Advertisment

மாவலி பதில்கள்!

mm

ச.புகழேந்தி, மதுரை 14

தமிழகத்தின் எல்லா அமைச்சர்களின் ஜாதகங்களும் பி.ஜே.பி. வசம் உள்ளதாகச் சொல்கிறார்களே?

Advertisment

அவரவர் துறை ரீதியான ஜாதகங்கள், குடும்ப ரீதியான கிரகங்கள் அனைத்தும் மத்தியில் ஆளும் பா.ஜ.க. வசம் இருக் கிறது. யாருக்கு எப்போது நல்ல நேரம், எப்போது கெட்ட நேரம் என்பதையும் பா.ஜ.க.தான் குறிக்கிறது.

Advertisment

mmm

ஆர்.துரைசாமி, கணபதிபுதூர் -கோவை

வனத் துறைக்கு சொந்தமான நிலத்தை ஆக்கிரமித்த ஜக்கி வாசு தேவ், காவிரி யை மீட்க பயணம் செய் வது ஏமாற்று வேலை இல்லையா?

பாவங் களுக்குப் பரிகாரம் தேடு வது ஆசாமிகளின் வழக்கமாக இருந்தது. இப்போது சாமியார்களே பரிகாரம் தேடவேண்டிய அளவுக்குப் பாவங்களை சுமக்கிறார்கள். யானைகள் செல்லும் தடத்தில் இருந்த காட்டை அழித்து கான்க்ரீட் கட்டடமாக்கிவிட்டு, காவிரி ஓடும் கரை வழியே மோட்டார் பைக்கில் சென்று மரம்நடச் சொல்லி விழிப்புணர்வு ஊட்டு வதுதான் கார்ப்பரேட் ஸ்டைல் ஆன்மிகம்.

கே.ஆர்.உபேந்தி

ச.புகழேந்தி, மதுரை 14

தமிழகத்தின் எல்லா அமைச்சர்களின் ஜாதகங்களும் பி.ஜே.பி. வசம் உள்ளதாகச் சொல்கிறார்களே?

Advertisment

அவரவர் துறை ரீதியான ஜாதகங்கள், குடும்ப ரீதியான கிரகங்கள் அனைத்தும் மத்தியில் ஆளும் பா.ஜ.க. வசம் இருக் கிறது. யாருக்கு எப்போது நல்ல நேரம், எப்போது கெட்ட நேரம் என்பதையும் பா.ஜ.க.தான் குறிக்கிறது.

Advertisment

mmm

ஆர்.துரைசாமி, கணபதிபுதூர் -கோவை

வனத் துறைக்கு சொந்தமான நிலத்தை ஆக்கிரமித்த ஜக்கி வாசு தேவ், காவிரி யை மீட்க பயணம் செய் வது ஏமாற்று வேலை இல்லையா?

பாவங் களுக்குப் பரிகாரம் தேடு வது ஆசாமிகளின் வழக்கமாக இருந்தது. இப்போது சாமியார்களே பரிகாரம் தேடவேண்டிய அளவுக்குப் பாவங்களை சுமக்கிறார்கள். யானைகள் செல்லும் தடத்தில் இருந்த காட்டை அழித்து கான்க்ரீட் கட்டடமாக்கிவிட்டு, காவிரி ஓடும் கரை வழியே மோட்டார் பைக்கில் சென்று மரம்நடச் சொல்லி விழிப்புணர்வு ஊட்டு வதுதான் கார்ப்பரேட் ஸ்டைல் ஆன்மிகம்.

கே.ஆர்.உபேந்திரன், தஞ்சாவூர்

""பா.ஜ.க. தமிழகத்தில் இருக்கிறதா'' என்ற விமர்சனம் போய், இங்கு ""அக்கட்சியின் அடுத்த தலைவர் யார்?'' என்று எல்லா ஊடகங்களும் விவாதம் செய் கிறது என் றால் அதுவே அக்கட்சியின் ஒரு வளர்ச்சி தானே?

பா.ஜ.க. தமிழகத்தில் இருக்கிறதா என்ற விமர் சனம் உள்ள போதே, விவாத அரங்குகளில் ஒன்றுக்கு இரண்டு பா.ஜ.க. ஆதர வாளர்களை உட்காரவைத்து கூடுதல் ஒதுக் கீடு கொடுத் தவை ஊட கங்கள். அத னால், அக் கட்சியின் புதிய தலைவர் யார் என்று விவாதங்கள் ஊட கங்களில் நடைபெறுவதில் ஆச்சரியமில்லை. "தமிழகத் தில் தாமரை மலர்ந்தே தீரும்' என முழங்கியவர், தெலங்கானாவுக்குப் போய்விட்டார். 'ஏர் இஹஸ்ரீந் ஙர்க்ண்' என்றவர்கள் இன் னமும் தமிழ்நாட்டில்தான் இருக்கி றார்கள். அதில் மாற்றம் ஏற்பட்டு, தாமரை மலரும்வரை விமர்சனம் இருக்கத்தான் செய்யும். அதையும் தாண்டி, பா.ஜ.க. தொடர்பான செய்திகள், கூடுதல் முக்கியத்துவம் பெறுகிறதென்றால், அது தொடர்ச் சியாக மத்தியில் அதிகாரத்தில் இருப்பதால்தான். அதிகாரம் எங்கும் ஊடுருவும் காலம்... இன்றைய ஊடகங்களும் விதிவிலக்கல்ல.

