பா.ஜெயப்பிரகாஷ், பொள்ளாச்சி

"மதம் இல்லாத அரசியல் அர்த்தமற்றது, அறிவுப்பூர்வமானதாக இருக்க முடியாது' என்கிறாரே பா.ஜ.க. செயல்தலைவர் நட்டா?

அரசியலில் மதம், சாதி, மொழி, இனம் எல்லாமும் கலந்துதான் இருக்கும். மதவாதம் மட்டுமே அரசியல் என்பது அர்த்தமற்றது மட்டுமல்ல, அபாயகரமானதும்கூட.

Advertisment

வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு

"ரஜினி தலைமையை ஜி.கே.வாசன், பொன்.ராதாகிருஷ்ணன் ஏற்றால் தமிழ்நாட்டில் மாற்றம் ஏற்படும்' என்கிறாரே தமிழருவி மணியன்?

வாசனின் அப்பா ஜி.கே.மூப்பனார் காலத்திலிருந்தே ரஜினியின் அரசியல் வருகை எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது பொன்.ராதாகிருஷ்ணன் எம்.பி. யாகக்கூட ஆகவில்லை. இப் போதோ அப்பாவின் கட்சியான த.மா.கா.வுக்கு மகன் வாசன் தலை வராக இருக்கிறார். பொன்.ராதா மத்திய இணையமைச்சர் பதவி வரை பார்த்துவிட்டார். இவர்கள் இருவரும் யாருடைய தலைமையை ஏற்க வேண் டும் என தமிழருவி மணியன் சொல்கிறாரோ அந்த ரஜினியோ தலை"மை' பூசி தர்பார் நடத்தும் நிலை யிலும் அரசியல் கட்சியை ஆரம்பிக்கவில்லை. பேச் சாளர்கள் வாயை வாடகைக்கு விடலாம். அரசியல் பிரமுகர்கள் கணக்காகவே காய் நகர்த்துவார்கள்.

Advertisment

மணி, விருதுநகர்

அதிகாரிகளின் ஒத்துழைப்பு இருந்துமே உள்ளாட்சித் தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு இரண்டாவது இடம் கிடைத்திருப்பது எதைக் காட்டுகிறது?

"ஏழைகளின் கஷ்டம் எங்களைப் போன்ற ஏழைகளுக்குத் தெரிந்ததால் தான் குடும்ப அட்டை தாரர்களுக்கு ரூ.1000 பொங்கல் பரிசு தருகிறோம்' என்று விஞ்ஞானி அமைச்சர் செல்லூர் ராஜு சொல்கிற அளவுக்கு நிலைமை இருப்பதைக் காட்டுகிறது. கிரா மப்புற வாக்காளர்களும் அ.தி.மு.க ஆட்சி பற்றிய மதிப்பீட்டில் தெளிவாகவே இருக் கிறார்கள்.

முத்தமிழ், பெரம்பலூர்

வெகுமக்கள் போராட்டங் கள் குறித்து சினிமா பிரபலங்கள் கருத்து தெரிவித்தாக வேண்டும் என்ற மனநிலையை என்னவென்று சொல்வது?

சினிமாவில் அரசியல் வசனம் பேசுவது, அரசியலுக்கு சினிமா பிரபலங்களை எதிர்பார்ப்பது என்பது தமிழ்நாட்டில் நீண்டகாலமாக நிலவுகிற பழக்கமாகிவிட்டது. அரசியல் ஆர்வத்துடன் பஞ்ச் டயலாக் பேசும் நடிகர்களிடமிருந்து, மக்கள் போராட்டங்கள் பற்றிய கருத்துகளை எதிர்பார்க் கும் மனநிலை உருவாகிவிட்டது. பஞ்ச் டயலாக் என்பது மற்றவர்கள் எழுதித் தருவது. திடீரென நீட்டப்படும் ஊடக மைக் முன்னால் சொல்லவேண் டியது தங்களின் சொந்தக் கருத்து. பஞ்ச் டயலாக்கை மக்கள் எதிர்பார்த்தால், தங்களைத் தாங்களே பஞ்சராக்கிக்கொள்ளும் கருத்துகளை சினிமா பிரபலங்கள் வெளிப்படுத்திவிடுகிறார்கள்.

பூங்கோதை, கோவில்பட்டி

கலைஞரின் வாழ்க்கையை திரைப்படமாக எடுத்தால் எந்த நடிகர் பொருத்தமாக இருப்பார்?

