மாவலி பதில்கள்!

ff

சோ.பூவேந்தஅரசு, சின்னதாராபுரம்

ஆட்சிக்கு வரும் எல்லா அரசியலாரும் ஒருநாள் சிறைக்குப் போகும் நிலைமை இந்தியாவில் தொடர்கிறதா?

"பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்கின்னா பிற்பகல் தாமே வரும்' என்கிற வள்ளுவரின் வாக்கும், "ஒவ்வொரு விசைக்கும் அதற்கு சமமான எதிர்விசை உண்டு' என்கிற நியூட்டனின் மூன்றாவது விதியும் இன்றைய- அன்றைய ஆட்சியாளர்களுக்கு கச்சிதமாகப் பொருந்துகிறது.

aa

வாசுதேவன், காடுகுடி, பெங்களூரு

ஒரு இட்லி ஒரு ரூபாய்க்கு விற்கிற மூதாட்டிக்கு உதவ முன் வந்திருக்கிறாரே மகேந்திரா குழுமத் தலைவர்?

கோவை அருகே கமலாத்தாள் என்ற மூதாட்டி, விறகு அடுப்பில் இட்லி சுட்டு, அதனை சட்னி, சாம்பாருடன் ஒரு ரூபாய்க்கு விற்கின்ற காணொலி காட்சி பரவியது. சமூக வலைத்தளங்களை அதிகம் கவனிக்கக்கூடியவ ரான, மகேந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மகேந்திரா, “"நம் ஒட்டுமொத்த உழைப்பும் கமலாத்தாள் போன்றவர்களின் உழைப்புக்கு முன் கால்தூசுக்கு ஈடாகாது'’ என்று குறிப்பிட்டிருப்பத

சோ.பூவேந்தஅரசு, சின்னதாராபுரம்

ஆட்சிக்கு வரும் எல்லா அரசியலாரும் ஒருநாள் சிறைக்குப் போகும் நிலைமை இந்தியாவில் தொடர்கிறதா?

"பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்கின்னா பிற்பகல் தாமே வரும்' என்கிற வள்ளுவரின் வாக்கும், "ஒவ்வொரு விசைக்கும் அதற்கு சமமான எதிர்விசை உண்டு' என்கிற நியூட்டனின் மூன்றாவது விதியும் இன்றைய- அன்றைய ஆட்சியாளர்களுக்கு கச்சிதமாகப் பொருந்துகிறது.

aa

வாசுதேவன், காடுகுடி, பெங்களூரு

ஒரு இட்லி ஒரு ரூபாய்க்கு விற்கிற மூதாட்டிக்கு உதவ முன் வந்திருக்கிறாரே மகேந்திரா குழுமத் தலைவர்?

கோவை அருகே கமலாத்தாள் என்ற மூதாட்டி, விறகு அடுப்பில் இட்லி சுட்டு, அதனை சட்னி, சாம்பாருடன் ஒரு ரூபாய்க்கு விற்கின்ற காணொலி காட்சி பரவியது. சமூக வலைத்தளங்களை அதிகம் கவனிக்கக்கூடியவ ரான, மகேந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மகேந்திரா, “"நம் ஒட்டுமொத்த உழைப்பும் கமலாத்தாள் போன்றவர்களின் உழைப்புக்கு முன் கால்தூசுக்கு ஈடாகாது'’ என்று குறிப்பிட்டிருப்பதுடன், கமலாத்தாளுக்கு கேஸ் அடுப்பு உள்ளிட்ட வசதிகள் செய்து தருவதாகத் தெரிவித்திருந்தார். தொழில்நுட்ப வளர்ச்சியால் கமலாத்தாள் போன்றவர்கள் கார்ப்பரேட் நிறுவனங்களின் பார்வைக்குப் பட்டு உதவிகள் கிடைப்பது சிறப்பு. ஆனால், கமலாத்தாள்களின் இட்லி வணிகத்தையும் கார்ப்பரேட்டுகள் விழுங்கிவிடக்கூடாது.

கே.ஆர்.உபேந்திரன், தஞ்சாவூர்

""அரசு, நீதித்துறை, ராணுவத்தை விமர்சிப்பதை தேசத் துரோகமாகக் கருதக்கூடாது. நீதித்துறை விமர்சனத்துக்கு அப்பாற்பட்டது கிடையாது. நீதித்துறையில் விமர்சனங்களை வரவேற்கிறேன்'' என உச்ச நீதிமன்ற நீதிபதி தீபக் குப்தா கூறியிருப்பது பற்றி?

