பா.ஜெயப்பிரகாஷ், பொள்ளாச்சி

"தமிழகத்தை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். மத்திய அரசை மட்டும் நீங் கள் பார்த்துக் கொள்ளுங்கள்' என்கிறாரே அமைச்சர் ராஜேந்திரபாலாஜி. அந்தள வுக்கு பா.ஜ.க.வுக்கு சவால் விடும் தைரியம் எப்படி வந்தது?

-"மோடி எங்கள் டாடி' என் கிற உரிமையில் வந்திருக்கலாம்.

மா.சந்திரசேகர், மேட்டுமகாதானபுரம்

Advertisment

"கடைமடையில் தேக்கி வைக்க முடியாத தண்ணீர் கடலுக்குள் செல்வதால் விவசாயிகளுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை' என் கிறாரே அமைச்சர் காமராஜ்?

பெரிய பெரிய அணை களைக் கட்டிய பெருந்தலைவர் காமராஜர் ஆட்சிக்காலத்திலும் அதிக அணைகள் கட்டப் பட்ட கலைஞர் ஆட்சிக்காலத் திலும் கூட காவிரி டெல்டா வின் கடைமடைப் பகுதி களுக்குச் செல்லும் தண்ணீ ரைத் தேக்கவில்லை. நாகை மாவட்டத்தைக் கடந்து புதுச் சேரி யூனியன் பிரதேசத்தின் காரைக்கால் மாவட்டம் வரை உள்ளது காவிரி டெல்டாவின் கடைமடைப் பகுதி. காவிரி ஆற்றில் புதுச்சேரிக் கும் உரிமை உள் ளது. கர்நாடக அரசு அணைகள் கட்டி நம்மை வச்சி செய்வதுபோல நாமும் புதுச்சேரி யை வஞ்சிக்கக் கூடாது. கடைமடையில் தண்ணீரைத் தேக்காமல், பெருமளவில் பாசன வாய்க்கால்களை நோக்கித் திருப்பி விடவேண்டும். அத்துடன், கடலில் கலக்கும் நீரினால் பல்லுயிர்ச் சூழல் பாதுகாக்கப்படும். இல்லை யென்றால், இயற்கையின் சமநிலை மாறிவிடும். நமது அமைச்சர்கள் எப்போதாவது உருப்படியாகப் பேசுவார்கள். டெல்டா மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சர் காமராஜ் இப்போது பேசியிருக்கிறார்.

அயன்புரம் த.சத்தியநாராயணன், சென்னை-72

Advertisment

தியாகராய நகர் திருப் பதி கோவில் அறங்காவலராக சேகர் ரெட்டி நியமிக்கப்பட்டி ருக்கிறாரே?

கறுப்புப் பணத்தை ஒழிப்பதற்காக அரசாங்கம் அச்சடித்த 2000 ரூபாய் தாளையே தன் வீட்டில் பதுக்கி வைத்திருந்த திறமைசாலி யாயிற்றே. "கோவில் உண்டிய லில் குவியும் பணத்தை நிர் வகிக்க அவர்தான் சரியானவ ராக இருப்பார்' என நினைத்திருக்கலாம்.

மு.செ.மு.புகாரி, சித்தார்கோட்டை

நாடு பல சிக்கல்களை சந்திக்கிற நிலையில், அமித்ஷா போன்றோர் மொழிப் பிரச்சினையைக் கிளப்பி திசைதிருப்பி விடு கிறார்களே?

உண்மையான சிக்கல் களை மறைத்து, தேவை யில்லாத சிக்கல்களை உருவாக்குவதன் மூலம் தங்களைப் பலப்படுத்திக் கொள்ளலாம் என நினைப் பது ஹிட்லர் -கோயபல்ஸ் ஃபார்முலா. இன்றைய நிலையில் யார் ஹிட்லர், யார் கோயபல்ஸ் என்பது உங்களின் முடிவுக்குட்பட் டது.

ச.புகழேந்தி, மதுரை-14

எஸ்.ஏ.சந்திரசேகர் தன்னுடைய அடுத்த படத் துக்கு "கேப்மாரி என்கிற சி.எம்.' எனப் பெயர் வைத்துள் ளது பற்றி?

