மாவலி பதில்கள்!

vv

ஆர்.கார்த்திகேயன், ஜோலார்பேட்டை

வேலூர் சிறையில் உள்ள முருகன் செல் போன் வைத்திருந்ததாக குற்றஞ்சாட்டப்பட, நளினியும் முருகனும் தங்களை சிறைத்துறை பழிவாங்குவதாகக் கூறுகிறார்களே?

ராஜீவ் கொலை வழக்கில் தண்டிக்கப்பட்ட நளினி -முருகன் உள்ளிட்ட 7 பேரிலிருந்து, ராஜீவ் அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த ப.சிதம்பரம் வரை சிறையில் நடப்பது எல்லாமே அரசியல் நாடகம்தான்.

எம்.முஹம்மது ரபீக் ரஷாதீ, விழுப்புரம்

"சென்னையும் பெங்களூருவும் கேப்டவுன் போல மாறும்' என எச்சரிக்கிறாரே மத்திய நீர்வளத்துறை அமைச்சர்?

காலத்திற்கேற்ப மாநகரங்களின் எல்லைகள் விரிவடைகின்றன. ஒரு காலத்தில் சைதாப் பேட்டைக்கு தெற்கே இருந்த பகுதிகள் சென் னையின் புறநகராக இருந்தன. தற்போது செங்கல்பட்டு தாண்டினாலும் சென்னைக்கு மிக அருகே என்றுதான் விளம்பரங்களில் குறிப்பிடப் படுகிறது. தலைநகரத்தை நோக்கி மக்களின் வருகை அதிகரிப்பதால் எல்லைகள் விரிவடைகின்றன. அதற்கேற்ப அடிப் படைக் கட்டமைப்புகளை உருவாக் காத நிலையில், முதலில் ஏற்படும் நெருக்கடி என்பது குடிநீர்தான். "தென

ஆர்.கார்த்திகேயன், ஜோலார்பேட்டை

வேலூர் சிறையில் உள்ள முருகன் செல் போன் வைத்திருந்ததாக குற்றஞ்சாட்டப்பட, நளினியும் முருகனும் தங்களை சிறைத்துறை பழிவாங்குவதாகக் கூறுகிறார்களே?

ராஜீவ் கொலை வழக்கில் தண்டிக்கப்பட்ட நளினி -முருகன் உள்ளிட்ட 7 பேரிலிருந்து, ராஜீவ் அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த ப.சிதம்பரம் வரை சிறையில் நடப்பது எல்லாமே அரசியல் நாடகம்தான்.

எம்.முஹம்மது ரபீக் ரஷாதீ, விழுப்புரம்

"சென்னையும் பெங்களூருவும் கேப்டவுன் போல மாறும்' என எச்சரிக்கிறாரே மத்திய நீர்வளத்துறை அமைச்சர்?

காலத்திற்கேற்ப மாநகரங்களின் எல்லைகள் விரிவடைகின்றன. ஒரு காலத்தில் சைதாப் பேட்டைக்கு தெற்கே இருந்த பகுதிகள் சென் னையின் புறநகராக இருந்தன. தற்போது செங்கல்பட்டு தாண்டினாலும் சென்னைக்கு மிக அருகே என்றுதான் விளம்பரங்களில் குறிப்பிடப் படுகிறது. தலைநகரத்தை நோக்கி மக்களின் வருகை அதிகரிப்பதால் எல்லைகள் விரிவடைகின்றன. அதற்கேற்ப அடிப் படைக் கட்டமைப்புகளை உருவாக் காத நிலையில், முதலில் ஏற்படும் நெருக்கடி என்பது குடிநீர்தான். "தென்னாப்பிரிக்காவின் கேப்டவுன் நகருக்கு ஏற்பட்ட சோதனை சென் னைக்கும் பெங்களூருக்கும் வரும்' என்கிற மத்திய பா.ஜ.க. அமைச்சரின் எச்சரிக்கையை பா.ஜ.க.வால் இயக்கப்படும் இரு மாநில அரசுகளும் எப்படி எதிர்கொள்ளப் போகின்றனவோ!

mm

மு.செ.மு.புகாரி, சித்தார்கோட்டை

கலைஞர், கணேசன் (சிவாஜி), கண்ண தாசன் மூவருக் கும் மூலதனம் ‘தமிழ்’ என்பது அருமைதானே மாவலி?

தமிழ் உணர்வினால் மூவரும் ஒருகட்டத் தில் ஒன்றாகப் பயணித்து, பிறகு ஆளுக்கொரு பக்கமாகச் சென்றார்கள். அதில், கலைஞர் மட்டுமே தனது இயக்கப் பாதையிலேயே இறுதிவரை பயணித்தார். காலம் அவர்களைப் பிரித்தாலும், தமிழ் எப்போதும் இணைத்தே வைத்திருந்தது. கலைஞர் -கவிஞர் -நடிகர் திலகம் மூவரின் தமிழையும் இணைந்து ரசிப்பதற்கான சிறப்பான திரை விருந்து, "இருவர் உள்ளம்'.

எம்.தமிழ்மணி, வெள்ளக்கோவில்

"போராட்டத்தால் நோயாளிகள்தான் பாதிக்கப்படுவார்கள்' என்பதை மருத்துவர் களும், அவர்களின் பிரச்சினையைத் தீர்க்க வேண்டிய அரசும் உணர்ந்ததா?

