நவீன் வாசுதேவன், காடுகுடி, பெங்களூரு

வெங்காயம்?

உரித்தால் சாதா கண்ணீ ரையும், விலை கொடுத்து வாங்கினால் ரத்தக் கண்ணீ ரையும் வரவைக்கிறது.

நித்திலா, தேவதானப்பட்டி

Advertisment

இந்திய அரசிய லமைப்பு நாளின் 70-ஆம் ஆண்டு விழா எதைக் காட்டுகிறது?

அரசியல் சாசனத்தை வடிவமைத்துத் தந்த அண்ணல் அம்பேத்கர் உள்ளிட்ட அறிஞர்கள் எதிர்பார்த்த ஜனநாயகத்தை விட்டு வெகுதொலைவு சென்றுகொண்டிருக்கிறோம் என்பதை அம்பேத்கர் மாநிலமான மகாராஷ்ட்டிராவில் நடந்த அரசியல் கூத்துக்களே மெய்ப்பிக்கின்றன.

mm

Advertisment

தூயா, நெய்வேலி

ஹாங்காங் -காஷ்மீர்: ஒப்பிட முடியுமா?

இரண்டு இடங் களிலும் வாழும் மக்கள் விரும்புவது சுதந் திரத்தையும் நிம்மதி யையும்தான். பிரிட் டிஷ் ஆட்சியாளர்களிட மிருந்து சீனாவின் கட்டுப் பாட்டுக்குள் வந்த ஹாங் காங்கில் தங்களுக்கான உரிமைகளைப் பாதுகாத்துக் கொள்ள அந்த மக்கள் பல ஆண்டுகளாகப் போராடி வருகிறார்கள். ஹாங்காங்கின் தனித்துவத்தை மீறி, சீனாவின் சட்டங்கள் மூலமாக முழுக் கட்டுப்பாடு திணிக்கப்படுவதை எதிர்த்து பெரும் போராட்டங்கள் நடந்தன. ஓயாத இந்தப் போராட்டங்களுக்கு நடுவே நடந்த உள்ளாட்சித் தேர்தலில், பெருவாரியான மக்கள் வாக்களித்து, போராட்டங்களை முன்னெடுக்கும் ஜனநாயக அமைப்பினரை பெரும் வெற்றி பெற வைத்துள்ளனர். அரசு சார்பிலான வேட்பாளர்கள் தோல்வி கண்டனர். மன்னர் ஆட்சியில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பைத் தவிர்ப்பதற்காக இந்தியாவுடன் இணைந்து சிறப்பு அந்தஸ்தைப் பெற்ற காஷ்மீரில், கொடுத்த வாக்குறுதிகளை அரசுத் தரப்பு நிறைவேற்றாததால் ஏற்பட்ட அதிருப்தியும், எல்லையை ஒட்டியுள்ள பாகிஸ்தானின் வாலாட்டமும் காஷ்மீரில் தீவிர வாதத்துக்கு விதையிட்டன. ஜனநாயகப் பயிரைக் காக்க வேண்டிய ஆட்சியாளர்கள், சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்து, தலைவர் களை வீட்டுச் சிறையில் வைத்துவிட்டு, ஊரடங்கு உத்தரவால் மக்களை வீட்டுக்குள் முடக்கி, காஷ்மீரில் அமைதி நிலவுவதாகச் சொல்லி உள்ளாட்சித் தேர்தல்கள் நடத்தப்பட் டன. சிறைப்பட்டுள்ள தலைவர்களின் கட்சியினர் தேர்தலைப் புறக்கணித்த நிலையில், நாட்டை ஆளும் பா.ஜ.க. போட்டியிட்டது. சுயேட்சைகள் பலர் களமிறங்கினர். இந்தத் தேர்தலிலும் வாக்குப்பதிவு பலமாக இருந்தது. அதிக இடங்களில் வென்றவர்கள் சுயேட்சைகள்தான். பா.ஜ.க. தோல்வி கண்டது. அமைதியை விரும்புகிறார்கள் மக்கள். அதை சீர்குலைக்க நினைக்கிறார்கள் ஆட்சியாளர்கள். இதுதான் ஹாங்காங் -காஷ்மீர் நிலவரம்.

சங்கரசுப்பிரமணியன், பாளையங்கோட்டை

உதயநிதி பிறந்தநாளும் அமர்க்களப் படுகிறதே?

ஒவ்வொருவருக்கும் பிறந்தநாள் என்பது உற்சாகமும் ஊக்கமும் தரும் மகிழ்வான நாள். அது இயக்கத்திற்கு வலிமை ஊட்டவேண்டும். இயக்கத்தினருக்கு செலவு வைக்கக்கூடாது. ஏற்கனவே மார்ச் 1, ஜூன் 3 என தி.மு.க. நிர்வாகி கள் ஏராளமாக செலவிட வேண்டியுள்ளது. அதில், நவம்பர் 27ஐயும் சேர்க்காமல் செய்வதே உதயநிதியின் பிறந்தநாள் சேவையாக அமையும்.

