மு.ரா.பாலாஜி, கோலார்தங்கவயல்

"இந்த தீபாவளியன்று ஒருநாள் மட்டுமாவது டாஸ்மாக் கடைகளை மூடவேண்டும்' என்று மத்திய முன்னாள் இணையமைச்சர் பொன்னார் விடுத்த வேண்டுகோள் என்னவாயிற்று?

2018 தீபாவளிக்கு 330 கோடி ரூபாய்க்கு நடந்த டாஸ்மாக் விற்பனை, 2019 தீபாவளிக்கு 455 கோடி ரூபாய்க்கு விற்றுள்ளது. தமிழ்நாடு அரசுக்கு பொன் முட்டையிடும் வாத்து டாஸ் மாக் என்பது பொன்னாருக்கும் புரிந்திருக்கும்.

வி.கார்மேகம், தேவகோட்டை.

Advertisment

"நடுக்காட்டுப்பட்டியில் ஆழ்துளைக் கிணற்றில் சிக்கிய சிறுவனை மீட்க உரிய நேரத்தில் ஏன் ராணுவத்தின் உதவியை கோரவில்லை' என மு.க.ஸ்டாலின் கேட்டால், "2009-ல் தி.மு.க. ஆட்சியில் தேனி மாவட்டத்தில் இதுபோன்ற நிகழ்வின்போது ராணுவத்தை அழைத்தீர்களா' என முதல்வர் எடப்பாடி கேட்பதில் எந் தளவு நியாயம் இருக்கிறது?

vv

தனது ஆட்சியின் அநியாயத்தை மறைக்க முந்தைய ஆட்சி யையோ, அடுத்த மாநில ஆட்சிகளையோ இழுப்பது தமிழ்நாட்டின் சாபக்கேடாக இருக்கிறது. எடப்பாடி பழனிச்சாமி குறிப் பிடும் 2009 நிகழ்வில், ராணுவம் மற்றும் துணை ராணுவத்தின் உதவி கோரப்பட்டு, அவர்களும் உரிய நேரத்தில் வந்தார்கள். ஆனால், உயிருடன் மீட்கும் முயற்சி தோல்வியடைந்தது. 30 மணி நேரத்திற்குள் ளாக உடலை மீட்டார்கள். 80 மணிநேரத் திற்கும் மேல் உயிருடன் விளையாடி, "80 அடி ஆழத்திலிருந்து மூச்சுக்காற்று வந்து என்னை உரசியது' என்கிற ரீதியிலான கண்றாவிக் கவிதைகளை இப்போதுபோல அப்போது யாரும் எழுதவில்லை.

அயன்புரம் த.சத்தியநாராயணன், சென்னை-72

"பிகில்' சத்தம் எப்படி?

கேட்கல... இன்னும் சத்தமா!

கே.ஆர்.உபேந்திரன், தஞ்சாவூர்

"தமிழ்நாடு நாளை' திடீரென தமிழக அரசு கொண்டாடக் காரணம் என்ன?

நவம்பர் 1-ஆம் தேதியை தனித்துவ தமிழ்நாடாக அறிவித்து அரசாணை வெளியிட்டது எடப்பாடி அரசு. 1956-ல் சென்னை மாகாணத்தில் இருந்த பிறமொழி பேசும் பகுதிகள் ஆந்திரா, கர்நாடகா, கேரள மாநிலங்களுடன் இணைக்கப்பட்டு, தமிழ் பேசும் பகுதிகள் கொண்ட சென்னை மாகாணம் நவம்பர் 1-ல் உருவானது. ஆனால், பிறமொழி பேசும் மாநிலங்களில் தமிழர்கள் வாழும் பகுதிகள் சிலவும் பறிபோயின. அத்துடன், "தமிழ் நாடு' என்ற பெயர் 1967-ல் அண்ணா முதல்வரான பிறகு தான் தமிழ்நாட்டுக்கு சூட்டப் பட்டது. எனவே "நவம்பர் 1' என்பது "தமிழ்நாடு' நாளும் அல்ல, கொண்டாட்ட நாளும் அல்ல; இழந்த பகுதிகள் குறித்த "தமிழக விழிப்புணர்வு நாள்' என்பதே பொருத்தம்.

வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு

நடிகர் சார்லிக்கு டாக்டர் பட்டம் தந்திருப்பது?

