அண்ணா அன்பழகன், அந்தணப்பேட்டை
ராகுல் காந்தி போதைப்பொருள் பயன்படுத்து வதாக சுப்ரமணியசாமி குற்றம்சாட்டியது பற்றி?
சுப்ரமணியசாமி தனது அரசியல் பந்துகளை எப்போது எப்படி வீசுவார் என்று கணிக்க முடியாது. ஜெ.வுக்கு எதிரான டான்சி, சொத்துக் குவிப்பு வழக்கு என விக்கெட்டை நோக்கி அவர் வீசிய பந்துகள் அபா ரம் என்றாலும், பல பந்துகள் நோ பாலாக மாறுவது வழக்கம். ராகுல் காந்தி பற்றிய அவரது குற்றச்சாட்டு, பெவிலியனுக்கு வெளியே வீசப்பட்ட பந்து.
வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு
பழைமையான கட்சியின் புதுமையான நாடகமென ராகுலின் ராஜினாமாவை பா.ஜ.க. கிண்டலடித்து இருக்கிறதே?
தனது பாதை எது என்று காங்கிரசும் அதற்கான தலைமையும் தெளிவாகத் தீர்மானிக்காத வரை அரசியலில் உள்ள மற்ற நாடகக்காரர்களின் கேலி கிண்டல்களை எதிர்கொண்டுதான் ஆகவேண்டும்.
பி.மணி, வெள்ளக்கோவில்
மத்திய-மாநில அரசுகளே கல்வியின்மீது பாராமுகம் காட்டும் நிலையில், திருச்செந்தூரைச் சேர்ந்த பிச்சைக்காரர் பாண்டியன் பிச்சையெடுத்த பணத்தில் பல்வேறு பள்ளிகளுக்குத் தேவையான பொருட்களை வாங்கிக் கொடுத்து அசத்தியிருக் கிறாரே…?
"பிச்சை புகினும் கற்கை நன்றே' என்ற முதுமொழிக்குப் புது விளக்கம் தந்திருக்கிறார். கல்விக்கு உதவியவரை பிச்சைக்காரர் என்று சொன்னால், அடிப்படை உரிமைகளைப் பறிக்கும் புதிய கல்விக் கொள்கையை நடைமுறைப்படுத்த தீவிரம் காட்டும் மத்திய அரசையும், நீட் உள்பட அனைத்திலும் இரட்டை வேடம் போடும் மாநில அரசையும் என்னவென்று சொல்வது?
பிரதீபா ஈஸ்வரன், தேவூர்மேட்டுக்கடை
"அரசியல் மாற்றம் வரும்போது கட்சி தாவுவது இயல்பான ஒன்றுதான்' என்கிறாரே தினகரன்?
அந்த மாற்றத்தை ஏற்படுத்துவார் என்று எதிர்பார்த்துதானே 18 எம்.எல்.ஏ.க்கள் அவர் பக்கம் தாவினார்கள்! நொடிக்கு நொடி மாறுபடும் எதிர்பார்ப்புகளும் அதற்கான பலன்களுமே இன்றைய அரசியல். அனுபவப் பாடத்தால் இதை உணர்ந்திருப்பார் தினகரன்.
மணி, விஜயராகவபுரம்
கோவா, கர்நாடகாவில் நடப்பது ஜன நாயகப் படுகொலையா… அரசியல் சாதுர்யமா…?
இழப்பவர்களுக்கு ஜனநாயகப் படுகொலை. ஜெயிப்பவர்களுக்கு அரசியல் சாதுர்யம்.
தமீம், ஸ்ரீவில்லிபுத்தூர்
தமிழ்நாட்டில் நடமாடும் டாஸ்மாக் கடைகள் கொண்டுவரவேண்டும் என தனியரசு கோரிக்கை வைத்திருப்பது…?
அவரது கருத்துக்கு அ.தி.மு.க., தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் சிரித்திருக்கிறார்கள். எனினும், கிராமப்புற குடிமகன்கள் தெளிவாக வாகனத்தை ஓட்டிச்சென்று, நெடுஞ்சாலையைக் கடந்து, சரக்கு ஏற்றிய பிறகு, திரும்பி வரும்போது நான்கு வழிச்சாலை எட்டுவழிச் சாலையாகத் தெரிவதால் விபத்துக்குள்ளாகி இறப்பது அதிகமாகிறது என்பதுதான் தனியரசின் கருத்து. மதுவுக்காக வாகனங்களில் குடிமகன்கள் செல்லாமல், குடிமகன்களை நோக்கி மது வாகனங்கள் வரட்டுமே என்கிறார். எமனைத் தேடிப் போகவேண்டாம், வேண்டியவர்களைத் தேடி எமனே எருமைக்கடாவில் வரட்டும்.
