மேட்டுப்பாளையம் மனோகர், கோவை
அரசியல் கட்சி துவங்கும் முன்பே ரஜினியின் அரசியல் செல்வாக்கு அதிகரித்தபடி உள்ளதுதானே?
ரஜினிக்கு திரையுலகின் மூலம் தமிழக மக்களிடம் கிடைத்திருப்பது அபரிமிதமான செல்வாக்கு. அதனால்தான் கடந்த கால் நூற்றாண்டு காலமாக அவரது அரசியல் வருகை எதிர்பார்ப்பிற்குரிய விவாதமாகிறது.
ஏழாயிரம்பண்ணை எம்.செல்லையா, சாத்தூர்
நடிகர் விஜய் சேதுபதிக்கு கலைமா மணி விருது பற்றி?
அரசாங்கத்தின் கலைமாமணி விருதுகளில் அரசியல் பார்வை இருக்கலாம். தமிழ் சினிமா வரலாற்றில் எத்தனையோ திறமையான மணிகள் உண்டு. அண்மைக் காலத்தில் ஒளிரும் மணிகளில் ஒருவர் விஜய்சேதுபதி.
அ.குணசேகரன், புவனகிரி
துரைமுருகன் கருத்துப்படி தமிழக அரசியலில் நிலவும் வெற்றிடத்தை மு.க.ஸ்டாலின் நிரப்பிவிட்டாரா?
நாடாளுமன்றத் தேர்தலின் மூலமாக, அரசியல் களத்தை உணர்ந்து வியூகம் வகுத்து வெற்றி பெறும் அரசியல் தலைவர் என்பதை தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல, இந்தியாவுக்கே காட்டிவிட்டார் ஸ்டாலின். ஆனாலும், தி.மு.க. ஆட்சிக்கு
மேட்டுப்பாளையம் மனோகர், கோவை
அரசியல் கட்சி துவங்கும் முன்பே ரஜினியின் அரசியல் செல்வாக்கு அதிகரித்தபடி உள்ளதுதானே?
ரஜினிக்கு திரையுலகின் மூலம் தமிழக மக்களிடம் கிடைத்திருப்பது அபரிமிதமான செல்வாக்கு. அதனால்தான் கடந்த கால் நூற்றாண்டு காலமாக அவரது அரசியல் வருகை எதிர்பார்ப்பிற்குரிய விவாதமாகிறது.
ஏழாயிரம்பண்ணை எம்.செல்லையா, சாத்தூர்
நடிகர் விஜய் சேதுபதிக்கு கலைமா மணி விருது பற்றி?
அரசாங்கத்தின் கலைமாமணி விருதுகளில் அரசியல் பார்வை இருக்கலாம். தமிழ் சினிமா வரலாற்றில் எத்தனையோ திறமையான மணிகள் உண்டு. அண்மைக் காலத்தில் ஒளிரும் மணிகளில் ஒருவர் விஜய்சேதுபதி.
அ.குணசேகரன், புவனகிரி
துரைமுருகன் கருத்துப்படி தமிழக அரசியலில் நிலவும் வெற்றிடத்தை மு.க.ஸ்டாலின் நிரப்பிவிட்டாரா?
நாடாளுமன்றத் தேர்தலின் மூலமாக, அரசியல் களத்தை உணர்ந்து வியூகம் வகுத்து வெற்றி பெறும் அரசியல் தலைவர் என்பதை தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல, இந்தியாவுக்கே காட்டிவிட்டார் ஸ்டாலின். ஆனாலும், தி.மு.க. ஆட்சிக்கு வரும்வரை, வெற்றிட சர்ச்சை தொடர்ந்து கொண்டு தான் இருக்கும்.
சி.கார்த்திகேயன், சாத்தூர்
பெண்கள் மற்றும் அடித்தட்டு மக்களின் ஆதரவு தற்போதும் அ.இ. அ.தி.மு.க.விற்கு இருக்கிறதா?
ஜெயலலிதாவுக்குப் பிறகான அ.தி.மு.க.வுக்கு அந்த ஆதரவு இல்லை. ஆனால், ஜெயலலிதா பாணி தேர்தல் அரசியலைக் கடைப்பிடித்து, அதனை மீட்டெடுப்பதில் ஆட்சியாளர்கள் தெளிவாக இருக்கிறார்கள்.
கே.ஆர்.ஜி.ஸ்ரீராமன், பெங்களூரு-77
"ஓ.பி.எஸ்.ஸும், இ.பி.எஸ்.ஸும் ஜெயலலிதாவின் செல்லப்பிள்ளைகள்' என்கிறாரே அமைச்சர் ராஜேந்திர பாலாஜி?
அப்படியென்றால் ராஜேந்திர பாலாஜி போன்றவர்கள் சவலைப் பிள்ளைகளா? ஜெ. முன்னிலையில் எல்லாருமே கைகட்டி வாய் பொத்தி கப்சிப் என்றிருந்த எல்.கே.ஜி. பிள்ளைகள்
அ.குணசேகரன், புவனகிரி
ரஃபேல் வழக்கு தீர்ப்பு… மாவலியின் பார்வையில் எப்படி?
ஆபரேஷன் என்ற சட்டப்போராட்டம் ஃபெயி லியர் ஆனாலும், ஊழல் என்ற பேஷண்ட் உயிர்ப்போடுதான் இருக்கிறார்.
