சு.பிரபாகர், தேவகோட்டை

பெண்களை மதிக்காமல் முத்தலாக் தடைச் சட்டம் நிறைவேற்றப்பட்டது குறித்து?

முஸ்லிம் பெண்களை பாதுகாக்கத்தான் இந்த சட்டம் என்கிறது மத்திய அரசு. பெண்களை பாதுகாப்பதாக நாடகமாடி, முஸ்லிம் ஆண்களைத் திட்டமிட்டு தண்டிக்க உருவாக்கப்பட்ட சட்டம் என்கிறார்கள் சட்டத்தை எதிர்ப்பவர்கள். எந்த சட்டமும் ஏட்டில் சிறப்பாகத்தான் இருக்கும். நடைமுறையில்தான் அதன் நிஜமுகம் தெரியவரும்.

mm

Advertisment

பிரதீபா ஈஸ்வரன், தேவூர் மேட்டுக்கடை

முத்துவிழா கொண்டாடும் டாக்டர் ராமதாசுக்கு மாவலியின் வாழ்த்து?

Advertisment

சமூக நீதியின் தேவையையும் வலிமையையும் அறிந்த மருத்துவர். அது சாதி நோய் பரப்பும் செயல் களாக மாறினால் சமுதாயத்தின் உடலை சீர்செய்யவே முடியாது என்பது அவருக்குத் தெரியும். விலகிச் சென்ற பேராசிரியர் தீரன் மீண்டும் வந்திருப்பது பழைய சித்தாந்த பலத்தைப் பெருக்க உதவலாம். நூறாண்டுகள் வாழ்ந்து சமூக நீதி சிகிச்சையை டாக்டர் தொடர வேண்டும் என்பதே மனம் நிறைந்த வாழ்த்து.

நெய்வேலி க.தியாகராசன், கொரநாட்டுக்கருப்பூர்

சுப்பிரமணியன் சாமி, தமிழிசை, ஹெச்.ராஜா இவர்களில் பொய்யை மெய் போலப் பேசுவதில் திறமைசாலி யார்?

சுப்பிரமணியன் சாமி இதில் உலகளவிலான மார்க்கெட் உள்ளவர். தமிழிசை தமிழ்நாட்டள விலாவது தன்னை நிரூபிக்கப் போராடுகிறார். ஹெச்.ராஜாவோ எல்லாரையும் மிஞ்சிவிடும் வேகத்தைக் காட்டுகிறார். ஆனால், கெட்டிக்காரர்களின் பொய்யும் புரட்டும் எட்டு நாளில் அம்பலமாகிவிடும் என்ற பழ மொழிதான் மீண்டும் மீண்டும் நிரூபணமாகிறது.

அயன்புரம் த.சத்தியநாராயணன், சென்னை-72

மூத்த அரசியல் தலைவரான கலைஞர் அவர்களுக்கு பாரத ரத்னா விருது வழங்கப்படுமா?

தமிழ்நாட்டில் ராஜாஜி, காமராஜர், எம்.ஜி.ஆர். அப்துல்கலாம், எம்.எஸ்.சுப்பு லட்சுமி எனப் பலருக்கும் பாரத ரத்னா விருது வழங்கப்பட்டிருக்கிறது. இதில் காமராஜர், எம்.ஜி.ஆர். ஆகியோருக்கு மரணத்திற்குப் பிறகு இந்த விருது வழங்கப் பட்டது. அந்த வகையில் மூத்த தலைவ ரான கலைஞருக்கும் பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என தி.மு.க. தரப்பில் கோரிக்கை வைக்கப்படுகிறது. இந்திய அரசியல் இதுவரை கண்டிராத தனித்துவ மான தலைவராக விளங்கியவர் கலைஞர். அனைத்து அதிகாரங்களையும் எதிர்த்து நின்று போராடி-வென்று அதிகாரத்திற்கு வந்து, அரசியல் சக்கரத்தை தன் வியூகத் தின்படி சுழற்றியவர். அரசியல் காரணங் களால் அவருக்கு பாரத ரத்னா வழங்கப் பட்டாலும் வழங்கப்படாவிட்டாலும் "கலைஞர்' என்ற சொல்லே அவருக்கு நிலையான விருதாகும்.

