பா.ஜெயப்பிரகாஷ், பொள்ளாச்சி
அ.தி.மு.க.வும் தி.மு.க.வும் மாறி மாறி தேர்தலில் நின்று என்றைக்கு சோர்வடைகிறார்களோ, அன்று நாம் தமிழர் கட்சி தேர்தலில் வெற்றி பெறுவது உறுதி என்கிறாரே சீமான்?
கடல் வற்றிக் கருவாடு சாப் பிடலாம் என்று கணக்கிட்டு, குடல் வற்றிக் காத்திருப்பதில்லை கொக்கு.
அயன்புரம் த.சத்தியநாராயணன், சென்னை-72
வங்கதேசம், நேபாளத்தைவிட பொருளாதார வளர்ச்சியில் இந்தியா பின்தங்கியிருப்பதாக உலக வங்கி எச்சரித்துள்ளதே?
உலக வங்கி மட்டுமா? இம்முறை பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு பெறும் மூவரில் ஒருவரான இந்தியாவைச் சேர்ந்த அபிஜித் பானர்ஜியும் இந்தியாவின் பொருளாதார நிலை குறித்து கவலையும் எச்சரிக்கையும் தெரிவித்துள்ளார். பணமதிப்பிழப்பு நடவடிக்கையின்போதே அபாய மணி அடித்தவர் அபிஜித். வங்கத்தைச் சேர்ந்தவரின் குரல் டெல்லிக்கு எட்டவில்லை. ஆனாலும் அதிகளவில் வங்கத்தில் பிறந்தவர்களான ரவீந்திரநாத் தாகூர், ஜெகதீஷ் சந்திரபோஸ், அமர்த்தியா சென், அபிஜித் பானர்ஜி போன்றோரும் வங்க
பா.ஜெயப்பிரகாஷ், பொள்ளாச்சி
அ.தி.மு.க.வும் தி.மு.க.வும் மாறி மாறி தேர்தலில் நின்று என்றைக்கு சோர்வடைகிறார்களோ, அன்று நாம் தமிழர் கட்சி தேர்தலில் வெற்றி பெறுவது உறுதி என்கிறாரே சீமான்?
கடல் வற்றிக் கருவாடு சாப் பிடலாம் என்று கணக்கிட்டு, குடல் வற்றிக் காத்திருப்பதில்லை கொக்கு.
அயன்புரம் த.சத்தியநாராயணன், சென்னை-72
வங்கதேசம், நேபாளத்தைவிட பொருளாதார வளர்ச்சியில் இந்தியா பின்தங்கியிருப்பதாக உலக வங்கி எச்சரித்துள்ளதே?
உலக வங்கி மட்டுமா? இம்முறை பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு பெறும் மூவரில் ஒருவரான இந்தியாவைச் சேர்ந்த அபிஜித் பானர்ஜியும் இந்தியாவின் பொருளாதார நிலை குறித்து கவலையும் எச்சரிக்கையும் தெரிவித்துள்ளார். பணமதிப்பிழப்பு நடவடிக்கையின்போதே அபாய மணி அடித்தவர் அபிஜித். வங்கத்தைச் சேர்ந்தவரின் குரல் டெல்லிக்கு எட்டவில்லை. ஆனாலும் அதிகளவில் வங்கத்தில் பிறந்தவர்களான ரவீந்திரநாத் தாகூர், ஜெகதீஷ் சந்திரபோஸ், அமர்த்தியா சென், அபிஜித் பானர்ஜி போன்றோரும் வங்கத்தில் பணியாற்றிய அன்னை தெரசா, சர்.சி.வி. ராமன் ஆகியோரும் இந்தியாவில் நோபல் பரிசுகளை வென்றிருக்கிறார்கள்.
பி.சாந்தா, மதுரை
தமிழ்நாட்டில் 5 முக்கிய ரயில்வே திட்டங்கள் கைவிடப்படுகின்றனவாமே?
நிறைவேற்றப்படவேண்டியவற்றைக் கைவிடுவது- காலந்தாழ்த்துவது, பாதிப்புகளை உண்டாக்குவதை உடனடி யாக நிறைவேற்றுவது-முனைப்பு காட்டுவது இதுதான் மத்திய பா.ஜ.க. அரசின் தமிழகத்திற்கான திட்டமாக இருக்கிறது.
அசோகன், கோவை
ரஃபேல் விமானத்துக்கு பூஜை செய்ததை நிர்மலா சீதாராமன் நியாயப்படுத்துகிறாரே?
அரசுக் கட்டடங்களுக்கு பூமி பூஜை முதல் கணபதி ஹோமம் வரை எல்லா வகை பூஜைகளும் நடக்கின்ற நாடு இது. இதுகுறித்து கேள்வி எழுப்பினால், மத நம்பிக் கையைப் புண்படுத்து வதாக வருத்தப்படு கிறார்கள். பல மதங் கள் உள்ள நாட்டில் அனைத்து மதத்தினரும் கொடுக்கும் வரியில், ஒரு மத வழக்கத்தின்படி மட்டுமே பூஜைகள் நடக்கின்றன. அந்த மதத்தின் வழக்கத்தின் படியே, எந்த உயிரையும் வாகனம் கொன்று விடக்கூடாது என்பதற் காகத்தான் எலுமிச்சம் பழம் வைத்து திருஷ்டி கழிக்கப்படுகிறது. எதிரி நாட்டைத் தாக் கக்கூடிய ரஃபேல் போர் விமானத்துக்கு எலுமிச்சம்பழம் வைத்து பூஜை செய்திருப்ப தால், எதிரி நாட்டு ராணுவத்தினர் தப்பி விடுவார்களா? தங்கள் மத நம்பிக்கையைத் தாங்களே கொச்சைப்படுத்துவதில் நிர்மலா சீதாராமன், ராஜ்நாத்சிங் எல்லாரும் ஒரே ரகம்தான்.
