தி.மதிராஜா, சிங்கபுங்கனேரி, கடலூர் மாவட்டம்

"சுஜித் மரணத்துக்கு அ.தி.மு.க.தான் காரணம்' என்கிறாரே மு.க.ஸ்டாலின்?

ஆழ்துளைக் கிணற்றில் குழந்தை விழுந்தது விபத்து. அதில் அலட்சியமும் அடக்கம். அதன்பின் நடந்தவை அனைத்தும் அமைச்சர் தலைமையில் அ.தி.மு.க. அரசு ஆடிய மரண ஆட்டம்.

வி.கார்மேகம், தேவகோட்டை

Advertisment

"இந்தியா வெளியிட்டுள்ள புதிய வரைபடங்களை ஏற்க முடியாது' என்கிறதே பாகிஸ்தான்?

ஜம்முகாஷ்மீர் மாநிலத்தின் சிறப்புத் தகுதி நீக்கப்பட்டு, ஜம்மு காஷ்மீர், லடாக் என இரு யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கப் பட்ட (கோடுகளால் பிளக்கப்பட்ட) வரை படத்தை இந்தியா வெளியிட்டிருக் கிறது. காஷ்மீர் எல்லை தொடர் பான இந்திய வரைபடத்தை பாகிஸ்தான் மட்டுமல்ல, சீனாவும் அப்படியே ஏற்ப தில்லை. அவர்களின் வரை படங்களில் நம்முடைய பகுதி களையொட்டி கோடு போட்டு, வம்பிழுக்கும் வேலை யும் நடக்கும். இது நீண்டகால பஞ்சாயத்து. பாகிஸ்தானோ, சீனாவோ எதிர்ப்பது ஆச்சரிய மல்ல, வரைபடம் மூலம் பா.ஜ.க. ஆட்சியில் பிறந் துள்ள ‘புதிய இந்தியாவில், ஆந்திர மாநிலத்தின் புதிய தலைநகரான அமராவதி இல்லை என்று அம்மாநிலத்தவரிடமிருந்து எதிர்ப்புக் குரல் கிளம்புகிறதே, இந்த உள்நாட்டுக் குரல்தான் ஆச்சரியம்.

கே.ஆர்.உபேந்திரன், தஞ்சாவூர்-6

Advertisment

"தூய்மை இந்தியா' என மோடி நாடு முழுக்க வலியுறுத்த, தலைநகர் டெல்லியே சுவாசம் பாதிக்கும் அளவில் மாசுக்காற்றில் சிக்கியுள்ளதே?

மோடி தற்போது திருக்குறளை சிலாகிக்கிறார். "சொல்லுதல் யாருக்கும் எளிய அரியவாம் சொல்லிய வண்ணம் செயல்' என்கிற குறளையும் அவருக்கு நினைவூட்டலாம்.

வாசுதேவன், காடுகுடி, பெங்களூரு

சிவப்பு, வெள்ளை, ரோஸ் நிற கிரிக்கெட் பந்துகள் வரிசையில் அடுத்து என்ன நிறமோ?

காலத்திற்கேற்ற மாற்றங்கள் எல்லாத் துறைகளிலும் உண்டு. பகல்நேர 5 நாள் டெஸ்ட் போட்டிகள் வெள்ளை உடை அணிந்த வீரர் கள் பங்கேற்க நடந்தபோது, சிவப்புநிறப் பந்து கள் பயன்படுத்தப்பட்டன. பகல்-இரவு ஆட்ட மாகவும் முழுஇரவு ஒளி வெள்ளத்திலும் வீரர் கள் அவரவர் அணிக்கான வண்ண உடை அணிந்து ஆடியபோது, இரவில் பளிச்செனத் தெரியும் வகையில் வெள்ளைப் பந்துகள் பயன்பாட்டுக்கு வந்தன. தற்போது 5 நாள் டெஸ்ட் போட்டியே பகல் இரவு ஆட்டமாக விளையாடப்படுகிறது. வெள்ளை உடையில் இருக்கும் இரு அணி வீரர் களுக்கும் பந்து பளிச்செனத் தெரியவேண்டும் என்பதால் வெள்ளையும் இல்லாமல் சிவப்பும் இல்லாமல் பிங்க் (ரோஸ்) நிறப் பந்துகள் பயன் படுத்தப்படுகின்றன. டெஸ்ட் போட்டியில் ஒரு பந்து, 80 ஓவர்கள்வரை பயன்படுத்தப்பட வேண் டும். வெள்ளை நிறப் பந்து அந்தளவு தாக்குப் பிடிக்காது என்பதும் கூடுதல் காரணமாம்.

