மாவலி பதில்கள்

aa

பா.ஜெயப்பிரகாஷ், பொள்ளாச்சி

69 ஆண்டுகால உச்ச நீதிமன்ற வரலாற்றில் எந்த வொரு தீர்ப்பும் சனிக்கிழமையில் வழங்கப்படாத நிலையில், அயோத்தி தீர்ப்பு மட் டும் அந்த நாளில் வழங்கப் படுகிறதே?

ஜெயலலிதா தொடர்பான வழக்குகளுக்காக ஞாயிற்றுக்கிழமைகளில் நீதிமன்றம் கூடிய வரலாறும் நமக்கு இருக்கிறது. "சட்டம் ஒரு இருட்டறை' என்றார் பேரறிஞர்.

mm

மேட்டுப்பாளையம் மனோகர், கோவை-14

என்னே, மகாராஷ்ட் ராவுக்கு வந்த சோதனை?

கடந்த சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு, அமைச்ச ரவை அமைப்பதில் பா.ஜ.க. விடம் ஏமாந்த சிவசேனாவின் உத்தவ்தாக்கரே, இந்தமுறை "எனக்கு ஒரு கண் போனாலும் உனக்கு இரண்டு கண்களும் போகட்டும்' என செயல்பட்டுள் ளார். பா.ஜ.க.வோ "தனக்கு கிடைக்காத ஆட்சி எவருக் கும் கூடாது' என்ற கோணத்தில் செயல்பட் டுள்ளது. தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரின் வியூகங்கள், இந்திய அரசியலை ஈர்த்த நிலையில்... இந்த வாய்ப் பினைக்கூட சரியாக பயன்படுத்த முடியாத நிலையில், காங்கிரஸ் இருப்பதுதான் பரிதாபம்.

எம்.முகமது ரபீக் ரஷாதீ, விழுப்புரம்

பா.ஜெயப்பிரகாஷ், பொள்ளாச்சி

69 ஆண்டுகால உச்ச நீதிமன்ற வரலாற்றில் எந்த வொரு தீர்ப்பும் சனிக்கிழமையில் வழங்கப்படாத நிலையில், அயோத்தி தீர்ப்பு மட் டும் அந்த நாளில் வழங்கப் படுகிறதே?

ஜெயலலிதா தொடர்பான வழக்குகளுக்காக ஞாயிற்றுக்கிழமைகளில் நீதிமன்றம் கூடிய வரலாறும் நமக்கு இருக்கிறது. "சட்டம் ஒரு இருட்டறை' என்றார் பேரறிஞர்.

mm

மேட்டுப்பாளையம் மனோகர், கோவை-14

என்னே, மகாராஷ்ட் ராவுக்கு வந்த சோதனை?

கடந்த சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு, அமைச்ச ரவை அமைப்பதில் பா.ஜ.க. விடம் ஏமாந்த சிவசேனாவின் உத்தவ்தாக்கரே, இந்தமுறை "எனக்கு ஒரு கண் போனாலும் உனக்கு இரண்டு கண்களும் போகட்டும்' என செயல்பட்டுள் ளார். பா.ஜ.க.வோ "தனக்கு கிடைக்காத ஆட்சி எவருக் கும் கூடாது' என்ற கோணத்தில் செயல்பட் டுள்ளது. தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரின் வியூகங்கள், இந்திய அரசியலை ஈர்த்த நிலையில்... இந்த வாய்ப் பினைக்கூட சரியாக பயன்படுத்த முடியாத நிலையில், காங்கிரஸ் இருப்பதுதான் பரிதாபம்.

எம்.முகமது ரபீக் ரஷாதீ, விழுப்புரம்

பெண்ணியம், ஓரினச் சேர்க்கை, நாத்திகம் இவற்றை வலியுறுத்துபவர்களை தீவிரவாதிகள் என்கிறதே சவுதி அரேபியா?

மதங்களை அடிப்படையாகக் கொண்ட அரசு களில் நம்பிக்கையே சட்டங்களாக நிலைபெறும். கருத்துச் சுதந்திரம் உள்ளிட்ட உரிமைகள் தண்ட னைக்குரியதாகும். பெண்களுக்கான சுதந்திரத்தை இப்போதுதான் ஓரளவு வழங்கத் தொடங்கியுள் ளது சவுதி அரசு. மற்றவற்றை அடைய வெகுகால மாகும். இந்தியாவும் சவுதிபோல மாறவேண்டும் என விரும்புகிறவர்கள் அறியவேண்டிய செய்தி இது.

பிரதீபா ஈஸ்வரன், தேவூர்மேட்டுக்கடை

"மதுக்கடைகளை மூடினால் கள்ளச் சாராயம் ஆறாக ஓடும்' என்று அமைச்சர்களே கூறுகிறார்களே?

குஜராத்தில் மதுவிலக்கு நடைமுறையில் இருந்தாலும், அங்கே குடிப்பிரியர்கள் விரும்பும் சரக்கு, வீடு தேடி வந்து "டோர் டெலிவரி' செய்யப் படுகிறது என ஜெ. ஆட்சியின்போது சட்டமன் றத்திலேயே சொன்னவர் அப்போதைய அமைச்சர் நத்தம் விசுவநாதன். 2016-ல் அளித்த வாக்குறுதிப் படி படிப்படியான மதுவிலக்கு, மது வாங்குவதற் கான நிபந்தனைகளை கடுமையாக்குவது ஆகியவற்றை மேற்கொண்டாலே தமிழ்நாட்டில் குடிகாரர்கள் குறைந்துவிடுவார்கள்.

வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு

"அயோத்தியில் ராமர் கோவில் கட்ட தங்க செங்கல் வழங்குவேன்' என்று முகலாய இளவரசர் கூறுகிறாரே?

முஸ்லிம்கள் வழிபடும் நாகூர் தர்காவின் சந்தனக்கூடு திருவிழாவின்போது அம்மன் கோவிலிலிருந்து அன்பளிப்பு அளிப்பது வழக்கம். சந்தனம், பல்லக்கு உள்ளிட்ட பலவும் இந்து சமுதாயத்தினரால் வழங்கப்படும் மரபு உண்டு. தமிழ்நாட்டில் இந்துக்களும் முஸ்லிம்களும் நட்பாக இருப்பது இயல்பு. அது அயோத்தியில் இன்னொரு வகையில் பரவினால் நல்லதுதான். ஆனால், எல்லா மதங்களிலும் உள்ள அடிப்படை வாதிகளால் நல்லிணக்கம் தரைமட்டமாக்கப்ப டுகிறது, பாபர் மசூதியைப் போல.

ஏழாயிரம் பண்ணை எம்.செல்லையா, சாத்தூர்

சசிகலா வெளியில் வந்தால் இ.பி.எஸ்., ஓ.பி.எஸ். அணி எந்தப் பக்கம் செல்லும், தினகரன் என்ன செய்வார்?

முதலில், அத்தைக்கு மீசை முளைக்கட்டும்.

____________

தமிழி

(வரலாற்றைத் தேடும் காலப் பயணம்)

அயன்புரம் த.சத்தியநாராயணன், சென்னை-72

தமிழரின் தொன்மை வாய்ந்த நாகரிகத்தில் வணங்கப்பட்ட கடவுள் யார்? இயற்கையா, உருவ வடிவ இறைவனா?

கிறிஸ்து பிறப்பதற்கு முந்தைய காலத்தைச் சேர்ந்தவை என இதுவரை கண்டறியப்பட்ட இந்திய அகழாய்வுகளின்படி, அன்றைய மக்கள் முதலில் வணங்கியிருப்பது இயற்கையைத்தான். அதன்பின், தங்கள் மூத்தோரை வணங்கியிருக்கிறார்கள். போர்க்களத்திலோ மக்கள் நலனுக்காகவோ உயிர் நீத்தவர்களுக்கு நடுகல் நட்டு வழிபட்டிருக்கிறார்கள். அவற்றின் நீட்சியாக சுடுமண் உருவங்களை செய்து அவற்றையும் வழிபட்டிருக்கிறார்கள். ஆண், பெண் உடலுறுப்புகளை வணங்கும் வழக்கமும் அதன் தொடர்ச்சியாக இருந்திருப்பதை சிந்து சமவெளி நாகரிகம் தொடர்பான அகழாய்வுகள் தொடங்கி, வைகை ஆற்று நாகரிகமான கீழடி அகழாய்வுகள் காட்டுகின்றன. மாடிக் கட்டடங்கள், அகன்ற தெருக்கள், வாய்க்கால், வடிகால், பொதுக்குளம், மக்கள் கூடும் இடம் ஆகியவை கண்டறியப்பட்டுள்ள நிலையில், தற்போது நாம் காணும் வகையிலான கோவில் உள்ளிட்ட வழிபாட்டுத் தலங்களையோ அவை தொடர்பான பொருட்களையோ தொல்லியல் ஆய்வாளர்கள் கண்டறியவில்லை. தமிழரின் நாகரிகத்தைப் பொறுத்தவரை "நிலமும் பொழுதும்' என வாழ்க்கை முறையை வகுத்து அதில் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் என நன்னிலங்கள் நான்கையும், முல்லையும் மருதமும் திரிந்த வறண்ட நிலத்தைப் பாலை என்றும் பகுத்திருந்தனர். இந்த நிலங்களுக்குரிய வாழ்க்கை முறையும் வழிபாட்டுத் தெய்வங்களும் இருந்தன. குறிஞ்சிக்கு முருகன், முல்லைக்கு மாயோன், மருதத்திற்கு இந்திரன், நெய்தலுக்கு வருணன், பாலைக்கு கொற்றவை எனத் தெய்வங்களை சுட்டிக்காட்டுகின்றன பழந்தமிழ் இலக்கியங்கள். வரலாற்றுக் கால அளவின்படி, இயேசு பிறப்பதற்கு 200, 300, 600 ஆண்டுகளுக்கு முந்தைய தமிழர் நாகரிகத்தில் நிலத்தின் இயற்கைத் தன்மைக்கேற்ற வழிபாடு இருந்துள்ளது. அதன் பின்னரே, மெல்ல மெல்ல இந்த நாகரிகம் சிதைந்து, ஆரியப் பண்பாடு மேலோங்கி, இதே கடவுளருக்கான வழிபாட்டு முறை மாறியதுடன், புதிய கடவுள் வழிபாடுகளும் தோன்றின. தற்போது காணப்படும் கடவுள் உருவங்களும் கோவில் கட்டமைப்புகளும் கி.பி. 6-ஆம் நூற்றாண்டுக்குப் பின் வந்தவை என்கிறார்கள் வரலாற்று ஆய்வாளர்கள்.

nkn221119
இதையும் படியுங்கள்
Subscribe