எபினேசர், நாகர்கோவில்
இலங்கைத் தமிழர் விவகாரத்தில் பொறுப்புடன் நடந்து கொள்ளுமாறு வைகோ, ராமதாஸ், திருமாவளவனுக்கு மகிந்த ராஜபக்சே மகன் கண்டனம் குறித்து?
வெற்றித் திமிரின் வெளிப்பாடு. இலங்கை அதிபர் தேர்தல் முடிவுகளால் ஈழத்தமிழர்கள் நிலை குறித்து தமிழகத் தலைவர்கள் தங்கள் அச்சத்தை வெளிப்படுத்தி யுள்ளனர். அதேநேரத்தில், சர்வதேசத் தளத்தில் ஆக்கப்பூர்வ மான செயல்பாடுகளைத் தமிழ்ச் சமுதாயம் மேற்கொண் டாக வேண்டும். வெறும் பேச்சுகள் மட்டுமே நீடித்தால் ராஜபக்சேக்களின் ஆட்டத்தை தடுத்து நிறுத்த முடியாது.
கௌசிக், திண்டுக்கல்
ஜே.என்.யூ. பல்கலைக்கழக மாணவர்கள் மீதான தாக்குதல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையா? முன்விரோதமா?
ஜவகர்லால் நேரு என்ற பெயரில் பல்கலைக்கழகம் இருக்கிறது. அங்கு படிக்கும் மாணவர்கள் மத்திய அர சின் கட்டண உயர்வை எதிர்த்துப் போராடுகிறார்கள். இது போதாதா, போலீஸைக் கொண்டு மூர்க்கமாகத் தாக்குவதற்கு!
அண்ணா அன்பழகன், அந்தணப்பேட்டை
தமிழக அமைச்சரவை மாற்றி அமைக்கப்படு வதற்கு இனி வாய்ப்பே இல்லையா?
ஒவ்வொரு அமைச்சரும் முதலமைச்சர் கெத்தில் இருந்தால், முதல்வரால் எந்த அமைச்சரை மாற்ற முடியும்?
___________
தமிழி
(வரலாற்றைத் தேடும் காலப் பயணம்)
அயன்புரம் த.சத்தியநாராயணன், சென்னை-72
தொன்மை வாய்ந்த, பெருமைக்குரிய தமிழர் நாகரிக வரலாற்றின் முதல் அடையாளம் எது? முதல் அரசர் குலம் எது? சேரனா, சோழனா, பாண்டியனா?
சங்க இலக்கியங்கள் காட்டும் வாழ்வியல்தான் இன்று நம்மிடம் ஆவணமாக உள்ள தமிழர் நாகரிகத்தின் முதல் அடையாளம். இலக்கியங்கள் மட்டுமே ஆதாரங்களாகிவிட முடியுமா என்ற கேள்விக்கான விடையாகத்தான், தொடர்ச்சியான அகழாய்வுகள் தமிழர் நாகரிகத்தின் தொன்மை குறித்த அடையாளங்களை வெளிப்படுத்தி வருகின்றன. இந்த நாகரிகம் ஒரு காலத்தில் இமயம் வரை தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பதையும், தமிழ் மொழியை மூலமாகக் கொண்டு அதிலிருந்து கிளைத்த திராவிட மொழிகளும் அதன் பண்பாடும் ஆப்கானிஸ்தான் எல்லை வரை பரவியிருந்ததையும் சிந்துசமவெளி ஆய்வுகள் தொடங்கி பல தொல்லியல் ஆய்வுகளும், மொழியியல் ஆராய்ச்சிகளும் மெய்ப்பித்து வருகின்றன. சாதி மதம் பாகுபாடு இல்லாத, திட்டமிட்ட நிர்வாகக் கட்டமைப்பைக் கொண்ட நகர நாகரிகத்தை தமிழர்கள் கட்டிக்காத்திருக் கிறார்கள் என்பதை கீழடி ஆய்வுகள் வரை அறிகிறோம். பழந்தமிழகத்தின் ஆட்சி நிர்வாக அமைப்பு என்பது மூவேந்தர்களையும் வேளிர்களையும் தலைமையாகக் கொண்டிருந்தது. அசோகர் காலத்துக் கல்வெட்டுகள், கலிங்க மன்னர் காரவேலன் கல்வெட்டுகளிலும் மூவேந்தர்கள் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது. சேர, சோழ, பாண்டியர் என்ற வரிசையில் மூவேந்தர்களின் பெயர்கள் முன்னிறுத்தப்பட்டாலும் மூவரும் ஒரே காலத்தில் உருவானவர்களா, ஒருவர் பின் ஒருவர் உருவாகி தங்கள் ஆதிக்கத்தை நிலைநாட்ட ஒருவருக் கொருவர் மோதிக்கொண்டார்களா என்ற ஆய்வுகள் தொடர்கின்றன. கி.மு. 6-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த வைகை ஆற்று நாகரிகத்தை வெளிப் படுத்தும் கீழடி ஆய்வுகள் பாண்டிய மன்னர்களின் ஆட்சி நிர்வாகத்தை சேர்ந்தவை. தொடரும் ஆய்வுகளும், இன்னும் ஆய்வு மேற்கொள்ளப்பட வேண்டிய பூம்புகார் உள்ளிட்ட பகுதிகளில் நடைபெறும் ஆராய்ச்சிகளும் தமிழர் நாகரிகம் குறித்து கூடுதல் தகவல்களைத் தரும்.