ஜனநாயக நாட்டில் எதுகுறித்தும் கருத்து தெரிவித்திட உரிமை உண்டு. ஆனால் நடைமுறையில், அதிகார மையங்களையும் புனிதப்படுத்தப்படும் அம்சங்களையும் நோக்கி கேள்வி எழுப்பினால் "ஆன்ட்டி இந்தியன்'’ என்றும், "அர்பன் நக்சல்' என்றும் முத்திரை குத்தப்படுகிறது. ராணுவத்தின் மீது பொதுமக்கள் உள்ளிட்ட பலருக்கும் மதிப்பு உண்டு. ஆனால், ராணுவத்தின் உள்நிலை என்ன என்பதை ஒரு ராணுவ வீரரே பேசி வெளியிட்ட காணொலி அம்பலப்படுத்தியது. நீதிமன்றம் வழங்கும் தீர்ப்புகளுக்கு உள்நோக்கம்தான் கற்பிக்கக் கூடாதே தவிர, அது குறித்து கருத்தே தெரி விக்கக்கூடாது என்கிற கட்டுப்பாடு கிடையாது. நீதித்துறை பற்றி நீதிபதிகளே பேட்டியளித்த நாடு இது. இந்த நிலையில்தான், "விமர்சனங்களை வரவேற்கிறேன்' என நீதிபதி தீபக் குப்தா தெரிவித்திருப்பது கவனத்திற்குரியது.

அயன்புரம் த.சத்தியநாராயணன், சென்னை-72

"நிழல்கள்'’ராஜசேகர் மறைவு?

"பொன்மாலைப் பொழுது' பாட்டுக்கு வாயசைத்து நடித்த "நிழல்கள்' ராஜசேகரை விட, இரட்டை இயக்குநர்களில் ஒருவராக, 80-களின் இளைஞர்களுக்கு பொன்மாலைப்பொழுதாக அமைந்த "பாலைவனச்சோலை' ராஜசேகரின் நினைவுகள் தமிழ்த் திரையில் எப்போதும் நிழலாடும்.

லட்சுமி செங்குட்டுவன், வேலூர் (நாமக்கல்)

மோடி ஆட்சியின் 100 நாட்கள் எப்படி?

இன்னும் மிச்சம் எத்தனை நாட்கள் இருக் கிறதோ என அனைத்து தரப்பு மக்களையும் அதிர வைத்த சாதனை, 100 நாட்களுக்குரியது.

__________

காந்தி தேசம்

மீஞ்சூர் கோதை ஜெயராமன், சென்னை

காந்தி-ப.ஜீவானந்தம் நட்பு பற்றி?

இருவருக்குமானது நட்பு அல்ல. தலைவருக்கும் தொண்டருக்குமான அன்பு. காந்தி கையிலெடுத்த அகிம்சை வழி சுதந்திரப் போராட்டம் பலரையும் கவர்ந்தது. ஜீவாவும் கவரப்பட்டார். காரைக்குடி அருகே மருதங்குடி- சிராவயல் பகுதியில் காசி விசுவநாதன் என்பவர் நடத்திய ஆசிரமப் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றி வந்தார் ஜீவா. காசி விசுவநாதன் காந்தியப் பற்றாளர். ஜீவாவுக்கும் காந்தியக் கொள்கைகளில் பற்று இருந்ததால், அப்பகுதியில் இருந்த பட்டியல் இன சமுதாய மாணவர்களுக்கு காந்திய நெறிகள் பற்றியும் திருக்குறள் பற்றியும் வகுப்புகள் நடத்தினார். தமிழ் இலக்கியத்தின் மீது ஜீவாவுக்கு காதல் உண்டு. இலக்கியப் பெயர்களை தன்னிடம் பயிலும் மாணவர்களுக்கு சூட்டினார். இதனால் அப்பகுதியில் இருந்தோரிடம் எதிர்ப்பு கிளம்பியபோது அதை ஜீவாவும் காசிவிசுவநாதனும் எதிர்கொண்டனர். ஜீவா அரிவாளால் வெட்டப் பட்டார். அதன்பிறகும் அவரது காந்திய வழி ஆசிரியப் பணி தொடர்ந்தது. காந்தி தனது தமிழகப் பயணத்தில் காரைக்குடியில் தங்கியிருந்த போது சிராவயல் ஆசிரமம் பற்றிக் கேள்விப்பட்டு, அங்கு நேரில் சென்று ஜீவாவை சந்தித்தார். சொத்துகள் ஏதுமின்றி எளிமையாக இருந்த ஜீவாவைப் பார்த்து, “"நீங்கள்தான் இந்த தேசத்தின் சொத்து'’’என்று காந்தி கூறிய சொற்கள் வர லாற்று முக்கியத்துவம் வாய்ந்தவை. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை ஆரம்பகால காந்தியவாதிகள் பலரும் பின்னாளில் தங்களுக்கான அரசியல் பாதையில் பயணித்தனர். காங்கிரசிலிருந்து விலகிய பெரியார், சுயமரியாதை இயக்கத்தைத் தொடங்கி நடத்த, அதில் ஜீவா பங்குபெற்றார். பின்னர், அதிலிருந்து மாறுபட்டு, பொதுவுடைமை இயக்கத்தில் பணியாற்றினார். காந்தியுடன் பயணித்த பல தலைவர்கள், பின்னாளில் அதிகாரத்தை அடைந்து சுகவாழ்வு பெற்றனர். காந்தி வழி அரசியலிலிருந்து விலகினாலும் இறுதிவரை, எளிமையாக வாழ்ந்த அரிய தலைவர் ஜீவா.

nkn200919
இதையும் படியுங்கள்
Subscribe