மாவலி பதில்கள்

tt

மணி, விருதுநகர்

குற்றவாளிகளுக்கு புனர்வாழ்வு தருவதை விட்டுவிட்டு, தண்டனை தரவேண்டும் என்பதிலேயே எல்லோரும் குறியாக இருக்கிறார்களே?

தாமதிக்கப்படும் நீதி என்பது மறுக்கப்படும் நீதியாகிறது. சட் டம் தன் கடமையை எல்லா இடங்களிலும், எல்லா நேரத் திலும் சரியாகச் செய்தால் உரிய தண்டனையும் கிடைக்கும். குற்றங்கள் குறையும் வகையில் புனர்வாழ்வும் அமையும்.

dd

வெற்றிப் புகழேந்தி, சோழ சக்கரநல்லூர்

சிறந்த நாடாளுமன்ற உறுப்பினராக தி.மு.க.வின் திருச்சி சிவா விருது பெற்றிருக் கிறாரே?

பூக்கடைக்கு விளம்பரம் தேவையா? எனி னும், "லோக்மத்' என்கிற ஊடக குழுமத்தின் சார் பில் 2019-ஆம் ஆண்டுக்கான ராஜ்யசபையின் சிறந்த உறுப்பினர் விருதுக்கு திருச்சி சிவா தேர்ந்தெடுக்கப்பட்டு, மாநிலங்களவைத் தலைவரான குடியரசு துணைத்தலைவர் வெங்கையா நாயுடு அந்த விருதினை வழங்கியுள்ளார். தமிழகத்தின் உரிமை, ஈழத்தமிழர் நலன், தமிழ் இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு, சானிடரி நாப்கினுக்கான வரி ரத்து ஆகியவற்றுக்காக நாடாளுமன்றத்தில் திருச்சி சிவா வை

மணி, விருதுநகர்

குற்றவாளிகளுக்கு புனர்வாழ்வு தருவதை விட்டுவிட்டு, தண்டனை தரவேண்டும் என்பதிலேயே எல்லோரும் குறியாக இருக்கிறார்களே?

தாமதிக்கப்படும் நீதி என்பது மறுக்கப்படும் நீதியாகிறது. சட் டம் தன் கடமையை எல்லா இடங்களிலும், எல்லா நேரத் திலும் சரியாகச் செய்தால் உரிய தண்டனையும் கிடைக்கும். குற்றங்கள் குறையும் வகையில் புனர்வாழ்வும் அமையும்.

dd

வெற்றிப் புகழேந்தி, சோழ சக்கரநல்லூர்

சிறந்த நாடாளுமன்ற உறுப்பினராக தி.மு.க.வின் திருச்சி சிவா விருது பெற்றிருக் கிறாரே?

பூக்கடைக்கு விளம்பரம் தேவையா? எனி னும், "லோக்மத்' என்கிற ஊடக குழுமத்தின் சார் பில் 2019-ஆம் ஆண்டுக்கான ராஜ்யசபையின் சிறந்த உறுப்பினர் விருதுக்கு திருச்சி சிவா தேர்ந்தெடுக்கப்பட்டு, மாநிலங்களவைத் தலைவரான குடியரசு துணைத்தலைவர் வெங்கையா நாயுடு அந்த விருதினை வழங்கியுள்ளார். தமிழகத்தின் உரிமை, ஈழத்தமிழர் நலன், தமிழ் இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு, சானிடரி நாப்கினுக்கான வரி ரத்து ஆகியவற்றுக்காக நாடாளுமன்றத்தில் திருச்சி சிவா வைத்த வாதங்கள் அனைத்து தரப்பிலும் பாராட்டைப் பெற்றவை. குறிப்பாக, திருநங்கையரின் உரிமைக்காக திருச்சி சிவா கொண்டுவந்த தனிநபர் தீர்மானம், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. இந்தியத் தலைநகரை கிடுகிடுக்க வைத்த தமிழகக் குரல்கள் ஏராளம். அதில் இப்போது குறிப் பிடத்தக்கவர் திருச்சி சிவா.

வண்ணை கணேசன், பொன்னியம்மன் மேடு

"பட்னாவிஸ் சிறந்த நண்பர், அவரை எதிர்க் கட்சித் தலைவ ராகப் பார்க்க வில்லை' என்கி றாரே மராட்டிய முதல்வர் உத்தவ் தாக்கரே?

dd

ஆளுங்கட்சி யின் தோழமைக் கட்சியே எதிர்க் கட்சியான வர லாற்றைத் தமிழகம் பலமுறை பார்த் திருக்கிறது. மராட் டிய மாநிலத்திற்கு இது புதுசு. தேர் தல்வரை கூட்டணி யாக இருந்தவர் கள், பதவிக்காக எதிரெதிராக நின் றாலும் பழைய பாசம் நீடிக்கத் தானே செய்யும்.

நித்திலா, தேவதானப்பட்டி

"உலகின் இளம் பிரதமர்' என்ற பெருமையை ஃபின்லாந்து பெண் பிரதமர் பெற்றிருக்கிறாரே?

