அ.குணசேகரன், புவனகிரி

இனி பேனர் வைக்கக்கூடாது என்று அரசியல் கட்சித் தலைவர்கள் கூறியுள்ளதை அவர்களின் கட்சியினர் கடைப்பிடிப்பார் களா?

மு.க.ஸ்டாலின் பலமுறை சொல்லியிருக் கிறார். ஆனாலும் அவர் பிறந்தநாளுக்கு பேனர் வைப்பதை கட்சியினர் நிறுத்த வில்லை. தலைவர்களுக்கு டி.வி., மேடை, பத்திரிகை எனப் பல வழிகளில் விளம்பரம் கிடைக்கும். கட்சிக்காரர் கள் தங்களை விளம் பரப்படுத்திக்கொள்ள பேனர் மட்டுமே வசதியாக இருக் கிறது, அது சுபஸ்ரீக்களின் உயிரைக் குடித் தாலும்கூட.

mmm

Advertisment

வண்ணை கணே சன், பொன்னி யம்மன்மேடு.

"ஒருநாள் எனக்கான பொழுது விடியும். அப்போது தமிழக மக்களை தங்கத் தட்டில் வைத்துத் தாங்கு வேன்' என்ற விஜய காந்தின் பேச்சு?

தே.மு.தி.க. என்ற கட்சி ஆரம்பிப்பதற்கு முன்பே 2001 உள்ளாட்சித் தேர்தலில் தனது ரசிகர் மன்றத்தினரைப் போட்டியிடச் செய்தார் நடிகர் விஜய காந்த். 300-க்கும் அதிகமான இடங்களில் தமிழக மக்கள் அவர்களை வெற்றிபெறச் செய்தனர். 2005-ல் தே.மு.தி.க.வைத் தொடங்கினார் விஜயகாந்த். ஓராண்டுக்குள்ளாகவே 2006 சட்டமன்றத் தேர்தலில் பா.ம.க.வின் கோட்டையில் விஜயகாந்த்தை வெற்றி பெறச் செய்தனர் தமிழக வாக்காளர்கள். 5 ஆண்டுகளில் அவர் எதிர்க் கட்சித் தலைவராகும் அளவுக்கு தொகுதி களைத் தந்தது தமிழகம். இப்படி வாழை இலையில் அவர் பசிக்கேற்ற வெற்றியை பரிமாறிக் கொண்டே வந்தனர் தமிழக மக்கள். அதன் அருமையை உண ராமல் அடுத்தடுத்து அரசியல் களத்தில் அவர் எடுத்த சந்தர்ப்பவாத முடிவுகள் தொடர் தோல்வியைத் தந்து வருகின்றன. தமிழக மக்களை தங்கத் தட்டில் வைத்து விஜயகாந்த் தாங்குவதற்கு முன்பாக, தன் கட்சி நிர்வாகம் எனும் தட்டு எவர் கையில் இருக்கிறது, அதை வைத்து யார், யார் சாப்பிடுகிறார்கள் என்பதைக் கவனித்தாலே போதும்.

Advertisment

மு.ரா. பாலாஜி, கோலார்தங்கவயல்

"ஜிப்ஸி' படத்துக்கு அப்படியென்ன பிரச்சினை. தணிக்கைக் குழு என்னதான் சொல்கிறது?

"வெரி வெரி பேட்' (ஸ்ங்ழ்ஹ் ஸ்ங்ழ்ஹ் க்ஷஹக்) என்ற பாட்டு முன்கூட்டியே வெளியானதிலிருந்தே, மத்திய அரசும் அதன் தணிக்கைத் துறையும் வெரி வெரி பேடாக "ஜிப்ஸி' படத்தைக் கையாள்கின்றன.

பிரதீபா ஈஸ்வரன், தேவூர்மேட்டுக்கடை.

மத்திய அரசின் எந்த திட்டமானாலும், தமிழகத்தில் உடனே நிறைவேற்றப்படுகிறதே?

மக்களுக்கு நன்மை தரும் ரயில்வே திட் டங்கள், தமிழர்களுக்கான வேலை வாய்ப்பு கள் போன்றவை நிறைவேற்றப்படவில்லை. நீட், 5-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு போன்ற எதிர்கால நலனை கேள்விக்குறியாக்கும் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் எஜமானரை மிஞ்சிய அடிமைகளாக இருக்கிறார்கள் தமிழக ஆட்சியாளர்கள்.

