மா.சந்திரசேகரன், மேட்டுமகாதானபுரம்
நேமம் கல்கி, லலிதா முருகன் ஒப்பிடுக.
பகவானை கொள்ளையனோடு ஒப்பிடச் சொல்லும்போதே தெரிகிறது, இருவருமே செய்யும் "தொழிலே' தெய்வம் என வாழ்ந்தவர்கள் என்பது. ஓட்டை போட்டுக் கொள்ளையிட்ட வருக்கு சட்டத்தின் நெருக்கடி அதிகம். மோசடி செய்து கொள்ளையடித்தவருக்கு சட்டத்தில் ஓட்டைகள் அதிகம்.
சோ.பூவேந்தஅரசு, சின்னதாராபுரம்
ரஷ்யா, சீனா தவிர்த்து கம்யூனிச நாடுகள் உலகில் வேறெங்கும் உண்டா?
1990-ல் சோவியத் யூனியன் சிதைந்த பிறகு, ரஷ்யா கம்யூனிஸ்ட் நாடாக இல்லை. சீனா இன்னமும் கம்யூனிஸ்ட் நாடாக உள்ளது. கியூபாவும் கம்யூனிஸ்ட் நாடுதான். இரும்புத்திரை கொண்ட கம்யூனிச அரசாங்கம் என்பது உலகமயச் சூழலில் சாத்தியமில்லை. அதனால், ஜனநாயக வழியிலான தேர்தல் முறையில் கம்யூனிசத்தை அடிப்படையாகக் கொண்ட இடதுசாரிகளின் சோசலிச அமைப்புகள் வெற்றி பெற்று ஆட்சியமைப்பதை உலகின் சில நாடுகளில் பார்க்க முடிகிறது. எனினும், அவற்றை மீறி வலதுசாரி (பழமைவாத) சக்திகளே உலகின் பல நாடுகளிலும் கோலோச்சுகின்றன.
பா.ஜெயப்பிரகாஷ், பொள்ளாச்சி
இந்திய நாட்டை கட்டி எழுப்பு வதற்காக வீரசாவர்க்கர் ஆற்றிய சேவையின் அடிப்படையில் ‘பாரத ரத்னா’ விருது வழங்கப்படவேண்டும் என மகாராஷ்ட்ரா பா.ஜ.க.வின் தேர்தல் அறிக்கை கூறுகிறதே?
சுதந்திர போராட்டத் தில், அந்தமான் சிறையில் அடைக்கப்பட்டபோது, வெள்ளைக்காரர்களிடம் மன்னிப்பு கடிதம் எழுதிக் கொடுத்து விடுதலை யானவர் சாவர்க்கர். காந்தி படுகொலையில் கோட்சே உள்ளிட்டோ ருடன் குற்றவாளிக் கூண் டில் ஏற்றி விசாரிக்கப்பட்டு, விடுவிக்கப்பட்டவர். பின்வாங்குதலும் சந்தேக செயல்பாடுகளும் வீரமாகப் போற்றப்பட்டு, விருது அளிக்கும் கோரிக்கை வரை கொண்டு சென் றிருப்பதுதான் பா.ஜ.க. வளர்க்கும் தேச பக்திபோலும்.
அயன்புரம் த.சத்தியநாராயணன், சென்னை-72
"அசுரன்' படத்தில் கருணாஸ் மகனின் நடிப்பு எப்படி?
"பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' என்பதை நடிப்பால் விளக்கியிருக்கிறார் கருணாஸ் மகன் கென்.
நித்திலா, தேவதானப்பட்டி
பி.சி.சி.ஐ. தலைவர் என்ற கங்குலியின் புதிய இன்னிங்ஸ் எப்படி?
பேட்டிங்காக இருந்தாலும், கேப்டன் ஷிப்பாக இருந்தாலும் தனக்கான தனி முத்திரையைப் பதித்தவர் கங்குலி. அவரது அணுகுமுறைகளின் பின்னணியில் அரசியலும் இருக்கும். இந்திய அணியிலிருந்து கங்குலி ஒரு முறை நீக்கப்பட்டபோது, மேற்கு வங்காளத்தை ஆண்ட இடதுசாரி அரசு, மீண்டும் சேர்க்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றியது. இப் போது, பி.சி.சி.ஐ. தலைவராகத் தேர்வாவதற்கு முன்பு மத்திய பா.ஜ.க. அமைச்சர், அக்கட்சி நிர்வாகிகளை சந்தித்திருக்கிறார் கங்குலி. அவரது கணக்கும், அவரைத் தலைவராக்கியோரின் கணக்கும் போகப் போகத் தெரியவரும்.
