படாததற்கு இதுவும் ஒரு முக்கிய காரணம். பிற நாடுகளுடனான உறவுகளிலும் பிரச் சினைகளைத் தீர்ப்பதிலும் சுல்தான் ராஜதந்திரியாக செயல்பட்டார். அந்நாட் டில் பணியாற்றிய இந்தியர்கள், குறிப் பாகத் தமிழர்கள் அவரின் திறமையை அறிந்ததுதான், இங்கே கண்ணீர் அஞ்சலி பதாகை வைக்கக் காரணம்.

வ.நடராஜன், கூடுவாஞ்சேரி

தனியார்மயம் என்றால் எதிர்ப்புக் குரல் வரும் அதேவேளையில், செல் பேசி மற்றும் வங்கித் துறையில் தனியாரைத்தானே அதிகம் நாடு கிறார்கள்?

மக்கள் எதிர்பார்ப்பது தங்கள் வசதிக்கேற்ற கட்டணம். நேரத்திற்கேற்ற சேவை. இவற்றைத் தருவதில் அரசுத்துறைகள் செயலிழக்கும்போது, தனியார் நிறுவனங்கள் மக்களைக் கவர்ந்து லாபத்தில் கொழிக்கின்றன.

கே.பி.கே.பாஸ்கர்காந்தி, சிங்கப்பூர்

பொங்கல் அதிரடி, காமெடி யார் டாப்?

ஒரே ஆள்தான். அதிரடி தர்பார்... காமெடி துக்ளக்.

_____________

தமிழி

ஏழாயிரம்பண்ணை எம்.செல்லையா, சாத்தூர்

தமிழ் மண்ணில் தமிழ் மன்னரால் கட்டப்பட்ட தஞ்சை பெரிய கோவிலுக்கு தமிழ்வழியில்தான் குடமுழுக்கு நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை நியாயமானதுதானே?

தஞ்சை பெரிய கோவில் கட்டப்படுவதற்கு முன்பே தமிழ் மன்னர்களால் கட்டப்பட்ட பல கோவில்கள் தமிழ்நாட்டில் இருந்துள்ளன. மாமல்லபுரம் அருகே 2005ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட அகழாய்வில் மிகப் பழமையான முருகன் கோவில் கண்டறியப்பட்டது. இது வடக்கு நோக்கி அமைக்கப்பட்ட கோவிலாகும். தற்போதைய கோவில்களின் கருவறை கிழக்கு நோக்கி அமைக்கப்படுவதாகும். வேதகாலத்தின் தொடக்கத்திலிருந்தே தமிழ் வழிபாட்டின் மீது ஆரியத்தின் தாக்கம் மெல்ல மெல்ல பரவியதை ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள். ரிக் வேதத்தில் பல சொற்கள் தமிழ் உள்ளிட்ட திராவிட மொழிக் குடும்பத்திலிருந்து பெறப்பட்டதையும் அவர்கள் சுட்டிக் காட்டுகிறார்கள். ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில் இருந்த பழமையான கோவில்களில் ஒன்று திருவாரூர் புற்றிடங்கொண்டார் கோவில். அது சுடுமண் கற்களால் கட்டப்பட்டிருந்ததை தனது சகோதரி குந்தவை நாச்சியாருடன் பார்வையிட்ட மாமன்னன் ராசராசசோழன், அதனைக் கற்றளியாக (கருங்கல் கோவிலாக) மாற்ற வேண்டும் என விரும்பியுள்ளார். ராசராசன் காலத்திற்கு முன்பே, பல்லவர் காலத்தில் மாமல்லபுரம் கடற்கோவிலும், காஞ்சிபுரம் கோவில்களும் கற்றளிகளாக இருந்தன. இலங்கை மீது படையெடுத்த ராசராசனை அங்கிருந்த புத்த விகாரைகளின் பிரம்மாண்டமும் கவர்ந்தன. தன் நாடு திரும்பிய பிறகு, தஞ்சையில் பெரிய கோவிலைக் கட்டினார். தமிழர் கட்டடக் கலை நுணுக் கத்தின்படி மிகச்சிறப்பாகக் கட்டப்பட்ட உலகப்புகழ் பெற்ற அக்கோவில் ஆரியத்தின் கைகளுக்குத்தான் சென்றது. பின்னர் நாயக்கர் காலம், மராட்டியர் காலங்களில் தஞ்சை பெரிய கோவில் முழுக்க முழுக்க ஆரியமயமானது. ராசராசன் விரும்பிய திருவாரூர் கோவிலை அவரது மகன் ராசேந்திர சோழன் கற்றளியாகக் கட்டினார். அந்தக் கோவில் உள்பட தமிழகத்தின் அனைத்துக் கோவில்களும் ஆரிய வழிபாட்டு முறைக்கே உட்பட்டுள்ளன. அருள் மொழிவர்மன் என்ற பெயர் ராஜராஜன் என்று மாறியதிலிருந்தே இந்த ஆரியத்தின் தாக்கம் எப்படிப்பட்டது என்பதைப் புரிந்துகொள்ளலாம். ஆயிரம் ஆண்டுகால ஆதிக்கத்தை மாற்றுவதற்கு அரசிடம் துணிவும் மக்களிடம் தெளிவும் தொடர்ச்சியான முயற்சிகளும் வேண்டும்.