மு.ரா.பாலாஜி, கோலார்தங்கவயல்

முன்னாள் மத்திய அமைச்சர் ஜெய்பால் ரெட்டி மரணம்?

ஜனநாயக நெறிமுறைகள் நசுக்கப் படும் காலத்தில், ஒரு ஜனநாயகவாதியை நாடு இழந்திருக்கிறது.

_____________

காந்திதேசம்

mm

வி.நடராஜன், கூடுவாஞ்சேரி

ரூபாய் தாள்களை மணமக்கள் தலையில் போடுவதும், ஓட்டல்களில் பார் டேன்சர்கள் தலையில் போடுவதும், மாடியில் இருந்து வீசி எறிந்து பொறுக்க விடுவதும் காந்தியை அவமதிப்பதாக ஆகாதா?

தென்னாப்பிரிக்காவில் ரயிலின் முதல் வகுப்பு பெட்டியில் பயணித்த தற்காக காந்தியை டிக்கெட் பரிசோதகர் அவமானப்படுத்தி, பிளாட்பாரத்தில் தள்ளி விட்டிருக்கிறார். இங்கிலாந்து பிரதமரான சர்ச்சில், காந்தியை "அரை நிர்வாணப் பக்கிரி' என கேலி செய்திருக்கிறார். காந்தியின் அகிம்சை முறை சுதந்திரப் போராட்டத்தால் அவரை "பிரிட்டிஷ் ஏஜெண்ட்' என்றவர்களும் உண்டு. ஆயுதமேந்தி தனிப்படை அமைத்த நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், காந்தியின் வழிமுறைகளை விமர்சனம் செய்திருக்கிறார். பிறப்பின் அடிப்படையில் மனிதர்களைப் பிரித்துப் பார்க்கும் வர்ணாசிரம தர்மத்தை காந்தி ஆதரித் ததால், பட்டியல் இன மக்களின் உரிமைகள் மறுக்கப்படுவதை சுட்டிக்காட்டி டாக்டர் அம்பேத்கரும் காந்தியை கடுமையாக எதிர்த்திருக்கிறார். சாதியால் மனிதர்களைப் பிரிக்கும் இந்து மதத்தைத் தாங்கிப் பிடிப்பவராக காந்தி இருந்ததால், காங்கிரசிலிருந்து விலகி சுயமரியாதை இயக்கம் ஆரம்பித்த பெரியாரும் காங்கிரசு ஒழிக, காந்தி ஒழிக என்பதை முழக்க மாகவே முன்வைத்திருக்கிறார். எனவே காந்தி மீதான விமர்சனம், எதிர்ப்பு, அவமதிப்பு ஆகியவை அவர் வாழ்ந்த காலத்திலேயே வெளிப்பட்டவைதான்.

காந்தி தன்னுடைய படத்தை இந்திய ரூபாய் நோட்டில் அச்சிட வேண்டும் என வலியுறுத்தவில்லை. அது, அவருக்கு இந்திய அரசும் இந்திய ரிசர்வ் வங்கியும் அளித்த மரியாதை. காந்தி படம் போட்ட ரூபாய் நோட்டை யார் எப்படிப் பயன்படுத்துகிறார்கள் என்பது அவர்களின் தன்மையை வெளிப் படுத்துகிறதே தவிர, காந்திக் கான அவமரியாதை அல்ல. லட்சுமிக் கடவுள் படம் போட்ட பட்டாசுக்கு நெருப்பு வைத்து சுக்குநூறாக சிதற வைப்பதும், பிள்ளையார் சிலைகளை கடலில் கொண்டு போய் போட்டு, ரம்பத்தால் அறுத்துச் சிதைத்துக் கரைப்பதும் மனிதர்கள் கடைப் பிடிக்கும் பழக்கமாக இருக்கிறது. அவற்றில் கடவுள்களுக்கு எப்படி சம்பந்தமில்லையோ அதுபோல, ரூபாய் நோட்டை வீசி எறிவதால் காந்திக்கு அவமதிப்பு ஏற்படப்போவதில்லை.