மாவலி பதில்கள்!

nnn

நித்திலா, தேவதானப்பட்டி

மூன்று சீசன் "பிக் பாஸ்' நிகழ்ச்சியில் எதில் கமல் அசத்தினார்?

அரசியல் கட்சி ஆரம்பிப்பதற்கு முன்பாக, அரசியல் பேசிய பிக் பாஸ் நிகழ்ச்சியில்தான் கமல் அசத்தல். அதுதான் "ஓவிய'மாகவும் "சினேக'மாகவும் இருந்த சீசன்.

அயன்புரம் த.சத்தியநாராயணன், சென்னை-72

சிறையிலிருந்து சசிகலா விடுதலையாகி வந்தால் என்னென்ன மாற்றங்கள் ஏற்படும்?

உடனடியாக மாற்றம் எதுவும் ஏற்படாதபடி மேலே உள்ளவர்கள் பார்த்துக் கொள்வார்கள். வரும் முன் காப் பது நல்லது என்பதால்தான், சசிகலாவின் சிறை செயல் பாடுகள் குறித்த அறிக்கை கசிய விடப்பட்டுள்ளது. எங்கே அவர் முன்கூட்டியே வெளியே வந்து, ஜெ. சமாதி மீது சத்தியம் அடித்து போட்ட சபதத்தை நிறைவேற்ற வேகம் காட்டுவாரோ என்ற பீதி மட்டும் அவரால் பதவி பறிக்கப்பட்டவர்களுக்கும், அவரால் பதவி கொடுக்கப்பட்டவர்களுக்கும் ரொம்பவே இருக்கிறது.

கே.பி.கே.பாஸ்கர்காந்தி, சிங்கப்பூர்

ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் கலைஞர் வேடத்தில் பிரகாஷ்ராஜ் நடிக்கிறாராமே, ஜெ. கேரக்டர்

நித்திலா, தேவதானப்பட்டி

மூன்று சீசன் "பிக் பாஸ்' நிகழ்ச்சியில் எதில் கமல் அசத்தினார்?

அரசியல் கட்சி ஆரம்பிப்பதற்கு முன்பாக, அரசியல் பேசிய பிக் பாஸ் நிகழ்ச்சியில்தான் கமல் அசத்தல். அதுதான் "ஓவிய'மாகவும் "சினேக'மாகவும் இருந்த சீசன்.

அயன்புரம் த.சத்தியநாராயணன், சென்னை-72

சிறையிலிருந்து சசிகலா விடுதலையாகி வந்தால் என்னென்ன மாற்றங்கள் ஏற்படும்?

உடனடியாக மாற்றம் எதுவும் ஏற்படாதபடி மேலே உள்ளவர்கள் பார்த்துக் கொள்வார்கள். வரும் முன் காப் பது நல்லது என்பதால்தான், சசிகலாவின் சிறை செயல் பாடுகள் குறித்த அறிக்கை கசிய விடப்பட்டுள்ளது. எங்கே அவர் முன்கூட்டியே வெளியே வந்து, ஜெ. சமாதி மீது சத்தியம் அடித்து போட்ட சபதத்தை நிறைவேற்ற வேகம் காட்டுவாரோ என்ற பீதி மட்டும் அவரால் பதவி பறிக்கப்பட்டவர்களுக்கும், அவரால் பதவி கொடுக்கப்பட்டவர்களுக்கும் ரொம்பவே இருக்கிறது.

கே.பி.கே.பாஸ்கர்காந்தி, சிங்கப்பூர்

ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் கலைஞர் வேடத்தில் பிரகாஷ்ராஜ் நடிக்கிறாராமே, ஜெ. கேரக்டர்தான் கதாநாயகி என்றால் கலைஞர் அதில் வில்லன்தானே?

ஜெ. முதல்வராகும் வரையிலான காட்சிகள்தான் படத்தில் இருக்கும் என கதாநாயகியாக நடிக்கும் கங்கனா ரணவத் முன்கூட்டியே தெரிவித்து, சர்ச்சையைக் குறைக்க முயன்றிருக்கிறார். அப்படிப் பார்த்தாலும், தேர்தல் களத்தில் ஜெ.வுக்கு எதிரி கலைஞர்தான். அதுபோல கலைஞரின் அரசியல் வாழ்வை படமாக எடுத்தால் அதில் ஜெ.வும் ஓர் எதிரியாக காட்டப்படுவார். குடும்ப பந்தமில்லாத ஜெ.வின் வாழ்க்கையை மூன்றுபேர் தனித்தனியாகப் படமாக்குகிறார்கள். கலைஞரின் குடும்பத்தைப் பொறுத்தவரை, அவரது பேரன்களில் 3 பேர் தயாரிப்பாளர்களாகவும் நடிகர்களாகவும் இருக்கிறார்கள். கலைஞரின் வாழ்க்கை வரலாற்றைப் படமாக்கும் முயற்சி ஒருவரிடமும் இல்லை.

வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு

குக்கரில் சமைப்பதை நிறுத்தினால் இதயநோய்களை தடுக்கலாம் என்று ஆய்வு கூறுகிறதாமே?