பா.ஜெயப்பிரகாஷ், பொள்ளாச்சி

"மனம்தளர வேண்டாம். காங்கிரஸ் உங்களுடன் உள்ளது' என்று சிதம்பரம், டி.கே.சிவக்குமாருக்கு சோனியா ஆறுதல் கூறியுள்ளது போதுமானதா?

காங்கிரஸ் கட்சியே இந்தியா முழுவதும் ஆறுதல் தேடும் நிலையில்தானே இருக்கிறது.

மகேஷ், கே.கே.நகர், சென்னை-93

நாட்டின் வளர்ச்சிக்கு வரி போடுவது நல்லதா? குறைப்பது நல்லதா?

"போட்டாலும் சாதனை... குறைத்தாலும் சாதனை...' எனத் தனக்குத்தானே தம்பட்டம் அடித்துக்கொள்கிறது பா.ஜ.க. அரசு.

காந்தி தேசம்

அயன்புரம் த.சத்தியநாராயணன், சென்னை-72

பண்டிகைக் கொண்டாட் டங்களை காந்திஜி விரும்பியது உண்டா? எந்த பண்டிகை அவ ருக்கு ரொம்ப பிடிக்கும்?

போர்பந்தரில் காந்தியின் பூர்வீக வீட்டுக்குப் பக்கத்தில் ஜெயின் சமூகத்தினர் நிறைய பேர் வசித்தனர். அவர்கள் வீட்டுப் பண்டிகைகளில் இந்து வைசியரான காந்தி கலந்துகொள்வார். மதம் என்பது கடவுளுக்கும் மனிதனுக்குமான இடைத்தரகரில்லாத உறவு என்பது காந்தியின் கோட்பாடு. கடவுளுடன் மனிதன் உரையாடுவதே உண்மையான ஆன்மிகம் என்று நம்பினார். மேலும், உண்மையே கடவுள் என்பதும் அவரது பார்வையாக இருந்தது. யார் எந்த மதத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும், உண்மையாக நடந்துகொள்ளாமல் கடவுளை வழிபட்டு பக்திமானாகக் காட்டிக் கொள்வதை அவர் விரும்பியதில்லை. ஒரு மதத்திலிருந்து இன்னொரு மதத்திற்கு மாறுவதையும் அவர் கண்டித்தார். மதம் மாற்றம் செய்ய விரும்பியவர்களை விமர்சித்தார். அதே நேரத்தில், எல்லா மதப் பண்டிகைகளையும் அவர் சமமாகவே பார்த்தார். தீபாவளி, ரம்ஜான், கிறிஸ்துமஸ் உள்ளிட்ட எந்த பண்டிகையையும் வெறுத்ததில்லை. எந்தப் பண்டிகையையும் தனிப்பட்ட முறையில் அவர் கோலாகலமாகக் கொண்டாடியதில்லை. ராமர் பெயரை உச்சரித்த காந்தி, ராமநவமிதான் சிறப்பானது என்றோ, கிருஷ்ண ஜெயந்திதான் முக்கியமான பண்டிகை என்றோ சொன்னதில்லை. முஸ்லிம் லீக் தலைவர் முகமது அலி ஜின்னா, எல்லை காந்தி எனப்பட்ட கான் அப்துல் கஃபார் கான் ஆகியோருடன் ரம்ஜான் வாழ்த்துகளைப் பரிமாறி யிருக்கிறார். மத நம்பிக்கை கொண்ட காந்திக்கு, தனிப்பட்ட பண்டிகைகளைவிட, அன்றாட வழிபாடே சிறப்பானதாகத் தெரிந்தது. ஆண்டுக்கு ஒரு நாள் இருநாள் கொண்டாடுவது முழுமையான ஆன்மிகமாகாது என்பதும், அன்றாடம் வழிபாடு மேற்கொண்டு உண்மையாக நடப்பதே ஆன்மிகம் என்பதும் காந்தியின் கொள்கை. அவர் சுட்டுக் கொல்லப்பட்ட நேரத்தில்கூட, பிரார்த்தனைக்காகத்தான் சென்று கொண்டிருந்தார். காந்தியின் விருப்பமான பண்டிகை என்று எதையும் சொல்ல முடியாது. ஆனால், "காந்தி ஜெயந்தி' என்பது நாட்டின் திருநாளாக மாறிவிட்டது. அதுதான் அவரது பலம்.