லட்சுமி செங்குட்டுவன், வேலூர், நாமக்கல்
"கோமாளி' படம் எப்படி?
செல்போனுக்கு அடிமையாகி, மனிதத்தன்மையை இழந்து கொண்டிருக்கும் கோமாளிகள் நிறைந்த சமூகத்தில், உண்மையான உணர்வுகளை இழக்காமல் மனிதத்தன்மையையும் தகவல் தொழில்நுட்பத்தையும் சரியான விகிதத்தில் கையாள்வது எப்படி என்பதை பொட்டில் அறைந்ததுபோலச் சொல்கிறான் கோமாளி.
வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு
உ.பி.யில் 71 ஆடுகளை பெற் றுக்கொண்டு மனைவியை காதல னுடன் அனுப்பி வைத்திருக்கிறாரே கணவன்?
காதலுக்கு விலை ஏதுமில்லை என்பது அந்த 71 ஆடுகளை அனுப்பி வைத்த பலி ஆட்டுக்குத் தெரியவில்லை.
தூயா, நெய்வேலி
அண்மையில் அசத்திய அரசியல் தலைவர் அல்லது திரை நட்சத்திரம் யார்?
அசத்தியவர் இரு துறை யையும் சார்ந்தவர் அல்ல. அவர், விளையாட்டுத் துறையைச் சார்ந்த பி.வி.சிந்து. பேட்மின்டன் விளையாட்டில் இந்தியா வின் பெருமைக் குரிய அடையாள மாக ஆசிய விளையாட்
லட்சுமி செங்குட்டுவன், வேலூர், நாமக்கல்
"கோமாளி' படம் எப்படி?
செல்போனுக்கு அடிமையாகி, மனிதத்தன்மையை இழந்து கொண்டிருக்கும் கோமாளிகள் நிறைந்த சமூகத்தில், உண்மையான உணர்வுகளை இழக்காமல் மனிதத்தன்மையையும் தகவல் தொழில்நுட்பத்தையும் சரியான விகிதத்தில் கையாள்வது எப்படி என்பதை பொட்டில் அறைந்ததுபோலச் சொல்கிறான் கோமாளி.
வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு
உ.பி.யில் 71 ஆடுகளை பெற் றுக்கொண்டு மனைவியை காதல னுடன் அனுப்பி வைத்திருக்கிறாரே கணவன்?
காதலுக்கு விலை ஏதுமில்லை என்பது அந்த 71 ஆடுகளை அனுப்பி வைத்த பலி ஆட்டுக்குத் தெரியவில்லை.
தூயா, நெய்வேலி
அண்மையில் அசத்திய அரசியல் தலைவர் அல்லது திரை நட்சத்திரம் யார்?
அசத்தியவர் இரு துறை யையும் சார்ந்தவர் அல்ல. அவர், விளையாட்டுத் துறையைச் சார்ந்த பி.வி.சிந்து. பேட்மின்டன் விளையாட்டில் இந்தியா வின் பெருமைக் குரிய அடையாள மாக ஆசிய விளையாட்டுப் போட்டி, காமன்வெல்த் விளை யாட்டுப் போட்டி, ஒலிம்பிக் போட்டி ஆகியவற்றில் பதக்கங்களை வென்ற சிந்துவின் நீண்ட காலக் கனவு, உலக டென்னிஸ் சாம்பியன் பட்டத்தை வெல்வது என்பதே! தூங்கியபடி அவர் கனவு காணவில்லை. விழித்து -உழைத்து செயலாற்றினார். இரண்டு முறை வெண் கலத்துடன் வெளியேறியவர், அடுத்த இரண்டு முறை இன்னும் கடுமையாகப் போராடி வெள்ளிப் பதக்கத்துடன் வெளியே வர வேண்டியதாயிற்று. விரக்தி அடையாதபடி சிந்துவை ஊக்கப்படுத்தியதில் அவரது கோச் புலீலா கோபிசந்த்துக்கு முக்கிய பங்கு உண்டு. உழைப்பும் ஊக்கமும் 2019-ஆம் ஆண்டுக் கான போட்டியில் சிந்துவுக்கு தங்கப்பதக் கத்தைப் பெற்றுத் தந்து, உலக சாம்பி யனாக்கியிருக்கிறது. பேட்மின்டனில் உலக சாம்பியனான முதல் இந்தியர், பத்மஸ்ரீ பி.வி.சிந்து.
டி.ஜெய்சிங், கோயம்புத்தூர்
எடப்பாடி பழனிச்சாமி அதிக நிர்வாகத் திறமை கொண்டவர் என்று பேசுகிறார்களே?