70 வயது கடந்தபிறகும் அரசியல் கட்சி தொடங்குவது பற்றிய ஆலோசனையிலும், 65 கடந்த பிறகும் முதல்வராவதற்கான வாய்ப்பை எதிர்நோக்கியும் உள்ளவர்களைப் பார்த்துக்கொண்டிருக்கும் நமக்கு, 34 வயதில் பிரதமரான சன்னா மரின் சாதனையாள ராகவே தெரிவார். அசாம் மாநிலத்தில் 1985-ல் வெற்றிபெற்ற பிரபுல்லகுமார் மகந்தா தலைமையிலான "அசாம் கன பரிஷத்' கட்சி ஆட்சியமைத்தபோது பலரும் இளைஞர் கள், திருமணமாகாதவர்கள். முதல்வரான பிறகுதான் மகந்தாவுக்குத் திருமணம் நடந்தது. இந்தியாவில் இப்படி அத்திபூத் தது போல அரசியல் அதிசயம் நடப்பதால், ஃபின்லாந்து நம் கண்களைக் கவர்கிறது. தற்போதைய நிலையில் உலகின் வயதான பிரதமர் மலேசியாவின் மகதீர் முகமது. 94 வயதாகும் அவர், மூத்தோரின் ஆலோசனை களுடன் செயல்படும்படி இளைய பிரதமருக்கு அறிவுறுத்தியிருக்கிறார்.

கௌசிக், திண்டுக்கல்

நீர் மேலாண்மையில் தமிழகம் சிறப்பாக செயல் படுவதாக "வாபேக்' நிறுவனத்தின் தொழில் மேம் பாட்டுத் தலைவர் கூறியுள்ளாரே?

டாஸ்மாக் நிர் வாகத்தைச் சொல்லி யிருப்பாரோ!

__________________

தமிழி

(வரலாற்றைத் தேடும் காலப் பயணம்)

அயன்புரம் த.சத்தியநாராயணன், சென்னை-72

கார்த்திகை தீபம்தான் தமிழர் களின் உண்மையான தீபாவளிப் பண்டிகையா?

ஒளியை வணங்குவது என்பது, பழமையான நாகரிகத்தினர் பலரும் கடைப்பிடித்த பழக்கமாகும். மூத்த நாகரிகங்களில் ஒன்றான தமிழர் நாகரிகத்திலும் ஒளியை வணங்கும் வழக்கம் உண்டு. தமிழர் திருநாளான பொங்கலில் சூரியனைக் கும்பிடுவதே முதன்மையாக இருக்கிறது. உலகின் முதன்மை ஒளி சூரியன்தான் என்பதால் அதற்கு வணக்கம் செலுத்து கிறார்கள். நெருப்பைப் பற்ற வைக்கும் அறிவியலை மனிதன் கண்டறிந்தபோது அது வாழ்வியலில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தியது. அடுப்பு பற்றவைப்பது முதல் காட்டை, நாட்டை எரிப்பதுவரை நெருப்பின் வலிமை இருந்ததால் அதனைப் பயத்துடன் வணங்கும் வழக்கம் பரவலானது. வேத காலத்தில் யாக நெருப்பு என்பது புனிதமானது என்றும் அது ஒருசில சமூகத் தினருக்கு மட்டுமே உரியது என்றும் கடைப்பிடிக்கப் பட்டது. தமிழ் வழிபாட்டு மரபில் நெருப்பை சுடர் வழியே கண்டு, அதன் ஒளியை உயிரின் வடிவமாகவும் கடவுளின் தன்மையாகவும் காண்கிற வழக்கம் உண்டு. "அருட்பெருஞ்சோதி' என்று வள்ளலார் ஒளி வழிபாட்டையே முன்னிறுத்தினார். இன்றைய தமிழர் வாழ்வில் உள்ள பண்டிகைகள் பலவும் வடநாட்டு மரபின்வழி வந்ததாக உள்ளது. தீபங்களின் வரிசையே தீபாவளி (தீபம்+ஆவளி) எனப் படுகிறது. "ஆவளி' என்பது வரிசையைக் குறிப்பதாகும். ஆனால், தமிழ்நாட்டில் தீபாவளிக்கு பட்டாசு வெடிப்பதும் பலகாரங்கள் சுடுவதும்தான் முதன்மை யானதே தவிர, தீபங்கள் ஏற்றுவதென்பது கார்த்திகை யில்தான் கடைப்பிடிக்கப்படுகிறது. அதுவும் முருகனுக் குரிய விழாவாக இருப்பதனால் இது "தமிழர்களின் தீபாவளி' என முன்வைக்கப்படுகிறது. பௌத்தம் உள்ளிட்ட வடபுலத்து சமயங்களின் வழிபாடுகளிலும் தீபம் இடம் பெற்றிருந்தது. அதன் தாக்கமும் தமிழகத் தில் உண்டு. பெரிய கார்த்திகை என ஆரம்பித்து மூன்று நாட்கள் வீடுகளில் விளக்கேற்றுவது, கோவில் களில் பெருந்தீபம் ஏற்றுவது, சொக்கப்பனை கொளுத்துவது என ஒளியின் திருவிழாவாக இருக்கிறது தமிழ்நாட்டில் கொண்டாடப்படும் கார்த்திகை தீப விழா. இதுதான் தமிழர்களின் தீபாவளி என்பதைவிட, தமிழர்களின் வாழ்வியலோடு நெருங்கி யிருக்கும் தீப விழா என்பதே பொருத்தமானது.

nkn141219
இதையும் படியுங்கள்
Subscribe