கலைஞர் கேரக்டருக்கு யார் பொருத்தம் என்பது ஒருபுறம் இருக்கட்டும். கலைஞர் ஹீரோ என்றால் அதில் எம்.ஜி.ஆரும் ஜெயலலிதாவும் வில்லன் வில்லியாயிற்றே... அதில் நடிக்க இன்றைய நட்சத்திரங்களில் யாருக்கு முதுகெலும்பு இருக்கிறது?

_________

தமிழி

நித்திலா, தேவதானப்பட்டி

கீழடி அகழாய்வு அறிக்கையை 24 மொழிகளில் வெளியிட்டிருப்பது தமிழர்களின் பெருமையை உலகறியச் செய்யுமா?

mm

சங்க காலத் தமிழர்களின் வைகை ஆற்று நாகரிகத்தை வெளிப்படுத்தும் கீழடி ஆய்வுகளை வெளியிடுவதில் மத்திய அரசின் கீழ் இயங்கும் இந்திய தொல்லியல்துறை தயக்கம் காட்டியது. அதற்கு காரணம், கீழடி ஆய்வுகள் தமிழர்களின் தனித்த நாகரிகத்தைக் காட்டுவதையும், பண்பாட்டுரீதியாக மட்டுமின்றி வழி பாட்டு ரீதியாகவும் தமிழர்கள் தமக்கென தனித் துவத்தைக் கொண்டிருந்ததையும் ‘"ஒரே தேசம் ஒரே பண்பாடு'’என்கிற ஆட்சியாளர்களால் ஏற்றுக் கொள்ள முடியாததுதான். மூன்று கட்ட ஆய்வுகள் முடக்கப்பட்ட நிலையில்தான், தமிழக அரசின் தொல்லியல்துறை தொடர் ஆய்வுகளை மேற்கொண்டு, உண்மைகளை அறிக்கையாக வெளிப்படுத்தியது. சங்க காலம் என்பது கி.மு. 6ஆம் நூற்றாண்டு வரை பின்னோக்கிச் செல் வதை கீழடி ஆய்வுகள் வெளிப்படுத்தியுள்ளன. அதுமட்டுமின்றி, சிந்துசமவெளி நாகரிகம் தொடர்பான அகழாய்வுகளில் கிடைத்த பல சான்றுகள் தொல்தமிழர் (திராவிட) நாகரிகத்துடன் ஒத்துப்போவதையும் காண முடிகிறது. இதனடிப்படையில் பார்த்தால், தமிழர் நாகரிகம் என்பது இன்றைய இந்தியாவின் வடபகுதி வரை பரவியிருந்ததற்கான சான்றுகளும் ஆய்வுகளும் மேலும் கிடைக்கக்கூடும். உலகின் முன்னோடி நாகரிகங்களில் ஒன்றாக வும், மூத்த செம்மொழிகளில் சிறப்பானதாகவும் விளங்குகிற தமிழின் பெருமையை வரலாற்றுப்பூர்வமாக ஆவணப்படுத்த வேண்டுமெனில் தமிழில் மட்டும் அதனை அச்சிட்டால் போதாது. தொழில்நுட்பம் வளர்ந்துள்ள நிலையில், பல மொழிகளிலும் இதனைக் கொண்டு செல்ல வேண்டியது காலத்தின் தேவை. அதனை உணர்ந்து தமிழ்நாடு அரசின் தொல்லியல் துறை ஆணையர் உதயசந்திரன் ஐ.ஏ.எஸ். மேற்கொண்ட முயற்சியும், துறையின் அமைச்சர் மாஃபா பாண்டியராசனின் ஒத்துழைப்பும் 24 மொழிகளில் கீழடி ஆய்வுகளை வெளிவரச் செய்திருக்கிறது. இதில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஒடியா, அசாமி, இந்தி, வங்காளம், சமஸ்கிருதம், குஜராத்தி, மராத்தி, பஞ்சாபி, உருது ஆகிய இந்திய மொழிகளுடன் ஆங்கிலம், பிரெஞ்சு, ஸ்பானிஷ், ஜெர்மன், அரபி, இத்தாலி, ரஷ்யன், ஜப்பான், மாண் டரீன்(சீனம்), போர்த்துகீசு, ஹங்குல் ஆகிய பிற நாட்டு மொழிகளி லும் வெளியிட்டிருப்பது தமிழுக்கான பொங்கல் பரிசு.