அந்த டாக்டர் பட்டம் "தரப்பட'வில்லை. அவரது ஆய்வுக்காக வழங்கப்பட்டிருக்கிறது. சினிமா ஹீரோக்கள் மார்க்கெட் போனதும் அரசியலுக்கு வரும் நிலையில், "தமிழ்த் திரையில் நகைச்சுவை' என்பது பற்றி ஆய்வு செய்து தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றிருக்கிறார் "டாக்டர்' சார்லி.

Advertisment

_______________

தமிழி

(வரலாற்றைத் தேடும் காலப் பயணம்)

பா.ஜெயப்பிரகாஷ், பொள்ளாச்சி

"தமிழ்மொழி வளரவேண்டியது நம் வீட்டில்... நம் உணர்வில். அதை விட்டுவிட்டு மத்திய அரசு கொடுக்கிற கோடிகளில் வளரக்கூடாது' என்கிறாரே பா.ஜ.க.வின் வானதி சீனிவாசன்?

mm

இந்தியா போன்ற பல மொழிகள் பேசுவோர் உள்ள நாட்டில் இந்தி, சமஸ்கிருதம் போன்ற மொழிகளை வளர்க்க மத்திய அரசு ஒதுக்கும் கோடிகளையும் தமிழ் போன்ற மொழிகளின் வளர்ச்சிக்கு ஒதுக்கும் தொகையையும் பார்க்கும்போது, எதற்காக ஒரு கண்ணில் வெண்ணெய், இன்னொரு கண்ணில் சுண்ணாம்பு என்ற கேள்விதான் எழுகிறது. வீட்டிலும் உணர்விலும் தமிழை வளர்க்க வேண்டியது, ஒவ்வொரு தமிழரின் கடமை. அதே நேரத்தில் கல்வித்துறையிலும் தொல்லியல் ஆய்வுகளிலும் தமிழின் வளர்ச்சிக்கு நிதி ஒதுக்கும்படி மத்திய அரசிடம் கோருவது தமிழ் நாட்டின் உரிமை. தமிழ்ப் பண்பாடு பற்றிய ஆய்வுகள் வெளிப் படுத்தும் உண்மைகள் எப்போதுமே மத்திய ஆட்சியாளர்களை அதிர வைக்கின்றன. ஹரப்பா, மொகஞ்சதாரோ அகழாய்வுகளில் தொடங்கி, தற்போது அரியானா மாநிலத்தின் ராகிகடி ஆய்வுகள் வரை தமிழ்ப் பண்பாட்டுத் தொடர்புகள் வெளிப்படுகின்றன. பேரரசன் அசோகனுக்குப் பிறகு பலவீனமடைந்த மவுரியப் பேரரசை மீண்டும் கட்டியெழுப்பி பல அரசுகளைக் கைப்பற்றிய மன்னன் காரவேலன் என்பவரின் காலம் கி.மு. முதலாம் நூற்றாண்டு அல்லது இரண்டாம் நூற்றாண்டு என ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள். அந்த மன்னன் காலத்தில், இன்றைய ஒடிசா மாநிலத் தலைநகர் புவனேஸ்வரம் அருகில் உள்ள உதயகிரி மலையில் சமணர் குகையான அத்திகும்பாவில் செதுக்கிய கல்வெட்டு, "ஜநபதஸி பா4வநம் ச தேரஸவஸ ஸத கதம் பி4தஸிதி தமிர தேஸிஹ ஸங்கா4தம் பாஸிரஸமே ச வஸே....' என ஆய்வாளர்களால் படிக்கப்படுகிறது. அதாவது, 113 ஆண்டுகாலம் ஒன்றுபட்டு நின்ற மூவேந்தர்களான தமிழ் அரசர்களின் கூட்டணியை (தமிர தேக சங்காத்தம்) உடைத்து, தன் ஆட்சிப் பரப்பை விரிவுபடுத்தியதையும் பாண்டிய மன்னர்களிடமிருந்து ஏராளமான பரிசுகளைப் பெற்றதையும் குறிப்பிட்டுள்ளார். "தமிர தேக சங்காத்தம்' என்பது தமிழ்த் தேச (மன்னர்களின்) சங்கம் (கூட்டணி) என்றாகிறது. அதன்படி பார்த்தாலும் கி.மு. 3-ஆம் நூற்றாண்டுக்கு முன்பே தமிழும் சங்கமும் இருந்திருக்கிறது. கீழடியில் அது மேலும் 300 ஆண்டுகளுக்கு முந்தையது என்பதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன.