பா.ஜெயப்பிரகாஷ், பொள்ளாச்சி

"காஷ்மீரில் புதிய சொர்க்கம் உருவாக்கப்படும்' என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியிருக்கிறாரே?

உயிருடன் இருப்பவர்கள் யாராவது சொர்க்கத்துக்கு சென்றிருக்கிறார்களா? சிறப்புத் தகுதி, மாநில உரிமை, கருத்துச் சுதந்திரம் என அனைத்து ஜனநாயக நெறிமுறைகளும் கொலை செய்யப்பட்ட நிலத்தில் சொர்க்கத்தை படைப்பது அதிசயமல்ல.

Advertisment

மு.ரா.பாலாஜி, கோலார் தங்கவயல்

கர்நாடகத்தில் ஜாதி அரசியல், தமிழ்நாட்டில் ஜாதி அரசியல் என்ன வேறுபாடு?

தமிழ்நாட்டில் அந்தந்த தொகுதியிலும் செல்வாக்குமிக்க சாதிகளைச் சார்ந்தவர்கள் வேட்பாளர்களாக நிறுத்தப்படு கிறார்கள். ஆனால், வேட்பாளர்களை நிறுத்திய தலைவர்களான அண்ணா, கலைஞர், எம்.ஜி.ஆர்., ஜெ. யாருமே பெரும்பான்மை சாதியைச் சேர்ந்த தலைவர்கள் அல்ல. கர்நாடகாவில் தலைவர்களின் சாதிதான், எந்தக் கட்சிக்கு எத்தனை சீட், யாரை எங்கே நிறுத்துவது என எல்லாவற்றையும் தீர்மானிக்கிறது. அடிக்கடி ஆட்சி கவிழவும், அரசு அமைக்கவும் சாதி பலமே காரணமாகிறது.

Advertisment

பி.சாந்தா, மதுரை-14

மு.க.ஸ்டாலின், சு.வெங்கடேசன் எம்.பி. உள்ளிட்டோர் வலியுறுத்தியதுபோல கீழடியில் சர்வதேச அருங்காட்சியகம் அமைக்கப்படுமா?

அமைக்க வேண்டியது அவசியம். அதை மத்திய அரசு செய்ய வேண்டும். அதற்கு முன்னதாக, மத்திய அரசின் தொல்லியல்துறை 3 கட்டங்களாக நடத்திய ஆய்வின் முடிவுகளை மறைக்காமல் வெளியிடவேண்டும். அது சர்வதேச அளவில் தமிழின் தொன்மையை உணர்த்தும்.

ddaf

வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு

"தூய்மை இந்தியா' திட்டத்துக்காக மோடிக்கு அமெரிக்காவில் பில்கேட்ஸ் அறக்கட்டளை விருது அளிக்கப்பட்டது பற்றி?

130 கோடி மக்கள்தொகை கொண்ட நாட்டின் பிரதமர் பொறுப்பில் இருப்பவர், தனது ஆட்சிக்காலத்தில் கொண்டுவந்த திட்டத்திற்காக அமெரிக்கா போன்ற வல்லரசு நாட்டின் அறக்கட்டளை வழங்கும் விருது முக்கியமானது. அதைவிட முக்கியமானது, பதவி அதிகாரம் எதுவும் வேண்டாம் என்ற இலட்சியத்துடன் சமுதாய சீர்திருத்தப் பணியை மட்டுமே ஏற்றுக் கொண்டு போராட் டம், சிறை, சட்டத்திருத்த முயற்சிகள் இவற் றின் மூலமாக ஆயிரக்கணக்கான ஆண்டுகால அடிமைத்தனத்திலிருந்து மக்களை மீட்டு மானமும் அறிவும்மிக்க சமுதாயத்தைப் படைக்கப் பாடுபடுவோருக்கு தரப்படும் விருது மிகுந்த மதிப்பு வாய்ந்தது. பெரியார் தனது 95 வயதுவரை மேற்கொண்ட இந்த அசாத்தியப் பணியை அவருக்குப் பிறகு தொடர்ந்து மேற்கொள்ளும் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணிக்கு அமெரிக்காவின் மனிதநேயர் சங்கத்தின் சார்பில் "வாழ்நாள் சாதனையாளர் விருது' வழங்கப்பட்டுள்ளது. 75 ஆண்டுகாலமாக வழங்கப்படும் இந்த விருதினைப் பெறும் முதல் இந்தியர் என்ற பெருமையையும் வீரமணி பெற்றிருக்கிறார். மோடி அமெரிக்காவில் இருந்த நேரத்தில், பெரியாரின் தத்துவமும் அங்கே நிலை கொண்டது.