நிர்வாகம் என்பது மக்களுக்கான திட்டங்களை செயல்படுத்துவது என்ற காலம் மலையேறிவிட்டது. தனது பதவியைத் தக்க வைத்துக்கொள்ள எதை வேண்டுமானாலும் செய்யத் தெரிந்திருப்பதும், அதைத் தடுக்க என்ன செய்வது எனத் தெரியாதவகையில் எதிர்க்கட்சிகளைத் தடுமாறச் செய்வதும் ராஜதந்திரமாகப் பார்க்கப்படுவது காலத்தின் கோலம்.
எம்.முஹம்மது ரபீக் ரஷாதீ, விழுப்புரம்
பத்து ஆண்டு பகை பழி தீர்க்கப்படுகிறதா ப.சி. விவகாரத்தில்?
அதுதான் அரசியல் சக்கரம். அது மேலும் கீழுமாக சுழலும். பழி வாங்கப்பட்டோர் பழி தீர்ப்பதும், பழி தீர்ப்போர் பின்னர் பழி வாங்கப்படுவதும் கண்ணுக்குத் தெரியாத ஜனநாயக மாண்பு.
____________
காந்திதேசம்
ஏழாயிரம்பண்ணை எம்.செல்லையா, சாத்தூர்
மகாத்மா காந்தியின் தாய் மொழி எது? அவர் தமிழ்மொழி கற்றுக் கொண்டதன் காரணம் என்ன?
காந்தியின் தாய்மொழி குஜராத்தி. அவருக்கு இந்தி, ஆங்கிலம் உள்பட சில மொழிகள் தெரியும். தனது வாழ்க்கை குறித்த தன் வரலாற்று நூலான "சத்திய சோதனை'யை முதன்முதலில் தாய்மொழியில் தான் எழுதினார் காந்தி. குஜராத்தியில் பல கட்டுரை களை அவர் எழுதியிருக்கிறார். "அவரவர் தாய் மொழிக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்' என்ற அதே காந்திதான், "சுதந்திர இந்தியாவில் பொது மொழியாக இந்தி அல்லது இந்துஸ்தானி இருக்க வேண்டும்' என்பது சுதந்திரத்திற்கு முன்பிருந்தே காந்தியின் விருப்பமாக இருந்தது. அதற்கு அவர் சொன்ன காரணம், பெரும்பான்மையான இந்து -முஸ்லிம் மக்கள், இந்தி -இந்துஸ்தானி -உருது என ஒன்றுக்கொன்று தொடர்புள்ள மொழிகளை அறிந்திருக்கிறார்கள் என்பதேயாகும். எனவே, வெள்ளைக்காரர்களின் ஆங்கிலத்தைப் பயன்படுத் தாமல் இந்தியாவில் பெரும்பான்மையாக உள்ள மொழி, அதிலும் சமஸ்கிருதத்திலிருந்து உருவான மொழி என்ற அடிப்படையில் அவர் இந்தி இந்துஸ்தானி என்பதைப் பொதுமொழியாகக் கொள்ள வேண்டும் என வலியுறுத்தினார்.
இந்திக்கு காங்கிரஸ் செயற்குழு கூட்டங்களில் முக்கியத்துவம் தரவேண்டும் என்பதும், இந்தி தெரியாதவர்கள் ஆங்கிலத்தில் உரையாடுவதைவிட, இந்தியைக் கற்றுக்கொள்ள நேரம் ஒதுக்கி, இந்தியில் உரையாட வேண்டும் என்பதும் காந்தியின் விருப்பம். இந்தியைப் பரப்புவதற்காக காந்தியால் தொடங்கப் பட்டதுதான் சென்னையில் உள்ள தட்சிண பாரத இந்தி பிரச்சார சபா. தனது இந்த இந்தித் திணிப்புக்கு நியாயம் கற்பிக்க, "இந்தி பேசும் மாநிலத்தைச் சேர்ந்த காங்கிரஸ் நிர்வாகிகள் திராவிட மொழிகளான தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகியவற்றைக் கற்க நேரம் ஒதுக்கவேண்டும்' என்றார். இதற்குத் தன்னை முன்னோடியாக காட்டும் வகையில் தமிழ் உள்ளிட்ட மொழிகளில் சில வார்த்தைகளை அறிந்து, கையெழுத்திடவும் செய்தார். மொழிவழித் தேசியம் கொண்ட நாட்டின் பன்முகத்தன்மைக்கு ஒற்றைத் தேசியமொழி பெரும் ஆபத்தை விளைவிக்கும் என்பதை காந்தி கணிக்கவோ, கவனிக்கவோ இல்லை.