சோற்றை வடிப்பதால் அதில் உள்ள சத்து போய் விடுகிறது என்று சில ஆண்டுகளுக்கு முன் வெளியான ஆய்வுகள் கூறின. இப்போது சோற்றை வடிக்காமல் குக்கரில் சமைப்பது நோயை உண்டாக்குகிறது என்று ஆய்வுகள் கூறுகின்றன. வாழ்க்கை எப்போதும் இக்கரைக்கு அக்கறை பச்சைதான். "சாப்பிட்டது செரிக்கும் வகையில் வேலை பார்த்து, நல்ல பசியெடுத்த பின் அடுத்தவேளை சாப் பிடுவது என்பதை வழக்கப் படுத்திக்கொண்டால் மருந்து வேண்டாம் உடம்புக்கு' என்கிறார் வள்ளுவர்.

kkk

நித்திலா, நெய்வேலி

அப்துல்கலாம்?

காந்தி, நேரு போன்ற தலைவர்களுக்குப் பிறகு, இந்தியாவில் கட்சி எல்லை களைக் கடந்து கொண் டாடப்படுபவர் கலாம். தமிழ் நாட்டு இளைஞர்களுக்கு காம ராஜருக்குப் பிறகு கிடைத்த ரோல் மாடல். அரசியல் மீது வெறுப்பு கொண்ட தலைமுறைக்கு அரசிய லற்ற அரசியல் பிடிக்கிறது. அதில் அவர்களுக்குப் பிடித்த தலைவ ராக அப்துல்கலாமைப் பார்க் கிறார்கள். உண்மையில் அவர் தலைவரல்ல. அறிவும் அன்பும் கொண்ட மனிதர். கலாம்கள் தேவைப்படும் காலம் இது.

___________

காந்தி தேசம்

சு.பிரபாகர், தேவகோட்டை

காந்திஜி இன்று இருந் திருந்தால் நாட்டில் நடக்கும் தொடர் கொள்ளை, கொலை உள்ளிட்ட குற்றங்களை அகிம்சை வழியில் மாற்றியிருக்க முடியுமா?

காலம் யாருக்காகவும் காத்திருப்பதில்லை. காலத்தை உணர்ந்து செயல்படுகிறவர்கள் வரலாறா கிறார்கள். காந்தி, இந்தியாவின் தவிர்க்க முடியாத வரலாறு. அவர் வலியுறுத்திய அகிம்சை, சத்யாகிரகம், ராட்டை, தர்மகர்த்தா முறை பொருளாதாரம் இவை யெல்லாம் இன்றைய அளவில் எந்தளவுக்குப் பயன்படும் என்பது விவாதத்திற்குரியது. அத்துடன், ஒரு நாட்டில் குற்றங்களை ஒடுக்கி, சட்டம்-ஒழுங்கை நிலைநாட்ட அரசு நிர்வாகம் என்பது அவசியம். தனி மனித கருத்து களும் தத்துவங்களும் அனைவரையும் மாற்றிவிடாது. எனினும், காந்தியின் சிந்தனைகளும் செயல்பாடுகளும் இன்றும் தேவைப்படுகின்ற இடம் எது என்றால், காந்தி யை ஒருவர் எந்தக் கோணத்தில் பார்த்துப் புரிந்து கொள்கிறார், எந்தப் பக்கம் நிற்கிறார் என்பதைப் பொறுத்தது. காந்தியிடமிருந்து முரண்பட்டவர் அம்பேத்கர். காந்தியிடமிருந்து விலகியவர் பெரியார். காந்தியின் பாதைக்கு நேர் எதிரான பாதையைத் தேர்ந்தெடுத்தவர் நேதாஜி. காந்தியுடன் தொடர்பில்லாமல் தன் பாதையில் பயணித்தவர் பகத்சிங். இவர்கள் இந்த நாட்டில் ஏற் படுத்தியுள்ள தாக்கம் காந்தியின் சிந்தனைகளிலிருந்து மாறுபட்டவை. ஆனால், காந்தியைப் போலவே மக்களிடம் நல்லிணக்கம், சமஉரிமை, அன்பு ஆகியவை தழைக்க வேண்டும் என விரும்பியவர்கள். காந்திக்கு இடதுபுறம் இவர்கள் நிற்பதாக எண்ணிக்கொண்டால், காந்தியின் வலதுபுறம் நிற்பவர்கள் இந்த சிந்தனைகளுக்கு நேரெதிராக மதத்தின் பெயரால் பிரிவினை, சாதியின் பெயரால் வன்முறை, பாலின வேறுபாட்டின் அடிப்படை யில் கொடுமைகள், வர்க்கரீதியான ஒடுக்குமுறை இவற்றைக் கையாள்பவர்கள். காந்திக்கு வலதுபுறம் நிற்பவர்கள் ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே மதம், ஒரே கலாச்சாரம் என்பதைக் கட்டாயமாக்கத் துடிப்பவர்கள். காந்திக்கு இடதுபுறம் நிற்பவர்கள் ஒன்றுபட்ட இந்தியா, ஒவ்வொரு மொழிக்கும் பாதுகாப்பு, அவரவர் பண்பாட்டின் சிறப்பு, அனைத்து மதங்களுடனும் நல்லிணக்கம் இவற்றை வலியுறுத்துபவர்கள். இந்த இரண்டு பக்கத்தில் நீங்கள் எந்தப் பக்கம் நிற்கிறீர்கள் என்பதன் அடிப்படையில்தான் காந்தி எந்தளவுக்குத் தேவைப்படுகிறார் என்பதை உணர முடியும்.

(காந்தி தேசம் நிறைவுற்றது)

nkn181019
இதையும் படியுங்கள்
Subscribe