கௌசிக், திண்டுக்கல்

அரியானா, மராட்டிய தேர்தல் முடிவு கள் காட்டுவது பா.ஜ.க.வின் சரிவையா?

காங்கிரசின் இயலாமை மற்றும் தேக்கத்தை.

____________

தமிழி

(வரலாற்றைத் தேடும் காலப் பயணம்)

mm

நர்மதா, தேனி.

கீழடி ஆய்வுகள் காட்டும் சங்ககாலத்தில்தான் திருக்குறள் எழுதப் பட்டதா? திருவள்ளுவர் காவி உடை அணிந்திருந்தாரா?

கீழடி ஆய்வுகள் மூலம் கி.மு.ஆறாம் நூற் றாண்டுக்குரிய தொன்மங்கள் கிடைத்துள்ளன. இவை சங்க இலக்கியங்கள் சுட்டிக்காட்டும் பலவற்றை வெளிப்படுத்துவதால், சங்ககாலத்தை மேலும் மூன்று நூற்றாண்டுகள் பழமைத்தன்மை உடையதாக ஆக்கியிருக்கிறது வைகை ஆற்று நாக ரிகமான கீழடி. தொடரும் ஆய்வுகளில் அதன் காலம் இன்னும் கூட முன்னே செல்லக்கூடும் என்கிறார்கள் ஆய்வாளர்கள். திருவள்ளுவரின் காலம் கி.மு. ஒன்றாம் நூற்றாண்டு எனக் கணக்கிடப்பட்டுள்ளது. அதாவது, இயேசு பிறப்பதற்கு 31 ஆண்டுகள் முன்ன தாக வள்ளுவர் பிறந்திருக்கிறார் எனத் தமிழறிஞர் கள் 1920களிலேயே ஆய்வுகளை மேற்கொண்டு பதிவு செய்திருக்கிறார்கள். அதனடிப்படையில்தான் தமிழக அரசு திருவள்ளுவர் ஆண்டினைக் கடைப்பிடித்து வருகிறது. தற்போது நடைபெறும் திருவள்ளுவர் ஆண்டு என்பது (கி.பி.2019+31) 2050 ஆகும். இந்தக் கணக்கு தொடர்பான ஆய்வும் தொடர்கிறது. எனவே, திருக்குறள் சங்கம் மருவிய காலத்திலான நூல் எனப் படுகிறது. வள்ளுவர் என்ன வண்ணத்தில் ஆடை அணிந்திருந்தார் என்பதற்கான ஆதா ரங்கள் எதுவும் இல்லை. வள்ளுவர் படத்தை அவரவர் தங்கள் விருப்பப்படி வரைந்து வந்தனர். அவருக்குப் பூணூல் அணிவித்தவர்கள் உண்டு. திருநீற்றுப்பட்டை போட்டவர்கள் உண்டு. வெவ்வேறு அடையாளங் களை அவரது ஓவியத்தில் திணித்தனர். வள்ளுவரின் குறள் நெறி என்பது, ‘"பிறப்பொக்கும் எல்லா உயிர்க் கும்' என்பதுதான். தனது கடவுள் வாழ்த்தில்கூட இறைவனை ஆதிபகவன், வாலறிவன் என முதன்மை யான உயர்வான தன்மையுடன் சுட்டிக்காட்டும் வள்ளுவர், குறிப்பிட்ட மதத்தை அடையாளப்படுத்த வில்லை. அவரவர் வசதிக்கேற்ப திருக்குறளுக்கு உரை எழுதுவதுடன், திருவள்ளுவர் குறித்தும் பல கதைகளைப் பரப்புவது நெடுங்காலமாகத் தொடர் கிறது. இந்நிலையில்தான், வேணுகோபால சர்மா 1954-ல் வரைந்த வள்ளுவர் ஓவியம், சில திருத்தங் களுக்குப் பின் அரசாங்கத்தால் ஏற்கப்பட்டு, அஞ்சல் தலையும் வெளியிடப்பட்டது. அதில் எந்தவித சாதி மத அடையாளமுமின்றி, வெள்ளைத் துண்டு அணிந் திருப்பார் முனிவர் கோலத்தில் உள்ள வள்ளுவர். "தமிழ் ஞானிகளின் உடை, காவி அல்ல வெள் ளையே' என்கிறார் சைவ நெறி பரப்பும் சிவாலயம் மோகன் என்பவர். வள்ளலாரும் காவியைத் தவிர்த்து வெள்ளை ஆடையையே உடுத்தியிருந்தார்.