குருநாதன், கோயம்புத்தூர்
மாவலிக்கு எப்போது டாக்டர் பட்டம் கிடைக்கும்?
திருக்குறளை எழுதியவர் திருமூலர் என்ற கண்டுபிடிப்பை நிகழ்த்திய பிறகு.
கேசவன், வாசுதேவநல்லூர்
ஒரு நாத்திகனை கடவுள் வந்து சந்தித்தால் என்ன ஆகும்?
புனிதம் உடைந்து மனிதம் மலரும்.
_________
தமிழி
பரணிகா, சுவாமிமலை
அகழாய்வு செய்யப்பட்ட கீழடியில் கிடைத்த பானைகளிலும் பானை ஓடுகளிலும் ஏதேதோ கிறுக்கல்கள் போல தெரிகின்றன. இதை எப்படி சங்ககாலத் தமிழ் என்கிறார்கள்?
எழுத்துகள் காலந்தோறும் மாறி வருபவை. எடுத்துக்காட்டாக, 40 ஆண்டுகளுக்கு முன் இருந்த எழுத்து வடிவத்தின்படி, "னை' எழுதவேண்டுமென்றால் "{' என எழுதுவார்கள். "ணா' எழுத வேண்டுமென்றால் "÷' என எழுதுவார்கள். இப்போது அவை மாறிவிட்டன. கணினி -செல்போன் போன்றவற்றிற்கான பயன்பாட்டில் எழுத்தின் வடிவங்கள் எளிதாக்கப்படுகின்றன. பழங்காலத்தில் எழுத்துகளுக்கு முன்னோடியாக சித்திரங்கள் வழியாக செய்திகளைப் பதிவிடும் வழக்கம் இருந்தது. சிந்துசமவெளி நாகரிகம் தொடர்பான அகழாய்வுகளில் அவை கிடைத்துள்ளன. அதனையடுத்து, கீறல் எழுத்து வடிவங்கள் தோன்றின. இதுதான், கீழடியில் கிடைத்துள்ள எழுத்துவகை. இதுபோல தமிழ்நாட்டில் அகழாய்வு மேற்கொள்ளப்பட்ட பல பகுதிகளில் கிடைத்துள்ளது. மொழியியல் வல்லுநர்களும்-தொல்லியல் ஆய்வாளர்களும் காலந்தோறும் மாறிவரும் எழுத்துகளின் வடிவங்களை உணர்ந்து அவற்றைப் படிக்கும் முறையை அறிந்துள்ளனர். கீழடியில் கிடைத்த கீறல் எழுத்துகளில் "ஆதன்', "குவிரன்' போன்ற பழங்காலத் தமிழ்ச் சொற்கள் இடம்பெற்றிருப்பதால், அவை சங்ககாலத்தவை எனக் கணக்கிடுகின்றனர்.
கீறல் எழுத்துகள், கல்வெட்டுகளில் பிராமி எழுத்துகளாயின. மொழியில் பிராமி கல்வெட்டுகள் நிறைய உண்டு. பின்னர் சமஸ்கிருத கல்வெட்டுகள் வந்தன. ஆனால், தமிழ் தனது தனித்த அடையாளத்துடன் "தமிழி' என்ற தனி பிராமி எழுத்து வடிவத்தைக் கொண்டிருந்தது என்பது பழங்கால நூல்கள் வாயிலாகவும் தொல்லியல் அறிஞர்களின் ஆராய்ச்சி வாயிலாகவும் அறிய முடிகிறது. பிராமியைத் தொடர்ந்து கிரந்த எழுத்துகள் வந்தன. அதே நேரத்தில் ஓலைச்சுவடிகளில் எழுதும்போது ஓட்டை விழாதபடி சாய்த்து எழுதியதால் வட்டெழுத்துகள் உருவாகி அவை கல்வெட்டுகளிலும் பொறிக்கப்பட்டன. பிற்காலச் சோழர் காலத்தில், தற்காலத்திய தமிழ் எழுத்து வகையை ஒட்டிய எழுத்து வடிவங்கள் உரு வாகின. எழுத்தின் வடிவங்கள் காலத்திற்கேற்ப மாறிக்கொண்டிருந்தபோதும், அந்த வடிவம் எந்த எழுத்தைக் குறிக்கிறதோ அது மாறவேயில்லை. "அ' என்பது பல வடிவங்களில் எழுதப்பட்டாலும் அது "ஆனா' என்றே உச்சரிக்கப்பட்டு வருகிறது. "ஆ' என்பது எப்படி எழுதப்பட்டாலும் அது "ஆவன்னா' என்றே உச்சரிக்கப்படுகிறது. கீழடி ஆய்வுகளில் கிடைத்துள்ள கீறல் எழுத்துகளும் அப்படிப்பட்டவைதான்.