ஜெயசீலன், அயனாவரம் -சென்னை

தங்கத்தை ஜி.எஸ்.டிக்குள் கொண்டு வந்தால் விலை குறையும் என்கிறார்களே?

தங்கத்தை சூட்கேஸுக்குள் வைத்துக் கொண்டுவந்தார்கள். காலில் அணியும் ஷூவுக்குள் வைத்துக் கொண்டுவந்தார்கள். வாயில் கட்டுகிற பல்லாக மாற்றிக் கொண்டு வந்தார்கள். இப்படி பல டெக்னிக்கு களில் தங்கம் கடத்திவரப்பட்ட நிலையில்... அதற்கான கட்டுப்பாட் டைத் தளர்த்தி அரசாங்கம் எத்த னையோ வழிமுறைகளை உரு வாக்கியும் தங்கத்தின் விலை உயர்ந்துகொண்டுதான் இருக்கிறது. இனி, ஜி.எஸ்.டி.க்குள் கொண்டு வந்தால் என்ன நடக்கிறதென்று பார்க்கலாம்.

அ.குணசேகரன், புவனகிரி

அ.தி.மு.க. அரசு ஐந்தாண்டுகள் ஆட்சியை நிறைவு செய்து விடும்போல் உள்ளதே?

5 ஆண்டுகள் ஆள்வதற்குத் தானே மக்கள் வாக்களித்துள்ளார் கள். ஆண்டு அனுபவிக்கட்டும். அப் புறம், மக்கள் "பார்த்துக்'கொள் வார்கள்.

_________

காந்திதேசம்!

ggg

டி.ஜெயசிங், கோயம்புத்தூர்

மகாத்மா காந்தி பைபிள் நூலை முழுமையாக படித்துள்ளதாக சொல்கிறார்களே.. உண்மையா?

காந்திக்கு சிறுவயதில் பைபிளும் கிறிஸ்தவமும் பயத்தையும் வெறுப்பையும் உண்டாக்கியிருந்தன என்று தனது தன் வரலாற்று நூலான சத்திய சோதனையில் குறிப்பிடுகிறார். காரணம், அவர் வசித்த பகுதியில் இருந்த பள்ளிக்கூடத்தின் அருகில் கிறிஸ்தவ மதபோதகர்கள் நின்றுகொண்டு, கிறிஸ்தவ மதப்பிரச்சாரம் என்ற பெயரில் இந்துக் கடவுளர்களை விமர்சித்தது காந்திக்குப் பிடிக்கவில்லை. காந்தி குடும்பம் போர்பந்தரில் பெயர்பெற்ற குடும்பம். அவர்களிடம் இந்துக்கள், முஸ்லிம்கள் உள்ளிட்ட மதத்தினர் நன்கு பழகிவந்தனர். ஒருவர் இறைநெறியை இன்னொருவர் மதித்தனர். கிறிஸ்தவ மதபோதகர்களின் பிரச்சாரம் அதற்கு மாறாக இருந்ததால், காந்திக்கு வெறுப்பு இருந்தது. பின்னர், அவர் இங்கிலாந்துக்குப் படிக்கச் சென்றபோது, அங்கு அசைவ உணவு சாப்பிடாத, மது அருந்தாத வெள்ளைக்கார கிறிஸ்தவ நண்பர் அறிமுகமாகி, கிறிஸ்தவம் பற்றியும் பைபிள் பற்றியும் சொன்னபிறகே காந்திக்கு அதைப் படிக்கும் ஆர்வம் வந்தது.

பைபிளில் பழைய ஏற்பாடு, புதிய ஏற்பாடு என இரண்டு உண்டு. இயேசு பிறப்பதற்கு முந்தைய நிகழ்வுகள் அடங்கிய பழைய ஏற்பாடு காந்தியைக் கவரவில்லை. இயேசு வாழ்வும் போதனைகளும் அவரது சீடர்களால் மொழியப்பட்ட புதிய ஏற்பாடு மிகவும் பிடித்துவிட்டது. அதிலும் இயேசுவின் மலைப்பிரசங்கத்தில் இருந்த கருத்துகள் அகிம்சையை பிரதிபலிப்பதாக காந்தி உணர்ந்தார். பகவத்கீதையை விரும்பிப் படித்ததுபோல பைபிளை படித்தார். மனிதத்தன்மையைப் போதித்த மகத்தான ஆசிரியர் இயேசுவைப் போல யாருமில்லை என்பதே காந்தியின் பார்வை. காந்தியைப் பற்றி அமெரிக்காவை சேர்ந்த ஒரு தேவாலய நிர்வாகியின் பார்வை இப்படி இருந்தது. “"நவீன உலகின் மிகச்சிறந்த கிறிஸ்தவனாக இருந்த, மாமனிதன்... கடைசிவரை கிறிஸ்தவ மதத்தைத் தழுவவில்லை என்பதை ஏற்க கடினமாக இருக்கலாம். ஆனால் அதுதான் உண்மை' என்றார்.

nkn100919
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe