எம்.முகமது ரஃபீக் ரஷாதீ, விழுப்புரம்
"குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவான போராட்டத் திற்கு தேசபக்தர்கள் மட் டும் வரவும்' என அழைப்பு விடுத்தாரே எச்.ராஜா?
150 தேசபக்தர்களு டன் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்தியிருக்கிறார்கள் எச்.ராஜாவும் அவரது கட்சி யினரும். தி.மு.க. மற்றும் தோழமைக் கட்சிகளின் குடிஉரிமை சட்ட எதிர்ப்பு பேரணியில் லட்சக்கணக் கான தேசவிரோதிகள் பங்கேற்று மிரள வைத்து விட்டார்கள். குடிஉரிமை என்ற பெயரில் உரிமைகள் மறுக்கப்பட்டு, தடுப்பு முகாம் அமைக்கப்பட்டால் அது அப்பாவி உயிர்களை என்ன பாடுபடுத்தும் என்ப தற்கு இங்கு வெளியாகி யுள்ள படமே சாட்சி.
அ.குணசேகரன், புவனகிரி
உள்ளாட்சித் தேர்தலில் ஓட்டுகளின் விலை ஏகத்துக்கும் உயர்ந்துள்ளதே?
ஊரகப் பகுதிகளுக்கான தேர்தல் என்பதால் சொந்தம், சாதி, நட்பு இவை யெல்லாம்கூட கட்சி கடந்த விலையாகக் கருதப்படும். நகராட்சி, மாநகராட்சி என்று வரும்போது கரன்சிகளே வெற்றிக்கு உதவ
எம்.முகமது ரஃபீக் ரஷாதீ, விழுப்புரம்
"குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவான போராட்டத் திற்கு தேசபக்தர்கள் மட் டும் வரவும்' என அழைப்பு விடுத்தாரே எச்.ராஜா?
150 தேசபக்தர்களு டன் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்தியிருக்கிறார்கள் எச்.ராஜாவும் அவரது கட்சி யினரும். தி.மு.க. மற்றும் தோழமைக் கட்சிகளின் குடிஉரிமை சட்ட எதிர்ப்பு பேரணியில் லட்சக்கணக் கான தேசவிரோதிகள் பங்கேற்று மிரள வைத்து விட்டார்கள். குடிஉரிமை என்ற பெயரில் உரிமைகள் மறுக்கப்பட்டு, தடுப்பு முகாம் அமைக்கப்பட்டால் அது அப்பாவி உயிர்களை என்ன பாடுபடுத்தும் என்ப தற்கு இங்கு வெளியாகி யுள்ள படமே சாட்சி.
அ.குணசேகரன், புவனகிரி
உள்ளாட்சித் தேர்தலில் ஓட்டுகளின் விலை ஏகத்துக்கும் உயர்ந்துள்ளதே?
ஊரகப் பகுதிகளுக்கான தேர்தல் என்பதால் சொந்தம், சாதி, நட்பு இவை யெல்லாம்கூட கட்சி கடந்த விலையாகக் கருதப்படும். நகராட்சி, மாநகராட்சி என்று வரும்போது கரன்சிகளே வெற்றிக்கு உதவும்.
பா.ஜெயப்பிரகாஷ், பொள்ளாச்சி
இந்த ஆண்டில் உலகமெங்கும் 49 பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்று பாரீஸிலிருந்து இயங்கும் எல்லைகள் கடந்த நிருபர்கள் அமைப்பு கூறியுள்ளதே?
ஒவ்வொரு ஆண்டும் இதே நிலைதான். கடந்த ஆண்டு அக்டோபர் 2-ஆம் நாள், துருக்கி தலைநகர் இஸ்தான்புல்லில் உள்ள சவுதிஅரேபிய தூதரகத்துக்கு அழைக்கப்பட்டார் சவுதி பத்திரிகையாளரான கசோகி. தன் காதலியை வெளியே இருக்கச் சொல்லி விட்டு உள்ளே சென்றவர் அதன்பிறகு திரும்பவில்லை. சவுதி அரசு குறித்த விமர்சனக் கட்டுரைகளை எழுதிய கசோகி, தூதரகத்திற்குள்ளேயே கொடூர மாகக் கொல்லப்பட்ட செய்திதான் மெல்ல வெளிவந்தது. உலகநாடுகளை அதிர வைத்த இந்தப் பச்சைப்படுகொலை குறித்து அமெரிக்கா உள்ளிட்ட வல்லரசு களின் நெருக்கடி காரணமாக கொலை யாளிகளுக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. கசோகிகள் இல்லாத ஆண்டு அமையுமானால் அதுதான் உண்மையான பத்திரிகை சுதந்திர ஆண்டாக இருக்கும்.
எம்.தமிழரசி மணி, வெள்ளக்கோவில்
தொழில்நுட்பம் வளர்ந்துள்ள காலத்தில் அஞ்சலட்டையில் மாவலியாருக்கு அனுப்பும் கேள்விகளை மின்னஞ்சலில் அனுப்பச் செய்யலாமே?
