அயன்புரம் த.சத்தியநாராயணன், சென்னை-72

மரண தண்டனை -என்கவுன்ட்டர் ஒப்பிடுக.

சட்டப்படியான என்கவுன்ட்டர், மரணதண்டனை. சட்டத்தை மீறி மரண தண்டனை, என்கவுன்ட்டர்.

Advertisment

எஸ்.அஜீம், உடையார்பாளையம்

முத்தலாக், 370-வது பிரிவு நீக்கம், குடியுரிமை திருத்தச் சட்டம் எனத் தொடர்ச்சியாக முஸ்லிம்களை குறிவைக்கும் பா.ஜ.க. அரசின் அடுத்த இலக்கு, பொது சிவில் சட்டமா?

குற்றங்களுக்கான தண்டனை எந்த மதத்தவராக இருந்தாலும் ஒன்றுதான். பண்பாட்டு வழியிலான பழக்க வழக்கங்கள் தொடர்பாக பலவித சட்டங்களும் நடைமுறை களும் உள்ளன. அவைதான் வேற்றுமையில் ஒற்றுமை காணும் நாடான இந்தியாவுக்கு சரியானது. ஆனால், கிரிமினல் சட்டம், சிவில் சட்டம் இவை குறித்து தெளிவுபடுத்தாத நிலையில்... பொதுமக்கள் பார்வையில் இந்துவுக்கு ஒரு சட்டம், முஸ்லிமுக்கு ஒரு சட்டமா என்ற கேள்வியை எழச் செய்து, அதன்மூலம் பெரும்பான்மையாக உள்ள இந்து மக்களின் ஆதரவை முழுமையாகத் திரட்டுவது என்பது ஆர்.எஸ்.எஸ். அஜெண்டா. அதனை பா.ஜ.க. அரசு செயல்படுத்துகிறது. பொது சிவில் சட்டம் என ஆரம்பித்து, அது மனு தர்மத்தில் போய் முடியக்கூடிய ஆபத்து இருக்கிறது.

Advertisment

லட்சுமி செங்குட்டுவன், வேலூர் (நாமக்கல்)

தடைக்குப் பிறகும் தமிழ்நாட்டில் பிளாஸ்டிக், பான் மசாலா, லாட்டரி ஆகியவை தங்கு தடையில்லாமல் புழக்கத்தில் இருக்கின்றனவே?

கையேந்தி பவன்களில் பார்சல் வாங்கும் ‘பணக்காரர்களுக்கான(!) பிளாஸ்டிக் கவர்கள் தடை செய்யப்பட்டு, பெரிய மால்களில் பொருட்கள் வாங்கும் ஏழைகளுக்கான(!) பிளாஸ்டிக் பைகள் தாராளமாக உலவுகின்றன. பான்மசாலா என்பது கல்லாப்பெட்டிக்கு கீழே ஒளித்து வைத்து, கல்லாப்பெட்டியை நிறைக்கின்ற வியாபாரமாக இருக்கிறது. லாட்டரி சீட்டு பெரிய மனிதர்களின் துணையுடனும் போலீசின் பாதுகாப்புட னும் அமோகமாக விற்பனையாகி அப்பாவி களை குடும்பத்தோடு உயிர் பறிக் கிறது. கூடுதலாக, பரவிக்கொண்டிருக்கும் பேராபத்து கஞ்சா உள்ளிட்ட கடும்போதை பொருட்கள்.

கௌசிக், திண்டுக்கல்

சசி தரூர் எழுதிய நூலுக்கு சாகித்ய அகாடமி விருது கிடைத்திருக்கிறதே?

ஆண்டுதோறும் இந்திய அளவிலான படைப்புகளில் மொழி அடிப்படையில் சாகித்ய அகாடமி விருது வழங்கப்படுகிறது. இம்முறை, ஆங்கிலப் படைப்புக்காக சசிதரூரின் 'ஆய் ஊழ்ஹ ர்ச் உஹழ்ந்ய்ங்ள்ள்: பட்ங் இழ்ண்ற்ண்ள்ட் ஊம்ல்ண்ழ்ங் ண்ய் ஒய்க்ண்ஹ' நூலுக்கு விருது கிடைத்துள்ளது. காங்கிரஸ் எம்.பி.யும் சர்ச்சைகளை எதிர்கொண்டிருப்பவருமான சசிதரூருக்கு, பா.ஜ.க. ஆட்சியில் விருது கிடைத்திருப்பதால், "சாகித்ய அகாடமி அரசியலுக்கு அப்பாற்பட்டு இயங்குகிறது' என்கிற அரசியலை புரிந்துகொள்ள வேண்டும்.

mm

நித்திலா, தேவதானப்பட்டி

ஊரக உள்ளாட்சித் தேர்தலில் வாக்காளர்களுக்கு வழங்கப்பட்ட பரிசுகள் எப்படி?