நித்திலா செல்வராஜ், சென்னை

காமராஜர், கக்கன், ப.ஜீவானந்தம் போன்ற தூய தலைவர்களுடன் இன்றைய தமிழக அரசியலில் யாரை ஒப்பிடலாம்?

இன்றைய அரசியலுக்கு தூய தலைவர் கள் எதற்கு?

________

காந்தி தேசம்

மீஞ்சூர் கோதை ஜெயராமன், சென்னை

நேர்மையாளரும் கறை படியாத கரங்களுக்கு சொந்தக் காரருமான லால்பகதூர் சாஸ்திரி, காந்திஜியுடன் கொண்டிருந்த நட்பு எப்படிப்பட்டது?

dafdaகாந்தி பிறந்து சரியாக 35 ஆண்டுகள் கழித்து, அவர் பிறந்தநாளிலேயே 1904 அக்டோபர் 2-ந் தேதி பிறந்தவர் லால்பகதூர் சாஸ்திரி. நேரு போல, பட்டேல் போல, ராஜாஜி போல காந்தியிடம் சாஸ்திரி அத்தனை நெருக்கமாகப் பழகியவர் அல்ல. ஆனால், காந்தியின் எளிமை, நேர்மை இவற்றால் ஈர்க்கப்பட்டு, அதனை முழுமையாகக் கடைப் பிடித்தவர். உத்தரபிரதேசத்தில் மிகவும் ஏழ்மையான குடும்பத்தில், புத்தக மூட்டையை தலையில் சுமந்துகொண்டு கங்கை ஆற்றைக் கடந்து சென்று படித்தவர் சாஸ்திரி. சமுதாயத்தின் முன்னேற்றத்திற்கு சாதி என்பது பெருந்தடை என்பதை உணர்ந்த அவர், தன் பெயருக்குப் பின்னால் சாதிப் பட்டத்தைப் போட்டுக்கொள்ளாமல், தனது படிப்பின் மூலம் கிடைத்த "சாஸ்திரி' என்ற பட்டத்தைப் போட்டுக்கொண்டார். உயர்கல்வி கற்றிருந்தவர், ஒத்துழையாமை இயக்கத்திற்கு காந்தி அழைத்ததும், தன் படிப்பு பற்றிக் கவலைப்படாமல் நாட்டு விடுதலைக்காக அந்த சத்தியாகிரகப் போராட்டத்தில் பங்கேற்றார். அவரது குடும்ப வழக்கப்படி திருமணத்திற்கு வரதட்சணை வாங்கியாக வேண்டும். சாஸ்திரியோ பெயரள வுக்கு வரதட்சணையாக காந்தியின் அடையாளமான ராட்டை யையும் சில மீட்டர் கதர்த்துணியையுமே பெற்றுக் கொண்டார்.

இல்லற வாழ்வைவிட சிறை வாழ்வே அவரை அதிகம் வரவேற்றது. தன் மகள் நோய்வாய்ப்பட்டிருப்பதை அறிந்து பரோலில் வந்தார் சாஸ்திரி. சிகிச்சை பலனளிக்கவில்லை. மகள் இறந்ததும், செய்ய வேண்டிய காரியங்களை செய்துவிட்டு, மகளின் உடல்நிலையைக் காட்டித்தானே பரோல் கிடைத்தது. மகளே இல்லாதபோது பரோலில் ஏன் இருக்க வேண்டும் என பரோல் காலம் முடியும் முன்பே சிறைக்குச் சென்றுவிட்டார். கட்சி வழங்கிய சொற்ப நிதியில்தான் அவர் வாழ்க்கை ஓடியது. அதில் தன் மனைவி சிக்கனம் பிடிக்கிறார் என்பதை அறிந்ததும், மாதத் தொகையை இன்னும் குறைத் துக் கொடுக்கும்படி கட்சியிடம் தெரிவித்தவர் சாஸ்திரி. காந்தியுடன் பழகுவது வேறு. காந்தியைப்போல வாழப் பழகுவது வேறு. அந்த இரண்டாவது வகைதான் கடினம். அதை சாதித்துக் காட்டியவர் லால்பகதூர் சாஸ்திரி.