கே.பி.கே.பாஸ்கரகாந்தி, சிங்கப்பூர்

எடப்பாடி அரசு மாவட்டந்தோறும் மருத்துவக் கல்லூரி அமைக்க மத்திய அரசு உடனடியாக ஒப்புதல் தருகிறதே?

அனிதாக்களின் கனவைச் சிதைத்து, அயலாருக்கு தமிழ்நாட்டில் எம்.பி.பி.எஸ். சீட் எளிதாக கிடைக்குமென்றால் ஊர்தோறும்கூட மெடிக்கல் காலேஜ் திறக்க அனுமதி கொடுப்பார்கள்.

____________

தமிழி

(வரலாற்றைத் தேடும் காலப் பயணம்)

அயன்புரம் த.சத்தியநாராயணன், சென்னை-72

தமிழர் நாகரிகத்தின் அடையாளம் தமிழ்நாட்டில் மட்டும் தானா அல்லது மற்ற மாநிலங்களிலும் இருக்கக் கூடிய சாத்தியம் உண்டா?

இன்றைய தமிழ்நாடு என்பது இந்திய ஒன்றியத் தில் மொழிவழி மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது வரையறுக்கப்பட்ட எல்லைகளைக் கொண்டது. அந்த எல்லை வரையறுக்கப்படுவதற்கு முன்புவரை ஆந்திராவின் பல பகுதிகள், கர்நாடகா, கேரளாவின் சில பகுதிகள், ஒடிசா மாநிலத்தின் கஞ்சம் மாவட்டம் ஆகியவைகூட சென்னை மாகாணமாகத்தான் இருந்தன. அதற்கு முன்பு மன்னர்களின் ஆட்சிக்காலத்தில் நாயக்கர்கள், மராட்டியர்கள் உள்ளிட்டோர் தமிழகப் பகுதிகள் மீது படையெடுப்பு நடத்தி ஆட்சி செய்ததையும், அதுபோலவே தமிழகத்தின் மூவேந்தர்கள் கங்கைக் கரை வரை படையெடுத்ததையும், இலங்கை மீது போர் தொடுத்ததையும் இலக்கியங்கள் வாயிலாக அறிய முடிகிறது. பிற்காலச் சோழ மன்னர்களான ராஜராஜசோழன், ராஜேந்திரசோழன் ஆகியோர் காலத்தில் கடற்படை சிறப்பாகக் கட்டமைக்கப்பட்டு இந்தோனேஷியா, கம்போடியா வரை ஆட்சி செலுத்தியதை வரலாற்றுப் பக்கங்கள் கூறுகின்றன. மன்னர்களின் படையெடுப்பாலும், வணிகத் தொடர்பாலும் தமிழர் நாகரிகம் இந்தியாவின் பிற மாநிலங்களில் மட்டுமல்ல, தெற்காசியா, தென்கிழக்கு ஆசியா நாடுகளிலும் பரவியிருக்கிறது. இவை குறித்த கல்வெட்டுகள், கலை வடிவங்கள், அந்தந்த மொழிகளில் உள்ள வார்த்தைகளின் வேர்ச்சொற்கள் ஆகியவற்றை ஆராயும்போது தமிழர் நாகரிகத்தின் பரவலை அறிய முடிகிறது. சிந்து சமவெளி நாகரிகம் விட்ட இடத்தையும் தமிழர் நாகரிகம் தொட்ட இடத்தையும் ஆய்வு செய்த ஐ.ஏ.எஸ். அதிகாரி பாலகிருஷ்ணன் தனது நூலில், ஒடிசா, மத்தியப்பிரதேசம் போன்ற இந்திய மாநிலங்களிலும், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் போன்ற சிந்துவெளி ஆய்வுகள் நடத்தப்பட்ட பகுதிகளிலும் தமிழ்ப் பெயர்களில் ஊர்கள் இருப்பதைப் பதிவு செய்துள்ளார். இடுக்கி, பழனி, கம்பம், சேரன், பாண்டி, கொற்கை, குன்று உள்ளிட்ட பல தமிழ்ப் பெயர்களில் ஊர் இருப்பதையும் பழங்குடி மக்களின் மொழியில் திராவிட மொழிக் குடும்பத்தின் வேர்ச்சொற்கள் இருப்பதையும் மொழியியல் அறிஞர்கள் பலர் வெளிப்படுத்தியுள்ளனர்.