காயத்ரி, மேட்டுப்பாளையம்
கல்வி முதல் தண்ணீர்வரை தனியாரிடம் விடும் அரசுகள் பிரதமர், முதல்வர் பதவியையும் தனியாரிடம் விட பரிசீலிக்குமா?
கார்ப்பரேட் எனும் பெரும் தனியார் முதலாளிகள்தானே பிரதமர், முதல்வர் உள்ளிட்ட பலரையும் விட்டுவைத்திருக்கிறார்கள்.
__________
காந்தி தேசம்
நித்திலா, தேவதானப்பட்டி
"காந்திபீடியா' உருவாக்கப் படும் என மத்திய பா.ஜ.க. அரசு அறிவித்திருக்கிறதே?
கலைக்களஞ்சியங்கள் என்சைக்ளோபீடியா எனப்படுகின் றன. பொதுவாக அனைத்துத் துறைகளையும் சார்ந்த சொற்கள், நபர்கள், இடங்கள் உள்ளிட்டவை குறித்து வெளியாகி வந்த கலைக் களஞ்சியங்களின் போதாமை காரண மாகவும், விரிவான விரைவான தகவல்கள் தேவைப்பட்ட காரணங் களாலும் ஒவ்வொரு துறை சார்ந்தும் கலைக்களஞ்சியங்கள் அச்சில் வரத்தொடங்கின. அதன்பின், இணையப் பயன்பாட்டுப் புரட்சி ஏற்பட்ட பிறகு, "விக்கிபீடியா' என்ற கலைக்களஞ்சியம் பல தகவல்களைப் பெறுவதற்கும், பதிவிடுவதற்கும் வாய்ப்பாக அமைந்தது. ஆங்கிலத்தில் மட்டுமின்றி, தமிழ் உள்ளிட்ட மொழிகளிலும் விக்கிபீடியா செயல் படுகிறது. இதில் உள்ள தகவல்கள் அனைத்தும் நம்பகத்தன்மை கொண்டவை அல்ல எனினும், பொய்த் தகவல்களை சுட்டிக்காட்டி அகற்றவும், உண்மைகளைப் பதிவேற்றம் செய்யவும் முடியும். காந்தி பற்றியும் விக்கி பீடியாவில் ஏராள மான தகவல்கள் உள்ளன.
மத்திய பா.ஜ.க. அரசு காந்தியின் 150-வது பிறந்த ஆண்டையொட்டி அவர் பற்றிய தகவல்கள் அடங்கிய "காந்திபீடியா' உருவாக்கப்படும் எனத் தெரிவித் துள்ளது. 'My Life Is My Message' என்றவர் காந்தி. தன் வாழ்க்கையை எல்லோரும் அறிந்துகொள்ளும் வகையில் தன் வரலாற்றை ‘"சத்திய சோதனை'’என்ற பெயரில் எழுதி வைத்துவிட்டுச் சென்றிருக்கிறார். தன் மரணத்தை அவரால் பதிவுசெய்ய முடியாது என்பதால், காந்தி படுகொலை பற் றிய உண்மை களையும் கோட்சே யார், எந்த இயக்கத்தவர், கோட்சேவை இன்றும் கொண் டாடுபவர்கள் யார் என்ற விவரங் களையும் காந்திபீடியாவில் மத்திய பா.ஜ.க. அரசு பதிவேற்றுமா என்ற எதிர்பார்ப்பு உள்ளது. இந்தியாவின் அடையாளமாக இருக்கும் காந்தியின் புகழைக் குறைக்கவேண்டும் என்று மறைமுகமாக செயல்படும் பா.ஜ.க., காந்தியின் குஜராத்தில் இந்தியாவி லேயே உயரமான சிலையை பட்டே லுக்கு நிறுவி, நேரடியாகவே தன் திட்டத்தை வெளிப்படுத்திவிட்ட பிறகு, அந்த அரசு உருவாக்கும் காந்திபீடியா என்பது சத்தியத்திற்கு ஏற்பட்ட சோதனையாக அமைந்து விடக்கூடாது.