சு.பிரபாகர், தேவகோட்டை
மதுபானங்களை விற் பனை செய்யும் அரசாங்கம் ஏன் குட்கா போன்றவற்றைத் தடை செய்ய வேண்டும்? அவற்றையும் அரசே விற்பனை செய்யலாமே?
மதுபானம் என்பது அரசுக்கு வேண்டியவர் களே தயாரித்து, அதை அரசு கொள்முதல் செய்து, குடி மக்களுக்கு விற்பனை செய்யும் லாபகரமான தொழில். குட்கா போன்ற பாக்கெட் அயிட்டங் களில் தனியாரிடமிருந்து வரும் மாமூல் மட்டும் போதும் என்கிற கொள்கை முடிவாக இருக்கலாம்.
வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு
பாகிஸ்தானில் மரண தண்டனை விதிக்கப்பட்ட இந்தியர் குல்பூஷன் ஜாதவ்வின் தண்டனையை சர்வதேச நீதி மன்றம் நிறுத்தச் செய்து தீர்ப்பு வழங்கியிருப்பதை இந்திய பா.ஜ.க. அரசு வரவேற்றுள்ளதே?
அப்படியே, அந்த 7 தமிழர்களை 7 கோடி தமிழர்கள் வரவேற்கும் வகையில் அவர்களின் விடுதலைக்கான நடவடிக்கையையும் பா.ஜ.க. அரசு எடுக்கலாமே!
ஆர்.துரைசாமி, கணபதிபுதூர், கோவை
எந்த அரசியல் கட்சியில் ஜனநாயகம் உள்ளது என்று கண்டுபிடித்து கூற முடியுமா?
உள்கட்சி ஜனநாயகம் என்பது இரும்புக் கம்பிபோல வெளிப்பார்வைக்குத் தெரிந்த
சு.பிரபாகர், தேவகோட்டை
மதுபானங்களை விற் பனை செய்யும் அரசாங்கம் ஏன் குட்கா போன்றவற்றைத் தடை செய்ய வேண்டும்? அவற்றையும் அரசே விற்பனை செய்யலாமே?
மதுபானம் என்பது அரசுக்கு வேண்டியவர் களே தயாரித்து, அதை அரசு கொள்முதல் செய்து, குடி மக்களுக்கு விற்பனை செய்யும் லாபகரமான தொழில். குட்கா போன்ற பாக்கெட் அயிட்டங் களில் தனியாரிடமிருந்து வரும் மாமூல் மட்டும் போதும் என்கிற கொள்கை முடிவாக இருக்கலாம்.
வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு
பாகிஸ்தானில் மரண தண்டனை விதிக்கப்பட்ட இந்தியர் குல்பூஷன் ஜாதவ்வின் தண்டனையை சர்வதேச நீதி மன்றம் நிறுத்தச் செய்து தீர்ப்பு வழங்கியிருப்பதை இந்திய பா.ஜ.க. அரசு வரவேற்றுள்ளதே?
அப்படியே, அந்த 7 தமிழர்களை 7 கோடி தமிழர்கள் வரவேற்கும் வகையில் அவர்களின் விடுதலைக்கான நடவடிக்கையையும் பா.ஜ.க. அரசு எடுக்கலாமே!
ஆர்.துரைசாமி, கணபதிபுதூர், கோவை
எந்த அரசியல் கட்சியில் ஜனநாயகம் உள்ளது என்று கண்டுபிடித்து கூற முடியுமா?
உள்கட்சி ஜனநாயகம் என்பது இரும்புக் கம்பிபோல வெளிப்பார்வைக்குத் தெரிந்தாலும், அதை சூழலுக்கேற்ப நெருப்பில் காட்டி, தேவைக் கேற்ப வளைத்துக்கொள்ள முடியும் என்பதை அறிந்தவர்களே அரசியல் கட்சிகளின் தலைமைப் பீடத்தில் இருக்கிறார்கள். எடுத்துக்காட்டாக, தி.மு.க.வில் கிளைக்கழகங்களிலிருந்து நடைபெறும் உள்கட்சித் தேர்தல், ஒன்றியம் நகரம் மாவட் டம் எனத் தொடர்ந்து, செயற்குழு பொதுக் குழுவரை உறுப்பினர்களைக் கொண்டு வந்து, தலைமையை அதன் வழியாகத் தேர்வுசெய்யும் வலுவான ஜனநாயக முறையைக் கொண்டது. அ.தி.மு.க.வில், அடிமட்டத் தொண்டர்களே நேரடியாகத் தலைமையைத் தேர்வு செய்யும் வகையில் சட்டத்தை உருவாக்கினார் எம்.ஜி.ஆர். பொதுவாக, இது ஒவ்வொரு தொண்டனுக்கும் தன் தலைவரைத் தேர்ந்தெடுக்கும் உரிமை இருப்பதாகத் தோற்றம் அளித்தாலும், மாவட்ட ஒன்றிய பொதுக்குழு நிர்வாகிகளால் தலைமையை மாற்றிவிடாமல், தனிப்பட்ட செல்வாக்காலும் கவர்ச்சியாலும் தலைமைப் பதவியை வலுவாக் கிக்கொள்ள எம்.ஜி.ஆர். கையாண்ட உத்தி. அதுவே, ஜெ.வுக்கும் சாதகமாக இருந்தது. அப் படிப்பட்ட இயக்கத்தில், இன்று தனிப்பட்ட செல்வாக்கோ கவர்ச்சியோ இல்லாத இ.பி.எஸ்., ஓ.பி.எஸ். எனும் இரட்டைத் தலைமை உருவாகி யுள்ளது. வலுவான ஜனநாயக அமைப்பாக உரு வாக்கப்பட்ட தி.மு.க.விலோ, மாவட்ட நிர்வாகி களைத் தீர்மானம் போடவைத்து, உதயநிதியை இளைஞரணிச் செயலாளராக்கிய விதம் அதன் உள்கட்சி ஜனநாயகத்தை கேள்விக்குறியாக்கி, "குடும்ப அரசியல்' எனும் விமர்சனத்தை சொந் தக் கட்சிக்குள்ளேயே கூர்மையாக்கியிருக்கிறது.