லட்சுமிதாரா, வேலூர் (நாமக்கல்)
ராஜீவ் கொலையில் தொடர்புடைய 7 பேருக்கு விடுதலை இல்லை என கவர்னர் முடிவெடுத்து விட்டாரா?
தூக்குக் கயிற்றிலிருந்து மீண்ட 7 பேரும், அரசியல் கயிற்றில் தொங்கிக் கொண்டிருக்கிறார்கள் 5 ஆண்டுகளுக்கும் மேலாக
தமிழி(வரலாற்றைத் தேடும் காலப் பயணம்)
கே.பி.கே.பாஸ்கர்காந்தி, சிங்கப்பூர்
கீழடியில் கிடைத்த கீறல் எழுத்துகளும் சிந்து சமவெளி தொடர்பான அகழாய்வில் கிடைத்த எழுத்துகளும் ஒன்றுபோல இருக் கின்றனவா?
சிந்துசமவெளி நாகரிகம் தொடர்பான ஹரப்பா, மொகஞ்சதாரோ அகழாய்வுகளில் கிடைத்த பொருட்களின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின்படி, அவை கி.மு.1500 காலத்தைச் சேர்ந்தவை எனக் கருதப்படுகிறது. அதாவது, இப்போதிலிருந்து 3500 ஆண்டுகளுக்கு முற்பட்டவை. கீழடியில் தமிழ்நாடு அரசின் தொல் லியல்துறை இதுவரை நடத்திய ஆய்வின்படி, கி.மு.600 என்ற காலக்கணிப்பு வெளியாகி யுள்ளது. அதாவது, 2600 ஆண்டுகளுக்கு முற் பட்டவை. கீழடியில் உள்ள தொல்லியல் மேடுகளைத் தோண் டியதில் தென்பட்ட வைகை ஆற்று நகர நாகரிகம், சுட்ட செங்கற்களால் ஆன கட்டடங்கள், வடிகால் முறை ஆகியவை போலவே சிந்துசமவெளி நகர நாகரிக அகழாய்விலும் காணப்பட்டன. கீழடியில் மத்திய தொல்லியல் துறையினர் நடத்திய ஆய்வுகளின் அதிகாரப்பூர்வ முடிவுகள் வெளியாகும்போது, கீழடி தொடர்பான காலக்கணிப்பு மாறலாம். அடுத்தடுத்து தொடரும் ஆய்வுகளில் கிடைக்கும் பொருட்களின் அடிப்படையிலும் பலவற்றைக் கணிக்கலாம். எழுத்துகளைப் பொறுத்தவரை, சிந்துசமவெளி எழுத்துகள், சித்திரவடிவ எழுத்துகளாக இருந்து மெல்ல மெல்ல கீறல் எழுத்து வகைக்கு மாறுகின்றன. அங்கு கிடைத்தவற்றில் இன்னும் படிக்க முடியாத எழுத்துகளும் உள்ளன. கீழடியில் கிடைத்துள்ளவை, சித்திர எழுத்துக்காலத்தைக் கடந்த தமிழி முறையிலான கீறல் எழுத்துகள். அந்த எழுத்துகளைப் படித்து அதில் உள்ள தமிழ்ப் பெயர்களை தொல்லியல் ஆய்வாளர்கள் வெளிப்படுத்தியுள்ளனர். காலக்கணிப்பு இன்னும் நிறைவடையாத நிலையில், தற்போது கிடைத்துள்ள எழுத்துகளின் அடிப்படையில், சிந்துசமவெளி அகழாய்வில் கிடைத்த எழுத்துகளுக்கும், கீழடியில் கிடைத்த எழுத்துகளுக்கும் ஓர் ஒற்றுமை இருப்பது வெளிப்பட்டுள்ளது. தொடர்ச்சியாக நடைபெறும் ஆய்வுகள் மூலம், சிந்து நாகரிகத்திற்கும் வைகை நாகரிகத்திற்குமான ஒற்றுமைகளையும் வேற்றுமைகளையும் அறிய முடியும்.