எம்.ராகவ்மணி, திருப்பூர்

தீய எண்ணங்கள் நுழையாதபடி, மனக் கதவை பூட்டும் சாவி மனிதனிடம் இருக்கிறதா?

மனக் கதவுக்கான பூட்டும் சாவியும் மனம்தான். தீயவை-நல்லவை பற்றி அறிந்து எப்போது பூட்ட வேண்டும், எப்போது திறக்க வேண்டும் என்பதும் மனதுக்குத் தெரிந்திருக்க வேண்டும். மாற் றிப் பூட்டுவதும் திறப்பதும் பேராபத்து.

மு.ரா.பாலாஜி, கோலார் தங்கவயல்

Advertisment

கமல் அரசியல் எப் போது வேகமெடுக்கும்?

அவர் கட்சிக்குக் கிடைத் திருக்கும் வாக்குகளைப் பங்குபோட புதுக்கட்சி வரும்போது.

கே.ஆர்.ஜி.ஸ்ரீராமன், பெங்களூரு-77

Advertisment

இஸ்ரேல் நாட்டின் நீர் மேலாண்மைத் திட்டம் பற்றி அறிந்துவரவே, தனது இஸ்ரேல் பயணம் என்கிறாரே முதல்வர் எடப்பாடி பழனி சாமி?

தன்னை விவசாயி என்று கூறிக்கொள்பவர், தமிழ் நாட்டின் ஈராயிரம் ஆண்டு களுக்கு மேற்பட்ட நீர் மேலாண்மை தெரியாமல் போய், இஸ்ரேலை நாடுவதை ஆச்சரியம் என்பதா, அறி யாமை என்பதா?

ffaf

நித்திலா, தேவதானப்பட்டி

கலைஞருக்கு கோவில் கட்டுகிறார்களே, நாத்திகரான கலைஞர் இருந்தால் இதை ரசிப்பாரா?

ஒரு செயல் எதற்காக நடைபெறுகிறது என்பதை உணர்ந்து அதனை ரசிப்பதா வெறுப்பதா என முடிவெடுப் பவர் கலைஞர். அண்ணா காலத்தில் தி.மு.க. தலைமை யகமாக இருந்தது அறிவகம். அதன்பிறகு, அன்பகம் உரு வானது. அப்புறம், தன் பெருமுயற்சியால் உருவான கட்சியின் தலைமையகத்திற்கு "அண்ணா அறிவாலயம்' என்றே பெயர் வைத்தார். அந்தக் கலைஞருக்கு அருந் ததிய சமுதாயத்தைச் சேர்ந்த அமைப்பினர், தங்களுக்கு 3% உள்ஒதுக்கீடு தந்ததற்கு நன்றி பாராட்டும் வகையில் ராசிபுரம் மாவட்டம் குச்சிப்பட்டியில் "கலைஞர் பகுத்தறிவாலயம்' கட்டுகின்றனர். இதில் நூலகம் உள்ளிட்டவை இடம்பெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தன் பெயரில் அமைகின்ற கட்டடம் உண்மையாகவே பகுத்தறிவுப் பணிக்கும் சமூக நீதிக்கும் பயன்படுகிறது என்றால் கலைஞர் நிச்சயம் ரசிப்பார். நக்கீரன் குடும்ப வெளியீடாக வந்த சிறுகதை கதிரில், எழுத்தாளர் பிரபஞ்ச னின் கேள்விகளுக்கு கலைஞர் பதில் அளித்திருந்தார். அந்த இலக்கிய பேட்டி இடம்பெற்ற இதழின் அட்டையில் மஞ்சள் துண்டு கலைஞரும் கோட்-சூட் கலைஞரும் பேசுவது போல வடிவமைத்திருந்தார் நக்கீரன் ஆசிரியர். அந்தக் கலைத் தன்மையை ரசித்து, கோபால புரம் வீட்டு வரவேற்பறை மேசையில் வைத்து அழகு பார்த்து, மற்றவர்களையும் பார்க்க வைத்தவர் கலைஞர். அதனால்தான், அவர் கலைஞர்.