ஏழாயிரம் பண்ணை எம்.செல்லையா, சாத்தூர்
"மத்திய பட்ஜெட்டால் நாட்டு மக்களின் வாழ்க்கை முன்னேற்றமாக இருக்கும்' என நிர்மலா சீதாராமன் கூறியுள்ளாரே?
"வீட்டில் சமைத்து சாப்பிட்டால் ஜி.எஸ்.டி. வரி தொந்தரவு இருக்காது' என்று சொன்ன மேதையாயிற்றே அவர்! புறநானூற்று வரிகளைச் சொல்லி பட்ஜெட் தாக்கல் செய்த நிர்மலா சீதாராமனுக்கு, நற்றிணை வரிகளைச் சொல்லி மக்களவையில் தி.மு.க. எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன் கொடுத்த பதில்கள், நெத்தியடி.
லட்சுமி செங்குட்டுவன், வேலூர்(நாமக்கல்)
110 விதியை யார் கண்டுபிடித்தார்கள்?
அதுதான் தமிழக சட்டமன்றத்தின் "தலைவிதி'யாக இருக்கும் என அறியாத சட்ட அறிஞர்கள்.
___________
காந்திதேசம்
விஸ்வநாதன், அரியப்பாடி
ஹென்றி தோரோ - மகாத்மா காந்தி ஒப்பிடுக.
வரிகொடா இயக்கம், சட்டமறுப்பு இயக்கம், ஒத்துழையாமை இயக்கம்... இப்படியெல்லாம் சொல்லும் போது, இந்திய அளவில் காந்தி நடத்திய போராட்டங்கள் நினைவுக்கு வரும். காந்திக்கு முன்பாகவே இவற்றையெல்லாம் தன் அளவில் கையிலெடுத்த வர் அமெரிக்காவைச் சேர்ந்த கவிஞரும் மெய்யியலாளரு மான ஹென்றி டேவிட் தோரோ. காந்தி பிறப்பதற்கு (1869) ஏழு ஆண்டுகள் முன்பே (1862) தோரோ இறந்துவிட்டார். ஆனால், காந்தியின் வாழ்வில் தோரோவின் தாக்கம் இருந்தது. எளிமையான வாழ்வும், அடிமைத்தனச் சட்டங் களுக்கு எதிரான குரலுமாக இயங்கியவர் தோரோ. 6 ஆண்டுகளுக்கான தேர்தல் வரியைக் கட்டச் சொல்லி, இவரை வற்புறுத்தியபோது, அதைக் கட்ட மறுத்தார். அதற்காக சிறைக்கு அனுப்பப்பட்டார். அந்த சிறை அனுபவத்தையும், அவர் கட்டுரையாக எழுதினார். அது அரசாங்கத்தின் மக்கள் விரோத சட்டங்கள், வரிகள், அடிமைத்தன நிர்வாகம் ஆகியவற்றுக்கான எதிர்ப்புக் குரலாக அமைந்தது. "அரசுக்கும் தனி மனிதர்களுக்குமான உறவில் உரிமையும் கடமையும்' என்ற தலைப்பில் அவர் ஆற்றிய உரைகள் ஈண்ஸ்ண்ப் உண்ள்ர்க்ஷங்க்ண்ங்ய்ஸ்ரீங் என்ற பெயரில் கட்டுரைகளாக வெளிவந்தன.
தோரோவைப் போலவே காந்தியும் தன் மீது பிரிட்டிஷ் அரசாங்கம் மேற்கொண்ட நடவடிக்கைகளை சத்யாகிரகப் போராட்டத்திற்கான ஆயுதமாக மாற்றியவர். இயற்கை சார்ந்த எளிமையான வாழ்க்கையை விரும்பிய ஹென்றி தோரோ, வால்டன் என்ற குளக்கரையில் சிறிய குடில் அமைத்து அதில் வசித்தார். அந்த அனுபவத்தை அவர் 'ரஹப்க்ர்ய்' என்ற புதினமாக எழுதினார், அது மிகப்பெரிய வரவேற்பை இலக்கிய உலகில் பெற்றது. காந்தியும் எளிமை யை ஆயுதமாக்கியவர். அதற்கு எடுத்துக்காட்டு, அவரது சபர்மதி ஆசிரமம். ஆடைகளுக்கான நூல் நூற்பதிலிருந்து, உணவு சமைப்பது, கழிவறையை சுத்தம் செய்வது உள்ளிட்ட அனைத்தும் அவரவரே செய்துகொள்ள வேண்டும் என்பதை காந்தி வலியுறுத்தினார். ஹென்றி தோரோ இந்தியர்கள் அதிகம் அறியாத காந்தியின் முன்னோடி. காந்தி, அமெரிக்கர்களும் ஆச்சரியமாகப் பார்க்கும் வகையில் செயல்பட்ட, தோரோவின் வழித்தோன்றல்.