இரண்டு வகையிலும் எப்போதும் அனுப்பலாம். பழமைக்கும் புது மைக்கும் இடைவெளியின்றி பயணிக்க லாம்.
மின்னஞ்சலில் கேள்விகள் அனுப்ப: nakkheeran2003@gmail.com
மேட்டுப்பாளையம் மனோகர், கோவை-14
"வயதான பெற்றோர்களை அவர்கள் பெற்ற பிள்ளைகள் பாதுகாக்க வேண்டும்' என்ற கடமை உணர்வை சட்டத்தால் செயல்படுத்த முடியுமா?
உறவு சார்ந்த உணர்வு என்பது சட்டத்தால் மட்டும் வருவதல்ல, ரத்தத் தோடு உருவாக வேண்டும்.
__________
தமிழி
பொன்விழி, அன்னூர்-641 653
தோண்டத் தோண்ட தமிழர் பண்பாடு பற்றி அரிய செய்திகளைத் தரும் கீழடி போல, நிமிர்ந்து நோக்கும்போது அதிசயிக்க வைக்கும் தமிழர் அடையாளமான தஞ்சை பெரிய கோவிலை நிர்மாணித்த சிற்பி யார்?
தஞ்சை பெரியகோவில் எனப்படும் பெருவுடையார் கோவிலை கி.பி. 1003-ஆம் ஆண்டில் தொடங்கி 1010-ஆம் ஆண்டில் நிறைவு செய்தார் மாமன்னன் இராசராசன். ஏறத்தாழ 7 ஆண்டுகள், மன்னரின் விருப்பப்படி கோவிலைக் கட்டிய தலைமைச் சிற்பியின் பெயர் குஞ்சர மல்லர். மாமல்லபுரம் கடற்கோவிலை மாதிரியாகக் கொண்டு, அதைவிட பெரிய கோவிலாக தஞ்சை கோவில் கட்டப்பட்டது. மலைகளோ பாறைகளோ இல்லாத வண்டல் நிலமான தஞ்சையில் இவ்வளவு பெரிய கற்கோவில் என்பதே அதிசயம்தான். அடித்தளத்திற்காக மிகக்குறைவான அடிகளே மண் தோண்டப்பட்டுள்ளது. கற்களை ஒன்றின்மீது ஒன்று அடுக்கியும், ஒன்றில் ஒன்றை இணைத்தும் (ஸ்ரீர்ன்ல்ப்ண்ய்ஞ்) பெரிய கோவில் கட்டப்பட்டது. கோபுரத்தின் மொத்த உயரம் 216 அடி. அதில் கருவறையிலிருந்து கோபுரத் தின் உச்சி வரையிலான உயரம் 190 அடி. ஒரே கல்லில் ஆன பெரிய சிவலிங்கம், ஒரே கல்லில் ஆன பெரிய நந்தி ஆகியவை தஞ்சை கோவிலின் கூடுதல் சிறப்புகளாகும்.
இடி, பூகம்பம் உள்ளிட்ட இயற்கைச் சீற்றங்களால் எந்த பாதிப்பும் வராத வகையில் கோவிலின் கட்டட அமைப்பு அமைந் துள்ளதை இன்றைய கட்டடக் கலை வல்லுநர்கள் ஆச்சரியமாகப் பார்க்கிறார்கள். பாரம்பரியச் சின்னம் என்ற வகையில் யுனெஸ்கோ நிறுவனம் தஞ்சை பெரியகோவிலைப் பராமரிக் கிறது. பழைய கட்டுமானத்தின் தன்மைகள் சிதைவுறாதபடியே திருவிழாக்களுக்கான புனரமைப்புகள் மேற்கொள்ளப்படுகின் றன. 2020 பிப்ரவரி 5-ந் தேதி குடமுழுக்கு நடைபெறவுள்ள நிலையில், தஞ்சை பெரிய கோவிலின் பழைமைத்தன்மை மாறாத வகையில் பணிகள் நடந்து வருகின்றன. ஆயிரம் ஆண்டுகள் கடந்தும் தன் சீரிளமைத் திறம் குறையாமல் வியக்க வைக்கிறது இராஜராஜேசுரம் எனப்படும் தஞ்சை பெரிய கோவில். இதனைக் கட்டிய தலைமைச் சிற்பி குஞ்சர மல்லருக்கு "ராஜராஜ பெருந்தச்சன்' என்ற பட்டத்தை வழங்கிய சோழ மன்னன், கோவில் கட்டும் பணியில் ஈடுபட்ட ஏராளமான சிற்பிகளையும் கௌரவித்தார். கோவில் பணிகளுக்குத் துணைநின்ற புரவலர்கள் முதல் தாகம் தீர்க்க தயிர் கொடுத்த "அழகி' என்ற பெண்மணி வரை பலரது பெயர்களும் கோவிலில் நிலை பெற்றுள்ளன.