ரூபாய் நோட்டு முதல் வெள்ளி விளக்கு வரை விதவிதமாக வாக்காளர்களுக்கு வழங்கப்பட்ட பரிசுகள் நம் ஜனநாயகத்தின் சிறப்பைக் காட்டுகின்றன. எல்லாருக்கும் பசிக்கும்ல என்பதைப் புரிந்து அறநிலையத் துறை அமைச்சர் ஏரியாவில் அரிசி மூட்டை வழங்கியது கூடுதல் சிறப்பு. எல்லாவற் றையும்விட முக்கியமானது, இந்தப் பரிசுகளை கோவிலுக்கு காணிக்கையாக்கிய வாக்காளர் ஒருவரின் மனசாட்சி.

__________

தமிழி

கே.பி.கே.பாஸ்கர்காந்தி, சிங்கப்பூர்

பழந்தமிழர்கள் சிறப்பாகக் கருதியது இல்லறத்தையா, துறவறத்தையா?

துறவு கொண்டவர்கள் மேல் மதிப்பும் மரியாதையும் தமிழர்கள் வைத்திருந்தனர் என்றாலும் இல்லறத்தைத்தான் சிறப்பாகக் கருதினார்கள். இல்லறம் என்பது நல்லறம் எனப் போற்றப்பட்டது. "இயல்பினான் இல்வாழ்க்கை வாழ்பவன் என்பான் முயல்வாருள் எல்லாம் தலை' என்கிறார் வள்ளுவர். இயற்கையான, "இயல்பான முறையில் பேராசை எதுவும் கொள்ளாமல் இல்வாழ்க்கையை நடத்துபவர் துறவிகளைவிட மேலானவர்' என்பது இதன் பொருள். கல்வி, வேலை, இல்லறம், நாட்டுப்பணி என தமிழர் தம் வாழ்வியல் முறைகளை வளர்த்திருந்தனர். இல்லறத்தில் நல்லறம் கண்ட பிறகு, துறவு மேற்கொள்வதோ அல்லது இல்லறத்தில் இருந்தபடியே பொதுநலனில் அக்கறை செலுத்துவதோ பழந்தமிழர்களுக்கான வாழ்வியல் இலக்கணமாக இருந்தது. கசடறக் கற்பது, திரைக்கடலோடியும் உழைத்துச் செல்வம் சேர்ப்பது, அன்பும் அறனும் மிக்க இல்வாழ்க்கை வாழ்வது, இயற்கை வளமும் பகையை வெல்லும் திறமையும் கொண்ட அரசாங்கத்தை அமைப்பதில் துணைநிற்பது என தமிழர்களின் வாழ்க்கை முறை படிப்படியாக ஒவ்வொரு கட்டங்களை நோக்கி நகர்வதாக இருந்தது. துறவு என்பது தனிப்பட்ட ஒன்றாக இல்லாமல், இயற்கை ஆற்றலான நிலம், நீர், காற்று, நெருப்பு, வானம் ஆகிய ஐம்பூதங்களையும் உணர்ந்து, அதற்கேற்ப மனிதர்கள் தங்கள் சுவையறியும் நாக்கு, பார்வை கொண்ட கண்கள், தொட்டு உணரும் உடல், செய்திகளைக் கேட்கும் காது, மணம் வீசுவதை அறியும் மூக்கு ஆகிய ஐம்புலன்களையும் தம் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொண்டு வாழ்பவர்கள் உலகையே தம் வசப்படுத்தக் கூடியவர்கள் என்கிறது திருக்குறள்.

"சுவைஒளி ஊறுஓசை நாற்றமென் றைந்தின்

வகைதெரிவான் கட்டே உலகு'

ஐம்புலன்களையும் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்வதற்கு உணவு முறையும் உரிய பயிற்சிகளும் உண்டு. இவற்றை வள்ளுவர், திருமூலர், வள்ளலார் எனப் பலரும் வலியுறுத்தியுள்ளனர். அவற்றைத் தெரியாத இன்றைய தமிழர்கள், கார்ப்பரேட் சாமியார்களிடம் காசைக் கொட்டி, யோகா பயில் கிறார்கள். உண்மையில், அந்த சாமியார்களுக்குத்தான் யோகம்.