அண்மையில் நடைபெற்ற அரசு மருத் துவர்களின் போராட்டத்தைப் பொறுத்தவரை, நோயாளிகள் பாதிக்கப்படக்கூடாது என போராட்டத்திற்கு நடுவிலும் அவசர சிகிச்சைப் பிரிவுகளில் பணியாற்றினார்கள் டாக்டர்கள். அவர்களின் கோரிக்கையைத் தீர்க்கவேண்டிய சுகாதாரத்துறை அமைச்சரோ, "ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த சிறுவனின் மூச்சுக்காற்று 80 அடி ஆழத்திலிருந்து தன்னைத் தொட்டதாக' கவிதை எழுதிக்கொண்டிருந்தார்.

சி.கார்த்திகேயன், சாத்தூர்

இந்தியாவிலேயே தமிழ்த் திரைப்பட கதாநாயகர்களுக்குத்தான் அதிக சமூக அக்கறை இருக்கிறதாமே?

"மார்க்கெட் சரிந்ததும் அரசியல் என்ட்ரி' என்பதிலேயே தெரியவில்லையா நமது கதாநாயகர்களின் சமூக அக்கறை.

ச.புகழேந்தி, மதுரை-14

கம்யூனிஸ்ட்டுகளின் நூற்றாண்டு பய ணம் பற்றி?

இலட்சியப் பயணத்தில் மக்களின் உரிமை காக்கும் போராட்டப் பாதையில் பல தியாகத் தழும்புகளைப் பெற்றவர்கள். அரசியல் பயணத்தில் தேர்தல் பாதையின் திசை தெரியாமல் சிக்கி, காயங்களைப் பெற்றுக் கொண்டிருப்பவர்கள்.

தமிழி (வரலாற்றைத் தேடும் காலப் பயணம்)

வி.கார்மேகம், தேவக்கோட்டை

"சங்ககால தமிழர் வரலாற்றைக் குறிப்பிடும் கீழடியில் வழிபாட்டுப் பொருட்கள் எதுவும் கிடைக்கவில்லை' என்கிறார்கள் தொல்லியல் ஆய்வாளர்கள். பா.ஜ.க. தரப்போ "திருவள்ளுவர் இந்து மத புலவர்' என்று காவி உடை அணிவிக்கிறார்கள். எது உண்மை?

கீழடியில் இதுவரை அகழாய்வு செய்யப்பட்ட இடங்களில் மக்கள் வசித்ததற்கான ஆதாரங்களும், கீறல் எழுத்துகள் கொண்ட பானை ஓடுகளும், அணிகலன் களும், பழந்தமிழர் நீர் மேலாண்மை திட்டத்திற்கான அடையாளங்களும் கிடைத்துள்ளன. இன்றைய காலகட்டத்தில் வழிபடப்படும் சிலைகளோ, கோவில் கட்டடங்களோ, அவை சார்ந்த பிற அடையாளங்களோ அகழாய்வில் தென்படவில்லை எனத் தொல்லியல் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். இதுவரை நடந்த ஆய்வின் முடிவு இது. அடுத்தடுத்த கட்ட ஆய்வுகளும் தொடரவுள்ள நிலையில், என்னென்ன கிடைக்கும் அல்லது கிடைக்காது என்பதை முன்கூட்டியே முடிவுசெய்ய முடியாது. அதுபோல தொல்தமிழர்கள் இயற்கையை வணங்குபவர்களாக இருந்தனர். அதன் நீட்சிதான், இன்று நாம், தமிழர் திருநாளாகக் கொண்டாடும் பொங்கல் விழாவில் இயற்கை சார்ந்த வழிபாடுகளே மிகுந்திருக்கும். தங்கள் மூதாதையர்களை வழிபடுவதும், வீரர்களின் தியாகத்தைக் குறிக்கும் வகையில் நடுகல் வழிபாடும் தமிழர் வழக்கம். தற்போது கோவில்களில் வழிபடப்படும் சிலைகள் பெரும்பாலும் கி.பி. 8ஆம் நூற்றாண்டிலிருந்து வடிக்கப்பட்டவை. அதற்கு முன்பிருந்த தமிழர் வழிபாட்டு முறைகளில் இவை கிடையாது என்கிறார்கள் ஆய்வாளர்கள். இந்து மதம் என்பதும் இன்று காணப்படும் நிலையில், அன்று இல்லை. சமணம், பௌத்தம், ஆசீவகம், சைவம், வைணவம் என பல சமயப் பிரிவுகள் இருந்தன. திருவள்ளுவரும் இறை மறுப்பாளர் அல்லர். ஆனால், அவர் எந்த ஒரு மதத்தையும் குறிப்பிட்டு எழுதவில்லை. குறிப்பாக, பிறப்பினால் பேதம் காட்டப்படும் மதக்கொள்கையை அவர் ஏற்கவில்லை. அவர் சமணக் கருத்துகளை வெளிப்படுத்துவதாக ஆய்வுகள் வந்துள்ளன. வைணவத் தரப்பில் அவரை உரிமை கொண்டாட முயன்றார்கள். எல்லாவற்றையும் கடந்த தெய்வப்புலவராக அவர் குமரி முனையில் உயர்ந்து நிற்கிறார். இந்தியப் பெருங்கடல் போன்ற அவரது புகழை "வேத -வருணாசிரம -சனாதன'க் காவிக் குடுவைக்குள் அடைக்க முயற்சிக்கிறது அதிகாரத்தையும் அடிமை அரசையும் கையில் வைத்திருக்கும் பா.ஜ.க.

nkn121119
இதையும் படியுங்கள்
Subscribe