விமர்சிக்கும் உரிமை எல்லாருக்கும் உண்டு. ஆனால்,"கோமாளி' படத்தில் ரஜினி கட்சி ஆரம்பிப்பது பற்றிய நகைச்சுவையான காட்சிக்கே பொங்கி எழுந்த கோடம்பாக்கத்தார் சி.எம். போன்ற பதவியை நக்கலடிப் பது வேடிக்கையான வேதனை. கொடநாட்டில்கூட ggபார்க்க முடியாதபடி விரட்டியவர் முதல்வராக இருந்தபோது இப்படி ஒரு பெயர் வைத் திருந்தால் கெத்தாக இருந் திருக்கும். ஆனால், கொத்து புரோட்டா போட்டிருப் பார்களே!

____________

காந்தி தேசம்

கே.பி.கே.பாஸ்கர் காந்தி, சிங்கப்பூர்

இந்தியாவின் பொரு ளாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள சூழலில் காந்தியப் பொருளாதாரம் கை கொடுக்குமா?

காந்தியின் பொருளாதாரச் சிந்தனைகள் அவர் காலத்திலேயே விமர்சனத்திற்குட்பட்டன. அதே நேரத்தில், கதர் விற்பனை போன்ற சோதனை முறைகளை நடைமுறைப்படுத்தும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன. காந்தியப் பொருளாதாரம் என்பது கிராமப்புற மக்களின் பழைய வாழ்க்கை முறை சார்ந்த பொருளாதாரக் கொள்கை. தன்னுடைய போராட்டங்களில் அவர் வகுத்த நெறிமுறைகள் போலவே, பொருளாதாரத்திலும் நெறிமுறைகளை வகுத்திருந்தார். எளிமையும் நேர்மையும்தான் அவரது பொருளாதாரத்தின் அடிப்படைக் கோட்பாடு கள். கிராமப்புறங்களில் இயற்கையான முறையில் விவசாயத்தை மேம்படுத்த வேண்டும். அந்தந்த பகுதிகளுக்குரிய கைத்தொழில்கள் மேம்படுத்தப்பட வேண்டும். நீர்மேலாண்மை உள்ளிட்டவை சிறப்பாகக் கையாளப்பட வேண்டும். அதன்மூலம் கிடைக்கும் பலன்களைக் கொண்டு, குறைவான தேவைகளுடன் தன்னிறைவான வாழ்க்கை வாழ வேண்டும் என்பது காந்தியின் பொருளாதாரக் கோட்பாடு களில் முக்கியமானது. இயந்திரமயமாவதை காந்தி எதிர்த்தார் என்றபோதும், தேவைக்கான அளவு இயந்திரங்களைப் பயன்படுத்தி, மனிதர்களின் வேலைவாய்ப்பைக் குறைக்காமல் வேலைச் சுமையைக் குறைக்கவேண்டும் என எதிர்பார்த்தார். பெருந் தொழில் நிறுவனங்களை அவர் வலியுறுத்தவில்லை. அந் தந்தப் பகுதிகளில் கிடைக்கும் பொருட்களைக் கொண்டு சிறிய அலகிலான தொழில்களைச் செய்ய வேண்டும் என்பதும், அதில் தனி முதலாளி, கூட்டு முதலாளி என்றில்லாமல் அறக்கட்டளைகள் மூலமாக நிர்வகிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். இதற்கு "தர்மகர்த்தா முறை' என்று பெயர். இன்றைய உலகமும் இந்தியாவும் இதற்கு நேர்மாறாக உள்ளன. சிறுதொழில் நிறுவனங்களை பெருந்தொழில் கள் அழித்து, தனிப்பெரும் முதலாளிகள் மட்டுமே இந்தியாவின் பொருளாதாரத்தை தீர்மானிக்கும் நிலை உள்ளது. தன்னிறைவு என்ற வார்த்தை நகரம் -கிரா மம் என எவரிடமும் பார்க்க முடியவில்லை. நுகர்வுக் கலாச்சார சூழலும் சந்தைப் பொருளாதாரமும் ஒவ்வொரு மனிதனின் தேவையையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பொருளாதாரத்திலும் வணிகத்திலும் நேர்மையை காந்தி எதிர்பார்த்தார். ஆனால், வணிகத்தில் லாபம் ஒன்றே குறிக்கோளாக இருக்கிறது. அதிலும் அரசியல் தொழிலில் "கொள்ளை லாபமே' ஒற்றைக் குறிக் கோள்.