சி.கார்த்திகேயன், சாத்தூர்

உ.பி.க்களின் சட்டைப் பையில் ஸ்டாலின் படமும், ர.ர.க்களின் சட்டைப்பையில் எடப்பாடி பழனிசாமி பட மும் பெரும்பாலும் இடம் பெற்றுவிட்டதே?

கொள்கையை நெஞ்சில் பதிய வைக்கும் கட்சியினர் இயக்கத்திற்குப் பலம். பாக்கெட்டில் படம் வைத்து சீன் காட்டுவதற்கு காரணம், சுயலாபம்.

______________

காந்திதேசம்

வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு

காந்திஜியை அறிஞர் அண்ணா சந்தித்து இருக்கிறாரா?

காந்திக்கும் அண்ணாவுக்கும் சந்திப்பு நடந்ததில்லை. அண்ணா தன் வாழ்வில் கண்ட ஒரே தலைவர் என்று பெரியாரைத்தான் குறிப்பிடுகிறார். அந்தப் பெரியார்தான் காந்தி தலைமையை ஏற்று செயல்பட்டவர். பின்னர், காங்கிரசிலிருந்து விலகிய நிலையிலும் காந்தியை சந்தித்து, இந்துத்வா சக்திகளால் காந்தியின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என எச்சரிக்கவும் செய்தார். அண்ணாவைப் பொறுத்தவரை, "உலக சமூக சீர்திருத்த தலைவர்களில் பெரியார் அளவுக்கு கடுமையாக உழைத்து, அதனால் உருவான மாற்றங்களைத் தன் கண்ணாலேயே கண்ட தலைவர் யாருமில்லை' என குறிப்பிட்டிருக்கிறார். அதே நேரத்தில், இந்திய விடுதலைப் போராட்டத்தில் காந்தியின் பங்கையும் அண்ணா குறைத்து மதிப்பிட்டதில்லை.

காந்தி சுட்டுக் கொல்லப்பட்ட சமயத்தில் வானொலியில் அண்ணா ஆற்றிய உரையில், “"அவர் பிறந்தபோது இந்தியா அரசுரிமை இழந்த அடிமை நாடாகவும் உலகத்தின் பார்வையில் இழிவுப்பழி தாங்கிய நாடாகவும் இருந்தது. அவர் மறையும்போது நாடு விடுதலை பெற்றதுடன் மாஸ்கோ முதல் நியூயார்க்வரை சகல நாடுகளிலும் பெருமை பெற்றி ருக்கிறது. அவர் பிறந்தபோது தீண்டாதார் எனத் தீயோரால் அழைக்கப்பட்ட தியாகப் பரம்பரை யினருக்கு அவர் மறைவதற்குமுன் கோயிலின் கதவுகள் திறந்துவிட்டன. குடித்துக் கிடப்பது சாதாரணம், சகஜம் என நினைத்தது அவர் பிறந்த காலம். மதுவிலக்குச் சட்டம் அமல்நடத்தப்படுவதைக் கண்டான பிறகே அவர் மறைந்தார். அவர் பிறந்தகாலத்தில் சூரியனே அஸ்தமிக்காததாக பிரிட்டிஷ் ராஜ்ஜியம் இருந்தது. அந்த ராஜ்ஜியத்தின் ஆதிக்கப் போக்கு அழிந்ததைக் கண்டான பிறகே அவர் கண் மூடினார்'’என காந்தி யின் சாதனைகளை விளக்கிய அண்ணா, “"இவ்வள வையும் அவர் மந்திரக்கோல் கொண்டோ, யாக குண்டத்துக்கு அருகே நின்றோ சாதிக்கவில்லை. மக்களிடையே வாழ்ந்து, மக்களின் சக்தியைத் திரட்டி சாதித்துக் காட்டினார்'’என்கிறார். அண்ணாவும் அப்படித்தான் மக்களைத் திரட்டி தமிழ்நாட்டில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தி, "தென்னாட்டு காந்தி' எனப் பெயர் பெற்றார்.